தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை

4 posters

Go down

 நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை Empty நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 17, 2013 9:11 pm

தங்கம் விலை சரிவடைந்து வருவதால், கடந்த நான்கு நாட்களில், 560 கோடி ரூபாய் மதிப்பிலான, 2,000 கிலோ தங்கம், சென்னையில் மட்டும் விற்பனையாகி உள்ளது. நேற்றும், ஆபரண தங்கத்தின் விலை, சவரனுக்கு அதிரடியாக, 544 ரூபாய் சரிவடைந்து, 19,528 ரூபாய்க்கு விற்பனையானது.
சரியும் தங்கம்:

கடந்த ஆண்டு செப்., 8ம் தேதி, முதல்முறையாக, 22 காரட் ஆபரண தங்கத்தின், ஒரு கிராம் 3,022 ரூபாய்க்கும், சவரன் 24,176 ரூபாய்க்கும் விற்பனையானது. பின், தங்கத்தின் விலை அதிகபட்சமாக, ஒரு கிராம் 3,068 ரூபாய்க்கும், ஒரு சவரன் 24,544 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், சர்வதேச நிலவரங்களால், தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை, கடந்த வாரம் முதல், கடும் வீழ்ச்சி கண்டு வருகின்றன. கடந்த வாரம், 8ம் தேதி, ஒரு கிராம் தங்கம் 2,759 ரூபாய்க்கும், ஒரு சவரன் 22,072 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று இதன் விலை கிராமுக்கு 2,441 ரூபாய்க்கும், சவரனுக்கு 19,528 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, தங்கம் விலை கிராமுக்கு 318 ரூபாயும், சவரனுக்கு, 2,544 ரூபாயும் சரிவடைந்துள்ளது.இதே காலத்தில், 24 காரட், 10 கிராம் சொக்க தங்கத்தின் விலை, 3,405 ரூபாய் வீழ்ச்சிகண்டு, 29,510 ரூபாயிலிருந்து, 26,105 ரூபாயாக குறைந்து உள்ளது. வெள்ளி விலை, கிராமுக்கு, 6.40 ரூபாய் குறைந்து, 55.10 ரூபாயிலிருந்து, 48.70 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை, 6,040 ரூபாய் சரிவடைந்து, 51,535 ரூபாயிலிருந்து, 45,495 ரூபாயாக குறைந்துள்ளது. நேற்றுடன் ஒப்பிடும் போது, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு, 68 குறைந்து, 2,441 ரூபாய்க்கும், சவரனுக்கு, 544 ரூபாய் சரிவடைந்து, 19,528 ரூபாய்க்கும் விற்பனையானது.இதற்கு முன், கடந்த, 2011ம் ஆண்டு நவம்பர் மாதம், ஒரு சவரன் தங்கம், 19,976 ரூபாய்க்கு விற்பனையானது.
25 சதவீதம் உயர்வு:

சென்னையில், நாள்தோறும் சராசரியாக, 120 கோடி ரூபாய் மதிப்பிலான, 400 கிலோ (ஒரு கிலோ - 27-28 லட்சம் ரூபாய்), தங்க ஆபரணங்கள் விற்பனையாகின்றன.தங்கத்தின் விலை, தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளதால், சென்னையில், கடந்த நான்கு நாட்களில் மட்டும், 560 கோடி ரூபாய் மதிப்பிலான, 2,000 கிலோ தங்கம் விற்பனையாகிஉள்ளதாக, வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, தினசரி விற்பனை, 25 சதவீதம் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, தங்க நகை வியாபாரி ஒருவர் கூறுகையில், ""அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பின் ஒரு சில நாடுகளின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பத் துவங்கியுள்ளது. இருப்பினும், கடந்த, 12 ஆண்டுகளாக தங்கத்தின் விலை செயற்கையாக உயர்த்தப் பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக, சர்வதேச முதலீட்டாளர் தாங்களாகவே விலை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இனி விலை உயர்ந்தாலும், பெரிய அளவிற்கு உயர வாய்ப்பில்லை'' என்றார்.

இப்போது தங்கம் வாங்கலாமா?

கடந்த, 12 ஆண்டுகளாக பெரும்பாலும் தளர்வு இல்லாமல் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, கடந்த சில தினங்களாக அதிரடி வீழ்ச்சி கண்டு வருகிறது. இது, முதலீட்டாளர்கள் மற்றும் ஆபரண தங்கம் வாங்க விரும்பும் நுகர்வோரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில், ஒரு சவரன் ஆபரண தங்கம், 24 ஆயிரம் ரூபாயை தாண்டி இருந்தது. இது, தற்போது, 20 ஆயிரம் ரூபாயாக உள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும், சவரனுக்கு, 2,600 ரூபாய் விலை குறைந்து உள்ளது.

காரணம் என்ன?


தங்கம் விலை வீழ்ச்சி, நடுத்தர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள போதிலும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
*இப்போது தங்க நகைகளை வாங்கலாமா?
*தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதா?
*"கோல்டு இ.டி.எப்' போன்ற, தங்கம் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய, இது சரியான தருணமா போன்ற, பல கேள்விகளுக்கான விடை, வரும் நாட்களில் உருவாகக் கூடிய சர்வதேச நிலவரங்களை பொறுத்து உள்ளது.குறிப்பாக, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள சைப்ரஸ் நாடு, கடனை அடைக்க, எந்த நேரத்திலும் தங்கத்தை விற்பனை செய்யலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நாடு, 14 டன் தங்கத்தை இருப்பில் வைத்துள்ளது. இதை விற்பனை செய்தால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் சரிவடையும்.சைப்ரஸ் நாட்டை பின்பற்றி, நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள, ஸ்லோவீனியா, ஹங்கெரி, போர்ச்”கல் ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ், அயர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளும், தங்கத்தை விற்பனை செய்யக்கூடும் என்ற, வதந்திகளும் கிளம்பி உள்ளன.சைப்ரஸிடம், 14 டன் தங்கம் தான் உள்ளது, ஆனால், இத்தாலியிடம் மட்டும், 2,452 டன் தங்கம் உள்ளது. மற்ற நாடுகளிடம் நூற்றுக்கணக்கான டன் தங்கம் இருப்பு உள்ளது.இப்படி நிதி நெருக்கடியில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்கத்தை விற்கவோ, அடமானம் வைக்கவோ துவங்கினால், தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சி அடையும் என்ற பீதியில், சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கள் தங்க முதலீடுகளை விற்க துவங்கி உள்ளனர்.

இந்த நாடுகள், சிறிதளவு தங்கத்தை விற்பனை செய்தால் கூட, விலை மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி காண வாய்ப்பு உள்ளது என, கூறப்படுகிறது.மேலும், அமெரிக்க பொருளாதாரம் சீரடைந்து வருவதாக கருதப்படுவதால், தங்க முதலீட்டாளர்கள் பலர், டாலருக்கு தங்கள் முதலீடுகளை திருப்பி விடுவதாக கூறப்படுகிறது.அதே நேரத்தில், சந்தையின் மறுபக்கத்தில், உலகளவில் தங்க நுகர்வில் முக்கிய இடம் பிடித்துள்ளது சீனா. நேற்று முன்தினம் வெளியான சீன பொருளாதார புள்ளிவிவரங்களின் படி, எதிர்பார்த்த அளவை விட சீனாவின் வளர்ச்சி குறைந்து இருந்ததால், அந்த நாட்டில் தங்கத்தின் நுகர்வு குறையுமோ என்ற, வதந்தியும் முதலீட்டாளர்களை பீதியடைய செய்தது.

லாபம் கிடைக்குமா?

ஆனால், ஐரோப்பிய நாடுகள் தங்கத்தை விற்கும் சூழல் உருவாகுமா என்ற, கேள்வியும் எழுந்துள்ளது. ஐரோப்பிய மத்திய வங்கியின் பொருளாதார உதவி திட்ட சரத்துகளில் தங்கம் விற்பனை ஒரு முக்கிய சரத்தாக இருந்தாலும், இதை பற்றி சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் மவுனமாகவே உள்ளன. இதனால், இந்த விலை வீழ்ச்சி தொடருவது கேள்விக்குறியாகத் தான் உள்ளது.தங்க நகைகளை பொறுத்தவரை, தற்போது வாங்குவது லாபகரமானது என்றே கூறலாம். திருமண காலம் நடந்து கொண்டு இருப்பதாலும், தங்கம் வாங்க சிறப்பு நாளாக கருதப்படும் அட்சய திருதியை, மே 13ம் தேதி வரவுள்ளதாலும், தங்க நகை வாங்குவது அதிகரிக்கும் என்பதால், விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது.முதலீடுகளை பொருத்தவரை, முன்பேர சந்தையில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான தருணம் இதுவல்ல. தங்கம் விலையின் திடீர் சரிவால், தரகு நிறுவனங்கள், இழப்பை குறைக்கும் நோக்கில், வாடிக்கையாளர்களின் ஒப்பந்தங்களை உடனடியாக முடித்து, அதாவது தங்கத்தை விற்பனை செய்து வருகின்றன.

இதுகுறித்து, பங்கு சந்தை ஆய்வு மற்றும் தரகு சேவைகளை அளித்து வரும், எக்ட்ரா நிறுவனத்தின் தலைவர், டி.ஆர். அருள்ராஜன் கூறியதாவது:உள்நாட்டில், எம்.சி.எக்ஸ் முன்பேர சந்தையில் கடந்த சில தினங்களுக்கு முன், 10 கிராம் தங்கத்தின் விலை 28,900 ரூபாயாக இருந்தது. இது, 25,700 ரூபாயாக குறைந்துள்ளது. இது மேலும் குறைந்து, 25 ஆயிரம் ரூபாய்க்கும் கீழாக சரிந்தால், 22,500 - 23,000 ரூபாய் வரை வீழ்ச்சி காண வாய்ப்புள்ளது. அதனால், முதலீட்டாளர்கள், தற்போது, ஓரளவு விலை வீழ்ச்சி காணும்போது, பகுதி பகுதியாக முதலீடு செய்வது சிறந்தது. அதே சமயம் வர்த்தகர்கள், தற்போதுள்ள நிலையில், சந்தையில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது.முன்பேர வர்த்தகத்தில் தங்கத்தை உடனடியாக விற்பது சிறந்தது. விலை குறைந்துள்ளதென்று, மேலும் தங்கத்தை வாங்கி, இழப்பை ஈடு செய்ய நினைத்தால், அது பெருத்த இழப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.சர்வதேச அளவில், சிறந்த முதலீடுகளில் ஒன்றாக தங்கம் கருதப்பட்ட நிலை மாறி வந்தாலும், நீண்ட காலம் தங்கத்தை வைத்துக்கொள்ளும் நோக்கில் வாங்கும் நுகர்வோருக்கு இது நல்ல நேரம்.

விலை வீழ்ச்சி ஏன்?

சென்னை தங்க விற்பனையாளர்கள் நலச் சங்க பொருளாளர், எம்.குமார் கூறியதாவது: இந்தியாவை பொறுத்தவரை, தங்கம் விலை ஏறும் என்ற எதிர்பார்ப்பில், எம்.சி.எக்ஸ் போன்ற முன்பேர சந்தைகளில், வர்த்தகர்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், சர்வதேச முன்பேர சந்தைகளில் தங்கம் விலை வீழ்ச்சி கண்டதால், உள்நாட்டு வர்த்தகர்கள், ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு முன்பாகவே, தங்கத்தை விற்பனை செய்து வருகின்றனர்.இழப்பை குறைத்துக் கொள்ளும் நோக்கில் அவர்கள் தங்கத்தை விற்பனை செய்வதால், அதன் விலை குறைந்துள்ளது.மேலும், பரஸ்பர நிதி நிறுவனங்களின், "கோல்டு இ.டி.எப்' திட்டங்களில் இருந்தும் குறிப்பிடத்தக்க அளவிற்கு முதலீடு வெளியேறி வருகிறது. இதன் காரணமாகவும், தங்கத்தின் விலை சரிவடைந்து வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை Empty Re: நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 17, 2013 9:12 pm

தினமலர் வாசகர் கருத்துகள்
Sathesh Pandian - chennai,இந்தியா
17-ஏப்-201313:33:16 IST Report Abuse
ஒரு பவுன் தங்கம் பத்தாயிரத்திற்கு வருவது உறுதி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை Empty Re: நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 17, 2013 9:13 pm


Ragavi As - madurai vandiyur,இந்தியா
17-ஏப்-201313:24:33 IST Report Abuse
இரண்டு நாட்களாக மக்களிடையே தங்கம் சிக்கி தவிக்கிறாள் தொடரட்டும் தங்கம் விலை வீழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை Empty Re: நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 17, 2013 9:14 pm


Adaikkan Suresh - zhuhai,சீனா
17-ஏப்-201312:54:31 IST Report Abuse
நடுத்தர மக்களுக்கு நல்ல நேரம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை Empty Re: நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 17, 2013 9:14 pm


amukkusaamy - chennai,இந்தியா
17-ஏப்-201312:41:57 IST Report Abuse
எதிர்வரும் மே மாதம் தங்கம் மிக குறைந்த விலைக்கு வந்து மீண்டும் விலை ஏறும் என்று உலக தங்க வர்த்தக வல்லுனர்கள் கருத்தை வலைதளத்தில் படித்தேன். கடந்த 30 வருடங்களில் இல்லாத விலை வீழ்ச்சியினை - சுமார் 9.5% - தொட்டிருக்கிறது. சிரியா தனது நாட்டு தங்கத்தை சந்தையில் விற்பதாகவும் அதானால் இந்த விலை வீழ்ச்சி என்றும் சொல்கிறார்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை Empty Re: நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 17, 2013 9:15 pm


ahamed - nellai,இந்தியா
17-ஏப்-201310:13:35 IST Report Abuse
ஏழை மக்களும் கொஞ்சம் தங்கம் வாங்கட்டும்............... இன்னும் விலை குறையட்டும்.......
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை Empty Re: நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 17, 2013 9:15 pm


சுலைமான் - தோஹா,கத்தார்
17-ஏப்-201309:38:59 IST Report Abuse
பாமரனுக்கு எட்டாக்கனியாக இருந்த தங்கம் விலை குறைத்து வருவது அவர்கள் வயிற்றில் பால் வார்த்திருக்கும். அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்திருப்பவர்களின் வயிற்றில் புளியையும்..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை Empty Re: நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 17, 2013 9:15 pm


Parivel - blore,இந்தியா
17-ஏப்-201309:23:15 IST Report Abuse
தங்கம் இறக்குமதி பெட்ரோல் இக்கு அடுத்தபடியான இடத்தில உள்ளது. தங்கம் வாங்குபவர்கள், பெட்ரோலுக்கும் அதை சார்ந்த பொருள்களுக்கும் அதிக விலை கொடுக்க தயாராக இருக்கவேண்டும். தங்கம் வாங்குவது இப்போதைக்கு பொருளதார பயங்கரவாதம் நமது நாட்டிற்கு. நம்முடைய நிதி அமைசர் ஏற்கெனெவே அமெரிக்காவில் இருக்கிறார் பிச்சை தட்டோடு. படித்தவர்கள் மற்றும் பொருளாதரம் தெரிந்தவர்கள், தெரியாதவர்களுக்கு அறிவுரை குறவேண்டும். இல்லையெனில் இந்தியா அடுத்த சைப்ருஸ் தான்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை Empty Re: நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 17, 2013 9:16 pm


Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஏப்-201308:44:35 IST Report Abuse
அவசரபடதீர்கள் இன்னும் விலை kuraiyalam
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை Empty Re: நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 17, 2013 9:16 pm


PRAKASH - chennai,இந்தியா
17-ஏப்-201308:42:29 IST Report Abuse
எத்தன பேரு வீட்டுல ஹஸ்பண்டு பர்சு காலி ஆச்சோ ??
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை Empty Re: நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 17, 2013 9:16 pm


Jai Madaras - doha,கத்தார்
17-ஏப்-201308:33:56 IST Report Abuse
இந்தமாதிரி மடியில் பணத்தை கட்டிக்கொண்டு தங்கம் வாங்கி பதுக்குகிறவர்களிடம் 50% வரி விதிக்கவேண்டும். இவர்களால் தங்கம் விலை மேலும் குறைவது தடுக்கப்படுகிறது. ஏழை பெண்கள் தங்கம்வாங்க முடிவதில்லை.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை Empty Re: நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை

Post by அ.இராமநாதன் Wed Apr 17, 2013 10:33 pm

நம்முடைய நிதி அமைசர் ஏற்கெனெவே அமெரிக்காவில் இருக்கிறார் பிச்சை தட்டோடு...!!
-
இந்தியாவின் பொருளாதாரம் ஸ்ட்ராங்காதான் இருக்குது...
யாரிடமும் கையேந்தும் நிலை இல்லை...!!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை Empty Re: நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை

Post by கலைநிலா Thu Apr 18, 2013 10:17 am

மகிழ்ச்சி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

 நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை Empty Re: நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை

Post by அ.இராமநாதன் Thu Apr 18, 2013 2:49 pm

இன்றைய ஆபரண தங்கத்தின் விலை
கிராம் ஒன்றுக்கு ரூபாய் 2401 மட்டுமே...
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை Empty Re: நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Apr 20, 2013 1:36 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை Empty Re: நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஈன்ற குட்டிகளை நான்கு நாட்களில் கொன்ற தாய் புலி
» இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்கில் 5 கிலோ சமையல் கியாஸ் விற்பனை
» 14 பங்களா; 1 கிலோ தங்கம் : ஆந்திராவை அதிர வைத்த அதிகாரி
» களைகட்டிய அட்ஷய திருதியை ரூ.1,275 கோடிக்கு தங்கம் விற்பனை
» குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum