தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

ஒரு சின்ன சிரிப்பு கதை

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒரு சின்ன சிரிப்பு கதை  - Page 2 Empty ஒரு சின்ன சிரிப்பு கதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 03, 2013 1:07 pm

First topic message reminder :

ஒரு ஊரில் ஒரு முட்டாள் பணக்காரர் இருந்தார். அவர் பெரிய பங்களா ஒன்று கட்டினார். அவை பார்வையிட தன் நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். 

வந்திருந்தவர்கள் அனைவரும் பங்களாவின் அழகை வெகுவாக பாராட்டினர். பின்பு பங்களாவின் பின்புறம் சென்று பார்த்தனர். 

அங்கு மூன்று நீச்சல் குளங்கள் இருந்தது. அனைவரும் ஆச்சர்யத்துடன் எதற்காக 3 நீச்சல் குளங்கள் என்று கேட்டனர். அதற்கு அந்த பணக்காரர் ஒன்று வெந்நீர் குளியல் வேண்டும் என்பவர்களுக்காக, மற்றொன்று குளிர்ந்த நீர் வேண்டும் என்பவர்களுக்காக என்றார். 

அனைவரும் வெந்நீர் சரி, தண்ணீர் சரி. காலியாக இருக்கின்றதே அது எதற்கு என்று கேட்டனர். அது நீச்சல் தெரியாதவர்களுக்காக என்றார் 

நன்றி ;தமிழ் களஞ்சியம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு சின்ன சிரிப்பு கதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன சிரிப்பு கதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 2:05 pm

[You must be registered and logged in to see this image.]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு சின்ன சிரிப்பு கதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன சிரிப்பு கதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 23, 2013 1:45 pm

ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர்.ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில்விசாரிப்பார்கள்

பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை.ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர். 

அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார். ஒரு பையன் அனுப்பப்பட்டான். துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார் .பின்னர் கேட்டார், தம்பி உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும்.

 கடவுள் எங்கே? சொல் கடவுள் எங்கே இருக்கிறார் ? அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான். அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான். 

அவன் சொன்னான் நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம். இப்ப கடவுளைக் காணோமாம். அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே எங்கே என்று கேட்கிறான். ஏற்கனவே ஏதாவது காணோம் என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள் இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது. - 

நன்றி ;பாபு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு சின்ன சிரிப்பு கதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன சிரிப்பு கதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 23, 2013 1:47 pm

ஒரு சிறுமி மாம்பழம் வாங்கி வந்தாள். அதை தன அம்மாவுக்கும் கொஞ்சம் கொடுத்து சாப்பிட ஆசைப் பட்டாள். எப்படிப் பகிர்வது என்று தெரியவில்லை. அம்மா சொன்னார், எனக்குப் பாதி கொடுத்தால் அது உன் அன்பைக் காட்டும். 

பாதிக்கு மேல் கொடுத்தால் அது உன் தியாகத்தைக் காட்டும். சிறுமி சிறிது நேரம் யோசித்து விட்டு,பழத்தை அம்மாவிடம் கொடுத்துவிட்டுச் சொன்னாள், அம்மா நீங்களே பகிர்ந்து கொடுங்கள். உங்கள் தியாக குணம் எனக்குத் தெரியும். -

நன்றி பாபு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு சின்ன சிரிப்பு கதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன சிரிப்பு கதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 23, 2013 1:51 pm

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஃபேஸ்புக்கே குடியேன் வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

#ஆத்தீ , கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே!!! - 

நன்றி ;பாபு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு சின்ன சிரிப்பு கதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன சிரிப்பு கதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 25, 2013 2:27 pm

ஹ ஹ ஹ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு சின்ன சிரிப்பு கதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன சிரிப்பு கதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 4:29 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு சின்ன சிரிப்பு கதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன சிரிப்பு கதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 5:45 pm

நன்றி ;மயூரேசன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு சின்ன சிரிப்பு கதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன சிரிப்பு கதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 27, 2013 3:26 pm

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு சின்ன சிரிப்பு கதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன சிரிப்பு கதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 28, 2013 4:28 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு சின்ன சிரிப்பு கதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன சிரிப்பு கதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 17, 2013 8:23 pm

ஒரு வீட்ல அம்மா அப்பா மகள் மூன்று பேரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்.. அப்போது பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து முடிந்திருந்தது.. ஒரு நாள் அம்மா மகளின் படுக்கை அறை சுத்தம் பண்ணப்போறப்போ அங்கே எல்லாமே நீட்டா இருக்கு, கட்டில் நடுவில ஒரு கடிதம், அதில "அம்மாவுக்கு"னு இருக்கு.பயத்தோட பிரிச்சு படிக்கிறா,"
அன்புள்ள அம்மாவுக்கு,
இத எழுத மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் ஒரு பையனை லவ் பண்றேன்! அப்பாவும் நீயும் கண்டிப்பா எதிர்ப்பீங்கன்னு தெரியும் அதனால வேற வழியில்ல நானும் என் லவ்வரும் ஓடிப்போலாம்னு முடிவு எடுத்துட்டோம்.
கோவி கண்ணன் ரொம்ப ஸ்மார்ட்டான பையன் அழகா பச்சை குத்திக்குவான், சேறடிச்ச கலர் பேண்ட், ஃப்ரென்ச் தாடி இப்டி அவன் டேஸ்ட் வித்யாசமானது. அதில்லாம நான் இப்போ கர்ப்பமாயிருக்கேன்!.
அவனுக்கு முதுமலை பக்கத்துல ஒரு கிரவுண்ட் நிலம் இருக்கு அதில என்ன நல்லா பாத்துப்பேன்னு சொல்லியிருக்கான்.அவனுக்கு நிறைய குழந்தை பெத்துக்க ஆசையாம்! எனக்கும் அதான் ஆசை!!.அவன் லாரி நல்லா ஓட்டுவானாம்,
அதனால ஒரு க்ளீனராவாச்சும் சேருவேன்னு இருக்கான்.இப்போதைக்கு எங்கள காப்பாத்திக்க அது போதும், அதே நேரத்தில எயிட்சுக்கு சீக்கிரமாவே மருந்து கண்டு பிடிக்கணும்னு கடவுள வேண்டிக்கிங்க கோவி கண்ணனுக்கு எயிட்சுன்னு அவன் சந்தேகப்படுறான்.
கவலைப் படாதீங்கம்மா எனக்கு 15 வயசாகுது வாழ்க்கையை பத்தி எனக்கு இப்ப நல்லாவே தெரியும் ஒரு நாள் உங்க பேரக் குழந்தைங்களோட கண்டிப்பா வர்றேன்.
உங்கள் மகள்,
பிரியா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு சின்ன சிரிப்பு கதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன சிரிப்பு கதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 17, 2013 8:32 pm

காதலிக்கு ஓர் கடிதம்!

அன்பே!

நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற
முடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன் , நீல்கிரிஸில்
சாயங்கலாம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை
தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.

சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது
‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!’ என்ற பழைய கவிதைதான்
நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான்
என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான்.

அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம்
இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை
நான் கவனிக்கத் தவறிவிட்டேன். சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத்
துவங்கலாம் என சர்வரை அழைத்தேன்.

 அதற்குப் பின் உனது அப்பனின்
கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது
ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல்
கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன். வேழ
முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே…

அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில்
இருந்தபோது ‘ தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா…
வயசாச்சில்ல…’ என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து

ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து
விட்டார் என்ற ஆசுவாசத்தை ‘ ஒரு கஸாடா’ என்ற வார்த்தையில் உடைத்தார்.
கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர
திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில்
யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. 

‘தம்பி எப்ப
சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா’ என்ற
அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது
நம்பிக்கையை ஏற்படுத்தியது.

‘சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க
ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்’ என்று
மெல்ல பேச்சைத் துவங்கினேன். ‘ அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச ‘ஆனந்த
பவனுக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி?!’ என ஆச்சர்யமாக அவர்

கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது
இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ”

“தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க
ஒன்னு பண்ணுங்க… நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க… அப்ப
பேசிக்கலாம்” என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம்
துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.

இப்படிக்கு,
இரை தேடும் குடும்பத்திற்கு இரையாகிவிடாமல் இறையருளால் தப்பித்த உன்னுடைய
முன்னாள் காதலன்.
************

வாழ்க வளமுடன்!

SP.VR.SUBBIAH
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு சின்ன சிரிப்பு கதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன சிரிப்பு கதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 01, 2014 12:40 pm

அன்புள்ள அம்மாவுக்கு, 
***********************************
ஒரு வீட்ல அம்மா அப்பா மகள் மூன்று பேரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்.. அப்போது பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து முடிந்திருந்தது.. ஒரு நாள் அம்மா மகளின்  படுக்கை அறை சுத்தம் பண்ணப்போறப்போ அங்கே எல்லாமே நீட்டா இருக்கு, கட்டில் நடுவில ஒரு கடிதம், அதில "அம்மாவுக்கு"னு இருக்கு.பயத்தோட பிரிச்சு படிக்கிறா,"

அன்புள்ள அம்மாவுக்கு, 

இத எழுத மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் ஒரு பையனை லவ் பண்றேன்! அப்பாவும் நீயும் கண்டிப்பா எதிர்ப்பீங்கன்னு தெரியும் அதனால வேற வழியில்ல நானும் என் லவ்வரும் ஓடிப்போலாம்னு முடிவு எடுத்துட்டோம்.

கோவி கண்ணன் ரொம்ப ஸ்மார்ட்டான பையன் அழகா பச்சை குத்திக்குவான், சேறடிச்ச கலர் பேண்ட், ஃப்ரென்ச் தாடி இப்டி அவன் டேஸ்ட் வித்யாசமானது. அதில்லாம நான் இப்போ கர்ப்பமாயிருக்கேன்!.

அவனுக்கு முதுமலை பக்கத்துல ஒரு கிரவுண்ட் நிலம் இருக்கு அதில என்ன நல்லா பாத்துப்பேன்னு சொல்லியிருக்கான்.அவனுக்கு நிறைய குழந்தை பெத்துக்க ஆசையாம்! எனக்கும் அதான் ஆசை!!.அவன் லாரி நல்லா ஓட்டுவானாம், அதனால ஒரு க்ளீனராவாச்சும் சேருவேன்னு இருக்கான்.

இப்போதைக்கு எங்கள காப்பாத்திக்க அது போதும், அதே நேரத்தில எயிட்சுக்கு சீக்கிரமாவே மருந்து கண்டு பிடிக்கணும்னு கடவுள வேண்டிக்கிங்க கோவி கண்ணனுக்கு எயிட்சுன்னு அவன் சந்தேகப்படுறான். 

கவலைப் படாதீங்கம்மா எனக்கு 15 வயசாகுது வாழ்க்கையை பத்தி எனக்கு இப்ப நல்லாவே தெரியும் ஒரு நாள் உங்க பேரக் குழந்தைங்களோட கண்டிப்பா வர்றேன். 

உங்கள் மகள், 
பிரியா 

பின் குறிப்பு: மேல சொன்ன எல்லாமே பொய். நான் கதவுக்கு பின்னாடி இருக்கேன்.டேபிள்ல இருக்கிற என்னோட ரேங்க் ஷீட்ட விட வாழ்க்கைல மோசமான விஷயங்கள் இருக்குன்னு உங்களுக்கு ஞாபகப்படுத்தத்தான் இத எழுதினேன் உங்க கோபம் தீர்ந்ததும் என்னை கூப்பிடவும்."

நன்றீ ;மௌன தேசம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு சின்ன சிரிப்பு கதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன சிரிப்பு கதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 01, 2014 12:48 pm

நாட்டு வைத்தியர் சர்தார் ஜோக்ஸ்.
*****************************************************
ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு.. எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!

ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர் அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர் ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.

அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம் உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த லேகியத்தை நிறைய வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..
சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!

சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே.. மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..

அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.. என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. 

சர்தாருக்கு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..
திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு"
ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே...!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு சின்ன சிரிப்பு கதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன சிரிப்பு கதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 01, 2014 12:54 pm

"அக்கா வாத்து, தங்கை வாத்து' என்ற இரண்டு வாத்துகள் ஒரு குட்டைக்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன.

குட்டிகுட்டியான சில மீன்களும், கொசு முட்டைகளும்தான் அவற்றுக்கு உணவாகக் கிடைத்தன. பிளாஸ்டிக் கவர்களில் படர்ந்திருக்கும் அழுக்குகள் என்றால், தங்கை வாத்துக்கு கொண்டாட்டம்தான்! ஆனால், இது அக்கா வாத்துக்கு சுத்தமாக பிடிக்காது.

"நீ செய்வது தவறு. மடமனிதனைப் போலவே இருக்கிறாயே………?! சாப்பிடும்போது பிளாஸ்டிக் கவரின் சிறு பகுதி உன் வயிற்றுக்குள் போனால்கூட மரணம் நிச்சயம்'' என்று எச்சரித்தது
 
அக்கா வாத்து.

"மடமனிதன் என்று என்னைச் சொல்கிறாயே……?! மனிதர்கள்தானே "வாத்து மடையன்' என நம்மை வைத்து அவர்களாகவே சொல்லிக் கொள்வார்கள்?'" என்று சற்று கோபமாகக் கேட்டது தங்கை வாத்து.

"மடையர்கள், இந்த மனிதர்கள்தான்…..' என நீ சொல்லும்போது எனக்கு ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது. இந்தக் கதையை நான் சிறு வயதாக இருக்கும்போது நம் பாட்டி வாத்து எனக்குச் சொன்னது'' என்றது அக்கா வாத்து.
"அப்படியா………?! நம் பாட்டி சொன்ன கதையா…?! சீக்கிரமாகச் சொல்லு'' என்று ஆர்வமானது 

தங்கை வாத்து.

"ஒரு ஊரில் ஒரு மனிதன் இருந்தான். வீட்டில் பல வாத்துகளை வளர்த்து வந்தான். அதில் பொன் நிறத்தில் ஒரு வாத்து இருந்தது. இந்த வாத்து நீரில் நீந்தும்போது சூரியக்கதிர்கள் அதன் இறகுகளில் பட்டுத் தெறித்து பளபளக்கும்.

அவனிடம் பல தவறான பழக்கங்கள் இருந்தன. அதில் ஒன்று கஞ்சத்தனம்! நம் வாத்துக் கூட்டத்துக்கு சரியாக உணவே கொடுக்க மாட்டான். எப்போதும் தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்கும் சுயநலக்காரன். இந்த மனிதனைத் திருத்துவதற்காக மற்ற தோழர்களோடு சேர்ந்து பொன் நிற வாத்து ஒரு திட்டம் தீட்டியது. திட்டப்படி, பொன் நிற வாத்து முட்டைகளைப் பளபளப்பாக பொன் நிறத்தில் இட்டது.

அந்த முட்டைகளை விற்று நிறைய லாபம் பார்த்தான். அந்த லாபத்தில் நன்றாகத் தின்று அவன் கொழுத்தே போய்விட்டான். அப்போதும் வாத்துகளுக்கு நன்றாக உணவு கொடுக்க வேண்டும் என்று அவன் நினைக்கவே இல்லை. இந்த நிலையில், ஒரு நாள் பேராசைப்பட்டு பொன் நிற வாத்தின் வயிற்றில் நிறைய முட்டைகள் இருக்கும் என எண்ணி அந்த வாத்தின் வயிற்றைக் கிழித்தான். 

அவனது பேராசையால் அந்த வாத்து இறந்ததுதான் மிச்சம்! இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் அவன் திருந்தினான். பேராசைப்படுவதால் யாருக்கும் லாபமில்லை என்பதை உணர்ந்தான். பின்னர் ஏனைய வாத்துகளை நன்றாகப் பராமரித்தான்'' என்று கதையைச் சொல்லி முடித்தது அக்கா வாத்து.

"அக்கா, இப்போது நினைத்தாலும் வருத்தமாக உள்ளது. அந்தப் பொன் நிற வாத்து எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்திருக்கிறது'' என்று உணர்ச்சிவசப்பட்டது தங்கை வாத்து.
"இது போன்ற அறிவில்லாத செயல்களில் ஈடுபடுபவர்களைத்தான் வாத்து மடையன் என மனிதர்கள் அழைக்கிறார்கள்'' என்றது அக்கா வாத்து.

சரி. வாத்தை கொன்ற அந்த மனிதனுக்கு ஏதாவது தண்டனை கிடைத்ததா?! என்றது தங்கை வாத்து.
அந்த மனிதனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் சேர்த்து நாம் ஒரு தண்டனையை வழங்கி இருக்கிறோமே……… 

அதாவது, நாம் முட்டையை அடைகாத்து குஞ்சுகள் பொறிப்பதையே விட்டுவிட்டோம். நம் முட்டைகளை கோழிகளின் முட்டைகளோடு வைத்து அவற்றை ஏமாற்றித்தான் மனிதர்கள் வாத்துக் குஞ்சுகளைப் பெறுகிறார்கள். 

இதில் கோழிகளுக்கு இருக்கும் பெருந்தன்மையையும் மனிதர்கள் அறியமாட்டார்கள்'' என்று சொல்லிப் பெருமூச்சுவிட்டது அக்கா வாத்து.
==============================================
நன்றி:தனிப்பட்ட தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு சின்ன சிரிப்பு கதை  - Page 2 Empty Re: ஒரு சின்ன சிரிப்பு கதை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum