தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm

» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm

» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm

» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm

» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm

» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) -    கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm

» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி  ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm

» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm

» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm

» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm

» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm

» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm

» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm

» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm

» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm

» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm

» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm

» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm

» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm

» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm

» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm

» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am

» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am

» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am

» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am

» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm

» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm

» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm

» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm

» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm

» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm

» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm

» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines உடல் மாற்றங்கள்- உடல் நலம் - பருவமானவர்கள்

3 posters

Go down

உடல் மாற்றங்கள்- உடல் நலம் - பருவமானவர்கள்   Empty உடல் மாற்றங்கள்- உடல் நலம் - பருவமானவர்கள்

Post by RAJABTHEEN Tue Dec 07, 2010 4:33 am

வளர்ச்சி (GROWTH)

எப்போது பருவம் ஆகும் நிலை ஏற்படுகிறது?

உடலில் ஏற்படும் மாற்றங்களை பத்து வயதுமுதல் பதின்னான்கு வயது வரை அவதானிப்பீர்கள். சராசரியாக பன்னிரண்டு வயதில் சிலவேளைகளில் பத்து வயதிற்கு முன்பும் பதின்னான்கு வயதிற்குப் பின்பும் எனவும் கூறலாம்.

ஆனால், உடலுக்கு உள்ளே ஏற்படும் மாற்றங்கள் ஏழு வயதிலேயே ஆரம்பமாகிறது. மூளையின் ஒரு பகுதியான உபதலமஸ் ஓமோன்களைத் தயாரிக்க ஆரம்பிக்கும் போது பருவம் ஆகும் நிலை ஏற்படுகிறது.

ஓமோன்கள் என்றால் என்ன?

ஓமோன்கள் உடலிலிருந்து சுரந்து பருவம் ஆகி வளர்ச்சியுற்று சிறு பிள்ளை நிலையிலிருந்து மனிதனாகச் செய்கின்றன. ஓமோன்கள் உங்கள் இன விருத்திக்கான அமைப்பை உருவாக்கி பிள்ளைகளைத் தோற்றுவிக்க உதவுகின்றன. அதாவது பருவமாகி தந்தை நிலை அடையச் செய்கிறது.

ஓமோன்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டுமாயின் ஒரு பையனுக்குக் கூடுதலான பெண்ணுக்குரிய ஓமோனான எஸ்ரஜினைச் செலுத்தினோமாயின் அவனுக்கு மார்பகங்கள் ஏற்பட்டு வளர்ச்சியுற்று தாடி உரோமங்கள் அகல ஆரம்பிக்கும். அதேபோல பெண்ணொருத்திக்கு ஆண்களுக்குரிய ஓமோனான அன்ட்றொஜன் கூடுதலாகச் செலுத்துவோமாயின் அவள் மார்பகங்களை இழந்து முகத்தில் உரோமங்கள் தோன்றி குரலும் கறகறப்பாகிவிடும்.

காணப்படும் முதல் மாற்றம் என்ன?

பருவமானவர் என்பதைக் காட்ட விதைகள் வளர்ச்சியுற்று, பெருத்து சற்று கீழ் இறங்கும். இரண்டில் ஒன்று சிறிது கீழ்முகமாக இறங்கித் தொங்கத் தொடங்கும். இது சராசரி வயது பன்னிரண்டாக இருக்கும் போது ஏற்படுகிறது. விதைகளைத் தாங்கும் விதைப்பை சற்று கருமை நிறமடைகிறது. அதேநேரம் முரட்டுத் தன்மையைப் பெறுகிறது. ஆண்குறியும் பெருத்து விடுகிறது.

விதைகள் பெருப்பதேன்?

விதை ஒவ்வொன்றிலும் இருநூற்று ஐம்பது சிற்றறைகளுண்டு. இவற்றில் இறுக்கமாய்;ச் சுருண்ட குழாய்களுண்டு. இவை விந்துகளைத் தயாரிக்கின்றன. இவை பருவமாகின்ற போது வளர்ச்சியுறுவதனால் விதைகள் பெருக்கின்றன. இந்தச் சிறுகுழாய்களை ஒன்றன்பின் ஒன்றாக நீட்டிப் பிடித்தோமாயின் கிட்டத்தட்ட அரை கிலோமீற்றர் நீளம் இருக்கும். இந்தக் குழாய்களை வெளியே எடுத்து நீட்ட முடியாது. அப்படிச் செய்ய இயலுமாயின் பருவமான ஆண்கள் தம்முடையவை மற்றவரைக் காட்டிலும் ஏன் நீண்டுள்ளது என்று போட்டி போடத் தொடங்கிவிடுவார்கள். உங்கள் விதைகள் பருவம் ஆனபின் அநேக காரியங்களைச் செய்ய வேண்டி உள்ளன. அவை ஓமோன்களைத் தொடர்ந்தும் உற்பத்தி செய்து கொண்டு ஆண்களாகத் தொடர்ந்து இருக்க செயல்பட வேண்டும். அதோடு உங்களுக்குத் தேவையான விந்துகளை உற்பத்தி செய்ய வேண்டும்.

விந்துகள் என்றால் என்ன?

விந்து என்பது மிக நுண்ணிய கலங்களை உரியன. சகல உயிரியல் தகவல்களையும் தமக்குள் அடக்கி உள்ளன. இதன் காரணமாகத்தான் உரியவனின் பிரதியைப் பெறமுடிகிறது. விந்து பெண்ணின் கருமுட்டையோடு கருக்கட்டும் போது குழந்தை உருவாகிறது. பெண் கர்ப்பிணியாகிறாள்.

விதைகள் கீழ்முகமாக இறங்குவதேன்?

உடல் வெப்பநிலை கூடுதலாக இருப்பதனால் அந்த வெப்பநிலையில் விந்துகள் தயாரிக்க இயலாது. அதன் காரணம் அவை சற்று இறங்கித் தொங்க வேண்டியுள்ளன. அப்பொழுது ஓரளவு குளிர்ச்சியாக இருக்கின்றன. விந்து உருவாகின்றன. குளிர்காலங்களிலும் பயந்து நடுங்கும் போதும் விதைகள் உடலை நோக்கிச் சரிகின்றன. சூழல் வெப்பநிலை அதிகரிக்கும் போதும் உடல் வெப்பநிலை அதிகரித்து சுகவீனம் உற்று இருக்கும் போதும் வெந்நீரில் குளித்து இருக்கும் போதும் விதைகள் உடலிலிருந்து விலகித் தொங்கும். அவற்றைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவே இவ்வாறு ஏற்படுகிறது.

ஒருவன் காய்ச்சலாய் இருக்கும்போது தற்காலிகமாக விந்தற்றவர்கள் ஆகிவிடுவர். அந்நேரங்களில் பெண்களைக் கர்ப்பிணிகளாக்க முடியாதிருப்பர். இதனை நன்கு அறிந்த பழங்குடியினர் பாலுறவு வைத்துக் கொள்ளுமுன் விதைகளை சுடுநீரில் நீண்ட நேரம் ஊறவிடுவர். இதனால் கர்ப்பம் தரிப்பது தடைப்படும்.

ஏன் ஒரு விதை மற்றதைக் காட்டிலும் கீழ்முகமாகத் தொங்குகிறது?

இதற்குக் காரணம் இடப்பிரச்சினையே. இரண்டும் இரண்டு கால்களுக்கு இடைப்பட்ட இடத்தைப் பங்கு போடும்போது பாதுகாப்புக்கருதி ஒரே வரிசையில் இராது சற்று மேலும் கீழுமாக அமைந்து உள்ளன. இதனால் ஒன்றோடொன்று மோதிக் கொள்வது தவிர்க்கப்படுகிறது.

ஆண்குறி பலமுறை புடைத்து எழ ஆரம்பிப்பது எப்போது?

புடைத்து எழுவது முள்ளந் தண்டின் கீழ்ப்பகுதியிலுள்ள நரம்புத் தொகுதி செய்திகளை அனுப்ப ஆண்குறியிலுள்ள இரத்தக் கொள்கலன்களில் இரத்தம் வேகமாக உந்தப்படுகிறது. இரத்தம் நிரம்பியதும் ஆண்குறிக்கு கீழே உள்ள தசைகள் இறுக்கம் அடைகின்றன. இதனால் மேலதிக இரத்தம் திரும்பிப் போகின்றது. இரத்தம் நிரம்பி விடுவதால் ஆண்குறி பெரிதாகி புடைத்து எழுகின்றது. உடலுக்கு வெளிப்புறமாக புடைத்து எழுந்து நிற்கின்றது. செங்குத்திற்கு மேலாக நிற்கும். அதே சமயம் சற்று கருமை நிறத்தையும் அடைகின்றது.

பலவிதமான தூண்டுதல்களும் கூட புடைத்தெழச் செய்கின்றன. கால்சட்டையோடு ஆண்குறி உராயும் போதும், பாலியல் எண்ணங்கள் ஏற்படும் போதும் புடைத்தெழுகிறது.

காரணம் எதுவுமின்றியும் புடைத்தெழுகிறது

இது திடீர் புடை எழுதலாகும். இயற்கை முன்கூட்டியே பயிற்சி ஒன்றை அளிக்கிறது. உங்களுக்கு பயங்கரமான அனுபவம் உண்டாகிறது. நேரம் கெட்ட நேரத்திலும் ஏற்படுகிறது. உங்களுக்கு பாலியல் வெறி ஏற்பட்டு விட்டதோ என்று பயப்பட வேண்டாம். இப்படியான புடைத்து எழுவதனால் எவ்வித தீமைக்கும் இடம் இல்லை. உங்களுக்கு புடைத்து நிற்கும் நிலை ஏற்படவில்லை என்று கற்பனை செய்து பாருங்கள்.

இத்தகைய திடீர் புடைப்புகள் ஏற்படும் போது பையன்கள்தான் சங்கடப்படுகின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் புடைத்து எழுவதைப் பற்றிப் பெண்களுக்கு ஒன்றுமே தெரியாது. துருவித் துருவிப் பார்க்கின்ற பெண்களுக்குக் கூட இது பற்றித் தெரியாது.

RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 100
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

உடல் மாற்றங்கள்- உடல் நலம் - பருவமானவர்கள்   Empty Re: உடல் மாற்றங்கள்- உடல் நலம் - பருவமானவர்கள்

Post by RAJABTHEEN Tue Dec 07, 2010 4:34 am

பையன்களுக்கு எப்போது திடீர் வளர்ச்சி ஏற்படுகிறது?

சுமார் பதின் மூன்று வயதாயுள்ளபோது அதாவது விதைகள் வளர்ச்சியுறத் தொடங்கும் போது பையன்களுக்கு பெண்களை விட வேறுபட்டு இத்திடீர் வளர்ச்சி ஏற்படுகிறது. பையன்கள் மிகவும் உயரமாக வளர்ந்து விடுகிறார்கள். ஆண்களின் உடல்கள் பெண்களைக் காட்டிலும் வளர்ச்சி ஓமோன்களைச் சுரக்கின்றன. ஆண்களுக்கான ஓமோன்கள் மற்றைய மாற்றங்களுக்குத் தேவைப்படுகின்றன. வளர்ச்சி ஓமோன்கள் பையன்களின் தோள்களை அகலப்படுத்தி தொண்டைக்கருகிலுள்ள சுவாசக் குழாயையும் விசாலப்படுத்தி குரலைக் கடுமையாக்குகிறது. தசைகளை வளரச் செய்து, முகத்தில் உரோமத்தை வளர்க்கிறது. பையன் வளர்ந்து மனிதனாக மாறிவிடுகிறான். இந்தத் திடீர் வளர்ச்சியின் போது முகத்தில் மூக்கு பெரிதாக வளர்கிறது. உடல் மெலிந்து விடுகிறது. கால்களும் பெருத்து விடுகின்றன. கவலைப்பட வேண்டாம். மற்றைய அவையங்களும் கால கதியில் வளர்ச்சியுறும். ஒரே நேரத்தில் அனைத்தும் ஏற்படுவது எந்திரங்களுக்கு மட்டுமே. இயற்கை அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்து முடிப்பதில்லை. இந்தத் திடீர் வளர்ச்சியின் போது ஒன்றை அவதானித்திருப்பீர்கள். உங்களுக்கு சற்று கூடுதலான நித்திரை தேவைப்படும். பாடசாலைக்குப் போக வேண்டாத நாட்களிலும் பாடசாலையிலிருந்து திரும்பி வந்ததும் உறங்க வேண்டும் போலவிருக்கும். ஏனெனில் வளர்ச்சி ஓமோன்கள் உறங்கும் நேரத்தில் தான் கூடுதலாகச் செயல்படுகின்றன.

உங்களுக்குப் பயங்கரமான உணவுப் பிரியம் ஏற்பட்டிருப்பதை உங்கள் தாயார் குறிப்பிடுவார். சிறுவயதைவிடவும் இப்போது புதியதும் நிறமானதுமான காய்கறிகளை விரும்புவதைக் காணலாம். ஏனெனில் நீங்கள் தற்போது வளர்ந்துள்ளீர்கள். உங்கள் உடல் காய்கறிகளிலுள்ள இயற்கையான நச்சுத்தன்மையை நடுநிலைமை ஆக்கக் கூடியனவாகி விட்டது. காய்கறிகளும் உயிருள்ளவையே. தம்மை மற்றவர்கள் விரும்பி உண்பதை அவை விரும்புவதில்லை. அதனால் அவை நச்சுப் பொருள்களை உருவாக்கி விரும்பி உண்ணவிடாது செய்கின்றன. இதனால் சிறு பிள்ளைகள் அவற்றை விரும்புவதில்லை.

உடல் வளர்ச்சிக்குக் காரணமான அதே ஓமோன்கள் தான் வளர்ச்சிக்கும் முற்றுவைக்கின்றன. முடிவு என்றால் என்புகள் பூரண வளர்ச்சியை அடைந்து விட்டன. மேலும் நீண்டு விட இடமில்லை. பீங்கான்கள் எரிய10ட்டிய பிறகு மேற்கொண்டு வளராது உள்ளதுபோன்றே தான் உடல் வளர்ச்சியும் என்புகளின் வளர்ச்சியும் முற்றுப் பெறுகிறது. இறுதியான உருவத்தை அடைந்து விடுகின்றன.

அநேக உருவொத்த காகிதங்களைக் கொண்டு பந்து போன்ற உருவங்களைச் செய்வதாகக் கொள்வோம். உருவம் அமைக்கும் போது முதலில் பந்தை விரிவாக்கி நடுமையப்பகுதியை அடைகிறோம். அதே உருவத்தை அடைய பந்து சுருங்கிக் கொண்டே வந்து மறுமுனையில் முடிவுற்று வட்டவடிவமாகிறது. இதே போன்று இயற்கையும் அப்படியே செயல்படுகிறது. அதே ஓமோன் இரண்டு மாறுபட்ட காரியங்களைச் செய்கிறது. மாற்றம் முன்கூட்டியே ஏற்படும். பையன்களுக்கு முன் கூட்டியே முடிவுறுகின்றது. அது போலவே காலம் தாழ்ந்து ஆரம்பிப்பவர்களுக்கு மெதுவாகவே வளர்ச்சி ஏற்பட்டு காலம் தாழ்த்தியே முடிவுறுகிறது. ஆகவே பெண்களுக்குப் பிறகே ஆண்கள் தமக்கு வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்று நினைப்பது சரியான முடிவு அல்ல.

அடுத்த கட்டம் என்ன?

விரைவான வளர்ச்சியின் அடுத்த கட்டம் ஆண்குறி சற்று பெருத்து விரிவடைகிறது. விதைகள் பெருக்கின்றன. ஆண்குறியின் தோலும் விதைப்பையும் கருநிறம் அடைய ஆரம்பிக்கின்றன.

இது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு ஆகும். ஆனால், வைத்தியர்கள் இதனைக் கட்டங்கள் என்பார்கள். ஏனெனில் அவர்கள் விரைவாக பையன் பருவம் ஆன நிலையை அறிந்து கொள்ள இயலும். பருவம் ஆவதை வயதெனக் குறிப்பிடலாம். பருவம் ஆனதென்று கொள்ள விரும்புகின்றனர். ஏனெனில் எல்லாப் பையன்களும் ஒரே வயதில் பருவம் ஆவதில்லை.

அதன் பின்பு

ஒரு சுவாரஸ்யமான மாறுதல். நினைவில் கொள்ளுங்கள். பிள்ளைகள் கூட சிறிதளவு பெண்களுக்கான ஓமோனான எஸ்ரோஜன் என்பதைச் சுரக்கின்றார்கள். இந்த ஓமோன் செய்வது என்னவென்றால், ஆண் பிள்ளைகளுக்கும் முலைக்காம்புகள் மலர்கின்றன. சிலவேளைகளில் வளர்ச்சி உறுவதும் அவ்விடம் சற்று வீங்கி இருப்பதும் ஆகும். சில ஆண் பிள்ளைகளுக்கு ஒன்று மட்டுமே தோற்றம் அளிக்கும்.

சில பையன்களுக்கு இந்நிலைமை ஏற்படுவதே இல்லை. ஏனெனில், அது தேவையற்றது. கூர்ப்பு முறையில்: ஆனால் கூர்ப்பு என்பது எது தேவை என்று தீர்மானிப்பதில்லை. எந்த உருவம் எளிதாக அமையக் கூடியதோ அதனைச் செய்கிறது. ஆண் பிள்ளையையும் பெண் பிள்ளையையும் ஒரே சீராக அமைத்து விட்டு அதன் பின் மாற்றி அமைப்பது சுலபமானது. கைகளையும் கால்களையும் பெருவிரல்களோடு முதலில் அமைத்துவிடுகிறது. ஆனால் அவை அடிப்படையான உருவமைப்பே.

முலைக்காம்புகள் சில மாதங்களுக்கு உறுதிக் கொண்டும் மிருதுவாகவும் இருக்கும். சட்டைகள் அழுந்தும் போது சிறிது நோகிறது. ஆனால், சில காலங்களுக்குப் பின் இல்லாது போகிறது.

இதற்குப் பிறகு

இந்தக் கட்டத்தில்தான் பூப்புமயிர் தோன்றுகிறது. இது ஆண்குறியின் அடிப்பகுதியிலும் விதைப்பையின் மீதும் பூப்பு மயிர் முளைக்கின்றது. இவை முன்பு அங்கிருந்தவை போலவே தோன்றினும் நீண்டும் கறுத்தும் இருக்கும்.

சில ஆண்பிள்ளைகளுக்கு தோற்றம் அளிப்பது பூப்புமயிர்தான். இதனைக் கண்;டதுந்தான் தாம் பருவம் அடைந்து விட்டதாக நினைக்கின்றனர். விதைகள் வளர்ச்சியடைந்த பிறகே பூப்பு மயிர் முளைக்கத் தொடங்குகிறது.

பூப்பு மயிர் முளைத்து ஓராண்டு கழிந்த பிறகே கை அக்கிள் அடி உரோமம் நீளவும் கருமையடையவும் ஆரம்பிக்கும்.

RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 100
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

உடல் மாற்றங்கள்- உடல் நலம் - பருவமானவர்கள்   Empty Re: உடல் மாற்றங்கள்- உடல் நலம் - பருவமானவர்கள்

Post by RAJABTHEEN Tue Dec 07, 2010 4:34 am

சகல புதிய அவையங்களும் எப்போது செயல்பட ஆரம்பிக்கின்றன?

இந்தக் கட்டத்தில்தான் மாற்றங்கள் துரிதகதியில் நடைபெற ஆரம்பிக்கின்றன. இதே வேளையில் முதல் வெளியேற்றம் இடம்பெறுகிறது. வெளியேற்றம் என்பது விரும்பியே நடைபெறுவது. நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல. இது நடைபெறும் ஒன்று. வெளியேற்றத்தை ‘வந்துவிட்டது’ என்பர்.

பாலியல் உறவின் உச்சக் கட்டத்தின் போது ஆண்குறியின் தசைகளின் சுருக்கம் விந்தை ஆண்குறியிலிருந்து வெளியேற்றுகிறது. ஆண்குறியிலிருந்து சிறுநீர்போக்குப் பாதைய10டாக வெளிவருகிறது. இதே வழியாக வெளிவரும் சிறுநீர் வெளிவராமல் வால்வுகள் செயல்பட விந்து வெளியேற்றம் நடைபெறுகிறது. இத்தகைய பாலியல் உறவின் உச்சக் கட்டத்தை உறவின் உச்சக் கட்டம் என்பர். இந்த உச்சக்கட்டம் மன எழுச்சி - இன்ப அதிர்ச்சி ஆகியவை ஆண்குறியில் மட்டுமின்றி உடலெங்கும் வியாபித்து விடுகிறது. விந்து வெளியேறியபின் அனைத்தும் முடிந்து விட்ட உணர்வு ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் இத்தகைய அனைத்தையும் எதிர்பார்க்க முடியாது. சிலவேளைகளில் உணர்வின் உச்சக் கட்டம் மிகவும் குறைந்ததாகவே இருக்கும்.

இயற்கை குழந்தையை உருவாக்க பெரிய உந்துசக்தியை வழங்கியுள்ளது.

விந்து என்றால் என்ன?

விந்து என்பது உங்கள் விதைகளில் தயாரிக்கப்படும் தடித்த வெள்ளை நிறப் பாய்பொருள். இந்தப் பாய்பொருள் விந்துகளை பெண்ணின் கருமுட்டைகளோடு மோதப் பாய்ந்தோடுகின்றன. புறஸ்ரேட் சுரப்பிகள் வழியாக வரும்போது கூடுதலான திரவம் ஆண்குறியை அடையுமுன் சேர்கிறது. விந்துகளுக்கு இந்தத் திரவமெல்லாம் எதற்கு? மீன் அசைந்து இடம்பெயர்ந்து திரிய நீர் தேவை. அதுபோலவே விந்துகளும் திரிய திரவம் தேவைப்படுகிறது. விந்துத் திரவம் வெறும் திரவம் மட்டுமல்ல. பல விதமான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருக்கும். விந்துகளுக்குத் தேவையான ஊட்டச் சத்தை வழங்குகின்றன. ஆண்குழந்தைக்கான விந்து ஒரு நாள் மட்டும் உயிர்வாழும். ஆனால், பெண்குழந்தைக்கான விந்து மூன்று நாட்கள் வரை உயிர் வாழும்.

ஒவ்வொரு விந்து வெளியேற்றத்தின் போதும் எத்தனை விந்துகளை வெளியேற்றுகிறது?

சராசரி 409,000,000. அதாவது நானூறு மில்லியன்; ஆகும். ஒவ்வொரு முறை விந்து வெளியேற்றத்தின் போதும் வெளியாகும் விந்தின் தொகை இந்தியாவின் சனத்தொகையின் பாதியை உருவாக்கப் போதுமானது. விதைகளில் உருவாகும் விந்துகள் முதிர்ச்சி அடைய ஆறு கிழமைக் காலம் எடுக்கும். ஆரோக்கியமான விந்துகளே விந்து வெளியேற்றத்தின் போது வெளிவருகின்றன. நன்கு பழுக்காதவை மரணிக்கின்றன. அவை விந்து வெளியேற்றத்தின் போது வெளிவருவதில்லை. பயனுள்ள விந்துகளை வீணாக்குகிறோம் என்று நாம் கவலைப்படும் போது இயற்கையானது எவ்வளவு விந்துகளை உங்களுக்குத் தந்து உதவுகிறது எனச் சிந்திக்கலாம்.


திடீரென ஏன் விந்து வெளியேற்றம் நடைபெறுகிறது?

முதல் தரம் எப்போதும் ஆச்சரியமானதே.

சில பையன்கள் தாமாகவே தமது விந்தை வெளியேற்ற முயலும் போதும் தமது ஆண்குறியைத் தட்டி எழுப்பும் போதும். அநேக ஆண்பிள்ளைகள் இளைஞராக உள்ளபோதே இவ்வாறு செய்யத் தொடங்கிவிடுகின்றனர். உணர்வின் உச்சக் கட்டத்தில் விந்து வெளிப்படுகிறது.

சில பையன்களுக்கு நித்திரை செய்து கொண்டிருக்கையில் விந்து வெளிப்படுகிறது. இதற்குக் காம வெறியோடு கூடிய கனவு தோன்றும் போது, அக் காம உணர்வில் உச்சக் கட்டம் அடைந்து விந்து வெளிவருகிறது. நித்திரை கலைந்த பின் ஆடையிலோ படுக்கை விரிப்பிலோ விந்து படிந்திருக்கும். இதனை ஈரக்கனவு என்பர்.

முதல் விந்து வெளியேற்றம் பெருமையுடன் கொண்டாடக்கூடிய சம்பவம் என்பதை அறிந்து கொள்ளாத பையன்கள் விரக்தியும் வேதனையும் அடைவார்கள். பாலியல் பற்றிய நல்ல யோசனையை அறியமாட்டார்கள்.


அடுத்த கட்டம் என்ன?

அடுத்த கட்டம் பதின்னாலரை வயதாய் உள்ள போது ஆண்குறி பெரியதாகி அகலுகிறது. அதேநேரம் விதைப்பையும் பெரிதாகிறது. ஆனால் ஆண்குறியும் விதைப் பையும் வளர்ச்சியுற்ற போது போலக் கருநிறம் அடைவதில்லை.

இதே காலக்கட்டத்தில் பூப்புமயிர் கருமையாகும் போது சுருளுகிறது.

உடல் முழுமையான வளர்ச்சி அடைந்தபின் என்ன நடைபெறுகிறது?

முக்கியதொரு திருப்புமுனை இதுதான். இந்நிலையில்தான் வேகத்தின் உச்சக் கட்டத்தை அடைகிறது. இதுவரை மிக மிக வேகமான வளர்ச்சியை அடைகிறீர்கள். இக்கட்டத்தில் திடீர் வளர்ச்சி முடிவுக்கு வருகிறது. உங்கள் சராசரி வயது பதினைந்தரையாகும் போது வளர்ச்சி முற்றுப் பெறுகிறது. அதன் பின்பும் கூட சுமார் இரண்டு அங்குலம் உயர்வீர்கள். இத்துடன் உயரவளர்வது நின்றுவிடுகிறது. ஆனாலும் இது மிகவும் மெதுவாக நடக்கிறது.

மிகுந்து இருப்பது என்ன?

விதை தொடர்ந்து வளரும். இது பதினாறு வயதை அடையும் வரை நடைபெறுகிறது. பெரிதாகிறது. விதைப்பையும் கருமைநிறமாகிறது.

பூப்புமயிர் தடிப்பாகிக்கொண்டே இருக்கும். பதினெட்டாம் பிராயம் வரும் வரை அது தடிப்படைந்து வயிற்றின் கீழப் பகுதி தொப்புள் வரை பரவும் வரை வளர்ச்சி தொடர்ந்து நடைபெறும். சில நேரங்களில் தொடைப் பகுதியிலும் நடைபெறும்.

அநேக பையன்களுக்கு அவர்களின் கால்களிலும், கை அக்கிளிலும், தோள்களிலும் முதுகுகளிலும் தடித்த கருமையான உரோம வளர்ச்சி காணப்படும். ஆசிய நாடுகளில் உள்ள சில இனங்களுக்கு எவ்வித உரோமமும் முளைப்பதிலலை.

பையன்களின் முகங்களில் எப்பொழுது உரோமம் தோன்றத் தொடங்குகிறது?

சராசரி வயது பதின்னான்கைக் கடந்த பிறகே முதலில் மேலுதட்டின் ஓரங்களிலும் பின்பு கன்னப் பகுதியிலும் மீசையின் பிறபகுதியிலும் இறுதியாக நாடிப் பகுதியிலும் வளரத் தொடங்குகிறது.

ஆசிய நாட்டுச் சில இனங்களிடையே முகத்தில் மயிர் வளருவதேயில்லை.

பதினாறு பதினேழு வயதை அடைந்த பிறகும் கூட பருவம் ஆகாவிட்டால் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு இத்தகைய திடீர் வளர்ச்சி காணப்படாவிட்டால் நீங்கள் காலம் தாழ்ந்த நேரசூசிக்கு இடப்பட்டீர்கள் என்று கருதலாம். இதனை உறுதிப்படுத்த வேண்டுமாயின் ஓ கதிர் மூலம் என்பு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராயுங்கள். எடுக்கப்பட்ட ஓ கதிர்ப் படத்தை ஒரு குழந்தை வைத்தியரிடமோ என்பு வைத்தியரிடமோ காட்டுவது நல்லது. எல்லா வைத்தியர்களாலும் என்பு வளர்ச்சியை அடையாளம் காண இயலாது.

நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை. பொறுத்திருந்தால் போதும். நீங்கள் கவலைப்படுவதாயின் ஒரு குழந்தை வைத்தியரை அணுகுங்கள். ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்று ஆலோசனை பெறுவது சிறந்தது. உங்களைப் போன்ற பல் பிணியினரைக் கண்டிருப்பார்கள். ஆதலால் ஆச்சரியம் கொள்ள மாட்டார்கள். உங்களுக்கு தேவையில்லை என்ற போதிலும் சில ஓமோன் மருந்துகளைச் சிபார்சு செய்வார்கள். ஓமோன்களின் செயல்பாடு இதுதான். துரித கதியில் செயல்படவைக்கும். இதனை காணக்கூடியதாய் இருக்கும். எவ்வளவு விரைவாகச் செயல்படத் தொடங்கியதோ அதேபோல விரைவாக நின்று விடும். ஒரு நடவடிக்கையும் எடுக்காமலிருந்தால் தாமாகவே செயல்படத் தொடங்கி செவ்வையாக முற்றுப் பெறும்.

RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 100
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

உடல் மாற்றங்கள்- உடல் நலம் - பருவமானவர்கள்   Empty Re: உடல் மாற்றங்கள்- உடல் நலம் - பருவமானவர்கள்

Post by சங்கவி Mon May 28, 2012 1:38 pm

அறியத்தந்தமைக்கு நன்றி அத்தான்
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 40
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

உடல் மாற்றங்கள்- உடல் நலம் - பருவமானவர்கள்   Empty Re: உடல் மாற்றங்கள்- உடல் நலம் - பருவமானவர்கள்

Post by jayanth Tue May 29, 2012 2:40 am

தகவலுக்கு நன்றி...
avatar
jayanth
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 61
Points : 63
Join date : 21/05/2012
Age : 60
Location : Bangalore

Back to top Go down

உடல் மாற்றங்கள்- உடல் நலம் - பருவமானவர்கள்   Empty Re: உடல் மாற்றங்கள்- உடல் நலம் - பருவமானவர்கள்

Post by RAJABTHEEN Wed May 30, 2012 12:03 am

சங்கவி wrote:அறியத்தந்தமைக்கு நன்றி அத்தான்
[You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 100
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

உடல் மாற்றங்கள்- உடல் நலம் - பருவமானவர்கள்   Empty Re: உடல் மாற்றங்கள்- உடல் நலம் - பருவமானவர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum