தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
புத்திர சோகம்
Page 1 of 1
புத்திர சோகம்
புத்திர சோகம்
(அனிதா சுஜி)
சரளாவின் இதயத்தில் ஆணி அடித்தார் போல் இருந்தது அப்போது அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்த அந்த எண்ணங்களின் எதிரொலி. எத்தனையோ இழப்புகளும் அதனால் ஏற்பட்ட சோகங்களும் அவள் மனதை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. தன்னை மறந்தவளாய் நிலையுற்றிருந்த அவளின் நினைவுகளில் நீந்தத்தொடங்கின அன்று காலை அவளது வீட்டில் நிகழ்ந்த அந்த சம்பவம்.(அனிதா சுஜி)
அன்று காலை சரளாவின் கணவன் ரகு அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தான். சரளா சமையலறையில் காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தாள். அப்போது தான் ரகுவின் மூத்த சகோதரி சாரதா வீட்டிற்கு வந்தாள். வந்தவள் நேராக ரகுவின் அறைக்கு சென்று ரகுவிடம் பேசிக் கொண்டிருந்தாள். சரளாவின் காதுகளிலும் அந்த உரையாடல் விழுந்தது.
”ஏண்டா ரகு, நானும் எத்தனை நாளா சொல்லிட்டு இருக்கேன். நீ கொஞ்சமாவது என் வார்த்தையை காதில் வாங்குரியா”
”இப்ப உனக்கு என்னக்கா வேணும் சொல்லு. எதுக்கு இப்ப வந்ததும் வராததுமாக இப்டி என்னை ஆஃபிஸ் கிளம்ப விடாம ஆர்பாட்டம் பன்னுர”
”என்னடா இப்படி சொல்லுர, உன் பொண்டாட்டிக்கு இது வரைக்கும் நாலு முறை கரு தரிச்சது. நாலுமே குறை மாதத்துலயே இறந்தே பிறந்திருச்சு. அவளுக்கு ஏதோ குறை இருக்கு டா. அதுனால தான் உன்னை இன்னொரு திருமணம் செய்துக்க சொல்றேன். என் மகளுக்கும் திருமண வயது வந்திருச்சு. அவளுக்கும் வரன் பார்க்கத் தொடங்கியாச்சு. பேசாம அவளை உனக்கே கல்யாணம் செய்து வைக்கிறேன். அவ மூலமாவது உனக்கு ஒரு நல்ல ஆரோக்யமான குழந்தை பிறந்து நம்ம வம்சம் தழைக்கட்டும். நானும் என் கணவரை பறிக்குடுத்துட்டு நிற்கிரேன். நீ அவளை திருமணம் செய்துகிட்டா நானும் என்னோட இறுதி காலத்தை இங்கயே கழிச்சுடுவேன்“.
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததை எதேச்சையாக கேட்டுவிட்ட சரளா அக்கணத்திலிருந்தே நிலை குழைந்து போனாள். மடை திறந்த வெள்ளமாய் கண்ணீர் இமை நிறைந்து வழிந்தது. முந்திக்கொண்டு வந்த அழுகையை தன் இதயத்திற்குள் கட்டிப்போட்டு வைத்தாள். மூன்று முடிச்சுகளுக்கு கட்டுப்பட்டவளாய், அன்றைய பகல் பொழுது முழுவதும் ஒரு நடை பிணமாக பல மணப்போராட்டங்களுக்கு நடுவே ஓர் உறுதியான முடிவு கிடைத்தவளாய் தன் கனவுகளுக்கு அன்றிரவே அமைதி கொடுக்க வேண்டும் என காத்திருந்தாள் தன் கணவனின் வருகைக்காக.
எத்தனையோ இனிய இரவுகளை தங்கள் வாழ்க்கை புத்தகத்தில் காவியமாக பதித்த அவர்கள் வாழ்வில் இன்றைய இரவு ஓர் திருப்புமுனையை பெற்றுத்தந்தது. இரவு முழுதும் பலவித கெஞ்சல், கொஞ்சல், அழுகை, சமாதனங்களுக்குப்பின் ரகுவிற்கு இரண்டாவது மணம் முடிப்பது என்றும், சரளா வேறு ஒரு வாடகை வீட்டில் குடியேறுவது என்றும் இருவரும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.
பேசி முடிவு செய்தது போலவே ரகுவுக்கும் சாரதாவின் மகள் ஆனந்திக்கும் திருமணமும் இனிதே நிறைவேறியது, சரளாவும் வாடகை வீட்டில் குடியேறினாள்.
2 வருடங்கள் கழிந்தது. ஒரு நாள் சரளாவின் கைபேசி அதிர்ந்தது. எதிர்முனையில் அவளது கணவனின் குரல் ஒழிக்க, அப்போது அவன் ஆனந்தி கருவுற்றிருக்கும் செய்தியைக் கூறினான். அதைக்கேட்டு மகிழ்ச்சியின் எல்லைவரை சென்ற அவள் தானும் கருவுற்றிருப்பதை தன் கணவனிடம் பகிர்ந்து கொள்ளாமல் தனக்குள் மட்டுமே மகிழ்ந்து கொண்டாள்.
மாதங்கள் வேகமாக நகர்ந்தன. தலை பிரசவத்திற்காக ஆனந்தி அந்த பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். கடவுள் நம்பிக்கையை மட்டுமே தன் துணையாக கொண்டிருந்த சரளாவும் அதே மருத்துவமனையில் ரகுவால் சேர்க்கப்பட்டாள்.
எத்தனையோ ஏக்கங்கள், இழப்புகள், ஏளனங்களுக்கு இடையே இப்பிறவியின் பயனை அடைந்தவளாய் ஆழ்கடல் முத்தைப்போல் சரளா ஓர் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஆனந்திக்கோ பெண் குழந்தை அதுவும் தாயின் கருவறையையே கல்லறையாக்கிக் கொண்டு வயிற்றுக்குள்ளேயே இறந்தே பிறந்தது. இதைக் கேள்விப்பட்ட சரளா அதிர்ந்து போனாள். முன்பு தான் பெற்ற அதே நரக வேதனை ஆனந்திக்கும் நேர்ந்துவிட்டதே என்பதை உண்ர்ந்த அவள் சட்டென ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவலாய் தன் 10 வருட தாம்பத்திய வாழ்க்கையின் வரப்பிரசாதமாய் தான் பெற்றெடுத்த அந்த ஆண் குழந்தையை தூக்கிக் கொண்டு ஆனந்தியின் அறைக்கு விரைந்தாள். மயக்க நிலையிலும் ஆனந்தியின் முகத்தில் மல்ர்ந்திருக்கும் அந்த மகிழ்ச்சி மங்கி விடக்கூடாதென தன் வாழ்வின் ஆதாரத்தை அவள் அருகில் இருந்த தொட்டிலில் போட்டுவிட்டு தன் கண்ணீர் துளிகளையே குழந்தைக்கும் ஆனந்திக்கும் ஆசீர்வாதங்களாய் தெளித்துவிட்டு அறையினின்றும் வெளியேறினாள்.
இதை கவனித்துக் கொண்டிருந்த ரகுவும் அவனது சகோதரியும் மிகுந்த குழப்பம் அடைந்தவர்களாய் சரளாவிடத்தில் “உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சுருக்கு, ஏன் இப்படி பன்னுன இந்த குழந்தை தான் உனது கனவு” என்று கேட்டனர்.
அதற்கு சரளா “ஒரு பிள்ளையை பெற்றெடுத்து அதை உடனே பறி கொடுக்குற புத்திர சோகம் மிகவும் கொடுமையானது, அந்த கொடுமையை நான் ஏற்கனவே நாலுமுறை அனுபவிச்சுட்டேன். அது எனக்கு பழகிவிட்டது, ஆனால் ஆனந்தி அப்படி அல்ல. அவ சின்ன பொன்னு, அந்த கொடுமையை அவ அனுபவிக்க வேண்டாம். அதை அவ தாங்கிக்கவும் மாட்டா. இந்த குழந்தை அவ குழந்தையாவே வளரட்டும், தூரத்தில் இருந்தே நான் பார்த்து சந்தோசப்பட்டுக்குவேன் “ என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்று விட்டாள்.
சரளா கூறிய அந்த வார்த்தைகளை கேட்டு ரகுவின் சகோதரி சாரதாவின் கண்களில் தன் குற்ற உணர்ச்சி கண்ணீராய் வழிந்தது.
udhayam72- குறிஞ்சி
- Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum