தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆனந்தமான வாழ்க்கைக்கு 100 டிப்ஸ்'!

2 posters

Go down

ஆனந்தமான வாழ்க்கைக்கு 100 டிப்ஸ்'! Empty ஆனந்தமான வாழ்க்கைக்கு 100 டிப்ஸ்'!

Post by கணபதி Fri Apr 05, 2013 8:53 am


வாழ்க்கை வரம் நமக்கு... வாழத் தெரிந்தால்! அப்படி வாழத் தெரிந்தவர்கள் இங்கே சில பேர்.

தெரியாதவர்கள்தான் பல பேர். அந்தச் சிலரைப் பலராக்கும் அக்கறைதான் இந்த ஆலோசனைகள் உங்களுக்கு தரப்படுகிறது

நம் வாழ்க்கையில் ஆனந்தம் அட்சயப் பாத்திரமாக இருக்க வேண்டும் என்பதுதானே நம் அனைவரது விருப்பமும்?! அதற்கு எந்தப் புரட்டிப் போடும் புரட்சியும் தேவையில்லை. நம்முள் கொஞ்சம் மாற்றம் போதும்.

''என்னை நானே கொண்டாடிக் கொள்கிறேன்'' என்பார்
ஓஷோ ரஜினீஷ்! அப்படி உங்களை நீங்களும் கொண்டாடுவதற்கு உங்கள் மனதை இன்னும் அழகாக்கும் சூட்சமம் சொல்லத்தான்... இந்த 'ஆனந்தமான வாழ்க்கைக்கு 100 டிப்ஸ்'! வாருங்கள்... சதமடிப்போம்!

மனதில் ஊறட்டும் உற்சாகம்!

1. சந்தோஷம் என்பது வாங்கும் பொருட்களில் இல்லை. சந்தோஷத்தின் இருப்பிடம் மனம்தான். மனதின் கன்ட்ரோல் நம்மிடம்தான். எனவே, ஆனந்தமாக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள் மட்டுமே.

2. வாழ்க்கையை ரொம்ப இறுக்கமாகக் கழிக்காதீர்கள். கொஞ்சம் லகுவாக, நகைச்சுவையாக அணுகுங்கள். அருகில் இருப்பவர்கள் நகைச்சுவை சொன்னால் சிரியுங்கள். தினமும் இரண்டு, மூன்று நபர்களையாவது சிரிக்க வையுங்கள். சிரிப்பு ஒரு தொற்று நோய். இடம் விட்டு இடம் பெயர்ந்து ஆரோக்கியமாகப் பரவும்.

3. உடற்பயிற்சியும் ஆரோக்கியமான உணவும் உங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும்; உடலின் சக்தி தேவையை நிறைவேற்றும். உற்சாகமாக உணர்வீர்கள். உடற்பயிற்சியின்போது உடலில் சுரக்கும் 'எண்டோர்பின்'களால் (endorphins) மனது புத்துணர்வு பெறும் என்கிறது மருத்துவ உலகம்.

4. வேலை, கடமை இத்யாதிகளுக்கு மத்தியில் புத்தகம் படிப்பது, நன்றாக ஒரு குளியல் போடுவது, இசை கேட்பது... இப்படி ஏதாவது உங்கள் மனதுக்குப் பிடித்த ஒரு செயலுக்கு தினமும் சில நிமிடங்கள் ஒதுக்குங்கள். அதேபோல், தினமும் கொஞ்ச நேரம் உங்கள் மனதுக்கு மகிழ்ச்சி தரும் பசுமையான நினைவுகளை அசைபோடுங்கள்.

5. ஆனந்தம் என்பது 'லக்' அல்ல, நாம் எடுக்கும் முடிவுகளின் விளைவுதான் என்பதில் தெளிவாக இருங்கள். அன்னப் பறவையாக மாறி நல்லவற்றையும், ஆனந்தம் தருபவற்றையும் அதிகம் கவனியுங்கள். உங்களைக் கடந்து போகும் சம்பவங்களில், சந்தோஷமான விஷயங்களை அதிகம் உள்வாங்குங்கள்.

6. தாழ்வு மனப்பான்மையைத் தூக்கிக் கடலில் போடுங்கள். ஏதேனும் தவறு, தோல்வி நடந்தால் அதற்குரிய காரணத்தை ஆராய வேண்டுமே தவிர... நத்தை ஓட்டுக்குள் முடங்கிவிடக் கூடாது.

7. உங்கள் மனதை நீங்கள்தான் உற்சாகப்படுத்த வேண்டும். குழந்தைகளுடன் செலவிடும் சந்தோஷ தருணங்கள், நல்ல காமெடி திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவை உங்களை ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

8. திருத்தமாக உடையணிந்து நேர்த்தியாக இருக்கப் பழகுங்கள். மனோரீதியாக அது உங்களை தன்னம்பிக்கையாகவும், ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் வைக்கும்.

9. புது இடங்களைப் பார்ப்பது, புது மனிதர்களுடன் பழகுவதெல்லாம் உற்சாகமான வாழ்க்கையின் வழித்தடங்கள். எனவே, அவ்வப்போது 'அவுட்டிங்' செல்லுங்கள். பரிசுத்தமான இயற்கையின் இருப்பிடங்கள் இதற்கு பெட்டர் சாய்ஸ்!

10. ஆன்மிகவாதியாக இருங்கள். ஆனால், மதவாதியாக மாறிவிடாதீர்கள். உங்களுக்கு ஆனந்தமும் நிம்மதியும் தரும் நூல்களை வாசியுங்கள்.

11. கவலைகள் இல்லாத மனிதன் இல்லை. அவற்றையும் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே ஏற்றுக் கொள்ளுங்கள். காலம், கவலைகளை ஆற்றிவிடும்.

12. விருப்பமிருந்தால் ஒரு செல்லப் பிராணியை வளருங்கள். அதனுடன் தினமும் நேரம் செலவிடுங்கள். எதிர்பார்ப்பில்லாத அன்பு, அதனிடம் நிறையவே கிடைக்கும்!

13. தினமும் காலையில் ஒரு ஆனந்தமான நாள் உங்களுக்காகக் காத்திருக்கிறது என்று விழித்துக் கொள்ளுங்கள். இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அன்றைய நாளின் சந்தோஷங்களை அசைபோடுங்கள். யாரையேனும் காயப் படுத்தியிருந்தால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென முடிவெடுங்கள். 'நல்ல அம்மா' நீங்கள்தான்!

14. குழந்தைகள் ஏதாவது தவறு செய்தால், அது தவறு என்பதை அவர்கள் உணரச் செய்யுங்கள். உணர்ந்த பின்னும் மீண்டும் மீண்டும் அறிவுரை சொல்லாதீர்கள்.

15. உங்களுக்குப் பிடித்த எல்லாமே உங்கள் குழந்தைக்கும் பிடிக்க வேண்டும் என்பதில்லை. எனவே, குழந்தைகளின் ரசனைக்கும் மதிப்பு கொடுங்கள்.

16. குழந்தைகள் உங்களை எரிச்சல் படுத்தும். மதிக்காதது போல் தோன்றும். உங்களுக்குப் பிடிக்காததைச் செய்யும். பொறுமை ரொம்ப முக்கியம். அவர்கள் குழந்தைகள்தானே?!

17. 'என்னால முடியல... நீயாச்சும் டாக்டராகு' என்று உங்கள் ஏக்கங்களை அவர்களின் லட்சியங்களாக திணிக்காதீர்கள். குழந்தைகளின் விருப்பங்களைச் சார்ந்தே அவர்களின் எதிர்காலம் அமையட்டும்.

18. 'அம்மா, அப்பா இருக்கோம்' என்று எந்தச் சூழ்நிலையிலும் அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வைக் கொடுங்கள். பயத்தை பழக விடாதீர்கள்.

19. குழந்தைகளின் ரசனையை ஊக்கப்படுத்துங்கள். மியூஸிக், டான்ஸ், விளையாட்டு என்று அவர்களுக்கு விருப்பமானவற்றில் அவர்களைச் சேர்த்துவிடுங்கள்.

20. நீங்கள் ஏதாவது தவறு செய்தால் குழந்தையிடம் மன்னிப்புக் கேட்கலாம்.. தவறில்லை. தப்பு செய்தால் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனும் பழக்கத்தை அது குழந்தைகளிடம் ஆழமாகப் பதித்து விடும்.

21. குழந்தைகளுடன் குடும்பமாக அவ்வப்போது வெளியே சென்று வருவது, பெற்றோர் - குழந்தைகள் பிணைப்பை வலுவாக்கும்.
22. 'உன்னைப் பத்து மாசம் சுமந்தவ நான்' என்றெல்லாம் டயலாக் விட வேண்டாம். அதைக் குழந்தைகள் அதற்குரிய பருவம் வரும்போது தானாக புரிந்துகொள்ளும்.

23. குழந்தைகளின் சின்னச் சின்ன குறும்புகளுக்கு தண்டனை கொடுக்காதீர்கள். வாழ்க்கையே ஒரு பாடம்தான். ஒவ்வொரு பருவத்திலும் சில சேட்டைகள் இருக்கும். அதை அனுமதியுங்கள்.

24. குழந்தைகளின் சின்னச் சின்ன வெற்றிகள், திறமைகளைப் பாராட்டுங்கள். பாராட்டுகள் அவர்களுடைய வழியை அவர்களுக்கு உறுதிப்படுத்தும். நல்ல செயல்களைத் தொடர்ந்து செய்ய உற்சாகப்படுத்தும்.

25. 'முக வாட்டமா, மன அழுத்தமா, ஆனந்தமா...' என்று குழந்தைகளின் மனநிலையை எப்போதும் கவனித்துக் கொண்டே இருங்கள். ஒரு நல்ல அம்மாவின் அடையாளம் அது

26. குழந்தைகளுக்கு வீட்டில் உள்ள வேலைகளில் சின்னச் சின்ன பொறுப்புகளைக் கொடுங்கள். தப்பும் தவறுமாக அவர்கள் பழகட்டும். முடிவுகளை எடுக்க ஊக்கப்படுத்துங்கள். இவையெல்லாம் குழந்தைக்கு பொறுப்பையும் தன்னம்பிக்கையையும் தரும்.

27. அம்மா ஆனவுடன் உடற்பயிற்சியையெல்லாம் மூட்டை கட்டி வைத்தாயிற்றா? தவறு. சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்யுங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள். உங்களைப் பார்த்து குழந்தைகளும் உடற்பயிற்சி செய்ய ஆர்வமாகும்.

28. வீட்டு வேலை ஒவ்வொன்றாக முளைத்துக்கொண்டேதான் இருக்கும். எனவே, உடல் அசதியாக இருந்தால் தூங்கி ஓய்வெடுங்கள். குழந்தைகள் பள்ளியில் இருந்து வரும்போது முகத்தில் அசதியைக் காட்டாதீர்கள்

. 29. குழந்தைகளுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருங்கள். 'நான் அம்மா மாதிரி இருக்கணும்' என்று குழந்தை நினைக்க வேண்டும். உங்கள் சொல் ஒன்று... செயல் ஒன்றாக இருப்பது எப்போதும் பயன் தராது.

30. குழந்தைக்கு ஒரு நல்ல தோழியாகவும் இருங்கள். ஸ்கூல் கதை, ஆட்டோ கதையை எல்லாம் அவர்கள் ஆர்வமாகப் பேச வரும்போது, அதைத் தட்டிக் கழிக்காமல் கேளுங்கள். து விடாதீர்கள்!

31. வேலை முக்கியம்தான். ஆனால், வாழ்க்கை என்பது வேலை மட்டும் இல்லை. எனவே, அதற்கான நேரத்தை மட்டும் அதற்காக ஒதுக்குங்கள். வாங்கும் சம்பளத்துக்கு குறைவில்லாமல் வேலை பாருங்கள், கூடுதலாக வேண்டாம். அலுவலகத்துக்காக குடும்ப ஆனந்தங்களை தலை முழுகாதீர்கள்.

32. உங்களுக்கு விருப்பமான வேலையையே தேர்வு செய்யுங்கள். கிரியேட்டிவ் துறையில் ஆர்வத்தை வைத்துக்கொண்டு கணக்கெழுதப் போகாதீர்கள்.

33. உங்களால் செய்ய முடியாதவற்றை, ஜென்டிலாக மறுத்துவிடுங்கள். மேலதிகாரியைத் திருப்திப்படுத்த அதிக வேலையைத் தூக்கித் தலையில் போட்டுக்கொள்வது மன அழுத்தத்தைத் தரும்.

34. உடன் பணிபுரிபவர்களின் உதவிகள் தேவைப்படும்போது தயங்காமல் பெற்றுக் கொள்ளுங்கள். தானே செய்வேன் என அடம் பிடிக்காதீர்கள். அதேபோல, இக்கட்டான நேரங்களில் அவர்களின் வேலையையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

35. வேலையையும் அது சார்ந்த டென்ஷன்களையும் முழுவதாக மறக்கும் சில நாட்கள் மிக அவசியம். எனவே, கிடைக்கும் ஓய்வு நாட்களில் குடும்பத்துடன் வெளியே எங்கேனும் சென்று வாருங்கள்.

36. மேல் அதிகாரியிடம் வாக்குவாத சூழலை பெரும்பாலும் தவிர்த்துவிடுங்கள். பலர் முன்பாக, மேலதிகாரியின் அறியாமையை வெளிப்படுத்த நினைக்காதீர்கள்.

37. இங்கு பலரின் கவலையும் 'இந்த வேலையை எப்படி முடிக்கப் போறோம்?' என்பதைவிட, அந்த வேலையைத் தொடங்குவதில்தான். நம்பிக்கையான தொடக்கம் நேர்த்தியான முடிவைத் தரும். எனவே, எந்த வேலையையும் நம்பிக்கையுடன் தொடங்குங்கள்.போடுங்கள் டைம்டேபிள்!

38. உங்கள் வாழ்க்கையின் சந்தோஷங்களை வரிசைப்படுத்துங்கள். பெரும்பாலும் அவை குழந்தைகள், வாழ்க்கைத் துணை, நல்ல வேலை, ஆன்மிகம், உடல்நலம் என நீளும். அதன் அடிப்படையில் உங்கள் நேரத்தையும் கவனத்தையும் செலவிடுங்கள்.

39. எவற்றுக்கெல்லாம் தேவையில்லாமல் அதிக நேரம் செலவிடுகிறீர்கள் என்பதைப் பட்டியலிடுங்கள். அவற்றை ஒதுக்குங்கள் அல்லது சுருக்குங்கள். தொலைக்காட்சி, செல்போன் முதலியவை சில உதாரணங்கள்.

40. உங்கள் பணிகளைத் திட்டமிட்டுச் செய்யுங்கள். குடும்பத்துக்கான நேரத்தில் அலுவலகமும், அலுவலக நேரத்தில் குடும்பமும் தலையிட வேண்டாம்.

41. வாரக் கடைசியில், நீங்கள் உணர்ந்த சந்தோஷ தருணங்கள், மற்றவர்களுடன் சேர்ந்து சிரித்த நிமிடங்கள் ஆகியவற்றைப் பட்டியல் போடுங்கள். இது, உங்கள் வாழ்க்கை எந்தளவுக்கு ஆனந்தமாகக் கழிகிறது என்பதை அறிவதற்கான சுய பரிசோதனை.

42. நேரம் தவறாமை, மிக முக்கியம். காலை முதல் இரவு வரை அனைத்து வேலைகளையும் குறித்த நேரத்தில் முடிப்பது.. பதற்றம், பரபரப்பு முதலியவற்றை நம் வாழ்வில் இருந்து விரட்டும். வேலைக்குச் செல்லும் பெண்கள், அடுத்த நாளுக்கான உடையில் இருந்து டூ-வீலரில் பெட்ரோல் செக் செய்வது வரை எல்லாவற்றையும் முதல் நாள் இரவே முடித்து விடுவது நலம்.

43. இ-மெயில் பார்க்க, லெட்டர் எழுதவெல்லாம் காலை, இரவு என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம் வசதியாக இருக்கும். உங்களுக்கான அந்த நேரத்தைக் கண்டுபிடித்து, அந்த வேலைகளை அந்த நேரத்துக்கு ஒதுக்குங்கள்.

44. டைரி எழுதுங்கள். வாரம், மாதம், வருட இறுதிகளில் உங்கள் டைரியைப் புரட்டுங்கள். உங்களது இலக்குகளையும், அதற்கு நீங்கள் கொடுத்துள்ள உழைப்பையும் அறியலாம். ரொமான்ஸ் ரோஜா பூக்க..!

45. நம்பிக்கை, குடும்ப வாழ்க்கையின் அஸ்திவாரம். மற்றவர்கள் உங்கள் துணை மீது சொல்லும் குற்றச்சாட்டுகளைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல், அவரிடமே நேரடியாக கேட்டு விடுங்கள். அதேபோல, உங்கள் துணையை யாரிடமும் விட்டுக் கொடுத்தும் பேசாதீர்கள்.

46. உங்கள் துணைக்கு நீங்கள் என்ன வாக்குறுதி கொடுத்தாலும் அதை நிறைவேற்றுவதில் உறுதியாக இருங்கள். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுக்காமல் இருப்பதே நல்லது.

47. வாழ்க்கைத் துணையின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள். முடிவுகள் எடுக்கும்போது கலந்துரையாடுங்கள். ஒருவருக்கொருவர் முக்கியத்துவம் கொடுப்பது, ஆரோக்கியமான வாழ்க்கையின் அடையாளம்.

48. மனம் விட்டுப் பேசுங்கள். அதற்காக தேவையில்லாத பழைய சோகக் கதைகளை கிண்டிக் கிளறாமல், ஆரோக்கியமான உறவுக்கு அழைத்துச் செல்லும் சந்தோஷமான விஷயங்களைப் பேசுங்கள்.

49. உங்கள் விருப்பத்துக்குத் தக்கபடி வாழ்க்கைத் துணையை வளைக்கப் பார்ப்பதுதான் பல்வேறு சிக்கல்களுக்கும் காரணமாகிவிடுகிறது. எனவே, அவர்களை அவர்களாவே இருக்க விடுங்கள், அப்படியே நேசியுங்கள். ஐந்து விரலும் ஒன்றாக இருப்பதில்லைதானே?!

50. சின்னச் சின்ன அன்பில்தான் ஜீவன் இருக்கிறது. எனவே, அவரின் பிறந்தநாள், திருமண நாள், குழந்தையின் பிறந்த நாள் போன்றவற்றை நினைவில் வைத்து வாழ்த்துங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் பெற்றோரின் ஸ்பெஷல் நாட்களையும் நினைவில் வைக்க முடிந்தால், அசத்திவிட்டீர்கள் என்று அர்த்தம்.

51. வீட்டு வேலை என்பது முழுக்க முழுக்க பெண்களின் டிபார்ட்மென்ட் என சோம்பேறித்தனமாக ஒதுங்காமல், ஷெல்ஃப் சுத்தம் செய்வது, பெட் ஸ்ப்ரெட் மாற்றுவது என்று பலவற்றை கணவரும் பகிர்ந்து கொள்ளலாம்.

52. செஸ், கேரம்போர்டு போன்ற இண்டோர் கேம்ஸ் சிலவற்றை அவ்வப்போது கணவர், மாமியார், மகன், மகள் என குடும்பமாக அமர்ந்து விளையாடிப் பாருங்கள். இடைவெளிகள் குறையும்... ஆனந்தம் அதிகரிக்கும்.

53. திருமணமாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டாலே ரொமான்ஸ் எல்லாம் காணாமல் போய்விடுகிறது. இது மிக மிகத் தவறு. அடிக்கடி வாழ்த்து அட்டைகள் வழங்குவது, வெளியே டின்னர் போவது, இருவருமாக தியேட்டருக்குப் போவது என அன்புக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டே இருங்கள். செய்வதை விரும்பிச் செய்யுங்கள்

. 54. தாம்பத்ய உறவு என்பது ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கையின் சாவியைப் போன்றது. எந்தக் காரணம் கொண்டும் சாவியைத் தொலைக்காதீர்கள்.

55. அவ்வப்போது பரிசுகள், பாராட்டுகள் வழங்குங்கள். சின்னச் சின்ன அங்கீகாரங்களிலும், பாராட்டுகளிலும் வாழ்க்கையின் சுவாரஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும்.

56. ஒருவர் பேசிக்கொண்டே இருக்க, இன்னொருவர் கேட்டுக் கொண்டே இருப்பது ஆரோக்கியமான உரையாடல் அல்ல. எனவே, நிறைய பேசுங்கள்.. நிறைய கேளுங்கள். இரண்டும் முக்கியம்.

57. உங்கள் துணைக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை அறிந்து வைத்திருங்கள். நீங்கள் அவர் மீது கொண்டுள்ள அன்பையும் அக்கறையையும் அவருக்கு உணர்த்தும் வழிகள் இவை.

58. மன்னிப்புக் கேட்பது, கொடுப்பது.. இரண்டும் சகஜமாக இருக்கட்டும். 'எப்படி நான் போய் மன்னிப்புக் கேட்பது' எனும் வீண் ஈகோவை விட்டு ஒழியுங்கள். அதேபோல மன்னிப்புக் கேட்டால் விநாடிகூட தாமதிக்காமல் மன்னித்துவிடுங்கள். உடனே அந்தப் பிழையை மறந்தும் விடுங்கள்.

59. கடந்து சென்ற கசப்பான நிகழ்ச்சிகளை, உரையாடல்களை 'குத்திக் காட்டி'ப் பேசாதீர்கள். இவை ஆரோக்கியமான உரையாடல்களுக்குக் கொள்ளி வைக்கும்.

60. ஒருவர் கோபமாக இருந்தால் அடுத்த நபர் கொஞ்சம் தணிந்து போகவேண்டும். சண்டைக்குச் சண்டை போட்டால் குடும்ப வாழ்க்கை அதோகதிதான். உறவுகளுக்கு உயிர் கொடுங்கள்!

61. தரமான அன்புக்குரிய தூரத்துச் சொந்தக்காரர்களின் தொடர்புகளைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். இவை ஆனந்தத்தின் உற்சாக ஊற்றுகளை கண் திறந்துவிடும்.

62. 'தினமும் யாருக்காவது ஒரு நல்லது செய்வேன்' என முடிவெடுங்கள். அடுத்தவர்களைச் சந்தோஷப்படுத்திப் பார்ப்பதிலுள்ள ஆனந்தம் அலாதியானது.

63. பொறாமையைத் தூக்கி கடலில் போடுங்கள். அடுத்தவர்களின் உயர்வில் நீங்கள் மகிழுங்கள். ஆனந்தம், உங்களுக்கு நிரந்தரமாகும்.

64. உச்சாணிக் கொம்புக்கு ஆனந்தம் தேடி வராது. ஆனந்தம் நதி போல. நடப்பவனுக்கே பயன்படும். பறப்பவனுக்கு அல்ல! எனவே, 'நான் உயர்ந்தவன்' எனும் எண்ணத்தைக் கைவிடுங்கள்.

65. கடந்த கால சிந்தனைகளிலேயே மூழ்கி விடாதீர்கள். நிகழ்காலத்தின் நிஜங்களில் வாழுங்கள். எதிர்காலத்தை நம்பிக்கையாக எதிர்கொள்ளுங்கள்.

66. உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் என உங்கள் நலம் விரும்பிகளுடன் அதிக நேரம் செலவிடுவது ஆரோக்கியமானது.

67. நிராகரிக்கப்பட்ட முதியவர்களைச் சந்திக்க முடிந்தால் மிகவும் நல்லது. அது உங்களுக்கு மனநிறைவையும் அவர்களுக்கு ஆனந்தத்தையும் தரும்.

68. விஷத் தண்ணீர் ஊற்றினால் ஆனந்தப் பூக்கள் மலராது. எனவே... குறை கூறுவது, பிறரை நோகடிப்பது, மற்றவர்களை எதிரிகளாக்குவது என தேவையற்ற செயல்களை விட்டுத் தள்ளுங்கள்.

69. 'அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள்' என்பதை விட்டுத் தள்ளுங்கள். அடுத்தவர்களுக்காக வாழும் வாழ்க்கை அட்ஜஸ்ட் செய்யப்பட்ட வாழ்க்கை. உங்களுக்காக நீங்கள் வாழும் வாழ்க்கைதான் ஆனந்தமான வாழ்க்கை.

70. அடுத்தவர்களோடு உங்களை ஒப்பீடு செய்வதை விட்டு விடுங்கள். 'நாம்தான் பெஸ்ட்' என்று தன்னம்பிக்கையுடன் இருங்கள். தன்னம்பிக்கை தலைக்கனம் ஆகிவிடாமலும் பார்த்துக்கொள்ளுங் கள்.

71. அடுத்தவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்குள் தேவையின்றி நுழையாதீர்கள். உங்களுடைய ஆலோசனையைக் கேட்டாலொழிய, 'உதவுகிறேன் பேர்வழி' என அவர்களுடைய உள் விவகாரங்களைக் கிளறாதீர்கள்.

72. பிரச்னைகளையே நினைத்துக் கொண்டிருக்காமல், முடிவுகளை நோக்கி கவனம் செலுத்துங்கள். சில பிரச்னைகள் கழுதை சுமக்கும் பொதியைப் போன்றது! இறக்கி வைத்து விட்டு நடையைக் கட்டுங்கள். நட்பைக் கொண்டாடுங்கள்!

73. உற்சாகமானவர்களை உங்கள் நண்பர்களாகத் தேர்ந்தெடுங்கள். 'அது நடக்காது', 'இது முடியாது' என எதற்கெடுத்தாலும் தடை சொல்பவர்களை ஒதுக்கி வையுங்கள்.

74. உங்களைத் தவறான வழியில் இழுத்துச் செல்லும் நபர்களிடம் 'ஸாரி' சொல்லிவிட்டு நட்பைத் துண்டித்து விடுங்கள்.

75. நட்பு என்பது பண்டமாற்றுப் பொருள் அல்ல. அது இயல்பாக வழியும் அருவி போன்றது. எனவே, எந்த ஆதாயமும் எதிர்பாராமல் நட்பு பாராட்டுங்கள்.

76. 'தோழி என்ன நினைப்பாளோ?' என அவருடைய குறைகளைச் சுட்டிக் காட்டத் தயங்காதீர்கள். நல்ல 'நலம் விரும்பி'யாக இருங்கள்... நல்ல 'விசிறி'யாக அல்ல.

77. நண்பர்களுக்குள் பகிரப்படுவது உச்சபட்ச நம்பிக்கை உரையாடல்கள். எனவே, வெளியே அவற்றை அம்பலப்படுத்தாதீர்கள்.

78. நண்பர்களிடம் வெளிப்படையாக, உண்மையாக இருங்கள். நட்பில் போலித்தனம் தேவைஇல்லை.

79. புதிய நபர்களைப் பார்த்தால் பேசத் தயங்காதீர்கள். ஒரு புன்னகை, ஒரு உரையாடல், ஒரு 'ஹாய்'... இவையெல்லாம் உங்களுக்கு ஒரு நல்ல நண்பனை சம்பாதித்துத் தரக் கூடும்.

80. எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல... எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.

81. வெறும் பேச்சுடன் விலகிக் கொள்ளாமல், நண்பர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதும், தேவைப்படும் நேரங்களில் அருகில் இருப்பதும் உங்கள் நட்பை இன்னும் அர்த்தப்படுத்தும்.

82. நல்ல நட்பு மனதை உற்சாகமூட்டும். சோர்வடையச் செய்வதும், தன்னம்பிக் கையைக் குலைப்பதும் நல்ல நட்பாக இருக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

83. அடிக்கடி நண்பர்களை நேரில் சந்தியுங்கள். நேரில் சந்திக்கும் நட்பு ஆரோக்கியமாக வளரும்.

84. நல்ல நண்பர்களுக்கான முக்கியவத்துவத்தைக் குறைத்து, அவர்களை கடைசியில் தள்ளாதீர்கள். நண்பர்களின் சின்னச் சின்ன வெற்றிகளைக் கொண்டாடுங்கள். உங்களின் சின்னச் சின்ன வெற்றிகளும் அவர்களால் கொண்டாடப்படும். ஆரோக்கியமும் ஆனந்தமே!

85. ஆரோக்கியமான உடல் இல்லையேல் ஆனந்தமாக இருப்பது ஏது?! உங்கள் திட்டங்களையும் கனவுகளையும் நிறைவேற்ற ஆரோக்கியமே அஸ்திவாரம். அந்தப் புரிதலே முதல் படி.

86. ஓய்வெடுக்காத உடல், நோய்களின் கூடாரமாகிவிடும். எனவே, தேவையான அளவு ஓய்வெடுங்கள்.

87. சோம்பலான மனம் சோர்வான உடலைத் தரும். நடப்பது, ஓடுவது, நடனம், நீச்சல், சைக்கிளிங் என ஏதாவது ஒரு உற்சாகமான செயலை உடற்பயிற்சியாக்குங்கள்.

88. நிறைய தண்ணீர் குடியுங்கள். மிகவும் எளிய, ஆனால் பலரும் செய்யாத ஒரு செயல் இது. அதிக தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்துக்கு மிக மிக அவசியம்.

89. எக்காரணம் கொண்டும் காலை, மதியம், இரவு உணவுகளை 'ஸ்கிப்' செய்து, சோர்வை சம்பாதிக்காதீர்கள். பெட்ரோல் போட்டால்தான் வண்டி ஓடும்!

90. நல்ல சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற 'ஜங்க்' உணவுகளை அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.

91. குழந்தைகளைப் பாராட்டவும், உற்சாகமூட்டவும் சாக்லெட்கள், சிப்ஸ் வகைகளைக் கொடுத்துப் பழக்காதீர்கள்.

92. டி.வி. பார்த்துக்கொண்டே வெந்ததை விழுங்காமல், தினமும் அட்லீஸ்ட் இரவு உணவையாவது வீட்டில் அனைவரும் சேர்ந்து சாப்பிடுங்கள். ஆனந்தமும், உற்சாகமும், ஆரோக்கியமும் தங்கும்.

93. உப்பு, எண்ணெயை உணவில் குறைத்துப் பழகுங்கள். அவை, உங்கள் ஆரோக்கியத்தின் எதிரி.

94. புகை, மது, அதிக காபி போன்றவை ஆரோக்கியமான உடலின் எதிரிகள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவில் நிறுத்துங்கள்.

95. மன அழுத்தத்தைக் குறையுங்கள். யோகா, தியானம், ஆன்மிகம் என உங்கள் மனதை அமைதிப்படுத்துபவற்றில் கவனம் செலுத்துங்கள். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா...'

96. பேச்சிலும் செயலிலும் உண்மையைப் பின்பற்றுபவர்களுக்கு மனநிறைவான வாழ்க்கை அமைவது உறுதி. பொய் பேசுபவர்களுக்கு ஆனந்தம் அந்நியமாகிவிடும். நீங்கள் சொன்ன பொய்யும் அதனால் ஏற்பட்ட மனச்சுமையும் சதா உங்களைத் துரத்திக் கொண்டிருக்கும். மற்றவர்களால் கண்டறியப்படும் உங்களின் சிறு பொய்கூட, சமூகத்தில் நீங்கள் பல காலம் சம்பாதித்து வைத்திருந்த நன் மதிப்பை பாழ் செய்துவிடும்.

97. கடந்தகால கவலைகள், சோகங்கள், அவமானங்கள் போன்ற நிகழ்வுகளை நினைத்து நினைத்துப் பார்ப்பதில், பயன் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. அதேபோல, 'எதிர்காலத்தில் நோய் வந்துவிடுமோ, வேலை போய்விடுமோ' என கற்பனையான பயம் முன்பாக மண்டிட்டு பதறி, வாழும் நிகழ்காலத்தை நழுவ விட்டுவிடாதீர்கள். 'லிவ் த மொமென்ட்' என்பார்கள். இந்த நிமிடத்தை அனுபவித்து வாழுங்கள்.

98. வரவுக்கு ஏற்ற செலவு என்பது மிக முக்கியம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை, பிள்ளைகளின் ஸ்கூல் ஃபீஸ் எல்லாம் எந்த தேதியில் வரும் என்பது பல மாதங்களுக்கு முன்பே அறிந்துகொள்ள இயலுமென்பதால், அந்த செலவுகளுக்கு சில மாதங்கள் முன்பிருந்தே சேமியுங்கள். கூடவே, கடன் இல்லா வாழ்க்கையே ஒரு பெரிய நிம்மதிதான். தேவைக்கும், பேராசைக்கும் (Need, Greed) உள்ள வித்தியாசம் அறிந்திருப்பதும் நல்லது.

99. பெற்றோர்களை மதியுங்கள். குறிப்பாக வயதான காலத்தில் அருகில் வைத்துப் பராமரியுங்கள். அவர்கள் மறைவுக்கு பிறகும் நீங்கள் குற்றவுணர்ச்சி இல்லாமல் மனநிறைவோடு வாழலாம்.

100. உங்களை நேசிக்க, மதிக்க மற்றவர்களை எதிர்பார்க்காதீர்கள். நீங்களே உங்களைக் கொண்டாடுங்கள், உங்களை எப்போதும் மனதுக்குள் உயர்வாகவே நினையுங்கள். அதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆடை ஆபரணங்களால் உடலை அலங்காரம் செய்வதுடன் மறக்காமல் முகத்தில் சிரிப்பை அணிந்து கொள்ளுங்கள்.


'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளைப்போல, நம் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் நம்முடைய செயல்களே தீர்மானிக்கும். வாழ்க்கை என்பது ஒரு பயணம். அதன் ஒவ்வொரு எல்லைக் கல்லையும் கொண்டாடுங்கள். பயணம் நிறைவாக முடியும்!

http://sfrfaizur.blogspot.in/




கணபதி
கணபதி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 69
Location : chennai

Back to top Go down

ஆனந்தமான வாழ்க்கைக்கு 100 டிப்ஸ்'! Empty Re: ஆனந்தமான வாழ்க்கைக்கு 100 டிப்ஸ்'!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Apr 11, 2013 3:10 pm

தேவையான பகிர்வு பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum