தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இவங்களுக்கு வேற வேலையில்ல!
4 posters
Page 1 of 1
இவங்களுக்கு வேற வேலையில்ல!
நாலு பேரு ஏதாவது சொல்லுவாங்க?
அப்படின்னு ஏதாவதொரு சூழலில் நாம் நினைத்திருப்போம், யாரிடமாவது சொல்லியிருப்போம். இல்லையென்றால் யாராவது நம்மிடம் சொல்லியிருப்பார்கள்!
யாருங்க அந்த நாலு பேரு?
எதுக்காக அவங்களுக்குப் பயப்படனும்?
○ அடுத்தவங்களைப் பற்றிப் பேசுவதையே வேலையாகவோ, பொழுதுபோக்காகவோ கொண்டிருப்பவர்களைத் தான் நாலுபேர் என்று சொல்லுகிறார்கள்.
○ அந்த நாலு பேர் இன்னொரு நாலு பேருக்கிட்ட நம்மைப் பற்றி உள்ளதையும் இல்லாததையும் பேசி நம் மதிப்பைக் குறைத்துவிடுவார்களோ என்று தான் எல்லோரும் அந்த நாலு பேருக்குப் பயப்படுகிறார்கள். அந்த நாலு பேரில் நாமும் அடக்கம் தான்..
ஆம் நாம் பிறரைப் பற்றிப் பேசாமலோ இருந்திருப்போம்?
ஏதோவொரு சூழலில் ஏதாவது பேசியே இருப்போம்..
தத்துவமேதை சாக்கரடீசிடம் ஒருவன் வந்து….
நான் தங்களிடம் ஒருவனைப் பற்றி ஒரு செய்தி சொல்ல நினைக்கிறேன் என்றானாம். அவனிடம் சாக்கரடீஸ் பின்வரும் கேள்விகளைக் கேட்டாராம்.
சாக்கரடீஸ் - நீ சொல்லும் செய்தி உண்மையானதா?
ஒருவன் - எனக்குத் தெரியாது. என்னிடம் இன்னொருவர் சொல்லியது.
சாக்கரடீஸ் - சரி, நீ சொல்லும் செய்தியால் எனக்கோ, உனக்கோ ஏதாவது பயனுண்டா?
ஒருவன் - நிச்சயமாக இருக்காது.
சாக்கரடீஸ் - உண்மையெனத் தெரியாத, உனக்கும் எனக்கும் பயன்படாதவொரு செய்தியை நாம் ஏன் பேசி நேரத்தைச் செலவழிக்கவேண்டும்?
என்று கேட்டாராம் சாக்கரடீஸ்.
அடுத்தவரைப் பற்றி நாம் ஏன் பேசவேண்டும்?
நமக்கென்ன வேறு வேலையே இல்லையா?
என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.
எங்க ஊருல நான் சிறுவனாக இருந்தபோது,
குடிநீர்க்குழாயில இருபெண்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் ஏதோ பேசியதாக சண்டை வந்து ஒருவர் காதை இன்னொருவர் கடித்துவிட்டார்…
இன்று நினைத்துப்பார்த்தாலும் சிரிப்புத்தான் வருகிறது.
இன்றைய ஊடகங்கள்,
நடிகர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டுவீரர்கள்….
இன்னும் யார்யாரைப்பற்றியோ பேசிப்பேசியே அவர்களைப் பெரிய மனிதர்களாக்கிவிடுகின்றன..
இவர்களைவிட சிறந்த நடிப்புத்திறனுடையவரோ, மக்களை ஆளும் தன்மைகொண்டவரோ,விளையாட்டுத்திறனுடையவரோ மண்ணில் இல்லையா?
சரி,
சங்க காலத்துக்குச் செல்வோம்….
நற்றிணைப் பாடலொன்று,
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகின் பெண்டிர் அம்பல் தூற்றச்
சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப
5 அலந்தனென் வாழி தோழி கானல்
புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவல்
கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ
நடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு
செலவயர்ந் திசினால் யானே
10 அலர்சுமந்து ஒழிகவிவ் அழுங்கல் ஊரே.
நற்றிணை -149. உலோச்சனார் நற்றிணை.
திணை : நெய்தல்.
துறை : (1) இது, தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது.
துறை :(2) சிறைப்புறமாகச் சொல்லியதூஉமாம்.
தலைமக்களின் காதல் வாழ்வியலைப் பற்றிப் பேசுவதற்கு அலர் என்றும் அம்பல் என்றும் பெயராகும்.
(அம்பல் - சிலரறிந்த பழிச்சொல்.
அலர் - பலரறிந்த பழிச்சொல்.)
துறைவிளக்கம்.
1.தலைமக்களின் காதலை அறிந்த ஊரார் அலர் தூற்றினர். அதனை எண்ணி வருந்திய அன்னை சினம் கொண்டாள். அதனால் இனி நீ இங்கு இருக்க வேண்டாம். தலைவனுடனேயெ செல்வாயாக என்றாள் தோழி.
அதற்கு அஞ்சிய தலைவியிடம் நீ தலைவனுடன் சென்றபிறகு இந்த ஊர் என்ன செய்துவிடும்?
மிஞ்சி மிஞ்சிப் போனால் அலர் தூற்றும அவளவுதானே!
என்கிறாள் தோழி இதனை - துறை : (1) இது, தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது என்னும் துறை விளக்குகிறது.
2.தலைவியைச் சந்திக்க வந்த தலைவன் அருகாமையில் மறைந்திருக்க, அவனை அறியாதவள் போலத் தோழி அவனுக்குச் சொல்ல நினைக்கும் கருத்தை இவ்விதம் சொல்கிறாள்.
தலைவி உங்கள் காதலை அறிந்த ஊரார் அலர் தூற்றுகின்றனர்.அதையெண்ணி அன்னையும் வருத்தம் கொண்டாள். இதற்கு ஒரே வழி தலைவனுடன் நீ சென்றுவிடுவதுதான்.
ஊரைப் பற்றிக் கவலைப்படாதே..
எப்போதும் அலர் தூற்றும் ஊர்.. அலர் தூற்றும்…. தூற்றட்டுமே அதனாலென்ன என்கிறாள் இதனையே - துறை :(2) சிறைப்புறமாகச் சொல்லியதூஉமாம். என்னும் அகத்துறை விளக்குகிறது.
◊ தோழி தலைவியிடம் என்ன பேசுகிறாள் என்று கேளுங்கள்…
தோழீ! வாழி!
நம்மூர்த் தெருவிலுள்ள பெண்களுள் ஓரிடத்தில் சிற்சிலரும் ஓரிடத்தில் பற்பலரும் இப்படியாக ஆங்காங்குத் தெருக்களிலே கூடிநின்று கடைக்கண்ணாலே சுட்டி நோக்கி,
தம்தம் மூக்கினுனியிலே சுட்டுவிரலை வைத்துப் பழிச்சொற் கூறித் தூற்றவும்,
அப் பழிமொழியை நம் அன்னை கேட்டறிந்து உண்மையென எண்ணிக் கொண்டு சிறிய கோல் ஒன்றினை ஏந்தி அது சுழலும்படி வீசி அடிப்பவும்; இதனால் நான் மிக்க துன்பமுடையவளாகிவிட்டேன்.
ஆதலின் இத் துன்ப மெல்லாம் தீரும்படி சோலையிலுள்ள புதிய மலர் தீண்டிய பூமணம் வீசுகின்ற நல்ல நிறம் பொருந்திய பிடரிமயிரையுடைய விரைந்து செல்லும் குதிரைபூண்ட நெடிய தேரைச் செலுத்தி, நள்ளிருளில் வருகின்ற தேரையுடைய தலைவனுடன் நீ செல்லவேண்டும் என நான் நினைக்கிறேன். அங்ஙனம் சென்றொழிந்தால் பேரொலியையுடைய இவ்வூர் என்ன செய்யும்? வேண்டுமானால் அலர் தூற்றிக்கொள்ளட்டும்!
( தலைவி எட்டியுஞ்சுட்டியுங் காட்டப்படுங் குலத்தினளல்லளாதலால் வாயினாற்கூறலும் ஏறிட்டுப்பார்த்தலுங் குற்றமாகுமென்றஞ்சிக் கடைக்கண்ணால் நோக்கிக் குறிப்பாகக் கூறுவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பெருங்குடியிலே பிறந்து பெருநாணமும் உடையளாயினாளொரு சிறுமி காமந் தலைக்கொண்டு உடன்போயினாளென்னையென வியப்பெய்தலின் மூக்கினுனியின்கண்ணே சுட்டுவிரல் சேர்த்தினமை கூறியதாம்; இதுவும் வாயினாலேகூற அஞ்சினமை குறிப்பித்ததாயிற்று.
மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - போக்கு உடன்படுத்தல்.
இரண்டாந் துறைக்கும் மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவு உடன்படுத்தல்.)
பாடல் வழி புலப்படும் கருத்துக்கள்.
○ தலைவியைத் தோழி உடன்போக்குக்குத் தூண்டியது, தலைவியைத் தலைவன் திருமணம் செய்துகொள்ளத் தோழி தூண்டியது என்னும் இரு அகத்துறைகள் விளக்கம் பெறுகின்றன.
○ தலைமக்களின் காதல் பற்றிப் பேசும் ஊராரின் மெய்பாடுகளை,
கடைக்கண் நோக்கல்,
தம் மூக்கின் நுனியில்விரல் வைத்து வியப்புடன் பேசுதல்.
என நுட்பமாகக் கூறிய பாங்கு இப்போது நினைத்தாலும் சங்ககாலக் காட்சியைக் கண்ணில் விரியச் செய்வதாகவுள்ளது.
○ வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் பேசிக்கொண்டே இருக்கும் இவ்வுலம். அதனால் ஊரைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் கவலைப்படாதே உன் வாழ்க்கைதான் இப்போது சிந்திக்க வேண்டியது. உன்மகிழ்வு தலைவனுடன் சேர்ந்திருப்பதிலே தான் இருக்கிறது. அதனால் உடன்போக்கில் தலைவனுடன் சென்றுவிடு என்று சொல்லும் தோழியின் கூற்று ஆழ்ந்து நோக்கத்தக்கதாகவுள்ளது.
○ பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொள்வது சரியா? தவறா? என்ற விவாதம் ஒருபுறம் இருக்க..
அன்று முதல் இன்று வரை இவ்வாறு திருமணம் நடந்துவருகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.
இவ்வேளையில் நாலுபேருக்குப் பயப்படாமல் முடிவெடுக்கும் தோழியின் திறன் நம் வாழ்வில் நாம் எடுக்கும் முடிவுகளுக்கு எடுத்துக்காட்டாக அமைவதாவே நான் கருதுகிறேன்.

gunathamizh- ரோஜா
- Posts : 251
Points : 374
Join date : 08/12/2009
Re: இவங்களுக்கு வேற வேலையில்ல!
" longdesc="90" /> http://usetamil.forumotion.com
மனிதன்- புதிய மொட்டு
- Posts : 3
Points : 3
Join date : 03/04/2010
Re: இவங்களுக்கு வேற வேலையில்ல!
வருகைக்கு நன்றி அன்பரே.
gunathamizh- ரோஜா
- Posts : 251
Points : 374
Join date : 08/12/2009
Re: இவங்களுக்கு வேற வேலையில்ல!
காமம் கலந்தது தானே காதல்! ஒருவர் காதல் வயப்பட்டார் என்றால் காமவயப்பட்டார் என்றுதானே பொருள், அத்தகைய காமம் கலந்த காதல் திருமணத்திற்க்கு முன் தேவையா? அப்படி தேவைதான் எனில் அது தவனை முறையில் காமத்தை பெருவது என்றுதானே பொருள்.
அவ்வாறு இருப்பின், காதல் சம்மந்தப்பட்டவரின் கற்பு எப்படி கலங்கப்ப்டாமல் இருக்கும், மேலும் அந்த காதல் திருமணமாக கைக்கூடாமல் போனால் அந்த காதலின் சுவடுகள் மனதில் இல்லாமல் இருக்குமா?
திருமணத்திற்க்கு முன் காதல் என்ற பெயரில் அடுத்தவரை நினைத்து லயித்து இருப்பது ஒழுங்கா?
உடலளவில் கெட்டால் தான் கற்பு பாதிக்குமா? மனதளவில் கெட்டால் கற்பு பாதிக்காதா?
தான் நல்லவன், உடலளவிலோ, மனதளவிலோ எந்த வித ஒழுக்ககேடும் இல்லை என்பவருக்கு, காதலை தன் வாழ்வில் சந்தித்த ஒருவர் வாழ்க்கை துணையாக வருவாரெனில் அந்த வாழ்க்கை முழுமைப்படுமா?
திருமணத்திற்க்கு பின்பு, தன் துணை தன்னை மட்டும்தான் நேசிக்கவேண்டும் என நினைக்கும் ஆணோ, பெண்ணோ , திருமணத்திற்க்கு முன்பு காதல் போன்றவற்றை சிந்திக்காமல் அதனோடு உடன்படாமல் திருமணத்திற்க்கு பின்பே என் காதல் என் அங்கிகரிக்கப்பட்ட துணையோடு மட்டும் தான் துவங்கும் என ஏன் உறுதி கொள்வதில்லை.
திருமணத்திற்க்கு பின்பு தன் துணையோடு துவங்கும் காதலே சிறந்தது அதுவே வாழ்க்கை முழுமையடைய வழிவகுக்கிறது. இத்தகைய காதலை பற்றி இலக்கியங்கள் என்ன சொல்கிறது அன்பரே!

eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: இவங்களுக்கு வேற வேலையில்ல!
நண்பரே தங்களின் ஆழ்ந்த வினாவை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்..
காமம் என்ற சொல்லுக்கு அன்பு என்பது தான் சங்ககாலத்தில் பொருள்...
அன்பின் முதிர்ச்சி தான் காமமம்.
இன்றைய வழக்கில் உள்ள காமத்தையும் சங்ககாலத்தில் சுட்டப்பட்ட காமத்தையும் ஒப்புநோக்கினால் பல உண்மைகள் புலப்படும்..
சான்றாக
காமம்மிக்க கழிபடர்கிளவி ..
என்னும் இலக்கியக்கட்டுரையைப் பாருங்கள் நண்பரே..
http://gunathamizh.blogspot.com/2009/07/blog-post_21.html
காமம் என்ற சொல்லுக்கு அன்பு என்பது தான் சங்ககாலத்தில் பொருள்...
அன்பின் முதிர்ச்சி தான் காமமம்.
இன்றைய வழக்கில் உள்ள காமத்தையும் சங்ககாலத்தில் சுட்டப்பட்ட காமத்தையும் ஒப்புநோக்கினால் பல உண்மைகள் புலப்படும்..
சான்றாக
காமம்மிக்க கழிபடர்கிளவி ..
என்னும் இலக்கியக்கட்டுரையைப் பாருங்கள் நண்பரே..
http://gunathamizh.blogspot.com/2009/07/blog-post_21.html
gunathamizh- ரோஜா
- Posts : 251
Points : 374
Join date : 08/12/2009
Re: இவங்களுக்கு வேற வேலையில்ல!
நாலு பேருக்கு நன்றி சொல்லும் களவுக் காதலர் உள்ளம்.. அழகுத்தமிழில் கட்டுரை வங்கிய குணாவுக்கு நன்றி சொல்லும் தமிழ்க் காதலர் உள்ளம்.. அருமையான படைப்புக்கு மிக்க நன்றி சொல்கிறது ஆதிராவின் உள்ளமும்..
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: இவங்களுக்கு வேற வேலையில்ல!
நன்றி ஆதிரா.
gunathamizh- ரோஜா
- Posts : 251
Points : 374
Join date : 08/12/2009
Re: இவங்களுக்கு வேற வேலையில்ல!
gunathamizh wrote:நண்பரே தங்களின் ஆழ்ந்த வினாவை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்..
காமம் என்ற சொல்லுக்கு அன்பு என்பது தான் சங்ககாலத்தில் பொருள்...
அன்பின் முதிர்ச்சி தான் காமமம்.
இன்றைய வழக்கில் உள்ள காமத்தையும் சங்ககாலத்தில் சுட்டப்பட்ட காமத்தையும் ஒப்புநோக்கினால் பல உண்மைகள் புலப்படும்..
சான்றாக
காமம்மிக்க கழிபடர்கிளவி ..
என்னும் இலக்கியக்கட்டுரையைப் பாருங்கள் நண்பரே..
http://gunathamizh.blogspot.com/2009/07/blog-post_21.html
தங்கள் விளக்கத்துக்கு நன்றி!
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Similar topics
» ரிஸ்க் இவங்களுக்கு ரெஸ்க்
» இவங்களுக்கு பயமே இல்லையா?
» கண்ணடிச்சால் காதல் வரும் இவங்களுக்கு என்ன வரும்
» இவங்களுக்கு பயமே இல்லையா?
» கண்ணடிச்சால் காதல் வரும் இவங்களுக்கு என்ன வரும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum