தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மூளையின் ஆற்றலை எப்படி எல்லாம் அதிகரித்துக் கொள்ளலாம்
2 posters
Page 1 of 1
மூளையின் ஆற்றலை எப்படி எல்லாம் அதிகரித்துக் கொள்ளலாம்
மூளையின் ஆற்றலை எப்படி எல்லாம் அதிகரித்துக் கொள்ளலாம் என்பதை சென்னையின் முன்னணி நரம்பியல் மருத்துவர் ஏ.வி.ஸ்ரீனிவாசன் சொல்கிறார்...
''குழந்தை, தாயின் கருவில் இருக்கும்போதே விநாடிக்கு 2,500 நியூரான்கள் என்ற நரம்பு செல்கள் உருவாகின்றன. தொடர்ந்து 90 நாட்களுக்கு நியூரான்கள் உருவாகும். மனித மூளை 1,400 கோடி நியூரான்களால் ஆனது. இது உலகில் இருக்கிற அணுக்களின் எண்ணிகையைவிட அதிகம். இந்த நியூரான்கள், அவற்றுக்கு சக்தியை அளிக்கும் சோடியம், பொட்டாசியம் போன்றவற்றைத் தாங்களே தயாரித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டவை.
மேலும், இந்த நியூரான்கள், ஜாதி, மதம், இனம், மொழி, வயது, பாலியல் வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே அளவில்தான் இருக்கின்றன. எந்த ஒரு மனிதனும் இன்னொரு மனிதனுக்கு இணையாகப் பணத்தைச் சம்பாதிக்க மூளையின் ஆற்றலை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நமக்குப் புற வாழ்வில் சந்தோஷத்தைக் கொடுப்பது பணம்; அக வாழ்வில் சந்தோஷத்தை கொடுப்பது மனம்!
கம்ப்யூட்டரைவிட மனித மூளை புத்திசாலியாக இருக்கிறது. எவ்வளவுதான் விஷயங்களை கற்றுக் கொண்டாலும், அடுத்தடுத்து கற்கவும், ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும் மூளையில் சில பகுதிகள் வெற்றிடமாக இருக்கும்!'' என்கிறார் ஸ்ரீனிவாசன்.
மூளையின் ஆற்றலை அதிகரிக்கச் செய்வதற்கான வழிமுறைகளையும் இங்கே விளக்குகிறார்.
''பணமும் மனமும் சேர்வது மகிழ்ச்சியை அளிக்கிறது. மூளையை மனது கட்டுப்படுத்துகிறது. அதே நேரத்தில், மனதை கட்டுப்படுத்தும் ஆற்றலை மூளை பெற்றிருக்கவில்லை. மனிதனின் மிகப் பெரிய சாதனையாக பணம் சம்பாதிப்பது இருக்கிறது. அதற்கு மூளை ஆற்றலுடன் இருப்பது அவசியம். அதற்கு ஈடுபாடு மற்றும் கட்டுப்பாடுகளுடன் இருப்பது அவசியம்.
ஒருவர் பணம் சம்பாதிப்பதில் 100 சதவிகிதம் வெற்றி பெற முடியும். அதற்கு மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். மோசமான நண்பர்களின் நட்பை கைவிடுவதுதான் அதற்கு வழி. புகையிலை, மது, பான்பராக் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இவை மனத்தின் எண்ணங்களை மாற்றி மூளையின் ஆற்றலைக் குறைக்கும் தன்மை கொண்டவை.
அடுத்து மன அழுத்தம் ஏற்பட மிரர் நியூரான் என்ற பிரதிபலிப்பு நரம்பு செல்கள் காரணமாக இருக்கின்றன. அதாவது, கெட்டதைப் பார்த்தால் மூளை பாதிக்கப்படுவதோடு, நம் நடவடிக்கையும் மாறுகிறது. அந்த வகையில் பிறர் மது அருந்துவது, புகைப்பிடிப்பதைப் பார்ப்பதே நல்லதில்லை.
பூமிக்கு கீழே விளைகிற கிழங்கு வகைகள் மூலம் செய்யப்படும் உணவுகள் நாவிற்கு சுவையாக இருக்கும். ஆனால், அவை மூளைக்கு நல்லதில்லை. பூமிக்கு மேலே விளைகிற பச்சை காய்கறிகள் மூளைக்கு பலம் தரும். மூளையைப் பலமானதாக வைத்திருக்க உடலில் கொழுப்பு, சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்.
மூளையின் ஆற்றலை அதிகரிக்க உடலுக்கு உடற்பயிற்சி அல்லது யோகாசனமும் மனதுக்கு தியானமும் செய்வது அவசியம். வயது வித்தியாசமின்றி அனைவரும், தினசரி குறைந்தது 15 நிமிடங்கள் தியானத்துக்கு ஒதுக்குவது அவசியம்.
இந்தப் பயற்சி மூளையின் செயல்பாட்டை முடுக்கிவிட்டு, அதன் திறனை அதிகரிக்கச் செய்கிறது. இதன் மூலம் மூளையுடன் தொடர்புடைய எந்த வேலையையும் எளிதில் செய்யலாம். எந்த சவால்களையும் துணிச்சலாக சுறுசுறுப்பாக எதிர் கொண்டு சாதனைப் படைக்க முடியும்.
இதனால், தேவையில்லாமல் பதற்றம், மனச் சோர்வு, மன அழுத்தம் இல்லாமல் இருக்கலாம். பொதுவாக, ஒரு மனிதன் நிமிடத்துக்கு 10 முதல் 12 தடவை சுவாசிக்கிறான். இதை உடற்பயிற்சி மற்றும் தியானம் மூலம் 6 முதல் 8 ஆக குறைத்துவிட்டால் நீண்ட காலம் மூளை பலத்துடன் வாழலாம்!'' எனச் சொல்லும் மருத்துவர் ஸ்ரீனிவாசன் இறுதியாகச் சொன்ன முத்தாய்ப்பு வரிகள்...
''மனம் ஒரு அஷ்டாவதானி. ஒரே நேரத்தில் பல வேலைகளை ஒருங்கிணைத்து செய்யக் கூடியது. அதற்கு மன அழுத்தம் இல்லாமல் இருப்பதுதான் அவசியம்!''
நன்றி: ஆனந்த விகடன்./உள்ளங்கையில் உலகம்.
கணபதி- இளைய நிலா
- Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 69
Location : chennai
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மூளையின் ஆற்றலை அதிகரிக்கக்கூடியது பீட்ரூட்!
» உங்களது மூளையின் திறனை மதிப்பாய்வு செய்வதற்கு
» மூளையின் சக்தி
» கருத்தரிக்கும் ஆற்றலை குறைக்கும் வேப்பிலை...
» மனிதனின் ஆற்றலை அழிக்கும் கவலை - சிறுகதை
» உங்களது மூளையின் திறனை மதிப்பாய்வு செய்வதற்கு
» மூளையின் சக்தி
» கருத்தரிக்கும் ஆற்றலை குறைக்கும் வேப்பிலை...
» மனிதனின் ஆற்றலை அழிக்கும் கவலை - சிறுகதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum