தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சரசுவின் கணவன்
Page 1 of 1
சரசுவின் கணவன்
சரசுவின் கணவன்
விளையாட்டுப் போல ஒரு மாதம் ஓடிவிட்டது. சரஸ்வதியைப் பார்க்கப் போகவில்லை. 'எதிரில் இருக்கும் மெடிக்கல் ஷாப்புக்கு ஃபோன் செய்ய வேண்டாம்' என்று ஒரு தடவை சொல்லியிருந்தாள்.
"எதுனா பிரச்சனையா சரசு?"
"இல்லை."
"பின்னே... ஃ போன் செய்ய வேணாம்னு சொல்றியா!"
"வேணாம்னா... விட்டுறேன்."
"இல்லே சரசு. எதுவும் அவசரம்னா இந்த ஃ போன் ரொம்ப வசதியா இருக்கு. அதனாலதான்."
கவலைப்பட்ட மாதிரியே ஆகிவிட்டது.
ஃபோன் மிக வசதி. நேரில் போகாத குறையைத் தீர்த்துவிடும். அதுவும் வேண்டாம் என்று ஒதுங்கியதால், நேரில் போக இயலாமல் போக, சரசுவைப் பார்த்து இன்றோடு ஒரு மாதம்.
எப்படி இருக்கிறாள்? வசந்தி மேலும் கவலைப்பட்டாள்.
சரியாய் ஒரே வார இடைவெளியில் இரண்டு பேருக்கும் திருமணம்.
வசந்தி கல்யாணத்திற்குச் சரசு தன் கணவனுடன் வந்திருந்தாள். நிகோடின் கறை படிந்த உதடுகள். பார்வை இலக்கின்றி அலை பாய்ந்தது.
சரசுவை இழுத்துத் தன்னருகே நிறுத்திக் கொண்டாள். "ஏண்டி... எப்படி உன் ஹப்பி?"
சரஸ்வதியின் முகம் எப்போதும் போல மலர்ந்திருந்தது.
"உனக்கு சந்தோஷமா... சரசு?"
இந்தக் கேள்வியை அன்று ஏன் கேட்கத் தோன்றியது என்பதற்கு இன்றுவரை மனசுக்குள் அர்த்தமாகவில்லை.
*****
உள்ளூர ஏதோ தன்னை அச்சுறுத்தி இருக்கிறது. அது கவலையாக, பயமாக, ஒரு கேள்வியாக வெளிப்பட்டுவிட்டது.
அப்போது மெடிக்கல் ஷாப்பிற்கு ஃபோன் செய்து கொண்டிருந்த காலம். தற்செயலாகத்தான் சரசுவை அழைத்தாள்.
"லைன்ல இருக்கீங்களா. பையன் போய் அழைச்சுக்கிட்டு வரணும்"
"கட் பண்ணிடறேன். அஞ்சு நிமிஷத்துல மறுபடி கூப்பிடறேன்" என்றாள்.
சரசுவின் குரல் கேட்டதும் சந்தோஷமாய் இருந்தது. நேரில் விட ஃபோனில் அவள் குரல் கூடுதலாய் இனிக்கும். ஏன் அது போல உணர்கிறாள் என்று புரியவில்லை. சரசுவிடமே சொல்லியிருக்கிறாள்.
"சரசு... இந்த ஸண்டே நீயும் அவரும் எங்க வீட்டுக்கு சாப்பிட வரீங்க... சரியா?"
எதிர்முனை மெளனமாய் இருந்தது.
"சரசு."
"ம்..."
குரல் கேட்டதும்தான் ஆசுவாசமானது.
"என்னடி பதிலே இல்லே?"
"வரலை. வர முடியாது." குரல் திணறிப்போய் வந்தது.
"ஏன்?"
"நேர்ல வா. பேசிக்கலாம். வச்சுடறேன்."
வசந்தியின் பதிலை எதிர்பாராது வைத்துவிட்ட சப்தம் கேட்டது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் சரசுவின் வீட்டில் இருந்தாள்.
"என்னடி?"
வழி நெடுக யோசித்து வந்ததை எல்லாம் தூக்கிச் சாப்பிடுகிற மாதிரியான ஒரு குண்டைப் போட்டாள் சரஸ்வதி.
"அவர் இப்ப என்னோட இல்லை..."
"என்ன..."
"ரெண்டு வாரமாச்சு. ஏற்கெனவே ஒரு தொடர்பு இருக்காம். சாதாரணமா பழக்கம்னு நினைச்சாராம். நெருக்கமாவே இருந்திருக்காங்க. என்னோட கல்யாணம் ஆனதும்தான் புரிஞ்சுதாம், அவளை மறக்க முடியலைன்னு. என்னை விட அவதான் கூடுதலா மனசுல நிக்கிறாளாம்."
வசந்திக்கு வாய் உலர்ந்து போனது.
என்ன மனுஷன் இவன்? ஏதோ இரண்டு உடுப்புகளுக்கு இடையே செலக்ஷன் செய்வது போல...
"நீ பேசாம விட்டுட்டியா? என்றாள் எரிச்சலுடன்.
"வேற என்ன செய்ய? நேர்மையா ஒப்புக்கிட்டாரு. அவரைக் கட்டிப்போட்டா வைக்க முடியும்?"
"ஏய்.. இது உன்னோட வாழ்க்கை..."
"அதனாலதான் மேல மேல குழப்பிக் கொள்ளாம அவரை அனுப்பிச்சிட்டேன்" என்றாள் அமைதியாக.
என்ன சொல்வது என்று புலப்படாமல் சரஸ்வதியையே வெறித்தாள்.
"ஸாரிடி. ஸண்டே நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து விருந்துக்கு வரமுடியாது."
"போடி..." வசந்தி தன்னையும் மீறி குமுறினாள்.
எத்தனை இயல்பாய் எடுத்துக் கொள்கிறாள்! இழப்பு இவளைப் பாதிக்கவில்லையா?
"ஸ்கூல்ல மறுபடி வேலை கேட்டுப் போகணும். கல்யாணத்தப்ப வேலைக்குப் போக வேண்டாம்னு இவர் சொன்னதை நம்பி விட்டாச்சி. ம்ஹும்... அவங்க என்ன சொல்லப் போறாங்களோ..."
"நான் வேணா... இவரை அனுப்பி உங்க வீட்டுக்காரரை... நியாயம் கேட்டு..." வசந்தி முடிக்கவில்லை.
"எதுக்கு? அதான் முடிஞ்சு போச்சே."
ஒரு மாதம் ஆனது. வசந்தி தன்னிலைக்கு வர. நினைக்க நினைக்க எரிச்சல் மேலிட்டுக்கொண்டு போனது, சரஸ்வதியே இயல்பாய் எடுத்துக் கொண்டே போதிலும்.
பிறகுதான் மெடிக்கல் ஷாப்பிற்கு ஃபோன் செய்ய வேண்டாம் என்றது. நேரில் போக வசதிப்படாமல் ஏதோ ஒரு வேலை தடுத்தது.
*****
மெடிக்கல் ஷாப்பில் கூட்டம் இல்லை போலும்! நிதானமாய்ப் பேசினார்.
"இருக்காங்களான்னு பார்த்தா போதும் ஸார். நான் நேர்ல வந்து பேசிக்கறேன்" என்றாள்.
"அவங்க வீட்டைக் காலி பண்ணிக்கிட்டு போயிட்டாங்களே..."
"எப்ப?" என்றாள் திடுக்கிடலுடன்.
''ஞாபகம் இல்லீங்க. வச்சுரவா?"
தனக்குக் கூட தெரிவிக்கவில்லை. சிநேகிதி என்கிற முறையில் என்ன செய்திருக்கிறாள்? தெரிவிக்க அவசியம் இல்லை என்று நினைத்து விட்டாளே?
இரவு கணவன் வீடு திரும்பியதும் அரற்றித் தீர்த்துவிட்டாள்.
"எப்படிப் பழகினோம்! வீட்டைக் காலி பண்றதைக் கூட சொல்லல... பாருங்க..."
பேசாமல் உணவை விழுங்கிக் கொண்டிருந்தான்.
"அவ புருஷன் விட்டுட்டுப் போனதும் எப்படி தவிச்சுப் போயிட்டேன். என் படபடப்பு எனக்குத்தான் தெரியும்."
விடாமல் புலம்பவும், அவன் குறுக்கிட்டான்.
"இங்கே பாரு... அவ உன் ஃப்ரெண்ட்தான். ஆனா, வேற ரகம். நான் சொல்ல வேணாம்னு பார்த்தேன். அவளுக்குப் புருஷனே அவசியம் இல்லே, எல்லாம் தனக்குத் தெரியும்னு காலர் விடைச்சுக்கிற டைப். இதுவே நீயா இருந்தா ஆடிப் போயிருப்பே...அவ பாரு... எதுவுமே நடக்காத மாதிரி...வேலைக்குப் போறா. வேலை பார்க்கிறா. குடும்பத்துல அடங்கற பொம்பளை இல்லே...
தன்னால் முடியுமென்று நிமிர்ந்து நிற்பவளின் முதுகு ஒடித்துப் பார்க்கும் தன் கணவனின் பேச்சில் அதிர்ந்து போய்ப் பார்த்தாள் வசந்தி.
தட்டில் சாதம் அப்படியே இருந்தது, வசந்திக்கு சாப்பிடத் தோன்றவில்லை.
udhayam72- குறிஞ்சி
- Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum