தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

3 posters

Go down

அறிமுக நூல் - 2  திருக்குறள் !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Wed Aug 28, 2013 5:43 pm

அறிமுக நூல் - 2

திருக்குறள் !

நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வெளியீடு புரட்சிக்கவிஞர்  மன்றம் ,75.வடக்கு மாசி வீதி .மதுரை .625001.அலைபேசி 9443710219.விலை ரூபாய் 20.


நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் 
விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் உள்ள வாழுகின்ற தமிழ் அறிஞர்களில் ஒருவர் .மிகச் சிறந்த தமிழறிஞர் என்பதையும் தாண்டி மிகச்சிறந்த மனிதர் .பண்பாளர் .இவர் சினம்  கொண்டு யாருமே  பார்த்து இருக்க முடியாது . எழுத்தாற்றலும்   பேச்சாற்றலும்   மிக்கவர் .மாதம் தோறும் புரட்சிக்கவிஞர்  மன்றத்தில் உரையாற்றி நூலை வெளியிட்டு வருகிறார்கள் .

மிகச் சிறந்த தமிழ்ப்பணியை செய்து வருகிறார்கள் .இளைய சமுதாயத்திற்கு தமிழைக் கொண்டு சேர்க்கும் பணி . அறிமுக நூல் - 1 தொல்காப்பியத்தை தொடர்ந்து அறிமுக நூல் - 2 திருக்குறள் அடுத்து ஆற்றுப்படை இப்படி 50 க்கும் மேலான தமிழ் இலக்கிய அறிமுக நூல்கள் வர உள்ளன .

இந்த நூலை மிகச் சிறப்பாக வடிவமைத்து , வெளியீட்டு விழா நடத்தி குறைந்த விலையில் 20 ரூபாயில் வெளியிட்டு வரும் புரட்சிக்கவிஞர்  மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் அவர்களுக்கு பாராட்டுக்கள் . 

ஒரு பக்கம் ஊடகங்களில்  தமிழ்க்கொலை நடக்கின்றன .தமிழர்களின் இல்லங்களிலும் , உள்ளங்களிலும் தமிழ் குறைந்து வருகின்றது .தமிழ் வழிக் கல்விக்கு மூடு விழா நடத்தி ஆங்கில வழிக் கல்விக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கும் நிலை .தமிழ் ஆர்வலர்களுக்கு வேதனை .வெந்த புண்ணில் வேல் பாய்வதாக தமிழ்நாட்டில் நிகழ்வுகள் இருந்தாலும், புண்ணுக்கு மருந்தாக உலகின் முதல் மொழி தமிழ் .உலகின் முதல் மனிதன் தமிழன் .இலக்கண இலக்கியங்கள் நிறைந்த மொழி தமிழ் மொழி என்பதை பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது .இந்த நூல் படித்தால் உலகின் ஒப்பற்ற இலக்கியமான  திருக்குறள் தமிழ் மொழியில் உள்ளதற்காக உலகில் உள்ள ஓவ்வொரு தமிழரும் தமிழராய்ப்   பிறந்ததற்காக பெருமை கொள்ளும் விதமாக நூல் உள்ளது . 

தமிழாசிரியர்கள் , தமிழ் மாணவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் .வினா விடையில் நூலின் நடை மிக நன்று .படிக்கும் அனைவருக்கும் எளிதில் புரியும் விதமாக நூல் உள்ளது .திருக்குறள் தொடர்பான ஐயம் நீக்கும் விதமாக நூல் உள்ளது .

நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் மிக இனிமையானவர் ,எளிமையானவர் அவர் எழுத்தும் அவர் போலவே இனிமையாகவும் , எளிமையாகவும்  உள்ளன . நூல்ஆசிரியர் குழந்தை  உள்ளம் கொண்டவர் இந்த நூல் படித்தால் குழந்தைகளுக்கும் புரியும் விதமாக எழுதி உள்ளார்கள் .

திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் விதமாக பல் நூல்கள் வந்தபோதும் இந்தநூலிற்கு  இணையாக ஒரு நூல் இல்லை என்றே சொல்லலாம் .தமிழர்களின் இல்லங்களில் இருக்க வேண்டிய நூல் .நாம் வாங்கி படிப்பது மட்டுமன்றி நமது நண்பர்களுக்கும் பரிசளித்து மகிழ வேண்டிய நூல் .40 பக்கங்கள் மட்டுமே உள்ள கை அடக்க  நூல் .படிக்கத் தொடங்கினால் தொடர்ந்து படித்து முடித்து விடுவோம் .

பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ .

திருக்குறள் என்பதன் பொருள் விளக்குக .

குறள் யாப்பால் அமைந்த நூல்   'குறள் ' என்றே வழங்கப்பட்டது .அதன்   அருமையும் பெருமையும்    கருதிய பின்னவர்கள்  'திரு' என்றும் அடைமொழியைச் சேர்த்துத் திருக்குறள் என்றனர் .

உலகப்பொது மறையாகும் திருக்குறள் எனதை தொலைநோக்கு சிந்தனையுடன் பொருத்தமாக நூலின் பெயரிலேயே திரு சேர்த்து சிறப்பித்து உள்ளனர் என்பதை உணர முடிந்தது .

அறம் பொருள்  இன்பம் எனப்  பிறர் கூறினாலும் திருவள்ளுவர் அறம் பொருள்  காமம் என்று முப்பால் பெயர் சூட்டியது ஏன் ?

 அறம் பொருள்  இன்பம் என முறை வகுத்த தொல்காப்பியர் " இன்பம் என்பது  எல்லா உயிர்க்கும் பொதுவானது ' என்றார் .ஆனால் திருவள்ளுவர் ஆறறிவுடைய மாந்தர்க்கே  நூல் செய்தலால் ,மற்றைய உயிர்கள் கொள்ளும் இன்பம் போல் இல்லாமல் என்றும் வளர்வதாய் நிலை பெறுவதாய் முறைமையுடையதாய் அமைந்த நிறை இன்பத்தைக் காமம் என்றார் .எனெனில் ,தொல்காப்பியரே ' கமம் நிறைந்தியலும் ' என்றார் .ஆதலால்  கமம் - காமம் ஆயிற்று .
.
மனிதர்களின் ஒழுக்கம் சார்ந்த நிறை இன்பான காமம் என்ற  நல்ல   சொல்லை கொச்சையாக்கி  விட்டோமே என்று வருந்தும்படியான புதிய விளக்கம் .

தவம் ,வாய்மை என்பவற்றின் பொருள்கள் எவை ?

தவம் என்பது அவரவர்க்குரிய  கடமைகளைச் செவ்வையாகச்  செய்தலும் ,தம் துயர் தாங்கிக் கொண்டு ,பிற உயிர்களுக்குத் துயர் செய்யாமையுமாம் .
வாய்மை என்பது எவருக்கும் எத தீமையும் வராத சொல்லைச் சொல்லுதல் ஆம் ,பிறர்க்கு நன்மை பயக்குமாயின் அப்பொழுது சொல்லும் பொய்யும்  கூட  வாய்மைச் செயலைச் செய்ததாகக் கொள்ளப்படும் .என்றாலும் பொய் மெய்யாகி  விடாது .பொய் 
பொய்யேயாம்  .

மேடையில்   சிலர் பேசா விட்டாலும் பேசியதாகக் கருதி என்பார்கள் .ஆனால் அவர்கள் பேசவில்லை என்பதே உண்மை .அது போல பிறருக்குத் தீங்கு இல்லாத பொய் மெய்யாகக் கருதலாம் ஆனால் மெய்யாகி விடாது .பொய் மெய்யாகி  விடாது .பொய் 
பொய்யேயாம்  .என்ற முடிப்பு மிக நன்று .

நட்பு என்பது என்ன ?
நட்பு ;
நல்ல நட்பு வளர்பிறை போல வளரும் என்றும் பழகப் பழக நூல் நயம் போல் சிறக்கும் என்றும் உடை இழந்தவன் கை ஓடிக் காப்பது போல் உதவுவான் என்றும் .
மகிழ்வதற்கு மட்டுமன்றி இடித்துக் கூறித் திருத்துவதற்கும் நட்பு துணிவாக நிற்கும் "என்றும் நட்பினைப் பற்றி வள்ளுவர் கூறுகிறார் .

நட்பின் இலக்கணத்தை திருவள்ளுவர் சொன்னதை வழிமொழிந்து எழுதிய விளக்கம் மிக நன்று .நண்பன் தவறு செய்தால் எடுத்துச் சொல்லி திருத்துபவனே உண்மையான நண்பன் .இதை இன்றைய இளைய தலைமுறையினர்  புரிந்து கொள்ள வேண்டும் .
திருக்குறளின் நுட்பத்தை ,விளக்கத்தை ,சிறப்பை ,அருமை, பெருமையை எளிய வினா விடை நடையில் எழுதியுள்ள நல்ல நூல் .நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்களுக்கும்  வெளியீட்டாளர் பி .வரதராசன் அவர்களுக்கும்  பாராட்டுக்கள் .தொடரட்டும் உங்களின் தமிழ்ப்பணி .

.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

அறிமுக நூல் - 2  திருக்குறள் !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by ranhasan Wed Aug 28, 2013 6:29 pm

தங்களது விமர்சன பதிவை படிக்கும்போதே அந்த புத்தகத்தை எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்ற ஆசை எழுகிறது... இருபது ரூபாயில் இத்தனை இன்பம் தரும் செல்வத்தை பெற்றுவிட முடியும் என்பது விந்தையே...சிரத்தை எடுத்து விமர்சித்ததற்கும் பலர் அறிய தகவலை பகிர்ந்தமைக்கும் நன்றி...I love you
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai

Back to top Go down

அறிமுக நூல் - 2  திருக்குறள் !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Aug 29, 2013 11:30 am

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அறிமுக நூல் - 2  திருக்குறள் !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Thu Aug 29, 2013 7:48 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

அறிமுக நூல் - 2  திருக்குறள் !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை :தமிழ் மூதறிஞர் இரா .இளங்குமரனார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum