தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எப்படி எப்படி - சிறுவர் கதை

Go down

எப்படி எப்படி - சிறுவர் கதை Empty எப்படி எப்படி - சிறுவர் கதை

Post by அ.இராமநாதன் Sun Apr 07, 2013 9:54 am

[You must be registered and logged in to see this image.]
-
ஆதனார் என்ற அரசர் தென்றல் நாட்டை நல்லாட்சி செய்து
வந்தார். மக்களுக்கு ஏதேனும் குறை உள்ளதா என்பதை
அறிய விரும்பினார். வணிகனைப் போல மாறுவேடம்
போட்டுக் கொண்டு குதிரையில் அமர்ந்தார்.
ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டு வந்தார்.

வழியில் வழிப் போக்கன் ஒருவன் நின்று இருந்தான்.
குதிரையில் அவர் வருவதைப் பார்த்த அவன் கை காட்டினான்.

அவரும் குதிரையை நிறுத்தினார்.

“ஐயா! நீண்ட தொலைவு நடந்து வந்ததால் களைப்பு அடைந்து
உள்ளேன். பக்கத்து ஊர் செல்ல வேண்டும். உங்கள் குதிரையில்
என்னையும் ஏற்றிச் செல்லுங்கள். இந்த உதவியை என்றும்
மறக்க மாட்டேன்,” என்று வேண்டினான்.

இரக்கப்பட்ட அவர், “”குதிரையில் ஏறிக் கொள்,” என்றார்.

அவனும் குதிரையில் ஏறி அமர்ந்தான்.

இருவரையும் சுமந்து கொண்டு குதிரை பக்கத்து ஊரை அடைந்தது.

“”உன் ஊர் வந்துவிட்டது இறங்கிக் கொள்,” என்றார் அரசர்.

“”இது என் குதிரை… நான் ஏன் இறங்க வேண்டும்?
இரக்கப்பட்டு உன்னைக் குதிரையில் ஏற்றி வந்தேன்.
பெரிய ஏமாற்றுக்காரனாக இருப்பாய் போல இருக்கிறதே.
நீ கீழே இறங்கு,” என்று அதட்டினான் வழிப்போக்கன்.

“”இது என் குதிரை. நீ கீழே இறங்கு,” என்றார் அரசர்.

அங்கே கூட்டம் கூடி விட்டது.

“தான் யார் என்ற உண்மையைச் சொல்ல வேண்டாம்.
என்னதான் நடக்கிறது பார்ப்போம்’ என்று நினைத்தார் அரசர்.

கூட்டத்தினரைப் பார்த்து, “”ஐயா! இது என் குதிரை… வழியில்
இவன் குதிரையில் தன்னை ஏற்றிச் செல்லுமாறு கெஞ்சினான்.
நானும் குதிரையில் ஏற்றி வந்தேன். இங்கே வந்ததும் இதைத்
தன் குதிரை என்று அடாவடியாகப் பேசுகிறான்,” என்றார்.

அவனோ, “”இது என் குதிரை. இவனை நான் ஏற்றி வந்தேன்.
உங்கள் எல்லாரையும் இவன் ஏமாற்றப் பார்க்கிறான்,” என்றான்.

அங்கே இருந்தவர்களால் குதிரைக்குச் சொந்தக்காரர் யார்
என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இருவரையும் பார்த்து, “”இந்த ஊர் நீதிபதியிடம் செல்லுங்கள்.
அவர் உங்கள் வழக்கைத் தீர்த்து வைப்பார்,” என்றனர்.

அவர்கள் இருவரும் குதிரையுடன் நீதிபதியிடம் வந்தனர். தான் அரசன்
என்ற உண்மையை அவர் வெளிப்படுத்தவில்லை.

“நீதிபதி எப்படி தீர்ப்பு வழங்குகிறார்? பார்ப்போம்,’ என்று நினைத்தார்.

இருவரையும் பார்த்து நீதிபதி, “”உங்களுக்குள் என்ன வழக்கு?” என்று
கேட்டார்.

“”நீதிபதி அவர்களே! நான் குதிரையில் வந்து கொண்டிருந்தேன்.
வழியில் இவர் குதிரையில் தன்னை ஏற்றி வரும்படி வேண்டினார்.
நான் இவரை ஏற்றி வந்தேன். இந்த ஊர் வந்ததும் இவர், இது தன்
குதிரை என்கிறார். என்னை ஏற்றி வந்ததாகச் சொல்கிறார். என்
குதிரைக்கு உரிமை கொண்டாடுகிறார். நீங்கள்தான் நல்ல தீர்ப்பு
வழங்க வேண்டும்,” என்றார் அவர்.

“”நீ என்ன சொல்கிறாய்?” என்று அரசரைப் பார்த்து கேட்டார் நீதிபதி.

“”நீதிபதி அவர்களே! இது என் குதிரை. இரக்கப்பட்டு இவனை ஏற்றி
வந்தேன். இப்போது இந்தக் குதிரையே இவனுடையது என்கிறார்.
இப்படி ஒரு ஏமாற்றுக்காரனை நான் பார்த்தது இல்லை. நீங்கள்தான்
என் குதிரையை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்,” என்றான் அவன்.

அங்கிருந்த வீரர்களை அழைத்தார் நீதிபதி.

“”இந்தக் குதிரையைக் கொட்டடியில் அடையுங்கள். மற்ற குதிரைகளுடன்
இது இருக்கட்டும்,” என்றார்.

அவர்களும் அந்தக் குதிரையை மற்ற குதிரைகளுடன் சேர்த்துக் கட்டினர்.

சிறிது நேரம் சென்றது. குதிரைகள் கட்டப்பட்டு இருந்த இடத்திற்கு நீதிபதி
வந்தார்.

அவர்கள் இருவரையும் ஒவ்வொருவராக அழைத்தார்.

“”உங்கள் குதிரையை அடையாளம் காட்டுங்கள்,” என்றார்.

இருவருமே, அந்தக் குதிரையைச் சரியாக அடையாளம் காட்டினர்.

மாறுவேடத்தில் இருந்த அரசரைப் பார்த்த நீதிபதி, “”இது உங்கள்
குதிரை. இவன் ஏமாற்ற முயன்று இருக்கிறான்,” என்றார்.

இதைக் கேட்ட அரசர் வியப்பு அடைந்தார். தன் மாறுவேடத்தை நீக்கினார்.

அரசரைப் பார்த்த நீதிபதி அவரை வணங்கினார்.

“நீதிபதி அவர்களே! நாங்கள் இருவருமே குதிரையைச் சரியாக
அடையாளம் காட்டினோம். நான்தான் குதிரையின் சொந்தக்காரன்
என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?” என்று கேட்டார்.

“”அரசர் பெருமானே! நீங்கள் குதிரையின் அருகே சென்றதும்,
அது மகிழ்ச்சியாகக் கனைத்தது. உங்களை உரசிக் கொண்டு
நின்றது. ஆனால், அவன் அருகில் சென்றதும் அந்தக் குதிரை
அவனை உதைத்தது. இதைப் பார்த்த நான் நீங்கள்தான்
குதிரையின் சொந்தக்காரன் என்பதை அறிந்து கொண்டேன்,”
என்று விளக்கம் தந்தார் நீதிபதி.

“”உங்கள் அறிவுக்கூர்மையைப் பாராட்டுகிறேன்,” என்ற அரசன்
அவர்களுக்கு பரிசுகளை கொடுத்தார்.

ஏமாற்ற முயன்ற வழிப்போக்கனுக்கு, தக்க தண்டணை கொடுத்தார்
அரசர்.
-
——————————————–
நன்றி:
சிறுவர் மலர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum