தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



திருந்தி வாழ்வதே வாழ்க்கை!

Go down

திருந்தி வாழ்வதே வாழ்க்கை! Empty திருந்தி வாழ்வதே வாழ்க்கை!

Post by udhayam72 Tue May 21, 2013 12:23 pm

திருந்தி வாழ்வதே வாழ்க்கை!


ஜோசளினும் வில்லியம்ஸும் காதலித்து மணம் புரிந்து கொண்டார்கள்.

அவர்களது திருமண விழாவின் இறுதியில், ஜோசளினின் அன்னை அவர்களுக்கு வங்கி சேமிப்பு கணக்கு புத்தகமொன்றை ஆரம்பித்து பரிசளித்தார். அதில் $1,000 போடப்பட்டிருந்தது.

ஜோசளினின் அன்னை:
"ஜோசளின் இந்த சேமிப்பு புத்தகத்தை உங்கள் திருமண வாழ்கையின் பதிவேடாக பாவித்து கவனமாக வைத்துக்கொள்.

எப்போதெல்லாம் நீ மகிழ்ச்சியான தருணங்களை சந்திக்கிறாயோ, அப்போதெல்லாம் உன் மகிழ்ச்சியின் அளவிற்கேற்ப பணத்தினை வைப்பு செய்... அதனருக்கில் காரணத்தை எழுத மறந்துவிடாதே.

இதுதான் நான் உனக்கு தரும் திருமணப் பரிசு... இன்றைய தினத்தை நினைவு கூறும் வகையில் நான் ஒரு சிறிய தொகையை சேமிப்பில் போட்டிருக்கிறேன்.

மீதியை நீ வில்லியம்சுடன் சேர்ந்து சேமிக்க வேண்டும்.

பின்னொரு காலத்தில் இந்த சேமிப்பு புத்தகத்தை பார்க்கும் போது, அது உன் திருமண வாழ்க்கை உனக்கு கொடுத்த மகிழ்ச்சியை நினைவுறுத்தும்."

தன் கணவனுடன் தனித்திருக்கையில், ஜோசளின் தன் தாயின் பரிசினைப் பற்றி வில்லியம்ஸ்க்கு கூறினாள்.
இருவருக்கும் ஜோசளினின் தாய் அளித்த பரிசும் அவர் கொடுத்த விளக்கமும் பிடித்திருந்தது.
தாங்கள் இருவரும் சேர்ந்து சேமிக்கவிருக்கும் முதல் தருனத்திற்காக ஆவலுடன் காத்திருந்தனர்...
வில்லியம்ஸின் பிறந்தநாள் வந்தது... திருமணமான பின் வந்த முதல் பிறந்தநாள்... அவர்களுக்கு சிறப்பான, மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. அன்றே அவர்கள் முதல் தொகையாக $100 செமித்தார்கள்.

பின்பு...
தேன் நிலவிற்காக சென்ற போது $300.
ஜோசளினுக்கு வருமானம் கூடிய போது $100.
ஜோசளின் கருவுற்ற போது $2,000.
வில்லியம்சுக்கு பதவி உயர்வு கிட்டிய போது $1,000.

இவ்வாறு வங்கிக் கணக்கும் அவர்களது காதலைப் போல் வளர ஆரம்பித்தது.

சில வருட திருமண வாழ்கையின் பின், அவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்தது.
சிறிய விஷயங்களுக்கு கூட அவர்களுக்குள் பெரிய மோதலே ஏற்படும்.
அவர்கள் பேசிக்கொள்வதே சிறிது சிறிதாக குறைந்து அடியோடு நின்றே விட்டது.
காதலும் புரிந்துணர்வும் இல்லாத வாழ்கையை வெறுத்தார்கள்.
தாம் இணைந்ததை நினைத்து வருந்தத் தொடங்கினார்கள்.
இது படிப் படியாக அவர்களை விவாகரத்து வரை இழுத்துச் சென்றது.

ஒரு நாள் தன் தாயிடம் சென்ற ஜோசளின்,
"அம்மா, என்னால் இனிமேலும் வில்லியம்சுடன் இணைந்து வாழ முடியாது... எப்படித்தான், இவரை ஒருகாலத்தில் விரும்பியதாக நினைத்தேனோ தெரியவில்லை. அவருடன் சேர்ந்திருக்கும் ஓவ்வொரு நொடியும் நரக வேதனையை அனுபவிக்கிறேன்... ஆதலால், விவாகரத்து பெறுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம். "
என்று கூறினாள்.



தன் மகள் கூறுவதை பொறுமையாக செவிமடுத்த அந்த தாய்,
"நீ கூறுவது உண்மை ஜோசளின். சேர்ந்து வாழ்வது துன்பமெனில், விவாகரத்து ஒன்றே சரியான தீர்வு. ஆனால், அதற்கு முன்பாக ஒரு காரியம் செய்... உனக்கு நினைவிருக்கிறதா, உன் திருமண நாளன்று நான் ஆரம்பித்து தந்த சேமிப்பு கணக்கு... அதனை மூடிவிடு. சேமித்த பணத்தையெல்லாம் எடுத்து செலவழித்து விடு. விவாகரத்திற்குப் பின் இந்த கசப்பான திருமணத்தின் சான்றுகள் எதுவும் உன்னுடன் இருக்கக் கூடாது."
என்று அறிவுறுத்தினாள்.


ஜோசளினுக்கும் தன் தாய் சொல்வது சரியாகவே பட்டது.
உடனடியாக வங்கிக்கு சென்று, கணக்கை மூடுவதற்காக காத்திருந்தாள்.
அவள் வங்கிக்கு சென்ற வேளை, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று... அப்படி வரிசையில் காத்திருந்த போது, தன் கையில் இருந்த கணக்கு புத்தகத்தையும் அதிலிருந்த பதிவுகளையும் பார்வையிட்டாள்.
அதனை படிக்கும் போது, வில்லியம்சுடன் களித்த மகிழ்ச்சியான தருணங்கள் அவள் நினைவிற்கு வந்தது...
அவளை அறியாமலே, அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது...
தான் வில்லியம்ஸ் மீது வைத்திருக்கும் காதலை புரிந்து கொண்டாள்.
வங்கிக் கணக்கை மூடாமலேயே வீடு திரும்பிவிட்டாள்.

வீட்டிற்க்கு சென்றதும், கணக்கு புத்தகத்தை வில்லியம்ஸிடம் கொடுத்து, விவாகரத்து பெறும் முன் பணம் முழுவதையும் செலவழித்து விடுமாறு கூறினாள்.

மறு நாள், வில்லியம்ஸ் அந்த சேமிப்பு புத்தகத்தை ஜோசளினிடம் திருப்பி கொடுத்தான்.

அதில் புதியதொரு பதிவாக $5,000 போடப்பட்டிருந்தது.
அதன் கீழ்,
"உன் மேல் நான் வைத்திருந்த காதலையும், உன்னால் நான் அனுபவித்த சிறு சிறு சந்தோஷங்களையும், இன்று தான் நான் உணர்ந்து கொண்டேன்."
என்று பதியப்பட்டிருந்தது.



இருவரும் ஒருவரையொருவர் கட்டிக்கொண்டார்கள்... தங்கள் அன்பை முத்தங்களாலும் கண்ணீராலும் பரிமாறிக் கொண்டார்கள்.

அந்த சேமிப்பு புத்தகம் மீண்டும் ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்கப் பட்டது.

அவர்களது இறுதிக் காலம் வரை அந்த வங்கிக் கணக்கினை தொடர்ந்தார்கள்.

அவர்கள் எவ்வளவு சேர்த்தார்கள் என்பதை யாரும் அறிய முற்படவில்லை.

ஒவ்வொரு தடவை நீ கீழே விழும் போதும்,
விழுந்த இடத்தில் என்ன பிழை நடந்தது என்பதை பற்றி ஆராச்சி செய்யாதே...
அதற்குப் பதிலாக,
பிழை எங்கே ஆரம்பித்தது என்பதை கண்டறிந்து திருந்(த்)திவிடு!
திருந்தி வாழ்வதே வாழ்க்கை!
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum