தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு பக்க கதை

3 posters

Go down

ஒரு பக்க  கதை Empty ஒரு பக்க கதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 27, 2013 5:03 pm

வேதம் நீ ... [ ஒரு பக்க கதை ]

அவர் பதிவுலக பிரபலம் என்பதை விடவும், சிறந்த பேச்சாளர். ரொம்ப தூரமல்ல காரமடையில் இருந்து வட கோவை வரைக்குமான ரயில் பயணத்தில் தான் அவரை முதலில் சந்தித்தேன். அப்போ அவர பத்தி எனக்கு சுத்தமா தெரியாது.

அதுக்கப்புரம் அவரின்  பேச்சு மேடைகளுக்கு அடிக்கடி போனேன்.  அவரின் பேச்சு மெய் மறந்து கேட்கச் செய்யும். கணீரென்ற குரலில் சரளமான பேச்சு எதுகை மோனையுடன் நாட்டு நடப்புகளுடன் சமூக அக்கரை தொனிக்க பேசுவார்.

முக்கியமா பெண்களின் முன்னேற்றம், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், நவீன நாகரீகத்தில் அவங்களோட சமூக பங்கு. தடையர தாக்கு இப்பிடி. அவருக்குன்னு பேஸ் புக்ல பெண்கள் கூட்டமே இருக்கு. அவருக்கு பத்தாவது படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள்.

புதிதாக ஏற்படுத்தப்பட்ட பதிவர் வட்டத்திற்கு அவரை பேச அழைக்கலாம் என்று ஒரு தினம் அவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன் சர்பரைசா இருக்கட்டுமேன்னு போன் செய்யவில்லை.

கூச்சத்துடன் நான் அடித்த அழைப்பு மணிக்கு, முதலில் குரைப்பு சத்தத்துடன் வரவேற்றது அவங்க வீட்டு நாய்.

வளையல் கை, ஜன்னல் திறந்து " யாருங்க ?"
நான்..சுருக்கமாக சொன்னேன்.
" உள்ள வாங்க..."   கதவு திறக்க தயக்கத்துடன் நுழைந்தேன். 

"அவரு வெளியூர் போயிருக்கார்..ஒரு நிமிசம்.."  சோபாவை காட்டிவிட்டு சமையலறையினுள் நுழைந்து விட்டாள்.

ஓழுங்காக அடுக்கி வைக்கப்பட்ட வார சஞ்சிகைகள்..முன்பிருந்த டீபாயின் மேல் அன்றைய செய்திதாள்கள் காற்றில் பட படத்தன. .

காபி கோப்பையுடன் வந்தாள். "அவரு இல்லாதப்ப வெளி ஆளுங்கள எப்பவும் உள்ள கூப்பிட மாட்டேன்.. அவருக்கு பிடிக்காது.  நீங்க என்னோட பெங்களூர் பிரதர் மாதிரியே இருக்கீங்க..." சிரித்தாள்.

மனதில் பட்ட சந்தேகங்களை உடனே கேட்டு விடுவது எனது வழக்கம்.

கேட்டேன்... " உங்க படம் ஏதும் செல்ப்ல இல்ல.. எல்லாம் அவரோட படங்களும் கோப்பைகளுமா இருக்கு..."

"ஒரு நிமிசம்..."

உள்ளறைக்கு சென்றவள் கைகளில் அவர், அவள், மகள் சிரிக்கும் புகைப்படத்துடன் வந்தாள்... "இது ஏற்காடு போயிருந்தப்ப எடுத்தது.....  அவரோட கூட்டங்களுக்கு நாங்க போறதில்ல.அவரும் கூப்பிட மாட்டார்."

அவரு, முன்னாடி வைக்க வேண்டாம் இதெல்லாம் பர்சனலுனு செல்லிட்டார்.

"நீங்க இப்படி.. கேட்டதும் எனக்கு தாங்கல... " 

சட்டென அவள் விழிகளின் ஓரத்தில் லேசாக துளிர்த்த கண்ணீரை கவனிக்க தவற வில்லை.

நாக்கில் காஃபி கசந்தது. காலி கோப்பையை வைத்தேன்.

சரி வரேங்க...கேட் வரை வந்தார்.

சூரீரென்ற வெயில் முகத்தில் அடிக்க. சில அடிகள் நடந்திருப்பேன்.
 "நீங்க வந்த விசயத்த சொல்லவா ..? "

தலை அசைத்து...புன்னகைத்தேன்.  "வேண்டாம் போன்ல பேசிக்கரேன் "

கீரீச்சிடும் கேட்டை என் எண்ணங்களோடு சேர்த்து சார்த்தி விட்டு நடந்தேன்.

படித்ததில் பிடித்தது 
நன்றி இனியவை கூறல்


Last edited by கே இனியவன் on Tue Sep 03, 2013 9:54 pm; edited 2 times in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க  கதை Empty Re: ஒரு பக்க கதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Aug 29, 2013 11:42 am

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு பக்க  கதை Empty Re: ஒரு பக்க கதை

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 30, 2013 11:06 am

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க  கதை Empty Re: ஒரு பக்க கதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 9:58 pm

காதல் மைனாக்கள்...[ஓரு பக்க கதை ]
இரண்டு நாட்களாக வீட்டில் ஒரே இடி, மின்னல்...

வீட்டிலா...? திகைக்காதீர்கள் வீட்டில் ஒரு சின்ன பிரச்சினை அதைத்தான் இப்படி சொன்னேன்.

பிரச்சினை ஓயவில்லை...

ஏங்க உங்களால வர முடியுமா..? முடியாதா..? சொல்லுங்க...

நான் ஏதும் போசவில்லை...

உங்க ஆளுங்க விசேசம்னா..தட்டாம வந்தீங்க...

இல்ல அதப்பத்தி சொல்லல... வேல..

ஆமா பொல்லாத வேல எப்பப்ப...பாரு... க்..உ..
முகத்தை திருப்பிக் கொண்டாள்.

விசயம் இதுதான். அவளின் உறவினர் திருமண நிச்சய ஏற்பாடு...வரும் புதன் கிழமை...எனக்கு ஆடிட் வேலை ஆட்டத்தை சரி பண்ணனும். முன்பே முடித்துவிடலாம் என்றிருந்தேன்.

ஏங்க மறுபடி சொல்றேன் அப்புரம்..உங்க (..உங்க ஆளுங்க..)
எந்த விசேசத்துக்கும் என்ன கூப்பிடாதீங்க...ஆமா...

இப்படியே வாக்குவாதம் ஒன்றுகில்லாத பிரச்சினை பெரிதாகிக் கொண்டே சென்றது.

சாப்பிடும் தட்டை நங்..என வைக்கிறாள்...விக்கல் எடுத்தால் முகத்தை திருப்பி வைத்துக் கொள்கிறாள். 

இதைப் பார்த்த என்மகளும் அவளோடு ஒட்டிக்கொண்டாள்...

கூட்டணி இல்லாத கட்சி போல தனித்து விடப்பட்டேன்..

புரண்டு புரண்டு படுத்தேன் தூக்கம் வரவில்லை...எப்பொழுது தூங்கினேன் தெரியவில்லை. 

திறந்திருந்த ஜன்னல் வழியே ஊர் குருவிகளின் க்ரிச்..குரிச்..க்ரிச்..கீச்... கூச்சல் சப்தம்.

விடிந்த காலை நேரத்தின் வெளிச்சமும் சேர்ந்து என்னை எழுப்பியது. 

மெல்ல எட்டிப் பார்தேன் ஜன்னலின் கீழேதான் சப்தம். 
நான் கண்ட காட்சி ஆச்சர்யமும் சற்று அதிர்ச்சியையும் கொடுத்தது. 

ஒரு மைனா தரையில் மல்லாந்து கிடக்கிறது எழ முயற்சிக்கிறது. 

அதை விடாமல் சினிமா வில்லனைப் போல் ஒரு காலால் மிதித்த படி இன்னொரு மைனா ஆக்ரோசமாக கொத்தி தாக்கிக் கொண்டிருந்தது.

வில்லனா...? கதாநாயகனா...?

அருகில் இன்னொரு மைனா இரு இறக்கைகளையும் விரித்தபடி தடுக்க முயற்சிக்கிறது. [ மே பீ கேர்ல் பேர்ட் ]

அதை சுற்றிலும் ஊர் குருவிகள் குதித்து குதித்து கத்தியபடி க்ரிச்...குரிச்..க்ரிச்..கீச்... இவையும் வேண்டாம் சண்டை என தடுக்க முயற்சிக்கின்றன.

சமையல் அறையில் இருந்த மனைவியை;  ஓசைப்படுத்தாமல் சைகைசெய்தபடியே அவளின் கையை பிடித்து அழைத்து வந்தேன்.

உஷ் ..உதட்டின் மேல் விரல் வைத்தபடி.. பார்க்க சைகை செய்தேன். என் காதின் அருகில் சன்னமாக " பாவங்க.." என்றாள்.

ஹேய்...  சட்டென அணைத்தும் பறந்தன. 

கீழே கிடந்த மைனா சுதாரித்து எழுந்து பறந்தது.  வில்லன் மறுபடி தாக்கப் பறந்தது.  எல்லாம் ஜாகையை மாற்றிக் கொண்டன.

எனக்கு புரிந்துவிட்டது. இது பறவைகளின் காதல் சண்டை.

அதுவும் தன் காதலில் தோற்ற பறவை மற்றதை இப்படி பழி வாங்கப் புறப்படுமா?...எனக்கு ஆச்சர்யம் தான். 

இருக்கலாம்...பறவைகளுக்குள்ளும் நம்மளைப் போல் பல வித உணர்வுகள் இருக்கிறது இல்லையா..? 

கோழிச்சண்டை பார்த்திருக்கிறேன் ஆனால் மைனாக்கள் சண்டை எனக்கு புதிது தான்.

காலையில் பேப்பர் வந்தது. படிக்க கண்ணாடி தேடினேன். டி.வி. விளம்பரத்தில் வருவதைப்போல் மணக்க மணக்க காஃபி கொண்டுவந்தாள்.

 " ம்..ம்.."  எடுத்துக்கங்க ஜாடை.

லீவு போட்டரேன்...நிச்சயத்திற்கு போலாம். சொல்லி விட்டு
நிமிர்ந்து பார்க்கிறேன். அவள் முகம் மலர்ச்சியில் ;

...மைனாக்களின் சண்டை நம்ம சண்டைக்கு எண்ட் கார்ட் போட்டுருச்சே..!

-------------------------------------------------------------------------------------------------------
இக்கதை புரட்சி FM (இணைய வானொலி)யில் ஒலிபரப்பப்பட்டது. 
நன்றி ;இனியவை கூறல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க  கதை Empty Re: ஒரு பக்க கதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 9:06 pm

இசை...நா...நீ 
**********************
நிசப்தமான இரவு  டிக்..டிக்..டிக் கடிகாரத்தின் ஒலி;
தென்னைமரங்களின் அசைவுகள் எனக்கு வினோதமாய் தோன்றுகிறது பெளர்ணமி நிலவின் வெளிச்சத்தில் ;

திறந்திருக்கும் சன்னலின் வழியே ஸ்...எனும் ஓசையுடன் சில்லெனும் தென்றல்;  முகத்தை வருடி செல்கிறது.

எழுதிக் கொண்டிருக்கிறேன்..கணிப்பொறியில்;

ஹெட்போனை காதில் மாட்டிகொண்டு கோமெட் ப்ளேயரில் இசையை ஓட விடுகிறேன்.

உயிரின் உணர்வுகளை உசுப்பிவிடும் பாடலற்ற இசைக் கோர்வை.
எவ்வளவு காலங்களானாலும் இசைக்கு வயதில்லை என்றும் அதே இளமை துள்ளலுடன்...

கண்களை மூடி நாற்காலியில் சாய்கிறேன்.....

முகத்தின் முன்விழும் சிறு முடிக் கற்றையை கைகளால் ஒதுக்கிவிட்டபடியே கேட்கிறாள்

மருதமலை கோயிலுக்கு போயிருந்தோம்.  என் கன்னத்தைப் பிடித்து.....

நெற்றியில் திருநீரு வைக்கிறாள்.
கண்களில் விழும் திருநீற்றுத்துகள்களை உஃப் பென ஊதிவிடுகிறாள். 

ஆ காட்டு மீதமிருந்த பாதி லட்டை வாயில் தினிக்கிறாள். நந்தவனத்தில பூப்பறிக்கனும் என்னோட வரியா...பதிலை எதிர்பாராமல் கைபிடித்து இழுத்து செல்கிறாள்...

மழைத்தூறல் விட்ட  சாயங்கால இள மஞ்சள் வெயில் மாலைப்பொழுது மரங்களினுடே புகுந்து வருகிறது..ஏதோ ஒரு உலகத்திலிருப்பது
போன்று உணர்கிறேன்.....

ஸ்..ஹோ..தொடந்து வரும் காற்றின் ஓசை...

தோட்டத்து வயல் வரப்பு வாய்கால்களில் சலசலத்து செல்லும் நீர், 
வளைந்து வளைந்து செல்லும் பாதையின் இருபுறங்களிலும்
விதவிதமான வண்ண வண்ணப்பூக்கள்

பறக்கும் பூக்களென படபடத்து செல்லும் வண்ணத்துப்பூச்சிகள்...

ஆழ்ந்த மூச்சை உள்ளிழுக்க மலர்களின் வாசனையோடு மண்வாசனையும் ;

ஆஹா..மனோரஞ்சிதம்..துள்ளிக்குதித்தோடினாள், கொலுசின் சினுங்கல்களுடன்

அந்த பச்சை மஞ்சள் கலந்த மலர் ஏதோ ஒரு  பழத்தின் இனம்புரியாத சுவையான... வாசனை. அவளுக்கு மிகப் பிடிக்கும்

பூவை பறிக்க முயற்சித்தாள் விரலில் முள் குத்த ஸ் ஆ...கையை உதறுகிறாள்.முள் குத்திய வலி உணர்கிறேன்.

அம் மலர்களை பறித்து கொடுக்கிறேன். என் விரல்களில் துளிர்க்கும் ரத்தத்துளிகள்... எனக்கு வலி இல்லை.

இதில உட்காரேன்...உட்கார்ந்தேன் வீழ்ந்து கிடக்கும் தென்னை மட்டையில்  இரு கால்களையும் சற்று உயரே தூக்கிக் கொள்கிறேன்.  இழுத்து கொண்டு ஓடுகிறாள்

வேகமாக...வே...க..மா..க..இன்னும் வே..க..மா..க ஆகாயத்தில் மிதப்பது போன்ற உணர்வு.

மேகங்கள் என்னை கடந்து செல்கின்றன அதே வேகத்துடன்...

ஹ..ஹா..உம்..ஹி..ஹி..ஹ..ஹா

அவள் சிரிப்பு ஒலி மட்டும் எங்கிருந்தோ கேட்டுக் கொண்டே இருக்கிறது...

சட்டென நிசப்தம்...

அடுத்த இசை...

என் சிறு வயது நினைவுகளை சிதறடித்து  இது தான் நிசமென்கிறது ;

இசை...நான்..நீ...

=====================================================================
இக்கதை அதீதம் வலைதளத்தில் வெளியாகியுள்ளது.  [ திரு. வாமணன், திரு.எல்.கே அவர்களுக்கு எனது நன்றி ]
(இனியவை கூறல் )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க  கதை Empty Re: ஒரு பக்க கதை

Post by Muthumohamed Wed Sep 04, 2013 11:39 pm

அனைத்து கதைகளுமே அருமை
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 36
Location : Palakkad

Back to top Go down

ஒரு பக்க  கதை Empty Re: ஒரு பக்க கதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Sep 05, 2013 11:24 am

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு பக்க  கதை Empty Re: ஒரு பக்க கதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 5:56 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க  கதை Empty Re: ஒரு பக்க கதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 8:27 pm

[You must be registered and logged in to see this link.]
உலகத்தின் எல்லா சந்தோஷத்தையும் தானே அனுபவிப்பதை போல உணர்ந்தாள் ஆனந்தி.

டாக்டர் சொன்னதைக் கேட்டதும் பூரித்துப் போனாள்.

எத்தனை நாள் தவம்!
எத்தனை நாள் கண்ணீர்!
எத்தனை நாள் வேதனை!

இன்று முடிவுக்கு வந்தது. ஆனந்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகியும் ஆனந்திக்கும், ரவிக்கும் குழந்தை இல்லை. குழந்தை இல்லை என்ற குறையை விட மலடி என்ற பட்டம் ஆனந்தியை வாட்டி வதைத்தது.

எத்தனை கனவுகளோடு புகுந்த வீட்டிற்குள் அடிஎடுத்து வைத்தாளோ, அத்தனை கனவும் கண்ணீரில் கரைந்தன. கணவன் ரவி அன்பானவன் தான். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன் தான். ஆனால், குழந்தை இல்லாத குறையை எத்தனை நாள்தான் அவனும் ஜீரணிப்பது! ரவியும் சில நேரங்களில் ஆனந்தியிடம் முகம் சுளிக்க ஆரம்பித்தான். பார்க்காத டாக்டர் இல்லை; செய்யாத வைத்தியம் இல்லை. எல்லாமே வீண்!

ரவியின் அம்மா சாரதா புலம்பித் தள்ளுவாள்: "நேத்து வந்தவளெல்லாம் நெல்லிக்காயும், மாங்காயும் சாப்பிட்டு புள்ளைய பெத்து போடறா!... ம்... இந்த வீட்டுக்கு அந்த கொடுப்பனையே இல்லை..." என்று பெருமூச்சு விடுவாள்.

ஆயுசு முழுக்க ஆனந்தமாய் வாழ வேண்டுமென்றுதான் ஆனந்தி என்று பெயர் வைத் தார்கள். ஆனால், கழுத்தில் தாலியை சுமக்க ஆரம்பித்த நாள் முதல், மனம் வேதனையை சுமக்க ஆரம்பித்தது.

பெண்ணாய் பிறந்த யாரும் தாய்மையை வெறுப்பதில்லை. தாய்மை யாருக்கு வாய்க்குமோ? யாருக்கு வாய்க்காதோ? கடவுளுக்கே வெளிச்சம்! ஆனால் யாரும் கடவுளை குற்றம் சொல்வதில்லையே! ஆண்டுகள் கடந்தாலும் காலங்கள் மாறினாலும், என்ன தான் கம்ப்ïட்டர் யுகத்திலேயே வாழ்ந்தாலும் குழந்தை பேறு இல்லை என்றால் இந்த சமுதாயம் பெண்களைத்தான் குற்றவாளிகளாய் பார்க்கும். இது பெண் வர்க்கத்துக்கே உண்டான சாபக்கேடு.

எந்த பெண்ணும் அவ்வளவு சீக்கரம் முடி வெடுக்க முடியாத விஷயம். எந்த பெண்ணும் தன் கணவனைப் பார்த்து கேட்கக் கூடாத வார்த்தை. ஆனந்தி ஒருமுறை தன் கணவனை கேட்டே விட்டாள். "நீங்க வேறு ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?"

"பைத்தியமா உனக்கு... குழந்தை வேணுங் கிறது நம்முடைய ஆசை தான். அதுக்காக என்னுடைய மனிதாபிமானத்தை பலி கொடுக்க முடியாது" என்றான்.

பாலைவனத்தில் முளைத்தெழுந்த முல்லை கொடிக்கு அவ்வப்போது பாசமாய் பொழியும் வானமழைபோல், கணவனின் பாச வார்த் தைகளை உணர்ந்தாள். திருமணமாகி ஏழு வருடங்களாகியும் கணவன் நல்லவனா, கெட்டவனா என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை ஆனந்திக்கு. 

நல்லவன் என்று எப்போதெல்லாம் நினைக்கிறாளோ, அப்போதெல்லாம் அதற்கு எதிர்மறையாகத் தான் இருப்பான். அவன் கெட்டவன் என்று ஒதுங்கி நிற்கும் போது, அவனே நெருங்கி வந்து அவளை கெஞ்சலோடு கொஞ்சுவான்.

ஆனந்திக்கு வாழ்க்கையும் கேள்விக்குறி! கணவனும் கேள்விக்குறி!

நடந்ததெல்லாம் போகட்டும். இத்தனை நாள் கஷ்டங்களுக்கு எல்லாம் ஒரு முடிவு வந்தது!

செவிலியர் கொடுத்த தன் குழந்தையை அன்போடு அள்ளி மார்போடு அணைத்தாள். கண்களில் நீர் சுரந்தது. மார்பில் பால் சுரந்தது. கண்ணீர் எப்போதுமே உப்பு கரிக்குமாம். ஆனால், ஆனந்திக்கு தேனாய் இனித்தது.

தன் மடியில் தவழும் இந்த மழலைக்காக ஏங்கிய நாட்கள் எத்தனை!

"என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்!" - எங்கோ தூரத்தில் ஒலித்த பாடல் வரிகள் எந்த அர்த்தத்துக்காக எழுதப்பட்டதோ தெரியவில்லை. ஆனால், ஆனந்திக்கு புரிந்தது ஒரே அர்த்தம்தான்.



உறவினர்கள் எல்லோரும் குழந்தையைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள். உறவினர்களையும், அக்கம் பக்க வீட்டுக்காரர்களையும் பார்த்ததும் ஆனந்திக்கு அழுகை தாங்க வில்லை. குரல் உடைந்து அழுதாள்.

"ஏண்டி அழறே! அசடு! எல்லாம் முடிஞ்சி போச்சிடி! உன் கவலைகள் எல்லாம் முடிஞ்சி போச்சு! இன்னிலேர்ந்து நீ ராசாத்தி மாதிரி இருக்கணும். சிங்கக்குட்டி மாதிரி ஒரு ஆண் பிள்ளையை பெத்தவடி நீ! எதுக்கும் கவலைப்படாதே!" என்று ஆனந்தியின் மாமியார் பூரிப்பில் ஆறுதல் சொன்னாள்.

"அவர் வரலியா" என்றாள் ஆனந்தி.

"போன் பண்ணி விஷயத்தைச் சொல்லிட்டோம். முதலாளிகிட்ட கணக்கு ஏதோ கொடுத் துட்டு வரணுமாம். வர்றேன்னு சொன்னான்" என்றார்கள்.

மனம் முழுக்க சந்தோஷம் நிரம்பி வழிய, கணவன் வருகைக்காக காத்திருந்தாள் ஆனந்தி! உறவினர்களின் பார்வை நேரம் முடியும் தருணத்தில் வந்தான் ரவி. அவனது நடையில் லேசான தள்ளாட்டம் இருந்ததை ஆனந்தி கவனித்தாள். 

"இது என்ன புதுப்பழக்கம்? முதல் முதல் நம்ம குழந்தையை பார்க்க இந்த கோலத்திலேயா வருவது ?" என்றாள்.

அவன் எதுவும் பேசவில்லை. ஆனந்தி படுத்திருந்த கட்டிலருகே போடப்பட்டிருந்த தொட் டிலில் படுத்திருந்த குழந்தையை குனிந்து பார்த்தான். அவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

"நல்லாருக்கானா நம்ம பையன்... ஏன் உங்க முகத்துல சந்தோஷத்தையே காணோம்...!" என்றாள்.

"நீயும் கறுப்பு, நானும் கறுப்பு. குழந்தை மட்டும் வெள்ளையா இருக்கு... நம்ம வீட்ல உள்ள வங்க யாருடைய முகச்சாயலும் குழந்தைக்கு இல்ல... இதை நான் மட்டும் சொல்லல... வெளியில் பேசிக்கிறாங்க... " அவன் குரலில் குடிகாரர்களுக்கே உரிய குழறல் இருந்தது. ஆனால், உளறல் இல்லை.

இத்தனை நாள் அனுபவித்த வேதனைகள் அத்தனையையும் மறுபடியும் ஒரே நொடியில் அனுபவித்த மாதிரி இருந்தது ஆனந்திக்கு!

நேற்று வரை அவள் சுமந்த துன்பம் வேறு! இனி அவள் சுமக்கப் போகிற துன்பம் வேறு!


- மின்னூர் மகாதேவன்
நன்றி ;கோழியப்பன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க  கதை Empty Re: ஒரு பக்க கதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 18, 2013 8:57 pm

கொக்கும் கெழுத்தி மீனும்

[You must be registered and logged in to see this link.]

பொன்னேரிக் கிராமத்தின் வயல்களின் நடுவே அகன்று விரிந்திருந்தது அந்தப் பொன்னேரி வாவி . பொன்னேரி என்றுமே வழங்கொளிக்கும் கிராமம் . எங்கும் பச்சைப்பசேல் என அந்தக்கிராமத்தைப் பார்க்கவே கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும் . அந்தக் கிராமத்தின் விவாசயத்திற்கு தேவையான நீரை வழங்குவது இந்தப் பொன்னேரி வாவியே . அந்த வாவியில் தவளைகள் , மீன்கள் , ஆமைகள் என்று பல நீர்வாழ் உயினங்களும் வாழ்ந்து வந்தன . இதனால் எப்பொழுதும் அந்த வாவி கொக்குகளாலும் நாரைகளாலும் நிறைந்து காணப்படும் .

பொன்னேரிக் கிராமத்திற்கும் , வாவிக்கும் யார் கண்பட்டதோ தெரியவில்லை , கடந்த நான்கு வருடங்களாக பெய்ய வேண்டிய மழை பொய்த்துவிட்டது . படிப்படியாக பொன்னேரிக் கிராமமும் , வாவியும் வறட்சி என்னும் கோரப் பிடியில் சிக்கித் தவித்தன பொன்னேரிக் கிராமத்தின் பயிர்பச்சைகளும் வாவியும் பொய்த்த மழையினால் படிப்படியாக சோபையிழந்தன . ஆனாலும் வாவியில் தங்களுக்கு வாவியில் ஏதாவது இரை கிடைக்காதா என்ற ஆவலில் கொக்குகளும் நாரைகளும் தினமும் வந்து போய்க்கொண்டிருந்தன .

ஒருநாள் மாலைவேளை வாவியின் கரையில் கொக்குகளும் நாரைகளும் தங்களுக்கு இரை கிடைக்காதா என்ற ஏக்கத்துடனும் கவலையுடனும் உட்கார்ந்திருந்தன . இதே நேரம் வாவியின் அடியில் சேற்றில் ஒழிந்திருந்த கெழுத்தி மீன் ஒன்று மெதுவாகக் காற்று வாங்கும் நோக்குடன் நீர் மட்டத்திற்குப் புறப்பட்டது . வாவியின் கரையில் கருமமே கண்ணாயிருந்த ஒரு கொக்கின் கண்ணில் அந்தக் கெழுத்தி மீன் பட்டது . எல்லோரையும் முந்திக்கொண்டு அந்தக் கொக்கு வாவியில் மூழ்கி கெழுத்தி மீனுடன் வானத்தில் ஜிவ் என்று பறந்தது .

பசியுடன் இருந்த மற்றைய கொக்குகளுக்கும் ,  நாரைகளுக்கும் அந்தக் கொக்கின் செய்கை மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது . கெழுத்தி மீன் பிடித்த கொக்கையும், இரையை கைப்பற்றும் நோக்கிலும் எல்லாக் கொக்குகளும் நாரைகளும் கலைத்துக் கொண்டு பறந்தன . ஏதோ ஓர் உள்உணர்வு தாக்க கொக்கு தனது தலையைத் பின் பக்கமாகத் திருப்பிப் பார்த்தது . ஓர் படையே தன்னைப் பின்தொடர்ந்து வருவதை அது கண்டது . ஆனாலும் அந்தக் கொக்கு  , எல்லாக் கொக்குகளுக்கும் , நாரைகளுக்கும் போக்குக் காட்டியவாறே மேலும் விரைவாகப் பறந்தது . ஆனாலும் கொக்கின் பின்னால் வந்த பெரும்படையின் சுற்றிவளைப்பில் இருந்து தப்ப அந்தக்கொக்கு மிகவும் கஸ்ரப்பட வேண்டியதாக இருந்தது .

அப்பொழுது அந்தக் கொக்கிற்கு ஓர் யோசனை தோன்றியது . " நான் இந்தக் கெழுத்தி மீனை வைத்திருப்பதால் தானே இந்தக் கொக்குகளும் நாரைகளும் என்னை விட்டுக் கலைக்கின்றன இதை விட்டுவிட்டால் என்ன ??  " என எண்ணியவாறே அது தனது அலகில் இருந்த கெழுத்தி மீனின் பிடியைத் தளர்த்தியது . கெழுத்தி மீனோ கொக்கின் பிடியில் இருந்து கீழே நோக்கி விழத்தொடங்கியது . அப்பொழுது அந்தக் கொக்கைப் பின்தொடர்ந்த கொக்குகளும் நாரைகளும் , தீடீரென கீழே விழும் கெழுத்திமீனைப் பிடிக்கப் பறந்தன . ஆனால் கெழுத்திமீனைப் பிடித்த அந்தக் கொக்கோ மனநிம்மதியாகவும் , சந்தோசமாகவும் பறந்து சென்றது .


நீதி :

எம்மில் ஈகோ என்ற " நான் " அந்தக் கொக்கு வைத்திருந்த கெழுத்தி மீனைப் போன்றதே . ஈகோ என்ற " நான் "  எங்களிடம்  இருக்கும்வரை அதுவே எங்களுக்கு முக்கியமானது போலத் தோன்றும் .  எங்களின் மீதான மற்றயவர்களது தாக்குதல்களும் அதை நோக்கியே இருக்கும் . ஆனால் ,  நாங்கள் இந்த ஈகோ என்ற " நான் "  ஐ விட்டுவிட்டால் , சந்தோசம்.......  நிம்மதி.....  சுதந்திரம்.....  என்று எல்லாமே எங்களுடன் கூடவே வரும் .


கோமகன்
11/07/2013
 
நன்றி நிலாமுற்றம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க  கதை Empty Re: ஒரு பக்க கதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 18, 2013 9:05 pm

அப்பா அப்பா.. கார் சாவி எங்கே”  என்று கேட்டபடி உள்ளே நுழைந்தான் மிதுன் .
“எதுக்கப்பா ..”
“எதுக்கா நான் ப்ராக்டிஸ் பண்ணத்தான்” என்றான் ஸ்டைலாக.
“ஐயோ அதெல்லாம் வேணாம்பா... அப்புறம் எங்கேயாவது இடிச்சிட்டீன்னா... ... “
“கார் டேமேஜ் ஆயிடும்ன்னு கவலை படறீங்களா?” மிதுன் விளையாட்டாக கேட்டாலும் அவர் கவலைப் படுவது தனக்காகத் தான்  என்று அவனுக்குத் தெரியும்.

"சீ சீ அப்படியில்லைப்பா.. நீ நல்ல ட்ரைவிங்  கத்துக்கிட்ட பிறகு எடுக்கலாம்னு சொன்னேன்" என்றார் சிவலிங்கம்.
"நல்ல கத்துக்கனும்னுதானே அவன் ப்ராக்டிஸ் பண்ணனும்னு சொல்றான், காரை எடுக்காம எப்படி ப்ராக்டிஸ் பண்ண முடியும்? இந்தாப்பா சாவி , நீ ஓட்டிப் பாரு, வேணும்ன்ன நானும் துணைக்கு வர்றேன்"  என்றபடி வந்தாள்  அம்மா சத்யவதி.
"உனக்கு கொஞ்சமாவது அவன் மேல அக்கறை இருக்கா? கார் ஓட்டுறேன்னு எங்கேயாவது அடி கிடி பட்டுக்கிட்டா என்ன ஆவறது?" மனைவியை  நோக்கி சீறினார் சிவலிங்கம்.

“இல்லீங்க , நா என்ன சொல்ல வர்றேன்னா ...”
“அப்பா.. போதும் மறுபடியும் உங்க சண்டையை ஆரம்பிச்சுடாதீங்க. நா அப்புறமா கார் கத்துக்கறேன்”, கார் சாவியை டேபிள் மேல் வைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான் மிதுன்.
மிதுன் கல்லூரி இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கிறான்.ஒரே பிள்ளை,ரொம்ப செல்லம், வீட்டில் அவன் அப்பா  அம்மாவுக்குள் சண்டை வருவதென்றால் அது அவனிடம் யார் அதிகம்  அன்பு வைத்திருக்கிறார்கள் என்ற பாசப் போட்டியாகத்தான் இருக்கும்.

சிவலிங்கம் எப்போதுமே அவன் வலிக்கத் தாங்கமாட்டார், சின்ன வயதிலேயே அவனுக்கு காது குத்தும்போது அவன் கதறலை  தாங்க முடியாது என்று காதுகுத்தும் இடத்திலேயே அவர் இல்லை.
இதைப் பலமுறை சொல்லி மனைவியை மட்டம் தட்டியிருக்கிறார்.
"நீயெல்லாம் எப்படித்தான் அவன் அழுகையை  தாங்கிக்கறியோ. என்னால அவன் அழுவதை  தாங்கவே முடியாது .  அந்த இடத்திலேயே இருக்கமாட்டேன்" என்பார்.

அவன்  உறவினர்களும் நண்பர்களும் கூட ,"மிதுன் இப்படி ஒரு அப்பா கிடைக்க நீ ரொம்ப கொடுத்து வச்சவன்தான்" என்று பெருமைப்படுவார்கள்.
“என்னப்பா..அப்பா கார் கொடுக்கலைன்னு கோவமா?,  அவரைப் பத்திதான் தெரியுமில்ல...” என்று சொன்னபடி உள்ளே வந்தார் அம்மா.
“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா.. “ என்றபடி புத்தகத்தை பிரித்தான் மிதுன்.
“அவருக்கு எப்பவுமே  உம்மேல பாசம் அதிகம் அதனாலதான் அப்படி சொல்றார்” என்ற அம்மாவை மேலும்கீழும் பார்த்தான் மிதுன்.
“அப்போ உங்களுக்கு? “

“இல்லை என்னைவிட அவர்தான் உம்மேல பாசமா இருக்கார். சின்னதுல உனக்கு ஒரு ஊசி போட்டாக்கூட அவருக்கு தாங்காது ,அந்த இடத்த விட்டு ஓடிடுவார், இப்பவும் அப்படித்தான்”
தாயை பாசத்துடன் பார்த்தான் மிதுன் “ அவரைவிட உங்க அன்பு எந்த விதத்துலயும் கொரைஞ்சதில்லம்மா....” என்ற மிதுனை வியப்புடன் பார்த்தாள்  சத்யவதி.
"ஒரு குழந்தை தனக்கு வலிக்கும் சமயத்தில் தந்தையையோ தாயையோதான் ஆறுதலுக்காக தேடும், அந்த சமயத்தில் அதன் அழுகைக் காணப் பொறுக்காமல் ஓடி ஒளிவது சிறந்த  பாசம்னு எப்படி சொல்றது ,தனக்கு கஷ்ட்டமா இருந்தாலும், தன குழந்தைக்கு ஆறுதலா கூடவே இருந்து தைரியப்படுத்தரதுதான் உண்மையான அன்பு, அதைத்தான் நீங்களும்  இதுவரைக்கும் செய்திருக்கீங்க, அந்த வகையில பார்த்தா அப்பாவைவிட உங்களுக்குத்தான் என்மேல அன்பு அதிகம்". மிதுன் பேசி முடிக்க ,

தன் மகன் தன்னை சரியாக புரிந்துவைத்திருப்பதை உணர்ந்து பெருமிதம் அடைந்தாள் அந்தத் தாய் .
கதவருகே நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிவலிங்கமும் சிந்திக்க ஆரம்பித்தார். 

நன்றி சௌந்தர் 
நிலாமுற்றம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க  கதை Empty Re: ஒரு பக்க கதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 21, 2013 11:20 am

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு பக்க  கதை Empty Re: ஒரு பக்க கதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 21, 2013 1:13 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க  கதை Empty Re: ஒரு பக்க கதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 5:20 pm

சுஜாதா 

*************


மெல்லிய தேகத்தில் - தமிழ்
சொல்லிய இதழோடு - நெஞ்சை
அள்ளிய அழகோடு - மெல்ல
துள்ளி ஓடும் பருவப் பெண்...!!!


கல்லூரி மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தாள்.
கல்லூரி முடிந்ததும் அவளுக்கு திருமணம் முடிக்க, வரதராஜன் , அவளது அப்பா முடிவு பண்ணி இருந்தார்

காதல் கடிதங்கள் நிறைய வந்தும் - அவற்றை கண்டு கொள்ளாமல் - படிப்பில் மட்டுமே கவனத்தில் வைத்திருந்தாள் சுஜாதா....

மேலே படிக்க வேண்டும் நிறைய சம்பாதிக்க வேண்டும் - இது மட்டுமே அவளது கனவாக இருந்தது......

கல்லூரி முடிந்து - காம்பஸ் நேர்முகத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று நல்ல வேலையில் சேர்ந்து மாதம் 50000 ரூபாய் சம்பாத்யத்தில் சேர்ந்து விட்டாள்

வரதராஜன் அவளுக்கு வரன் தேடத் தொடங்கினார்

ஆனால் - சுஜாதா கல்யாணப் பேச்சு எடுக்கும்போதெல்லாம் எரிந்து விழுந்தாள்.....

சரி யாரையாவது காதலிக்கிறியா சொல்லு அவனையே பேசி முடிச்சிரலாம் - வரதராஜன் வெளிப்படையாக கேட்டும்

அதுல்லாம் ஒன்னும் இல்ல - கல்யாணமும் வேண்டாம் ஒரு கருமாதியும் வேண்டாம் - சட்டென்று எரிந்து விழுந்தாள் சுஜாதா

மகளின் இந்தப் போக்கு அப்பாவுக்கு மனக் கஷ்டத்தை கொடுக்க - எவ்வளவோ திருத்த முயன்றும் - முடியாமல் இறுதியில் வரதராஜன் இறந்தே போனார் - மகளின் கல்யாணத்தை பார்க்காமல்.....

வருடங்கள் பல உருண்டோடியது......

தலை நரைத்து - கண்கள் குழி விழுந்து - தோல் சுருங்கி படுக்கையில் கிடந்தாள் சுஜாதா......

கவனிக்க பணியாளர்கள் இருந்தும் - அவர்கள் பண ரொட்டிக்காக அலையும் மனித நாய்களாக ( நாய்கள் மன்னிக்க....!!! நீங்கள் நன்றி உள்ளவர்கள் )
தென் பட்டார்கள்....!!!

அவளது மனம் நினைக்கத் தொடங்கியது.....

பெரிய தவறு செய்து விட்டேனே....!!!

காதல் கடிதம் வந்தபோது காதலித்தால் கல்யாணம் செய்யனும் - பிறகு கர்ப்பம் - செலவு - செலவு - செலவு - செலவு - செலவு - பணம் பறி போய்விடும் என்று பணத்தாசையில் - முட்டாள் தனமாக என் வாழ்வை சீரழித்து விட்டேனே.....

சுயநலமாக வாழ்ந்து என்ன சுகத்தை நான் கண்டு விட்டேன் ...?

இப்படி எண்ணிய படியே வெறித்திருந்தது சுஜாதாவின் இமைகள் விட்டத்தை வெறித்த படி

அவள் எப்போதோ இறந்து போய் இருந்தாள்......

பெட்டியில் அவளது தங்க நகைகள்......
அனாதையாக இல்லாமல் இன்னுமொரு சோம்பேறிக் கூட்டத்தை தயார் படுத்த தன்னை ஆயத்தப் படுத்தியது.......

வரவு செலவு கணக்கில் - நிச்சயம் பணம் தேவையா ? கொஞ்சம் நாமும் சிந்திப்போமா ?

நன்றி ; கதைக்களம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க  கதை Empty Re: ஒரு பக்க கதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 12:59 pm

பாகப்பிரிவினை
************************
விவசாயி ஒருவன் இறக்கும் தறுவாயில் தன மூன்று மகன்களையும் கூப்பிட்டு, தான் இறந்த பிறகு,தான் எழுதியுள்ள உயிலில் கண்டவாறு அவனுடைய உடைமைகளைப் பிரித்து எடுத்துக் கொள்ளச் சொன்னான்.சிறிது நேரத்தில் அவன் உயிர் பிரிந்தது.கடமைகளை முடித்தபின்,மூன்று மகன்களும் உயிலில் கண்டபடி சொத்துக்களைப் பிரித்துக் கொண்டு வந்தனர்.

இறுதியாக பதினேழு பசு மாடுகள் இருந்தன.உயிலில்,பசுமாடுகளில் இரண்டில் ஒரு பங்கு மூத்த மகனுக்கும் மூன்றில் ஒரு பங்கு இரண்டாவது மகனுக்கும்,ஒன்பதில் ஒரு பங்கு கடைசி மகனுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.பதினேழு பசு மாடுகளை இந்த விகிதத்தில் எப்படிப் பிரிப்பது?ஒரே குழப்பம்.இது சம்பந்தமாக அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு,அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடலானர்கள்.

அப்போது ஒரு பெரியவர் அந்தப் பக்கம் வந்தார்.பிரச்சினை என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்ட அவர் அதைத் தான் தீர்த்து வைப்பதாகக் கூறினார்.அவர்கள் சம்மதம் தரவே அவர் சொன்னார்,''உங்களிடம் பதினேழு பசுக்கள்உள்ளன.என்னிடம் உள்ள பசு ஒன்றையும் இவற்றோடு சேர்த்துக் கொள்கிறேன்.ஆகப் பதினெட்டு பசுக்கள் இருக்கின்றன.

உயிலின் படி இரண்டில் ஒரு பங்கு,அதாவது ஒன்பது பசுக்கள் மூத்தவனுக்கு சொந்தம்.மூன்றில் ஒரு பங்கு,அதாவது,ஆறு பசுக்கள் இரண்டாமவனுக்கு சொந்தம்.ஒன்பதில் ஒரு பங்கு,அதாவது இரண்டு பசுக்கள் மூன்றாமவனுக்கு சொந்தம்.மூவருக்கும் பதினேழு பசுக்கள் கொடுத்தபின் ஒரு பசு மீதமிருக்கிறது.

அது நான் கொண்டு வந்த பசு.அதை நான் எடுத்துக் கொள்கிறேன்.இப்போது உங்கள் பிரச்சினை தீர்ந்ததா?''மூவருக்கும் மிக்க மகிழ்ச்சி.ஆனால் கடைசி வரை இது எப்படி சாத்தியமாயிற்று  என்று அவர்களுக்குப் புரியவில்லை.உங்களுக்குப் புரிகிறதா?

நன்றி இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க  கதை Empty Re: ஒரு பக்க கதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 1:02 pm

ஏலம்
***********
பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தவர் மதன் மோகன் மாளவியா.பல்கலைக் கழகத்தை ஆரம்பிக்க அவர் பொருளாதார ரீதியில்  மிகவும் சிரமப்பட்டார். 

அவர் மனம் தளராது ஊர் ஊராகச் சென்று,செல்வந்தர்களையும்,பெரிய வணிகர்களையும் நேரில் சந்தித்துநிதி உதவி கோரினார்.இதற்காக அவர் ஹைதராபாத் நவாபையும் பார்த்து நிதி உதவி கோரினார்.நவாப் கோபத்துடன்,''என்ன தைரியம் இருந்தால்,என்னிடம் வந்து,ஒரு இந்துப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்க நிதி கேட்பாய்?''என்று கேட்டவாறே அவர் காலிலிருந்த செருப்பைக் கழட்டி மாளவியாவின் மீது எறிந்தார்.

மாளவியா ஏதும் பேசாமல் அந்த செருப்பை எடுத்துக் கொண்டு கடை வீதிக்கு வந்து,''இது நவாப் அவர்களின் செருப்பு.இப்போது இதை நான் ஏலம் விடப் போகிறேன்,''என்று கூவி அழைத்தார்.தகவல் நவாபுக்கு எட்டியது தன செருப்பு குறைந்த விலையில் ஏலத்தில் சென்றால் தனது கௌரவத்திற்கு இழுக்கு  என்று எண்ணிய நவாப் உடனே தன ஆட்களிடம் ஒரு பெரிய தொகையைக் கொடுத்துவிட்டு செருப்பை ஏலத்தில் எடுக்கச் சொன்னார்.

மாளவியாவும் தன காரியம் பலித்தது என அந்தத் தொகையை பல்கலைக் கழக நிதியில் சேர்த்துக் கொண்டார்.

ஒருவனை முன்னேற விடாமல் தடுப்பது,அவனது திறமையின்மையோ,தகுதிக் குறைவோ கூட அல்ல.இனி தனக்கு வாய்ப்பே இல்லை,விடிவு காலமே இல்லை என்று ஒரு முடிவுக்கு வருவதுதான்.

நன்றி இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க  கதை Empty Re: ஒரு பக்க கதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 1:04 pm

தண்டனை
******************
தன் பேரன் சிறு சிறு தவறுகள் செய்யும் போதெல்லாம் ஒருவர் கடுமையான தண்டனைகள் கொடுத்து வந்தார்.சிறுவனின் தகப்பனாரால் தன் தகப்பனாரை கண்டிக்க முடியவில்லை.சிறுவனின் நன்மைக்காகத்தான் தண்டனைகள் கொடுப்பதாக பெரியவர் கூறிவிடுவார்.

ஒரு நாள் பெரியவர்,சிறுவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.சிறுவன் சரியாகக் கவனிக்கவில்லை என்று கோபம் கொண்டு சிறுவனை கடும் பனியில் நிறுத்தி விட்டார்.

சிறுவன் நடுங்கிக் கொண்டிருப்பதைப்   பார்த்த  தகப்பனால் தாங்க முடியவில்லை.பெரியவரையும் ஒன்றும் கேட்கவும் முடியாத சூழ் நிலையில்  சடசடவென தன் சட்டையைக் கழட்டினார்.

வெளியே சென்று பனியில் தன் பையனுடன்  சேர்ந்து நின்றார்.பெரியவர்,''நீ ஏன் குளிரில் நிற்கிறாய்?''என்று கேட்டார்.அவர் உடனே பதில் சொன்னார்,''தந்தையே!நீங்கள் என் மகனை குளிரில் நடுங்க வைத்து சிரமப்படுத்துகிறீர்கள்.

பதிலுக்கு நான் என்ன செய்ய முடியும்?உங்கள் மகனைக் குளிரில் நடுங்க வைத்து சிரமப்படுத்துகிறேன்.''
இருவரையும் உள்ளே வரச் சொன்ன பெரியவர் அதன் பின் பேரனைக் கண்டிப்பதை நிறுத்தி விட்டார்.

நன்றி ;இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க  கதை Empty Re: ஒரு பக்க கதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 1:06 pm

அபசகுனம்
*******************

அந்தணர் ஒருவர் முக்கியமான காரியத்திற்காக குளித்துவிட்டு ஈர உடையுடன் வீட்டை விட்டு தெருவில் இறங்கினார் .அவருக்காகவே காத்திருந்தது போல ஒரு பூனை குறுக்கே ஓடியது.''சனியன் பிடித்த பூனை'' என்று ஆங்காரமான குரலில் கத்தினார் அந்தணர்.ஓடிய பூனை நின்றது.

கோபத்துடன் திரும்பிப் பார்த்து அவரை முறைத்தது.மீசை துடிக்க,''ஏ மனிதனே,எதற்காக என்னைத் திட்டினாய்?''என்று கடுமையான குரலில் கேட்டது.வியப்படைந்த அந்தணர்,''முக்கியமான காரியமாக நான் புறப்பட்டேன்.அந்த சமயத்தில் கறுப்புப் பூனையாகிய நீ அபசகுனம் போல குறுக்கே வரலாமா?''என்றார் 

சற்று சமாதானமான குரலில்.பூனை அவரைப் பார்த்துக் கேட்டது,''எல்லாம இறைவன் சித்தப்படிதான் நடக்கும் என்று நீ ஓதிய வேதங்கள் கூறவில்லையா?அப்படியிருக்க சகுனத்தின் பேரில் பழி போடுவது நியாயமா?இந்த சகுனம் பற்றி உனக்குக் கற்பித்தது யார்?உன் தாயா,தந்தையா,குருவா,அல்லது நீ ஓதிய வேதங்களா?''அனல் போல் பொழிந்த பூனையின் வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் அந்தணர்.

பூனை தொடர்ந்தது,''மூன்று நாட்களாக ஒரு எலியைக் குறி வைத்து நான் பாயும் போதெல்லாம் உங்கள் வீட்டிலிருந்து யாராவது குறுக்கே வந்துள்ளீர்கள்.அதற்காக நான் உங்களைத் திட்டினேனா?சரி,நமக்கு இன்னும் நேரம் வரவில்லை என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்.இன்றாவது அது சிக்கும் என்ற நம்பிக்கையில் நான் சென்று கொண்டிருக்கிறேன்.

''அபசகுனம் என்று வீட்டுக்குத் திரும்ப நினைத்த அந்தணர் தனது முடிவை மாற்றிக் கொண்டு,பூனைக்கு வந்தனம் சொல்லிவிட்டு தன பயணத்தைத் தொடர்ந்தார்.

----குருஜி வாசுதேவ் எழுதிய 'மாறுபட்டு சிந்தியுங்கள்'என்ற நூலிலிருந்து.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க  கதை Empty Re: ஒரு பக்க கதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 1:09 pm

எதையும் செய்வேன்
********************************
ஒரு நாடோடி ஒரு கிராமத்தை நோக்கி செல்கையில் பசி எடுத்ததால் சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.அப்போது அந்த வழியே ஒரு சுல்தான் குதிரையில் வந்து கொண்டிருந்தான்.

சுல்தான் இவனைப் பார்த்து,''இப்படி நாடோடியாகத் திரிகிறாயே?சாப்பாட்டுக்கு என்ன செய்வாய்?''என்று கேட்டார்.அதற்கு நாடோடி,''நான் நினைத்தால் எதையும் செய்வேன்,''என்றான்.

சுல்தான்,''என்னப்பா,ஒரு நாட்டிற்கே அதிபதியான எனக்கே நான் நினைத்ததைஎல்லாம் செய்ய முடியாது.ஒரு நாடோடியாகிய நீ எல்லாம் முடியும் என்கிறாயே?''என்று வியப்புடன் கேட்டார்.நாடோடி சொன்னான்,''உங்களால் முடியாது.

ஆனால் என்னால் முடியும்.''உடனே சுல்தான் ,''எங்கே என்னைக் குதிரையிலிருந்து இறங்க வை பார்ப்போம்,''என்று சவால் விட்டார்.அதற்கு அவன்,''அய்யா,உங்களைப் போன்ற சுல்தானைக் குதிரையிலிருந்து இறங்க வைக்க முடியாது.ஆனால் நீங்கள் குதிரையிலிருந்து இறங்கினால்,அடுத்த நிமிடமே உங்களைக் குதிரையில் திரும்ப ஏற வைக்க 

முடியும்,''என்றான்.உடனே சுல்தானும் கீழே இறங்கினார்.உடனே நாடோடி,''இதோ,நான் சொன்ன உடனே இறங்கி விட்டர்கள்,பார்த்தீர்களா?''என்றான்.சுல்தானுக்கக் கோபம் வந்து விட்டது.''நீ சரியான் ஏமாற்றுப் பேர்வழி,''என்று கூறிக் கொண்டே மீண்டும் குதைரை மீது ஏறி கிளம்பினார்.அவன் சொன்னான்,''பார்த்தீர்களா?நான் சொன்னது போல நீங்கள் குதிரையிலிருந்து இறங்கிய உடனே திரும்பவும் ஏற வைத்து 

விட்டேன்.''என்றான்.சுல்தான்,அந்த நாடோடி தன்னை முட்டாளாக்கி விட்டான் என்பதை உணர்ந்தாலும் அவனுடைய சாமர்த்தயத்தை மெச்சி ஒரு தங்கக் காசினைக் கொடுத்துவிட்டு சென்றார்.நாடோடிக்கு இப்போதைக்கு சாப்பாட்டுப் பிரச்சினை தீர்ந்தது.

நன்றி ;இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு பக்க  கதை Empty Re: ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum