தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நினைவலைகள்

Go down

நினைவலைகள்  Empty நினைவலைகள்

Post by udhayam72 Fri May 10, 2013 1:22 pm

நினைவலைகள்
(பவித்ரா நந்தகுமார்)


காலை ஏழு மணி. குளிர் நியூஜெர்சியில் வாட்டிக் கொண்டிருந்தது. ஜெர்கின் அணிந்த வெள்ளை மனிதர்கள் கண்ணுக்கு தென்பட்டார்கள். கண்ணாடி ஜன்னல் வழி வெளியே பார்த்துக் கொண்டிருந்தாலும் கைகள் பரபரவென சமையலை கவனித்துக் கொண்டிருந்தது சாரதாவிற்கு. நம்மூர் மார்கழி மாதமே தேவலாம் போலும், மனதில் அசைபோட்டபடியே வேலையை தொடர்ந்தாள்.

நியூயார்க் உலக வர்த்தக மைய கட்டிடத்தை நீலநிற லேசர் ஒளி பாய்ச்சி மாய கட்டிடம் உருவாக்கியதைப் பற்றி ப்ரியாவும் கௌசிக்கும் பேசிக்கொண்டிருந்தது கிச்சனினுள் அப்பட்டமாய் கேட்டது.

இடையில் குழந்தை அழும் சத்தம் கேட்கவே அவளின் உடல் இன்னும் பரபரப்பானது. குழந்தையை பார்க்க வேண்டி அடுப்பை குறைக்க நினைக்கையில் திடீரென ஒரு தோன்றல். ’ம்… ப்ரியா அங்கேதானே இருக்கிறாள். தூக்கட்டுமே. பெற்றவள் அவள்தானே’ என்று.

மழை அடர்வது போல் குழந்தையின் அழுகை ஓசையும் வலுத்தது. மனம் தாளாமல் குழந்தையிடம் விரைந்தாள் சாரதா.

அங்கே ப்ரியா குழந்தையை தூக்காமல் வாயாலேயே சால்ஜாப்பு காட்டிக் கொண்டிருந்தாள்.

கோபம் பொத்துக் கொண்டு வந்தது சாரதாவிற்கு.

‘ஏன்டீ, எவ்வளவு நேரம் குழந்தை அழறது. நீ பாட்டுக்கு உன் வேலைய பாத்துட்டிருக்க. கொஞ்ச நேரம் தூக்கக் கூடாதா?’

மா, எனக்கே டைம் ஆயிடுச்சி. பசிக்குதான் வினோ அழுவுறான். கஞ்சி கலக்கி குடுத்துடு.

மாப்பிள்ளை சோபாவில் அமர்ந்தபடி லேப்டாப்பில் தலையை கொடுத்து விட்டிருந்ததால் அதற்குமேல் ப்ரியாவை திட்ட இயலாமல் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு குழந்தையை தூக்கியபடி கிச்சனுக்கே வந்துவிட்டாள் சாரதா.

என்ன பெண் இவள். பெற்ற குழந்தை கதறி அழுகையிலும் கல்மனம் படைத்தவள் போல் அவள் வேலையிலேயே குறியாக இருக்கிறாளே. இவளை எப்படி என் வயிற்றில் சுமந்தேன். என்னதான் அமெரிக்கா வந்தாலும் தாய்ப்பாசம் வற்றிவிடுமா. மாறாக இங்குள்ள பெண்கள் வேலைக்குச் சென்றாலும் என்ன லாவகமாக குழந்தைகளையும் வீட்டையும் பார்த்துக் கொள்கிறார்கள். ப்ரியா சோம்பேறிதான். ஆனாலும் இந்தளவிற்கா. சே..

மடமடவென சத்துக் கஞ்சி காசி வினோவுக்கு மடியில் போட்டபடி பருக கொடுத்தாள். பசியாறிய குழந்தை பொக்கைவாய் காட்டி சிரித்தது சாரதாவை பார்த்து. காலையிலிருந்து உழைத்த களைப்பெல்லாம் களைவது போல் இருந்தது அந்தச் சிரிப்பு. சமயத்தில் குழந்தையை முழுதாக கொஞ்சக்கூட முடியாதபடி வேலைகள் நாலாபக்கமும் பிடித்து இழுக்கும்.

வயது 65 ஆகிவிட்டபடியால் முன்போல் ஓடியாடி வேலை செய்ய முடியாத நிலைமை. பிள்ளையை பார்த்துக் கொள்ள இயலவில்லை என்ற மகளின் நச்சரிப்பால் பிளைட் ஏறியவள்தான். தற்போது ஒரு வருடம் உருண்டோடியும் இவளை அனுப்புவதாய் இல்லை. சாரதாவின் விசாவை கால நீட்டிப்பு செய்ய அவர்கள் பேசிக்கொள்ளும் போதெல்லாம் இவளுக்கு வயிற்றில் புளியை கரைக்கும்.

ப்ரியாவும் மாப்பிள்ளையும் வேலைக்கு போய்விட துறுதுறுவென பறக்கும் வினோத்தை துரத்த இறக்கை தேவைப்பட்டது சாரதாவிற்கு. அவ்வப்போது வந்து பாடாய்படுத்தும் மூட்டு வலியினால் வினோத்தை பார்த்துக் கொள்வது பெரும் கஷ்டம். இடையில் சமையல், துணியை மெஷினில் போடுவது எடுப்பது, வீட்டை பராமரிப்பது என அத்தனையும் சாரதாவின் தலையில்தான். தன் பெண்ணே ஆனாலும் ப்ரியாவை எப்பொழுதேனும் வார்த்தைகளால் லேசாக கடிந்தாலும் சுருக்கென்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும் மாப்பிள்ளைக்கு. அவருக்கு பயந்தே பேசுவதைக்கூட குறைத்துக் கொண்டாள்.

மாப்பிள்ளைக்கோ சாப்பாட்டில் இந்தியாவை போல அஞ்சு மூணும் அடுக்காக வேண்டும். மாப்பிள்ளை வீட்டில் இருப்பது அகதி வாழ்க்கை வாழ்வது போல் இருந்தது. ஊரிலிருந்தாலாவது மருமகள் பாதி வேலைகளை பகிர்ந்துக் கொள்வாள். அக்கம் பக்கம் ஒரு பேச்சில்லை. எல்லாம் ஆங்கில யுவதிகள். அவர்களிடம் என்னத்தை பேச. இதே வேலூரெனில் தெருத் திண்ணையில் அமர்ந்தபடி பக்கத்து வீட்டு மாமியிடமும் எதிர்வீட்டு பானுவிடமும் ஊர் நடப்பும் விவாதமும் எப்படி தூள் பறக்கும். மார்கழியில் போட்ட கோலத்தின் அழகு, தீபாவளிக்கு எடுக்கும் கெளரி நோன்பு, உறவு வீட்டின் திருமணங்கள், காது குத்து களேபர வெட்டு குத்துக்கள், சதுர்த்திக்கு வாங்கும் களிமண் பிள்ளையார், துவர மலர் கொண்டு எரியூட்டப்பட்ட பொங்கல்… இப்படி இழந்தது எத்தனை எத்தனை எத்தனை...

இதெல்லாம் கூட பரவாயில்லை. ஆனால் இந்த முதுமையில் கணவர் அருகாமையில் வாழ்க்கை நடத்த இயலவில்லையே என்ற ஆதங்கம்தான் அவளை அசூயை அடையச் செய்தது.

எண்ண அலைகள் அவள் காலை தழுவ தழுவ நினைவுகள் மணலாய் அரித்து அவளை தன்னுள் உள்வாங்கிக் கொண்டது. மனம் ஒன்றிப்போய் அசைபோட்டது.

திருமணமாகி இருபது வருடங்கள் வரை மூத்தார் ஓரப்படி என கூட்டுக்குடும்ப வாழ்க்கைதான். பெரும்பாலான வருடங்கள் இவர்களின் வாழ்க்கையை கத்திரி போட்டு வெட்டி வைத்தது பணி நிமித்தமான டிரான்ஸ்பர்கள். கணவருடன் தனியாக பேசிக்கொள்ள நேரமெல்லாம் பெரிதாக இருந்ததில்லை. ஆனால், அந்த பாச உணர்வை எப்படிச் சொல்ல… தனக்காக சில கறித்துண்டுகளை இலையிலேயே விட்டுவைத்து வருவதிலாகட்டும் கடும் வெக்கையில் ஜில்லென்று பன்னீர்சோடா வாங்கி வருவதிலாகட்டும் இடுப்பொடிய தீபாவளி பலகாரம் செய்த நாட்களில் இலகுவாக கால் அழுத்தி தைலம் தடவி விடுவதிலாகட்டும் அவரின் ஒவ்வொரு செய்கையிலும் அன்பு இழைந்தோடும்.

இதோ இந்த வயதான காலத்தில் தான் பெண் வீட்டிலும் அவர் பிள்ளை வீட்டிலும் உழல வேண்டிய கதி. ஒற்றை
ஆண்பிள்ளை, மருமகளுக்கு முன் வாய்செத்த பிள்ளையாக மாறிப் போனதில் அவரைவிட எனக்குத்தான் வருத்தம் தெறிக்கும். ரிட்டயர் ஆகி வீட்டில் இருப்பதனால், ‘மாமா பால் வாங்கி வந்து விடுங்கள், மாடியில் உலரும் துணிகளை எடுத்து வாருங்கள் என வாழைப்பழத்தில் ஊசி சொருகுவது போல் வேலைகளை அவர்
தலையில் கட்டிவிட்டு போய்விடுவாள். அவர் அங்கு என்ன அவதிக்கு உள்ளாகி இருக்கிறாரோ தெரியவில்லை.

அவருக்கும் என்னை பிரிய மனமில்லை. பெண்ணுக்கு வேண்டி இங்கு அனுப்பி வைத்துள்ளார். இரண்டு
வாரத்திற்கொருதரம் போன் பேச்சு உண்டுதான். பேசுவதெல்லாம் அவர்கள் பேசிவிட்டு கடைசியில் என்முறை வரும் பொருட்டு சீக்கிரம் சீக்கிரம் என்பதாய் ஜாடை காட்டும் பெண்ணை சமயத்தில் கெட்ட வார்த்தை சொல்லி வையலாம் போல் தோணும்.

சரி, நாமே போன் போடலாம் என்றாலோ அதெல்லாம் கைவராமல் அவர்களையே நம்பி இருக்க வேண்டிய கட்டாயம். கம்ப்யூட்டர் ஸ்பீக்கரில் அப்படியே பேசலாம் என்கிறார்கள். ஆனால், மகன் அங்கே கம்ப்யூட்டர் வாங்கினால் தானே… மளிகை வியாபாரம் பார்க்கும் எனக்கு கம்ப்யூட்டர் எதற்கு என்பதாய் உள்ளது அவன் கணக்கு.

அவரவர் கணக்கை கூட்டி லாபக் கணக்காக்கிக் கொள்ளவே முயல்கின்றனர். தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு வேறு என்று தானே சொல்லிவிட்டு போனார்கள்.

அவரவர் சுமையை அவரவர்தானே சுமக்கணும். உதவிக்கு வரலாம் தப்பில்லை. ஆனால், மொத்தத்தையும் நானே சுமக்க வேண்டும் என்ற மகளின் எண்ணம் எரிச்சலாய் உள்ளது. பாரம் ஏற்றி ஏற்றி முதுகு அழுத்துவது மட்டுமில்லை, அக்கடாவென்று மனம் இருக்க துடிக்கும் சமயத்தில் சுதந்திர மூச்சு விடக்கூட திராணியில்லாமல் போவதை என்னவென்று சொல்வது. சமயத்தில் தான் ஒரு பணிப்பெண்ணாய் பாவிக்கப்படுகிறோமோ என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

சென்ற முறை போன் பேசுகையில் நொடிக்கொருதரம் அவரிடமிருந்து வெளிப்பட்ட இருமல் ஓசைதான் கனவிலும் நினைவிலும் ஓயாமல் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. உடம்பிற்கு என்ன என்றாலும் ஒன்றுமில்லை என்ற அதே ஒற்றை பதில்தான் ஆதிகாலம் தொட்டு. இதோ அடுத்த அழைப்பு எப்போது வரும் என ஏங்கி தவிப்பது வீட்டு காலண்டருக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.

தூங்கிக் கொண்டிருந்த வினோத் எழுந்து அழும் அழுகைதான் நித்தமும் நினைவலைகளிலிருந்து மீட்டுக் கொண்டு வரும் துடுப்பு. சற்று இளைப்பாறலுக்கு பின்னான தொடர் வேலைகள்.

எதிர்பார்க்கப்பட்டது போலவே சென்னையிலிருந்து தான் அழைப்பு. மாப்பிள்ளைதான் முதலில் பேசிக் கொண்டிருந்தார். அடுத்து ப்ரியாவிடம் கைமாறியதும் அவளின் முகம் இருகத் தொடங்கியிருந்தது. வினோத்தை இறக்கி விட்டு வந்து வாங்குவதற்குள் அணைத்து விட்டிருந்தாள். ஏமாற்றத்தை
ஜீரணித்துக் கொண்டு வினவியதற்கு அவளின் குரல் தடுமாற்றம் என்னுள் தவிப்பை பன்மடங்கு கூட்டிவிட்டது.

ஒன்றுமில்லையாம். அப்பாவுக்கு திடீரென லோ பி.பி.யாகிவிட மயக்கம் வந்து மருத்துவமனையில் அண்ணா அட்மிட் செய்துள்ளார்கள் என்றாள்.

ஐயையோ, இது என்ன விபரீதம். இதுவா ஒன்றுமில்லாத விஷயம். அவரை அங்கே யார் பக்கத்திலிருந்து ஆதரவாக கவனித்துக் கொள்வார்கள். பதைபதைப்பு தொற்றிக் கொண்டது.

நான் சதா புலம்பித் தீர்ப்பதை பார்த்து மாப்பிள்ளை வினோவிடம் பொரிந்துக் கொண்டிருந்தார். மனதிற்குள்ளேயே மருகுவதைத் தவிர வேறு வழியில்லை. துணிந்தே சொல்லிவிட்டாயிற்று. என்னை இந்தியாவிற்கு அனுப்பிவிடுங்கள். நீங்கள் வரவில்லையென்றாலும் பரவாயில்லை. நானே தட்டுத்தடுமாறி சென்றுவிடுகிறேன் என்று. ஆனால், அவளிடம்தான் பதிலில்லை.

‘கௌசிக், அப்பாக்கு ஹார்ட் அட்டாக்ங்குறத அம்மாகிட்ட மறைச்சுட்டோம். ஆனா எத்தன நாளைக்கு. அப்பாக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயமா இருக்கு. அம்மா வேற போறேன் போறேன்னு நச்சரிக்க ஆரம்பிச்சுட்டாங்க’.

ப்ரியா… இது பஸ்ட் அட்டாக்தான். ஒன்னும் ப்ராபளம் இல்லை. மூணு அட்டாக் மேலயும் உயிரோட இருக்குற எத்தன பேர நான் பாத்திருக்கேன் தெரியுமா. அடுத்த வாரம் நீயும் நானும் டூர் போறோம். அதுவரை வினோவ யார் பாத்துப்பா. அதுவரைக்கும் உங்கம்மா இங்க இருந்துதானே ஆகணும்.

வெறும் மயக்கம்ணு சொன்னதுக்கே அம்மா வெலவெலத்துட்டாங்க.அட்டாக்னு சொன்னா அவ்வளவுதான். வேணா, டூர் கேன்சல் பண்ணிடலாமே.

கூல் பேபி, நான்தான் ஒண்ணும் ஆகாதுன்னு சொல்றேன்ல.

மாப்பிள்ளையும் ப்ரியாவும் அவ்வப்போது குசுகுசுவென பேசிக் கொள்வது தெரிகிறது. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

இதோ டூர் முடிந்து இருவரும் வந்தாயிற்று. இந்தியா செல்வதற்கான விமான டிக்கெட்டுகளும் புக் செய்தாயிற்று என்றார்கள். மாப்பிள்ளையின் கலிபோர்னியா நண்பரும் இந்தியா வர இணைந்துக் கொண்டார். நெடுநாட்களுக்குப் பின் சொந்த வீட்டையும் கணவரையும் காணப் போகும் உற்சாகம். இனி மற்றொரு முறை இங்கே வரவேண்டிய சூழலை ஏற்படுத்தி தரவேண்டாம் என அருணாச்சலேஸ்வரரை பிரார்த்தனை செய்தபின் வீடு பூட்டப்பட்டது.

விமான நிலையம் வந்து சேர்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் வந்த அழைப்பு ப்ரியாவை குற்ற உணர்ச்சிக்கு தள்ளி விட்டிருந்தது. அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்காம் என்றபடி மென்று முழுங்கினாள். ஆனால் சுந்தரத்திற்கு எல்லாம் முடிந்து விட்டதாகதான் தகவல் வந்தது. தன்னைப் பார்க்க ப்ரியா தவிக்கும் தருணத்தை வைத்தே சாரதாவால் அனுமானமாக யூகிக்க முடிந்தது, அங்கே ஏதோ அசம்பாவிதம் என்று.

ஜன்னலை மூட வேண்டாம் இப்போது என ஆங்கிலத்தில் பைலட் கூறிக்கொண்டிருந்தது மிக மெல்லிதாகத்தான் கேட்டது சாரதாவிற்கு. மாப்பிள்ளை அவ்வப்போது இருக்கைக்கு மேலிருந்த பட்டனை அழுத்தி விமான பணிப்பெண்களை வரவழைத்தபடி இருந்தார். சாரதா நெஞ்சில் நிரம்பியிருந்த உணர்வு குவியலுடன் மெல்ல கண்மூடி சாய்ந்துக் கொண்டாள். கைகளில் அள்ளிய நீர் சன்னமாக ஒழுகி தீர்ந்தது போல் அவளிடமிருந்த நினைவலைகள் மெல்ல நழுவிக் கொண்டிருந்தது.

சென்னை வந்தவுடன், ப்ரியா தூங்கிக் கொண்டிருந்த தாயின்தோளை தொட்டு உலுக்க சாரதா அப்படியே
இருக்கையின் பக்கவாட்டில் சாய்ந்தாள். பின் எப்போதும் நினைவலைகள் சாரதாவை தொந்தரவு செய்யவில்லை.

udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum