தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



" காற்றில் திறக்கும் கதவுகள்"

2 posters

Go down

" காற்றில் திறக்கும் கதவுகள்"  Empty " காற்றில் திறக்கும் கதவுகள்"

Post by udhayam72 Sat May 04, 2013 7:24 pm

" காற்றில் திறக்கும் கதவுகள்"



அவள் எதிர்பார்க்காத தருணத்தில் வீட்டிற்கு போய் அவளை ஆச்சரியப்படுத்தவேண்டும் என்று நினைத்த ஃப்ரெட்டிக்கு ஆச்சரியமாய் இருந்தது, பூட்டிய கேட்டைப் பார்த்த போது. நாளை வருவேன் என்று அவளிடம் சொல்லியிருந்தாலும், இந்த பனிகுத்தும் அதிகாலையில் எங்கே போயிருப்பாள் என்று யோசனை வந்தது. ராத்திரி முழுதும் இல்லையோ என்று நினைத்தபோது ஏனோ வயிற்றை சங்கடப்படுத்தியது போலிருந்தது.

லாப்டாப் பேக்கில் இருந்த சாவியைத் துளாவி எடுத்து, கேட்டைத் திறந்தான். இரண்டு நாட்கள் பேப்பர் அப்படியே காரின் கதவுக்கு அருகில் எடுக்காமல் கிடந்தது. நேற்று அவளிடம் பேசிய போது ஒன்றும் சொல்லவில்லையே என்று தோன்றியது. பேப்பரை எடுத்துக் கொண்டு, கதவுக்கு அருகே வந்து, வராண்டா ஸ்விட்சை தட்டினான். வெளிச்சம் பரவ, சாவியை நுழைத்து கதவைத் திறந்தான். வாசல் நிலையை ஒட்டி கொஞ்சம் தண்ணீர் தேங்கி காய்ந்திருந்தது போல இருந்தது.


‘திவ்யா!’ என்று குரல் கொடுத்தான். பூட்டிய கதவுகளுக்குள் அவள் இல்லை என்று புத்திக்கு எட்டியிருந்தபோதும், தன்னையே அறியாமல் அழைக்கத்தோன்றியது, ஏதாவது அறையைத் திறந்து கொண்டு வந்துவிடுவாள் என்று. கதவை உட்புறமாக பூட்டிவிட்டு, உள்ளே நுழைந்தான். டிராவல் பேக்கையும், லாப்டாப் பேக்கையும் அப்படியே லிவ்விங் ரூமில் இருந்த சோஃபாவில் போட்டுவிட்டு, டீப்பாயில் ஏதாவது குறிப்பு இருக்கிறதா என்று அங்கு கிடந்த புத்தகங்களை ஒதுக்கிப் பார்த்தான். அப்படி எதுவும் இல்லை. உள்ளறைக்குச் சென்று, வார்ட்ரோப்பில் இருந்த லுங்கியை எடுத்து துணியை மாற்றிக் கொண்டு, முகம், கை, கால் கழுவிக் கொண்டு, சமையலறைப் பக்கம் சென்றான்.

ஒரு க்ரவுண்ட் நிலத்தில் கட்டப்பட்ட ட்யூப்ளே வீடு அது. லிவ்விங் ரூமில் இருந்து மாடிக்குச் செல்லும் ஹெலிகல் ஸ்டேர்கேஸ், வளைந்த படிக்கட்டுகள். படிகளுக்கு நேர் மேலே சீலிங்கில் ஸ்கை லைட் அமைப்புடன் இருப்பதால், வீட்டிற்குள் எப்போதும் வெளிச்சம் இருக்கும் பகல் நேரங்களில். மாடியில் ஏறியதும், ரூஃப் கார்டனுடன் கூடிய டெரஸ். மாஸ்டர் பெட் ரூமின் ஃப்ரெஞ்ச் வின்டோஸை திறந்தாலும், ரூஃப் கார்டனுக்குள் இறங்கலாம். பார்த்து பார்த்து கட்டிய வீடு, திவ்யாவின் கனவுகளில் ஒரு கான்செப்சுவல் வீடு அது. அழகையும், பயன்பாட்டையும் இணைத்துக் கட்டப்பட்ட வீடு.

வீட்டின் உள்ளே ஒவ்வொரு அறையிலும், நிஷ் எனப்படும் உட்குடைவுடன் கூடிய அமைப்புகளில் வேறு வர்ணத்துடன் கூடிய விளக்குகள். திவ்யாவின் ரசனைக்கு உதாரணங்கள். சமையலறை இத்தாலிய முறைப்படி மாடுலர் டிசைனில் கட்டப்பட்ட திறந்த சமையலறை. லிவ்விங் ரூமில் இருந்து பார்க்கும்போது சமையலறை அழகாய்த் தெரியும். அடுக்கப்பட்ட கண்ணாடிக் குவளைகளும், பீங்கான் சாமான்களும் ஒரு நட்சத்திர ஓட்டலின் பார் போன்று தெரியும். சற்றே உயர்ந்த மேடை ப்ரேக் பாஸ்ட் கவுன்டருடன் இரண்டு உயர்ந்த ஸ்டூல்களும் அதை உறுதிப்படுத்தும்.

சமையலறையை அடைந்து, பிரிட்ஜை பார்த்த போது பால், தோசை மாவு, முட்டைகள், பழங்கள் என்று தேவையான எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. கவரைக் கிழித்து, பாலை சட்டியில் ஊற்றி, காஃபி தயார் செய்தான், காஃபி மேக்கரில் கொஞ்சம் இருந்த டிகாக்க்ஷனும் கலந்த காஃபி. எடுத்துக் கொண்டு பேப்பரை எடுத்து லிவ்விங் ரூமில் உட்கார்ந்து கொண்டான். பேப்பரை விரிக்கும் போதே, அவள் எங்கே போயிருப்பாள் என்று யோசனை வந்தது. செல்ஃபோனை எடுத்து அவள் நம்பரை டயல் செய்தான்.

டயல் டோனில் வைத்திருந்த பாட்டு கேட்டது, ஃபில் காலின்ஸின் ஒன் மோர் நைட் பாடல். ரெண்டு வரி பாடி திரும்பவும் ஆரம்பிக்கும் போது எடுத்தாள்.

“யே! எப்போ வந்த? நாளைக்கு தானே வர்றேன்னு சொன்ன?

‘ஐ தாட் ஆஃப் கிவ்விங் யூ எ சர்ப்ரைஸ், பட் இட் டர்ண்ட் டு பி மை சர்ப்ரைஸ்!’

“சாரி பேபி, நேத்து ராத்திரியே தினேஷ் வீட்டுக்கு வந்துட்டேன், இங்க ப்ரேக் பாஸ்ட் முடிச்சிட்டு அங்க வந்துடறேன், ஓகேயா கோபம் இல்லையே?!”

அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. தினேஷ் வீட்டிற்கு நேற்று போகும்போதே ஏன் சொல்லவில்லை என்று தோன்றியது.

“நேத்து உன்ட்ட பேசிட்டு வச்சதும், அவன் கூப்பிட்டான்! அதான் உன்ட்ட சொல்ல முடியல, ஜஸ்ட் டூ அவர்ஸ் பொறுத்துக்கோ வந்துடறேன்!”

‘சரி!’ என்று செல்ஃபோனை கட் செய்தான். நேற்று ராத்திரி தான் போயிருக்கிறாள் என்றால், ஏன் ரெண்டு நாள் பேப்பர் எடுக்காமல் இருக்கு என்று அவனுக்கு குழப்பமாய் இருந்தது. பொய் சொல்றாளோ? என்று தோன்றியது. ‘ப்ச்’ என்று தனக்குத்தானே சொல்லிவிட்டு, திரும்பவும் பேப்பர் படிக்க முயன்றான். பேப்பரில் மனசு லயிக்கவில்லை, ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்தான். காஃபி டேபிளில் இருந்த காஃபி ஆறிப்போய் ஆடைகட்டி இருந்தது.

ஆடையை எடுத்துப் போட்டு, அவனில் ஒரு இருபது செகண்ட்ஸுக்கு, கப்பில் ஒரு ஸ்பூனை போட்டு வைத்தான். இருபது செகண்டில் சூடாகிவிடும். மெடி லேடர் மேல் இருந்த அவனில் தூசி படிந்து இருந்தது. வேலைக்காரி தினமும் வந்தால், இதைத் துடைத்திருப்பாளே!? அவ வரலையா, இவள் வீட்டில் இல்லையா? யோசனையுடன், காஃபியை எடுத்து குடித்தான். சர்க்கரை போடாதது ஞாபகம் வந்தது. சர்க்கரை டப்பாவில் இருந்த சர்க்கரையை எடுத்து ஒரு ஸ்பூன் போட்டான். கலக்கியபடியே டிவிக்கு வந்தவன். சேனலை மாற்றினான், நியூஸ் சேனலில் நிறுத்தியவனுக்கு, எதிர்கட்சியினர் லோக்பாலுக்கு எதிராய் வாக்குவாதம் செய்து கொண்டிருந்ததை பார்த்த போது எரிச்சல் வந்தது. திரும்பவும் மாற்றி, ஏசியாநெட்டில் நிறுத்தினான். ஐடியா ஸ்டார் சிங்கர் ஓடிக் கொண்டு இருந்தது. ஏசுதாஸின் பொய்க்குரலில் ஒருவன், “மதுரம் ஜீவாம்ருத பிந்து” பாடிக் கொண்டிருந்தான். பாடி முடித்ததும், ஆளுக்காள் நொட்டை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

திவ்யா இருக்கும் போது ஆங்கில சேனல்களை தாண்டி நகராது. இது போன்ற செமி கிளாசிகல் மெலடிகளை தேடமுடியாது. அவளின் தேர்வு மேற்கத்திய இசை மட்டுமே பெரும்பாலும்.

திரும்பவும் ப்ரேக். டிவியை அப்படியே விட்டுவிட்டு டாய்லட்டுக்குள் புகுந்து கொண்டான். அங்கிருந்த சின்ன புத்தக செல்ஃபில் இருந்து நாஞ்சில் நாடனின் பேய்க்கொட்டு எடுத்தான். படித்த புத்தகம் தான் என்றாலும், பேய்க் கொட்டு படிக்க சுவாரசியமாய் இருக்கும் முதல் இரண்டு பக்கங்கள் என்று புரட்டினான். ஒரு பக்கத்திலேயே அசுவாரசியம் வந்து எடுத்து வைத்தான்.

வெளியே வந்தான், வந்தவன் டிவியில் “மஞ்சள் பிரசாதவும்” என்று சித்ராவின் பாடலை ஒரு கெச்சலான பெண் பாடிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த போது சௌம்யாவைப் போல இருந்தது. சௌம்யாவுக்கு சுத்தமாய் பாட வராது, அவளின் இசை ரசனை அலாதியானது. அந்தப் பெண்ணின் எதுவோ அவளிடம், அவனுக்கு சௌம்யாவை ஞாபகப்படுத்தியது. உதடுகள், கண்கள் அல்லது நெற்றி, எதுவோ ஒன்று, யோசனையில் அவளைப் பார்ப்பது தடைபடும்போது என்ன ஆராய்ச்சி என்று நிறுத்திக் கொண்டான். வெகுவாக பாராட்டினார்கள். இசையமைப்பாளர் ஜெயசந்திரன், இன்னும் ஃபெதர்லி டச் இருக்கணும் இந்தப்பாட்டுக்கு என்று பாடிக்காண்பித்தார். அந்தப் பெண் நெஞ்சில் கைவைத்து ஏற்றுக் கொண்டாள். அவள் சிரிப்பு தான் சௌம்யாவை ஞாபகப்படுத்தியது என்று முடிவு செய்து கொண்டான்.

திவ்யா வர இரண்டு மணி நேரமோ அல்லது அதற்கு மேலாகவோ ஆகலாம். பல் தேய்த்து விட்டு சாப்பிட்டு விடலாம் அப்புறம் குளித்துக் கொள்ளலாம் என்று நினைத்தான். உள் பனியனை கழட்டிய போது வியர்வை படிந்ததை பார்த்ததும், குளித்து விட்டே சாப்பிடலாம் என்று தோன்றியது. அலமாரியில் வைத்திருந்த , ஈரிழைத்துண்டு கிடைக்கவில்லை, டர்க்கி டவலை எடுத்துக் கொண்டு, குளிக்கப் போனான். டர்க்கி டவல் அப்படியே ஈரத்தை முழுதுமாய் உறிஞ்சி விடுகிறது. ஈரிழைத் துவர்த்து போல ஈரத்தை விடுவது இல்லை அது.

ஃப்ரெட்டிக்கு ஒரு பன்னாட்டு சில்லறை வணிக நிறுவனத்தில் வேலை ஒரு தரக்கட்டுப்பாட்டு அதிகாரியாக. கை நிறைய சம்பளம், வருடத்திற்கு இரண்டு போனஸ். மாதத்திற்கு இரண்டு மூன்று முறை வெளியூர்களுக்கு பயணம் செய்வதால் கிடைக்கும் பெர்டயம் மாத செலவுக்குப் போதும். சென்னையில் இருந்து பெங்களூர் வந்து ஐந்து வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது. வந்த ஒரு வருஷத்திற்குள், பெங்களூரிலேயே இடம் வாங்கி வீடும் கட்டியாயிற்று. இவன் அலுவலகப்பணி காரணமாய் வெளியூர்களுக்கு சென்று கொண்டிருந்ததால், திவ்யா தான் கட்டிடப்பணிகளை முழுமையாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அதில் ஆர்வம் இருந்ததுடன் அதைப்பற்றிய போதுமான அறிவும் இருந்தது, எல்லாவற்றிற்கும் வசதியாய் இருந்தது. இவனுக்கு இன்று வரை ஸ்டிரக்சரல் எஞ்சினியர் கொடுக்கும் டிராயிங்குகள் புரிவதே இல்லை. அவள் அதை எளிதில் புரிந்து கொள்வதுடன், நுணுக்கமான கேள்விகள் கேட்டு தெளிவு பெறுவதிலும் கருத்தாய் இருந்தாள். அப்பா, அண்ணன்கள் எல்லாம் எஞ்சினியர்களாய் இருந்ததால் வந்ததாய் இருக்கலாம் அவளின் ஆர்வமும், அதன் வழியே அறிவும்.

குளித்து முடித்தவுடன், பசி எடுத்தது. தோசை மாவை வெளியே எடுத்து வைத்தான். ஃபெதர் டச் ஹாப்பில், ஒரு பொத்தானின் பட்டையை அழுத்த அடுப்பு பற்றிக் கொண்டது. தோசைக்கல்லை எடுத்து ஹாப்பில் வைத்து, சிம்னியை ஆன் செய்தான். மாவில் உப்பிட்டு கரைத்து தோசை வார்க்கத் தொடங்கினான். தோசை வார்த்து, அம்மா கடந்தமுறை வந்தபோது கொடுத்த எள்ளுப்பொடியை எடுத்து குழித்து, நல்லெண்ணெய் விட்டுக் கொண்டான். கட்டியிருந்த துண்டுடன், சோஃபாவில் உட்கார்ந்து கொண்டான்.

திவ்யா இருந்தால் இப்படி உட்கார விடமாட்டாள். ஈரத்தோடு உட்கார்ந்தால், சோஃபாவின் பேப்ரிக் ஈரமாகி முடை நாற்றம் அடிக்கும் என்பாள். அதனால் அவள் இல்லாத போது தான் இது போல காரியங்கள் செய்யமுடியும். நிறைய எண்ணெய் ஊற்றி தோசை செய்வது, ஸ்வீட் சாப்பிடுவது, டாய்லெட்டில் அமர்ந்து சிகரெட் பிடிப்பது என்று எல்லாம். ஆனால் இன்று சிகரெட் பிடிக்கமுடியாது, அவள் எந்நேரமும் வந்துவிடுவாள். தோசைக்கும், எள்ளுப்பொடிக்கும் தோசை கொண்டா, கொண்டா என்று உள்ளே போனது. சாப்பிட்டு ஆனதும், அவளுக்கு திரும்பவும் ஃபோன் செய்யலாமா என்று நினைத்தவன், வரும்போது வரட்டும் என்று விட்டுவிட்டான்.

ஏசியாநெட்டில் ஏதோ ஒரு பழைய நடிகை தன் டைரி பக்கங்களில் இருக்கும் எழுத்தாக சில பேசிக் கொண்டிருந்தாள். புனே ஃபிலிம் இன்ஸ்டிடியுட்டில் படித்தவள் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். ஃப்ரெட்டிக்கு அவளை எந்த படத்திலும் பார்த்த மாதிரியில்லை. எதாவது பழைய படங்களில் அம்மா, அண்ணி, அக்கா என்று நடித்திருக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு. டிவியில் மனம் ஒட்டவில்லை . சௌம்யாவின் நினைவு வந்து கொண்டே இருந்தது. சௌம்யாவுக்குப் பேச வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. உடனே செல்ஃபோனில் அழைக்க முயற்சித்தான். ரிங் போய்க் கொண்டேயிருந்தது. அவள் எடுக்கவில்லை.

‘கால் யூ ஆஃப்டெர் அ ஒய்ல்’ என்று குறுஞ்செய்தி வந்தது. திவ்யா இன்றைக்கு ஏன் தினேஷ் வீட்டுக்குப் போயிருப்பாள். திவ்யாவுக்கு தினேஷுடன் பழக்கம் ஏற்பட்டது, ஃப்ரெட்டிக்கு தெரியும் என்றாலும், நேற்று இரவு போக வேண்டிய அவசியம் என்ன என்று தோன்றியது. பொதுவாக, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவள் தினேஷைப் பார்க்கப் போவதில்லை. அப்படித்தான் அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் இருந்தது. சனி ஞாயிறுகளில் இருவரும் ஒன்றாய் தான் இருக்க வேண்டும் என்று. ஆனால் இந்தமுறை, இவன் ஞாயிற்றுக்கிழமை வருவேன் என்று சொல்லியதால், நேற்று அங்கே சென்றிருக்க வேண்டும்.

சௌம்யா ஏன் ஃபோனை எடுக்கவில்லை. அவளுக்குத் தெரியும், ஃப்ரெட்டி இன்று வருவது. சௌம்யாவுக்கும் திவ்யாவுக்கும் ஒருவரையொருவர் பழக்கமில்லை. அதே போல தினேஷை, ஃப்ரெட்டிக்கும் யாரென்று தெரியாது. தினேஷின் பெயரே நிஜமா, கற்பனையா என்று தெரியாது, ஆனால் அவன் யாரென்று அறிகிற ஆர்வம் மட்டும் குறையவே இல்லை. அதற்கான லீட்ஸ் எதுவும் அவனுக்கு கிடைக்கவில்லை. நிறையமுறை திவ்யாவிடம் பேசும்போது, தினேஷைப் பற்றி அல்லது தினேஷ் என்பவனைப் பற்றி தெரிந்து கொள்ள அவன் நிகழ்த்தும் சம்பாஷணைகளை அவள் புரிந்து கொண்டு, அதிலிருந்து நழுவி விடுவாள். இது போன்ற அவஸ்தைகள் அவளுக்குக் கிடையாது.

சௌம்யா யாரென்று அவள் திரும்பவும் கேட்டதேயில்லை. இவனே வலிய சென்று, சௌம்யா பற்றி திவ்யாவிடம் சொல்ல, அவள் அதை கண்டு கொண்டதேயில்லை. அவனுக்கு இருக்கும் அவஸ்தைகள் அவளுக்கு இல்லாதது, அவனுக்கு எரிச்சலாய் இருக்கும், பொறாமையாயும் இருக்கும். திவ்யா கைவிட்டு போய்விடுவாளோ என்று ஏனோ தோன்றும். ஆனால் அவள், இவனுடன் இருக்கும் போது பழகுவதில் எந்த குறைபாடும் வைத்ததில்லை.

சுயலாபத்தின் காரணமாய் இது போன்ற ஏற்பாடு செய்தது தேவையில்லையோ என்று தோன்றும். ரொம்பவும் புத்திசாலித்தனமாய் காய் நகர்த்துவது போல நினைத்து, அதை மனதளவில் சமாளிக்க முடியாமல் தடுமாறுவது போல அவனுக்கு இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றுகிறது. அப்படி நினைக்கும் போதெல்லாம் சௌம்யாவின் முகம் ஞாபகத்தில் வந்து, அதில் ஏதோ நியாயம் இருப்பது போன்ற தோற்றத்தை தரும்.

சௌம்யா, ஃப்ரெட்டியுடன் வேலை பார்க்கிறாள். அவள் ஜுவல்லரி அண்ட் ஸ்பெஷலாட்டி பிரிவில் சீனியர் மெர்ச்சண்டைசராய் பணி புரிகிறாள். ப்ரெட்டியின் நண்பனும் அதே பிரிவில் அக்ஸஸரியில் சீனியர் மெர்ச்சண்டைசர். அவனை சிகரெட் ப்ரேக்கிற்கு அழைக்க கீழ்தளத்துக்குப் போகும் போது, சௌம்யாவை பார்த்து பேசியிருக்கிறான். உடன் வேலை செய்பவன் என்ற ரீதியில் ஆரம்பித்த பழக்கம், இலக்கியம், இசை என்ற ஒத்த ரசனையில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது அவர்களின் நட்பு. திவ்யாவின் மேலோ அல்லது சௌம்யாவின் கணவன் மீதோ எந்தவித குறைகளும் இருவருக்கும் கிடையாது அல்லது அதைப்பற்றி பேசியது கிடையாது. ஒரு உறவில் இருக்கும் போது, வேற்று நபரால் ஈர்க்கப்படுவது எப்படி என்று பேச்சு வந்த போது, ஆதரவான, எதிரான கருத்துக்களை பரிமாறிக் கொண்டபோது, அவர்களுக்கு அது ஒரு இயல்பான விஷயமாகவேபட்டது.

ஒருமுறை மும்பைக்கு ஃப்ரெட்டி செல்லவேண்டியதிருந்த போது, சௌம்யாவிற்கும் மும்பையில் ஒரு ஜுவல்லரி பாக்டரி செல்லவேண்டியிருந்தது. ஜூஹூ பீச்சில் இருக்கும், சன் அண்ட் சாண்டில் தான் இருவருக்கும் கம்பெனியில் ரூம் புக் செய்திருந்தார்கள். அங்கே இருவரின் நெருக்கமும் இன்னும் அதிகமானது. தனித்தனி அறை என்றாலும், இரவு இருவரும் ஒன்றாகவே உறங்கினார்கள். அதன் பின் பெங்களூர் திரும்பிய பிறகும் இது தொடர்ந்தது. ஃப்ரெட்டி இதை ஏனோ திவ்யாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. சரியான சந்தர்ப்பம் வரும்போது அதைப்பற்றி பேசிவிடவேண்டும் என்று பலமாய்த் தோன்றியது.

அதை சௌம்யாவிடம் சொன்னபோது, அவள் அதை ஏற்கவில்லை. திவ்யாவிடம் சொல்லாமல் இருப்பது அவனுக்கு ஏனோ குற்ற உணர்வைத் தந்தது. கொஞ்சம் சொல்வதில் பயமும் தயக்கமும் இருந்தாலும் சொல்லிவிடுவதென முடிவு செய்தான்.
அதை சௌம்யாவிடமும் சொல்லி அவளையும் கன்வின்ஸ் செய்துவிட்டான்.

திவ்யாவிடம் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. யாஹூவின் கேள்வி பதிலில் ஒரு பெர்சனல் எக்ஸ்பீரியன்ஸ் பற்றிய பதிவை படிக்க நேர்ந்தது அவனுக்கு. ஓபன் மாரேஜஸ் பற்றிய அந்த பதிவைப் படித்ததும், அவனுக்கு இதை வைத்து ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அது ம்யூச்சுவல் என்று நினைத்தபோது கொஞ்சம் யோசனையாய் இருந்தது. அந்த ஆர்டிகளை அவன், திவ்யாவுக்கு அணுப்பினான், ஆபிஸில் இருந்தபடியே. திவ்யா ரெகுலராய் மெயில் செக் செய்பவள், அவள் ரியாக்சனை பார்த்துவிட்டு அதற்கேற்றவாறு முடிவு செய்து கொள்ளலாம் என்று தோன்றியது.

அன்று மெயில் அனுப்பிய பின், அவன் மாலை வீட்டுக்குச் செல்லும் வரை எந்த பதிலும் இல்லை. ஒருவேளை வீட்டிற்குப் போன பிறகு பேசுவாளோ என்று தோன்றியது. காரை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி செலுத்தினான், இந்திரா நகர் 100 அடி ரோட்டில் இருந்து சிக்ஸ்த் மெயின் வழியாக 80 அடி ரோட்டிற்குள் நுழைவதற்கு முன்னால் ஃபோன் அடித்தது. ஓரமாய் நிறுத்தி எடுத்த போது, திவ்யா அழைத்திருப்பது தெரிந்தது. மிஸ்ட் கால் தான் கொடுப்பாள் எப்போதும் இந்த நேரத்தில் அழைப்பது என்றால், அவன் கார் ஓட்டிக் கொண்டிருக்கும் போது பேசுவது உசிதமாகாது என்று.

‘யா திவ்யா, யூ ஹவ் கால்ட் மீ?’

“ஃப்ரெட்டி! கன் யூ பை டுனா சாண்ட்விச் ஃபார் மீ, அம் ஃபீலிங் ஹங்க்ரி!”

‘நான் இப்போதான் 'பாரிஸ்தா' கிராஸ் பண்ணேன், யூ ஷுட் ஹவ் டோல்ட் லிட்டில் எர்லி!’

“ப்ளீஸ் பா, அம் டையிங் அவுட் ஆஃப் ஹங்கர், ஒய் டோண்ட் யூ ட்ரை 'ஜஸ்ட் பேக்'?”

‘ஓகே!’ என்று ஃபோனை கட் செய்தான். அங்கிருந்து 80 அடி ரோட்டிற்கு வந்து சிஎம் ஹெச் ரோட்டில் திரும்பி, 100 அடி ரோட்டிற்கு வந்து ஜஸ்ட் பேக் போகிற சந்தில் நுழைந்தான். ஏர்டெல்லை தாண்டி, ஜஸ்ட் பேக் முன்னால் பார்க் செய்து விட்டு, அவளுக்கான டூனா சாண்ட்விச் வாங்கிக் கொண்டான். அவள் அந்த மெயிலை பற்றி ஒன்றுமே கேட்காதது அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. பார்த்திருக்க வேண்டும் என்று தான் தோன்றியது. தன்னை ஆழம் பார்க்கிறாளோ என்றும் தோன்றியது .

கேட் சும்மா சாத்தியிருந்தது, அதைத் தள்ளி அகலத் திறந்து வைத்து, காரை உள்ளே நுழைத்தான். வாசலுக்கு வந்து லாப்டாப் பேக்கில் இருந்த சாவியை எடுத்து, கதவைத் திறந்தான். ஹாலில் இல்லை, டிவியும் ஆஃப் ஆகியிருந்தது.

‘திவ்யா!’ என்று குரல் கொடுத்தபடியே லாப்டாப் பேக்கை, சோஃபாவில் வைத்து விட்டு, அப்படியே உட்கார்ந்தான். கையில் இருந்த கவரை டீப்பாயில் வைத்து விட்டு, தலையைச் சாய்த்து உத்திரத்தில் எரியும் லைட்டைப் பார்த்தான். அதற்குள் மேலே படுக்கையறையில் இருந்தவள் படிகளின் கிரில் கம்பிகளின் வழியாய் பார்த்து, மேலே கொண்டு வருமாறு சைகை செய்தாள். சமையலறையில் இருந்து ஒரு தட்டையும், ஒரு தண்ணீர் பாட்டிலையும் எடுத்துக் கொண்டு மேலே ஏறினான்.

மோவ் கலரில் ஒரு நைட் டிரஸ்ஸில் இருந்தாள். குட்டையாய் கத்தரித்து, லூஸாய் விட்ட முடியை, இழுத்து ரப்பர் பேண்ட் போட்டுக் கொண்டாள். கம்ப்யூட்டர் ஆனில் இருந்தது. யாஹூ மெயில் பாக்ஸும் ஒப்பனாகி தான் இருந்தது. கையில் இருந்த சாண்ட்விச் கவரை வாங்கிக் கொண்டு, கம்ப்யூட்டர் பக்கமாய் திரும்பியிருந்த அவனின் தலையைத் திருப்பினாள்.

“பீப்பிங்க் ஜோ! டோண்ட் பீப் இன் டு மை சிஸ்டம்!” என்றபடியே கவரில் இருந்த சாண்ட்விச்சை, தட்டில் வைத்து சாப்பிடத் தொடங்கினாள். அதனுடன் இருந்த பொட்டெட்டோ வேஃபர்ஸை அவன் பக்கம் தள்ளினாள். மயோனைஸ் வலது உதட்டோரம் வழிய ஆர்வமாய் தின்றாள்.

சாப்பிடும் வரை காத்திருந்தான். அவள் ஒன்றும் சொல்வதாயில்லை. தானே கேட்டால், தவறாக நினைத்துவிடுவாளோ என்று அவனுக்குத் தோன்றியது. சைட் டேபிளில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தவன். அவளையே பார்த்தான். அவள் என்ன என்பது போல, ஸாண்ட்விச்சை வாயில் மென்று கொண்டே கேட்டாள். லெட்டுசின் பச்சை கொஞ்சம் கொஞ்சமாய் அவள் வாயினுள் சென்றது.

‘டிட் யூ சீ த மெயில், ஐ செண்ட் யூ?’

“விச் மெயில் பேபி? த ஒன் அபவுட் ஒபன் மாரேஜஸ்? நம்ம ஊருல இதெல்லாம் நடக்குமா?”

‘அதுல இருந்தது, பெங்களூர்ல நடந்த கதை தானே திவ்யா? படிச்சப்போ கொஞ்சம் ஷாக்கிங்காவும், க்யூரியஸாவும் இருந்தது’

“சோ, வாட் ஆர் யூ அப் டூ? காட் சம்படி டு எக்ஸ்ப்ரிமெண்ட் இட்” என்ற அவளின் விளையாட்டான கேள்வி, அவனுக்கு சாதகமாய் இருப்பது போல பட்டது.

‘இன்ஃபாக்ட் ஒரு ஸ்டடில சொல்லியிருக்காங்க, இது போல கப்பிள்ஸ்களிடம், டிவோர்ஸ் ரேட் ரொம்ப குறைஞ்சிருக்காம்!’

“ஓய், யூ வாண்ட் டு டெஸ்டிஃபை ஆர் வாட்?” இந்த சம்பாஷனைகளில் சௌம்யாவை நுழைப்பதற்கான சாத்தியங்களே இல்லாமல் இருந்தது அவனுக்கு.

ஸாண்ட்விச்சை முடித்துவிட்டு, பாத்ரூமிற்குள் நுழைந்து கை, வாய் கழுவி விட்டு, கம்ப்யூட்டரில் போய் அமர்ந்து கொண்டாள்.

ஃப்ரெட்டியைத் திரும்பி பார்த்து அருகே அழைத்தாள். கூகுளில் தேடி எடுத்து வைத்திருந்த ஓபன் மாரேஜஸ் பற்றிய பல ஆர்டிகள்ஸைக் காட்டினாள். அதன் சாதக, பாதகங்களை காட்டினாள்.

“இது எல்லாமே, வெஸ்டர்ன் கண்ட்ரீஸ்ல தான் இருக்கு, அதுவும் ரொம்பவும் ரேர், அந்த ஊரிலேயே இதை கலாச்சார சீரழிவு, இன்ஸ்டிடியுசனல் ரேப் அப்படிண்ணு சொல்றவங்க இருக்காங்க!”

“அங்க இருக்கிற ஆட்களுக்கே இதுல வர மனத்தடை, மனச்சிக்கல் புரியாம, நிறைய பிரச்னைகள் வருது, நம்ம நாட்ல இதெல்லாம் முடியுமா? ம்யூச்சுவல் ட்ரஸ்ட் வேணும் நிறைய, அதுவும் மென் காண்ட் ஹாண்டில் இட்’னு தோணுது”

“வாட் டு யூ திங்க்?”

‘இட் இஸ் பாஸிபிள் திவ்யா, த கப்பிள் ஹஸ் டு டிஸ்கஸ் வெரி ஒப்பன்லி அண்ட் ட்ராண்ஸ்பெரண்ட்லி. அப்புறம் அவுட் ஆஃப் மாரேஜ் ரிலேசன்ஷிப் ஷுட் நாட் பீ அன் எமோஷனல் ஒன்’

“அது எப்படி சாத்தியம் ஃப்ரெட்டி, ஹவிங்க் செக்ஸ் வித் சம்படி வித் அவுட் அன் எமோஷனல் அட்டாச்மெண்ட்!”

‘ஓகே! அப்படியே வச்சுப்போம், பட் யூ ஷுட் டிஸ்கஸ் எவரிதிங்க் வித் மீ அண்ட் லெட் மீ நோ யுவர் வேர் அபவுட்ஸ்’

“ஹே ஹோல்ட் ஆன், ஆர் வி டிஸ்கஸிங்க் எபவுட் அ கான்செப்ட் ஆர் அபவுட் அவர் பெர்சனல் வென்ச்சர், த்ர்ட் பேர்ஸன்ல இருந்த எப்படிப்பா ஃபர்ஸ்ட் பெர்ஸனுக்கு வந்துச்சு?”

‘ரொம்ப நாளா சொல்லணும்னு நினைச்சுட்டு இருந்தேன் திவ்யா, ஐ’ம் செக்சுவலி அட்ராக்ட்ட் டு சம் ஒன்’

கம்ப்யூட்டரில் கண்களை வைத்திருந்தவள், தடக்கென்று திரும்பி அவனை ஆழமாய் ஊடுருவது போல பார்த்தாள். கண்கள் கலங்கியது போல இருந்தது அவளைப் பார்க்கையில். ஃப்ரெட்டிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இதை மேலும் நகர்த்துவது சாத்தியமா என்று யோசனை வந்தது. அவளே ஆரம்பித்தாள்.


“யார் அந்த பொண்ணு ஃப்ரெட்டி, எனக்குத் தெரியுமா? நான் பார்த்திருக்கேனா?, எத்தனை நாளா போயிட்டிருக்கு?”

‘யார்னு கேக்காத திவ்யா, இட் மெ நாட் பி அ குட் ஐடியா டு நோ த பர்ஸன், பட் என்னோட வேலை செய்யிறவ அவ்வளவு தான் சொல்ல முடியும், ப்ளீஸ்’

திவ்யா யோசிக்க ஆரம்பித்து விட்டாள். கம்ப்யூட்டரை விட்டு நகன்று, பெட் ரூமில் இருக்கும் ஃப்ரெஞ்ச் விண்டோவை திறந்து ரூஃப் கார்டனுக்குள் இறங்கினாள். அங்கிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்தவள், தொலைவில் எதையோ வெறிக்கத் தொடங்கினாள். ஊஞ்சல் ஆடாமல் நின்று கொண்டிருந்தது.

ஏதோ தீர்மானத்திற்கு வந்தது போல ஊஞ்சலில் இருந்து இறங்கி இவனை நோக்கி வந்தாள்.

"முற்றும்"
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay

Back to top Go down

" காற்றில் திறக்கும் கதவுகள்"  Empty Re: " காற்றில் திறக்கும் கதவுகள்"

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 06, 2013 5:07 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum