தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
4 posters
Page 1 of 1
நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
நெஞ்சத்தூண்கள் !
நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்
இராம..இளங்கோவன் .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
சுலோச்சனா பதிப்பகம் . 26,2ND D GROSS,SIR.M.V.NAGAR,RMAIAH COCONUT GARDEN,RAMAMURTHY NAGAR,BANGALORE.560016.
CELL 09845526064. விலை ரூபாய் 110.
நூலின் பின் அட்டையில் தேனிரா .உதய குமார் அவர்கள் எழுதியது முற்றிலும் உண்மை ."தமிழன்னைக்குக் கிடைத்த தலையாய சேவகர் " நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் .
தமிழ் பற்றி தமிழர் பற்றி பெண்ணுரிமை பற்றி மரபுக் கவிதைகளில் கவிதை வடித்து ,தமிழ் விருந்து வைத்துள்ளார் .இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா .விஜய் அணிந்துரையில் "ஒரு மரபுக் கவிதைப் புத்தகத்திற்கு ,புதுக் கவிதையால் அணிந்துரை ஆசிரியருக்கு மாணவன் பொன்னாடை போர்த்துவது மாதிரி !"என்று மனம் திறந்து பாராட்டி உள்ளார் .
பலரின் வாழ்த்துரையும் ,அணிந்துரையும் நூலிற்கு பெருமை சேர்க்கின்றது .இந்த நூலில் நிறைய தமிழ் பற்றிய கவிதைகள் உள்ளது .நூல் ஆசிரியர் இராம .இளங்கோவன் அவரது அன்பு மகன் நவீன் இளங்கோ 26 வயதில் காலம் சென்றதை நினைத்து வருந்தி சோகக் கவிதைகள் படிக்கும் போது வாசகர்களின் மனதையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளார் .மகன் மீது அவர் வைத்து இருந்த பாசத்தை நேசத்தை உணர முடிகின்றது .இந்த நூலை அவரது அன்பு மகன் நவீன் இளங்கோவிற்கு படையல் வைத்துள்ளார் .
.கவியரங்களில் பாடிய கவிதைகளைத் தொகுத்து நூலாக வழங்கி உள்ளார் .நெஞ்சத்தூண்கள் தமிழ்த்தூண்களாக உள்ளது . மரபுத்தூண்களாக உள்ளது . கவித்தூண்களாக உள்ளது .பாராட்டுக்கள் .கர்னாடக மாநிலத்தில் வாழ்ந்தபோதும் தாய்த் தமிழை மறக்காமல் கவிதைகள் வடித்து தமிழ் அன்னைக்கு மரபுக் கவிதைகளால் மணி மகுடம் சூட்டி உள்ளார் .தமிழ்ச் சொற்களின் களஞ்சியமாக நூல் உள்ளது .தமிழனாகப் பிறந்ததற்காக உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் மார் தட்டிக் கொள்ளும் விதமாக நூல் உள்ளது .
.
தமிழ் வணக்கம் !
தாயே ! தமிழே ! உயிரே ! உன்றன்
சேயாம் என்றான் நாவில் நின்று
வாயும் மணக்க தமிழ்ப்பால் மொண்டு
தாயும் நீயும் தருவாய் ;மண்ணில்
மாய்ந்தும் நிலைத்து வாழ்வேன்
தாய்மை மாறா தமிழுனை வணங்கியே !
எழுச்சி ,மலர்ச்சி ,உணர்ச்சி, புத்துணர்ச்சி தரும் கவிதைகளாக உள்ளது .
எழுகவே !
எழுக ,எழுக,எழுகவே !-தமிழர்
எழுத்து விட்டால் இமயமும் தாழ்வே !
உழுக , உழுக, உழுகவே !-தமிழா
உள்ளம் முழுதும் தமிழால் உழுகவே !
தமிழில் பிற மொழிச் சொற்கள் கலந்து பேசி தமிழ்க் கொலை நடத்துவோரைக் கண்டிக்கும் விதமாக கவிதைகள் உள்ளது .
தமிழா துணிவாய் !
தமிழா நீ என் குருதியடா - ஒரு தாய்
வயிற்றுப் பிள்ளையடா !
அமிழ்து தமிழே நம்மொழியடா - அயல்
மொழியைக் கல்ப்பதேனடா ?
உரிமைக்கு உரக்க குரல் கொடுத்து உள்ளார் .உனக்குஉள்ள எல்லா உரிமையும் எனக்கும் உண்டு .உயர்ந்தவன் , தாழ்ந்தவன் எவனும் இல்லை .இந்த நாட்டில் எல்லோரும் சரி நிகர் சமமாக நடத்தப் பட வேண்டும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் .
உரிமை நாள் !
வந்திட வேண்டு மென்றால் நாட்டில்
வந்திட வேண்டும் தனித்தனி உரிமை !
உரிமை என்பது தான மல்ல ;
உரிமை தம்மை யாசித்து வாங்க !
நானும் உன் போல் சரசம மாக
நாளும் உரிமை பெற்றிட வேண்டும் !
உலகப் பொதுமறை வடித்த திருவள்ளுவர் வழியில் நல்ல நட்பின் சிறப்பையும் தீய நட்பின் தீமையையும் கவிதைகளில் விதைத்து உள்ளார் .
சான்றோர் நட்பு !
நட்பிலா வாழ்வும் துன்பம் தானடா !- நல்ல
நட்பை நெஞ்சில் ஊன்றி வையடா !
நட்பை உணரா உணர்வும் தீமை -தானடா !
நட்பை உணர்த்த நடந்து காட்டடா !
பொல்லாத் தீய நட்பு கொண்டால் -மெல்ல
நல்ல பெயரும் நழுவி ஓடும் !
நல்ல சான்றோர் நட்பு கொண்டால் - இந்த
நாடே உன்னைப் போற்றிப் புகழும் !
பெண்ணுரிமைக்காக உரத்த சிந்தனையாக சிந்தித்து ,ஆணாதிக்க சிந்தனையை அகற்றிட கவிதை வடித்துள்ளார் .
பெண்களே வாரீர் !
நீரின்றி இவ்வுலகம் அமைவ தில்லை
நிலமின்றி எவ்வுயிரும் வாழ்வ தில்லை ;
வேரின்றி எம்மரமும் நிற்ப தில்லை ;
வேற்றுமையில் எவ்வுறவும் நிலைப் பதில்லை ;
பாரினிலே பெண்ணின்றி வாழ்வு மில்லை ;
நாரிணைந்த பூக்களாலே நார்ம ணக்கும் ;
நன்குணர்ந்து ஆடவர்காள் பெண்மை காப்பீர் !
அவரது அன்பு மகன் நவீன் இளங்கோ பற்றிய கவிதை உருக்கம் ,நெகிழ்ச்சி ,சோகம் அனைத்தும் உள்ளது .
காவல் தெய்வம் நீ எங்கே !
தேடாத இடமில்லை ;தேடித் தேடிப்
போகாத ஊருமில்லை ;போயிப் போயிப்
பார்க்காத நாடுமில்லை ;பார்த்துப் பார்த்துக்
கேட்காத ஆளுமில்லை ;கேட்டுக் கேட்டு
நோகாத என்நெஞ்சு நோகுதய்யா !
சேராத இடம்சென்றா சேர்ந்து விட்டாய் ?
போகாத ஊருக்கா பயணப் பட்டாய் ?
பாவியென்னைப் புலம்பவிட்டு நீ ஏன் சென்றாய் ?
கவியசு கண்ணதாசன் போல எந்த நாளும் எனக்கு இறப்பு இல்லை என்று படைப்பாளி மார் தட்டி உரைப்பது போல உரைத்து உள்ளார் .பாராட்டுக்கள் .
என் கவிதை !
பிறப்பிற்கும் இறப்பிற்கும் - இடையே
இருப்பதுவோ வாழ்க்கையடா !
இரண்டினையும் வெல்லுவது - என்றும்
இறவாத கவிதையடா !
வேண்டும் வேண்டும் என்று வாழ்வியல் கூறும் கருத்துக்களை கவிதையில் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .
.
வாழ்தல் வேண்டும் !
முளைத்தாலும் ஆல்போல் முளைத்தல் வேண்டும் !
முனைந்தாலும் சான்றோனாய் முனைதல் வேண்டும் !
இளைத்தாலும் புலிபோல இருத்தல் வேண்டும் !
இருந்தாலும் இறந்தாலும் உயிர்த்தல் வேண்டும் !
வளைந்தாலும் வென்றிடவே வளைதல் வேண்டும் !
வருந்தினாலும் பிறருக்காய் வருந்தல் வேண்டும் !
கிளைத்தாலும் கிளைகள்போல் கிளைத்தல் வேண்டும் !
கிடந்தாலும் கணிமம்போல் கிடத்தல் வேண்டும் !
திரை உலகைச் சாடி கவிதைகள் உள்ளது .திரை உலகில் சிலர் நூல் ஆசிரியரை ஏமாற்றி உள்ளனர் .அந்த வருத்தையும் பதிவு செய்துள்ளார் .திரைப்படப் பாடல்களில் ஆங்கிலச் சொற்கள் கலக்கும் அவலத்தையும் கண்டித்து உள்ளார் .தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துக்கள் .

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

- சிறப்பாகப் படைத்துள்ளார்...

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» குத்தூசி ! நூல் ஆசிரியர் : நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» புதிய முகம் ! நூல் ஆசிரியர் : நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» "ஹைக்கூ 500" நூல் ஆசிரியர்: கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை -"நெருப்பலைப் பாவலர் ", இராம இளங்கோவன்;பெங்களூரு.
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் நயம் : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
» குழந்தையுடன் குழந்தையாய் ! (சிறுகதைகள்) நூல் ஆசிரியர் : நெருப்பாலைப் பாவலர் இராம. இளங்கோவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum