தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒன்றும் அறியாத பெண்ணோ

Go down

ஒன்றும் அறியாத பெண்ணோ  Empty ஒன்றும் அறியாத பெண்ணோ

Post by udhayam72 Mon Jun 10, 2013 7:26 pm

ஒன்றும் அறியாத பெண்ணோ
- கீதா மதிவாணன்

என்னைக் கொண்டுபோய் எங்கப்பா வீட்டில விட்டுடுங்க..."

அழுது வீங்கிய முகத்தோடு அவனிடம் விண்ணப்பித்தாள் ரம்யா.

"என்னால் முடியாது...... நீயே போ... “

ரம்யாவை ஏறெடுத்தும் பார்க்காமல் கணினியை முறைத்தபடியே பதில் சொன்னான்.

"குழந்தையை வச்சிகிட்டு என்னால எப்படி தனியாப் போக முடியும்?"

"மனு ஒண்ணும் குழந்தையில்ல, மூணு வயசு ஆவுது. இஷ்டம்னா அழைச்சிட்டுப் போ...இல்லைனா...இங்கயே இருக்கட்டும், நான் பாத்துக்கறேன்..."

"நான் போகமாட்டேன்னு நினைச்சிங்களா...? போய்க் காட்டுறேன் பாருங்க.... ஆனா... ஒண்ணு... போனா திரும்பி வரவே மாட்டேன்."

அடக்கி வைத்திருந்த அழுகை மறுபடியும் அணையுடைத்தது. சுந்தர் சிரித்தான்.

"முதல்லே நீ போ... அப்புறமா திரும்பி வரதைப் பத்திப் பேசலாம்"

"என்னை ஒண்ணுந்தெரியாதவள்னு நினைச்சிதானே இப்படி கேவலமா நடத்துறீங்க...? என் அருமை உங்களுக்கு இப்ப தெரியாது... நான் போனதுக்கப்புறம்தான் தெரியும்"

"சும்மா வாய்சவடால் விட்டுகிட்டு இருக்காத... ஒழுங்கா... வீடடங்கி இரு"

"முடியாது... எனக்கு இப்பவே எங்க வீட்டுக்குப் போவணும், டிக்கெட் புக் பண்ணுங்க..."

"உனக்கு வேணும்னா நீயே புக் பண்ணிக்கோ... இது நல்லா இருக்கே... நான் புக் பண்ணித் தருவேனாம்... இந்தம்மா சொகுசா ஊருக்குப்போய் எறங்கிட்டு என்னைப் பத்தி அப்பாருகிட்ட இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுவாங்களாம்.... அவரு உடனே நியாயம் கேக்க கெளம்பி வருவாரு... எம்பொண்ணை அப்படி வளத்தேன், இப்படி வளத்தேன், தங்கத் தாம்பாளத்தில ஏந்தி வளர்த்தேன்னு புராணம் பாடிட்டு புத்திமதி சொல்லி விட்டுட்டுப் போவாரு... அதானே நடக்கும்....அதுக்கு வேற ஆளைப் பாரு..."

கொஞ்சமும் தாட்சண்யமில்லாமல் வெளிப்பட்டன வார்த்தைகள். ரம்யா அதிர்ந்துபோனாள். இவனுடைய சுயரூபத்தை இத்தனைநாள் மறைத்து எப்படியெல்லாம் நாடகமாடியிருக்கிறான். நான் கசந்துவிட்டேனா? இல்லையென்றால் இத்தனை நாள் இல்லாத அலட்சியமும், உதாசீனமும் திடீரென்று எப்படி வரும்?

போனவாரத்தில் ஒருநாள்....

"ஏங்க, நம்ம மனோஜுக்கு ஸ்கூலில் அப்ளிகேஷன் வாங்கிட்டுவரச் சொன்னேனே... என்னாச்சு?"

"மறந்திட்டேன்மா..."

"எவ்வளவு முக்கியமான விஷயம், எப்படி மறக்கும்? ஒரு நாளா, ரெண்டுநாளா? ரெண்டுமாசமா சொல்லிட்டிருக்கேன், நாளைக்குதான் கடசிநாள். நாளைக்காவது மறக்காம வாங்கிட்டுவாங்க.."

"முடியாது, ரம்யா.... எனக்கு நாளைக்கு ஆபிஸ்ல மீட்டிங் இருக்கு... நீ போய் வாங்கிட்டு வந்திடு"

"என்ன, விளையாடறீங்களா? எனக்கு அங்கெல்லாம் போய் பழக்கமில்ல, நாலுபேரை சேந்தாப்போல பாத்தாலே வெடவெடங்குது... அதுவுமில்லாம எல்லாரும் இங்கிலிஷ்ல பேசுவாங்க."

"ரம்யா... ஓவரா அழிச்சாட்டியம் பண்ணாத.... நீயும் படிச்சவதானே... அப்புறம் எதுக்கு பயப்படுறே? போ... போய் வாங்கிட்டு வா..."

"என்னால் முடியாது... இங்கயிருந்து எந்த பஸ்ல போகணும்னு கூட தெரியாது..."

"பழகிக்கோ.... நான் சொல்றேன்"

"உஹும், அதெல்லாம் சரியா வராது, நீங்க ஒரு பத்துப்பதினஞ்சு நிமிஷம் பர்மிஷன் போட்டுப் போகக்கூடாதா?"

"ச்சே! உன்னோட பெரிய போராட்டமா போச்சு, நீதான் அந்த ஸ்கூலப் பத்தி ஆகா ஓகோன்னு புகழ்ந்து குழந்தையைச் சேக்கணும்னு பிடிவாதம் பிடிச்சே... இஷ்டம்னா போய் அப்ளிகேஷன் வாங்கிட்டு வா... இல்லைனா... பக்கத்தில் இருக்கிற ஸ்கூல சேத்துக்கலாம். சின்ன கிளாஸ் தானே? எங்க படிச்சா என்ன?"

கண்கள் கலங்க வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு அடுக்களை புகுந்துவிட்டாள். மெளனயுத்தம் அடுத்தநாள் காலையும் தொடர்ந்தது. சுந்தர் மசிவதாய் தெரியவில்லை. ஒரு பேப்பரில் பேருந்து எண், வழித்தடம், மற்ற விவரங்கள் எல்லாவற்றையும் எழுதி, பணத்தையும் வைத்துவிட்டு அலுவலகம் கிளம்பிச்சென்றுவிட்டான்.

எல்லாவற்றுக்கும் இவனைக் கெஞ்சிக்கொண்டிருப்பதால்தானே இத்தனை பிகு செய்துகொண்டிருக்கிறான்? துணிவை வரவழைத்தவளாக, அடுத்தவீட்டு ரஞ்சிதம் மாமியை அழைத்துக்கொண்டு பஸ் ஏறிவிட்டாள்.

எப்படியோ விண்ணப்பப் படிவம் வாங்கி வீடு வந்து சேருவதற்குள் ஒரு மலையைப் பெயர்த்தமாதிரி இருந்தது. பெருமூச்சு வாங்க ஓய்ந்துபோனாள். பெரிய சாதனையை நிகழ்த்திவிட்டதுபோலவும் பூரிப்பில் மிதந்தாள்.

மாமி இவளைப் பார்த்துச் சிரித்தாள். மாமிக்கு தினமும் வெளியில் சுற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். மாமா அலுவலகம் போனதும் வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பிவிடுவாள். நாலு சுவருக்குள்ளே இருந்தா மூச்சு முட்டுதுடி என்பாள். இவளோ நேர் எதிர். எவருடனும் சகஜமாய்ப் பழகியதும் கிடையாது. கேள்வி கேட்டால் பதில் சொல்லுவாள். அதுவும் பெரும்பாலும் ஆமாம், இல்லை வகையறாதான். இவள் கஷ்டத்தை அவன் கண்டுகொள்ளவே இல்லை.

என்ன, அப்ளிகேஷன் வாங்கியாச்சா?"

"ம்"

"அதையேன் உம்முனு சொல்றே? சந்தோஷமாதான் சொல்லேன்"

"எத்தனைக் கஷ்டப்பட்டு போனோம் தெரியுமா?"

"யார்கூட போனே..?"

"ரஞ்சிதம் மாமியோடதான்"

"அதானே பார்த்தேன், என்னடா இது சரியான பயந்தாங்கொள்ளியாச்சே... எப்படிப் போனதுன்னு?"

கிண்டலடித்தான். இவள் விசும்பத்தொடங்கினாள்.

"ரம்யா... என்ன இது? சின்ன விஷயத்துக்கெல்லாம் அழுதுகிட்டு? சரி, நீ பயந்தாங்கொள்ளி இல்ல, தைரியசாலிதான், உனக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கித்தரேன், கத்துக்கறியா? பஸ்ல இடிபடாம போய்வரலாம்."

"ஐயையோ... என்னால முடியாதுப்பா..."

"எதுதான் முடியும் உன்னால, என்கிட்ட நல்லா வாயாடு... ஏதாவது சொன்னா அழு... ரெண்டையும் விட்டா வேற எதுவும் தெரியாது"

சிடுசிடுத்தான். ரம்யாவுக்கு பிறந்தவீட்டு நினைவு வந்தது.

எல்லோரும் இவளை என்னமாய்த் தாங்கினார்கள். ஒரு சுடுசொல் கேட்டதில்லை. இளவரசியைப் போன்ற வாழ்க்கை அது. இன்னது வேண்டும் என்று சொல்லிவிட்டால் போதும், அடுத்த நிமிடமே அது அவள் காலடியில் கிடக்கும்.

எங்கு வெளியில் செல்வதானாலும் காரில்தான் பயணம். அப்பா, சித்தப்பா, மாமா என்று எப்போதும் இவளைச்சுற்றி ஒரு பெரும்படையே இருக்கும். எவரும் அவளைக் கண்ணோட்டமிட முடியாது. நடு சித்தப்பா பாய்ந்து சட்டையைப் பற்றிவிடுவார்.

கல்லூரியோ பெண்கள் கல்லூரி. காலையிலும் மாலையிலும் அவளைக் கொண்டுவந்து விடுவதும் அழைப்பதும் குட்டிமாமாவின் வேலை. தரையில் இறங்கி நடக்கவிடாமல் உள்ளங்கையில் வைத்துத் தாங்கிய குடும்பத்தைப் பிரிந்து இப்படி பஸ்ஸில் நெறிபட்டும், இடிபட்டும் தான் செல்ல நேரிட்டதை எண்ணி மனம் புழுங்கியது.

திருமணத்தின்போது ரம்யாவின் அப்பா கார் வாங்கித்தர முன்வந்தபோது சுந்தர் தீவிரமாய் மறுத்துவிட்டான். மாமனார் காசில் வாங்கினால் கெளரவம் கெட்டுவிடுமாம். என்ன பெரிய கெளரவம், இப்படி பதுமை போல் வளர்ந்த பெண்டாட்டியை தனியாக பஸ்ஸில் அனுப்புவது மட்டும் கெளரவமான செயலா?

ஆற்றாமையால் மனம் புழுங்கியது. ஆரம்பத்தில் இவனும் அத்தனை இதமாகத்தான் நடந்துகொண்டான். எதைக் கேட்டாலும் வாங்கித்தந்தான். என்ன சொன்னாலும் செய்தான். கொஞ்சநாளாக ஏதோ கிறுக்குப் பிடித்தவன்போல் நடந்துகொண்டு இவளைக் காயப்படுத்திக்கொண்டே இருக்கிறான். கேட்டால்... நான் இல்லையானால் என்ன பண்ணுவ? என்றொரு கேள்வி. அப்படியென்ன வந்துவிடும்? நோய்நொடி எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை.

குழம்பியிருந்தவளைக் குமுறவைத்தது நேற்றைய நிகழ்வு.
காலைவேலைகளை முடித்து வேலைக்காரியை அனுப்பிவிட்டு மனோஜைக் குளிக்கவைத்துக்கொண்டிருக்கும்போது சுந்தர் தொலைபேசியில் அழைத்தான்.

"ரம்யா... வீட்டை மராமத்து பண்ணனும்னு அப்பா பணம் கேட்டிருந்தாரே.... இன்னைக்கு அனுப்பறேன்னு சொல்லியிருந்தேன், மறந்திட்டேன், கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்."

"என்ன பண்ணனும்?"

"நேரா பேங்குக்கு போய் இருபதாயிரத்துக்கு ஒரு டிடி எடுத்து அப்பாவுக்கு கொரியர் பண்ணிடேன்."

"என்னது, பேங்குக்கா? அங்கெல்லாம் என்னால முடியாது. நீங்க வந்து அனுப்புங்க, இல்லைனா நாளைக்கு அனுப்புங்க..."

"விளையாடாத ரம்யா... நான் பயங்கர பிஸி. இன்னும் ஒரு வாரத்துக்கு இப்படிதான் இருக்கும். பர்மிஷனும் போடமுடியாது. கொஞ்சம் புரிஞ்சுக்கோ..."

என்ன இவன்? தன்னை என்ன வேலைக்காரி என்று நினைத்துக்கொண்டானா? ஊருக்குப் பணம் அனுப்பவேண்டும் என்ற அக்கறையிருந்தால் இவனே செய்யவேண்டும். அதைவிட்டு என்னை வேலை வாங்குவானேன்?

"இங்க பாருங்க, எனக்கு அதெல்லாம் பழக்கமில்ல, உங்களுக்கு சேவை செய்யறதுக்காக எங்கவீட்டுல கல்யாணம் பண்ணிக்குடுக்கல..."

போனை வைத்துவிட்டாளே தவிர, மனம் என்னவோ தப்பு செய்ததுபோல் துடித்தது. அப்படி என்ன தப்பு செய்துவிட்டேன்? இவர் செய்யவேண்டிய வேலையை எல்லாம் என் தலையில் சுமத்திவிட்டு இவர் சொகுசாக இருப்பாராம். நான் கிடந்து அல்லல்படணுமாம்.

வந்ததும் வராததுமாய் எகிறினான்.
ஏய், உனக்கென்ன மனசுக்குள்ள மகாராணின்னு நினைப்பா? ஒரு வேலையும் செய்யமாட்டேங்கிற? தின்னுறதும், தூங்குறதும்தான் வாழ்க்கையா?"

வீசிய வார்த்தைகள் சுருக்கென்று தைத்தன.

"வர வர என்னைக் கண்டாலே உங்களுக்கு ஆகலை. சட்டாம்பிள்ளையாட்டம் அதிகாரம் பண்றீங்க, கேக்கலைன்னா காட்டுக்கத்தல் கத்தறீங்க... பிடிக்கலைன்னா சொல்லிடுங்க... நானும் குழந்தையும் எங்கயாச்சும் தொலைஞ்சுபோயிடறோம்..."

"ஆமா.... வீட்டு வேலையைக் கொஞ்சம் ஷேர் பண்ணிக்கோன்னு சொன்னா நான் கெட்டவனாயிடறேனா?"

"எனக்கு இஷ்டமில்லாததையும் பழக்கமில்லாததையும் செய் செய்னு வற்புறுத்துறது எனக்குப் பிடிக்கல."

"இங்க பார், நீ செஞ்சுதான் ஆகணும்.. எத்தன நாளைக்கு பச்சப்புள்ள மாதிரி எனக்கு ஒண்ணும் தெரியாது எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லி என்னை ஏமாத்திகிட்டே இருக்கப்போறே...?"

"ஓ! கட்டாயப்படுத்துறீங்களா? ஒரு கடைக்குக் கூட நான் போனதில்ல தெரியுமா? என்னை அங்க போ.. இங்க போ.. அந்த வேல செய்... இந்த வேல செய்யின்னு அதிகாரம் பண்ணுறீங்களா? புரிஞ்சுபோச்சு, உங்களுக்கு நான் அலுத்துப்போயிட்டேன், அதான்.... எதையாவது சொல்லி என்னை வீட்டை விட்டுத் தொரத்தப்பாக்கிறீங்க... நான் போறேன்... நான் ஒண்ணும் அநாதையில்ல, தெருவில நிக்க..."

"சரி, போ.."

சொல்லிவிட்டு மனோஜைத் தூக்கிக்கொண்டு படுக்கையறை நுழைந்துவிட...அவமானப்பட்டவளாய் ஹாலிலேயே படுத்துறங்கினாள்.

காலையில் எழுந்ததும் முதல்வேலையாக அவனிடம் ஊருக்குச் செல்ல டிக்கட் முன்பதிவு செய்யச் சொல்ல... மீண்டும் அவளை அழவைத்து அலுவலகம் கிளம்பிச்சென்றான்.

அவன் போனதும் ஊருக்குப் பேசினாள்.

"அப்பா வெளியில போயிருக்காரு... என்னம்மா... ஏன் அழுவுற? என்ன ரம்யா... சொல்லும்மா..."

அம்மா பதறினாள். இவள் அழுகையினூடே விவரம் சொன்னாள். எல்லாவற்றையும் அமைதியாய்க் கேட்டுமுடித்த அம்மா கலகலவென்று சிரித்தாள்.

"பைத்தியம்... இப்படி ஒரு புருஷன் கிடைச்சதுக்கு நீ கோயில் கட்டிக் கும்புடணும்டி... உங்களுக்கு ஒண்ணும் தெரியாது... உங்களுக்கு ஒண்ணும் தெரியாதுன்னு வீட்டுப் பொம்பளைங்களை அடக்கிவைக்கிற உங்க அப்பா, சித்தப்பா மாதிரி ஆம்பளைகளுக்கு மத்தியில் உன்னையும் தன்னிச்சையா செயல்படத் தூண்டுற உன் புருஷனோட பெரிய மனசைப் பாராட்டணும்... நாங்க வாழுறது கிராமம். அதுவுமில்லாமல் கூட்டுக்குடும்பம். ஒருத்தரால் முடியலைன்னா... இன்னொருத்தர் உதவுவாங்க... உங்க நிலைமை அப்படி இல்ல... நீங்க ரெண்டுபேரும்தான் ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையா இருக்கணும்... அதைப் புரிஞ்சு அனுசரிச்சு நடந்துக்கோ... காலத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏத்த மாதிரி உன்னை மாத்திக்கோ... எங்களை மாதிரி நீயும் உலகமே தெரியாம வாழ்ந்து நாலு சுவத்துக்குள்ளயே உன் வாழ்க்கையை முடிச்சுக்காதே.... என்ன ரம்யா... நான் சொல்றது புரியுதா...?"
அம்மாவின் வார்த்தைகளில் மறைந்திருந்த ஏக்கத்தை அவளால் கண்டுணர முடிந்தது. அம்மா இன்னும் என்னென்னவோ பேசினாள். அம்மாவா இப்படிப் பேசுகிறாள் என்று வியப்பாக இருந்தது. இதுவரை அம்மா இப்படிக் கோர்வையாகப் பேசிக் கேட்டதேயில்லை... அம்மாவிடமிருந்து ஆலோசனையோ.. அறிவுரையோ... ஏன் சேர்ந்தாற்போல் நாலு வார்த்தையோ இதுவரை வெளிப்பட்டதேயில்லை என்பதை நினைக்கையில்தான் அதற்கான சந்தர்ப்பங்களே அவளுக்குத் தரப்படவில்லையென்னும் உண்மை உறைத்தது...

அணை கடந்த வெள்ளமென அம்மா பேசினாள்... பேசினாள்.... பேசிக்கொண்டேயிருந்தாள்.... அதில் தாய்மையை மீறிய பெண்மை பிரதிபலித்தது. அடக்கப்பட்ட பெண்ணினத்துக்கு ஆதரவாக அம்மா வாதாடுவதுபோல் தோன்றியது. ஒரு வழக்கறிஞருக்கு இணையாக அம்மா இவளின் மறுப்புகளுக்கும் புலம்பல்களுக்கும் எதிராய் வாதங்களை முன்வைத்தாள். இறுதியில் இவளது பலவீனத்தை வெற்றி கண்டாள்.

ரம்யா யோசிக்கத் தொடங்கியபோது தொலைபேசியில் சுந்தர் அழைத்துக் கேட்டான்..

"ரம்யா... ஊருக்குப் போகணும்னு சொன்னியே... பஸ்ஸா, ட்ரெயினா...."

"என்னை ஊருக்கு அனுப்பிட்டு ஐயா இங்க ஜாலியா இருக்கலாம்னு நினைச்சீங்களா... அதான் முடியாது.. நான் போறதா இல்ல...."

"ஏய்... என்னாச்சு.... ரம்யா... உடம்பு முடியலையா?"

"கிண்டல்தானே வேண்டாங்கிறது... சரி, இன்னைக்கு பேங்க் போய் டிடி எடுத்து மாமாவுக்கு அனுப்பிடறேன். அப்புறம்... அப்படியே மனோஜோட ஸ்கூலுக்குப் போய் அப்ளிகேஷனைக் குடுத்திட்டு வரேன்... வேற ஏதாவது வேல இருக்கா?"

"ரம்யா... ஏய்.. என்ன திடீர்னு? என் பயந்தாங்கொள்ளி ரம்யாவா இது? எனக்கு மயக்கமே வரும்போல இருக்கே..."

"இதுக்கே மயக்கம் வந்தா எப்படி? இன்னும் ஒரு விஷயம் இருக்கு.... எனக்கு ஸ்கூட்டி வாங்கித் தரேன்னு சொன்னீங்கல்ல... அதுக்கும் ஏற்பாடு பண்ணிடுங்க...."

சுந்தர் அந்தப்பக்கம் மயங்கியே விழுந்திருந்தான்.
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum