தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹைக்கூ என்றால் என்ன...?

+2
கலைநிலா
இந்திரஜித்தன்
6 posters

Go down

ஹைக்கூ என்றால் என்ன...? Empty ஹைக்கூ என்றால் என்ன...?

Post by இந்திரஜித்தன் Sun Dec 12, 2010 9:24 pm

அன்பான நண்பர்களே...

இணைந்து இருபத்துநாலு மணி நேரம் கூட ஆகவில்லை. ஹைக்கூ கவிதைகள் என்று ஒருவருடைய கவிதைகளை வாசித்ததும் வேதனை ஏற்பட்டது.

எதையோ எழுதி அதை ஹைக்கு என்று பெயர் கொடுத்து ... ஹையோக்கூ ஆக்கி கொல்லுவதைப் பார்த்து மனம் பொறுக்கவில்லை.

எனவே ஹைக்கு என்றால் என்ன என்று இத்திரி மூலம் விளக்கலாம் என்று இருக்கிறேன்...!

முதலில் ஹைக்கூ என்பதன் இலக்கணமாக ஆன்றோர் அறிவித்ததை இங்கே வழங்குகிறேன்.

ஹைக்கூ கவிதை என்பது முதல் வரியில் 5 அசையையும், இரண்டாவது வரியில் 7 அசையையும், மூன்றாவது வரியில் 5 அசையையும் தாங்கி நிற்கும் மூன்று வரிக் கவிதை. அசை என்னும் சொல் ஆங்கிலத்தில் சிலபிள் (syllable) என்று அழைக்கப்படுகிறது. நிப்பானிய மொழியில் இதனை ஓன் (音, on)) அல்லது ஓஞ்சி (音字, onji) அழைக்கிறார்கள். இதன் பொருள் ஓர் ஒலித்துகள் (அல்லது அசை). ஆங்கில மொழியியல் துறைக் கலைச்சொல்லில் இதனை மொரே (morae) என்கின்றனர். நிப்பானிய மொழியில் ஒவ்வொரு எழுத்தும் ஓர் அசை என்ற கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தமிழ் யாப்பிலக்கணத்தில் அசையானது நேரசை, நிரையசை என இருவகைப்படும். நிப்பானிய மொழியின் ஒஞ்சி என்பது தமிழில் உள்ள நேரசைக்குச் சமம். ஒற்று எழுத்துக்கள் கணக்கில் அடங்கா. (இது நிப்பானிய மொழிக்கும் தமிழுக்கும் பொருந்தி வரும் விதி!)
தொடக்கக் காலத்தில் இந்த 5, 7, 5 என்ற அசை அமைப்பு முறையாக கடைப் பிடிக்கப்பட்டது. காலப் போக்கில் இந்த 5, 7, 5 என்ற அளவுகோலை விட்டுவிட்டார்கள். தமிழ் அசை மரபின் 5, 7, 5 என்ற அசை (நேரசை, நிரையசை) வடிவில் அமைந்த ஐக்கூ கவிதைகளை ஓவியக் கவிஞர் வெளியிட்டார்.

இன்னும் வரும்....
avatar
இந்திரஜித்தன்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 10
Points : 14
Join date : 11/12/2010

Back to top Go down

ஹைக்கூ என்றால் என்ன...? Empty Re: ஹைக்கூ என்றால் என்ன...?

Post by இந்திரஜித்தன் Sun Dec 12, 2010 9:31 pm

இரண்டு,மூன்று சிறு சொற்களைக்கொண்ட மூன்று அல்லது நான்கு வரிகளில் பொதுவாக ஒரு கருத்தைச் சொல்லி, இறுதியாக‌ மேலே சொன்ன நான்கு வரிகளை வேறுபாடான கோணத்தில் ஒற்றைச் சொல்லுடன் பொட்டில் அடித்தாற்போன்று பொருந்த வைப்பது நல்ல ஹைக்கூ..

சில உதாரணங்கள் :

பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணாடிகள்
- நா.முத்துக்குமார்

விதவை முகம் பார்க்கிறாள்
கண்ணாடியில்
ஒட்டுப் பொட்டு
- கவிபாலா

கண்ணாடியைத் துடைக்கத் துடைக்க
என் முகத்தின் அழுக்கு
மேலும் தெளிவாகிறது
- வைத்தீஸ்வரன்

கற்பழித்தவன் கையால்
அவள் கழுத்தில் கயிறு
மணத்தண்டனை
- கலைவேந்தன்

இவற்றைக் காணும் போது ஹைக்கூ என்ற பெயரில் மூனுவரிகளை மடக்கி எழுதும் ஹையோக்கூ வரிகளையும் காணுங்கள்...

தமிழில் அரும்தொண்டாற்றி வரும் தமிழ்த்தோட்டம் தமிழ்பார்க் அவர்களின் கண்ணில் கூட இங்கே நடக்கும் ஹைக்கூ கொலை தெரியவில்லையா என்று வியக்கிறேன்...


இன்னும் வரும்...
avatar
இந்திரஜித்தன்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 10
Points : 14
Join date : 11/12/2010

Back to top Go down

ஹைக்கூ என்றால் என்ன...? Empty Re: ஹைக்கூ என்றால் என்ன...?

Post by இந்திரஜித்தன் Sun Dec 12, 2010 9:37 pm

ஹைக்கூ பற்றி மிக அருமையான நவீன கவிதை எழுத்தாள்ர் ஆதி அவர்கள் கூறியுள்ள கருத்தினைக் காண்போம்..

பழைய குளம்
குதித்தது தவளை
தண்ணீர் சத்தம்


இந்த கவிதை ஹைகூ கவிதையின் பேராசான் பாஷோவால் எழுதப்பட்ட கவிதை, பாஷோவுக்கு பிறகு ஹைகூ கவிதைகளே எழுதப்படவில்லை என்றும் சொல்கிறார்கள்.. காரணம் ஹைகூவி இலக்கணத்தை யாரும் முழுதாக பின் பற்றவில்லை என்பது ஒரு வாதமானாலும், ஹைகூ கவிதைக்காக வீச்சும் இல்லை என்பது இன்னொரு வாதம்..

தமிழ் சூழலில் ஹைகூ குறித்து எண்ணற்ற ஆய்வுகள் நிகழ்ந்திருக்கின்றன, நிகழ்கின்றன.. ஆய்வறிக்கை சமர்ப்பித்த ஒவ்வொருவரின் கருத்து ஒவ்வொரு மாதிரி இருக்கின்றது.. ஆதாவது ஹைகூவை ஆய்வு செய்தவர்களின் ஹைகூ குறித்த புரித்தல்கள் ஒரு பட்டில்லை..

ஆனாலும் அவர்களின் ஆய்வு நூல்களில் இருந்து பல அரிய தகவல்களை பெற இயல்கிறது..

சரி இந்த பாஷோவின் கவிதையை பற்றி பார்ப்போம்..

ஹைகூ விதிப்படி ஒரு காட்சியை பாஷோ அப்படியே பதிவு செய்திருக்கிறார்.. இந்த கவிதைக்கான உண்மையான பொருள் இந்த கவிதையை அவர் வடிக்கும் போது அவரின் பக்கத்தில் இருந்திருந்தாலோ, அல்லது பாஷோவாக இருந்திருந்தாலோ மட்டுமே அறிந்திருக்க முடியும்.. மற்றப்படி சொல்லும் கருத்துக்கள் எல்லாம் நம் மனதுக்கு தோன்றும் கருத்துக்களே....

பழைய குளம் என்பதை நான் வாழ்க்கையாக எடுத்துக் கொள்கிறேன்..

இந்த வாழ்க்கை பழையதுதானே பலர் வாழ்ந்தது, பலர் வாழ்ந்து கொண்டிருப்பது, பலர் வாழவிருப்பது..


குளத்தில் தவளை குதித்தது தண்ணீர் சத்தம் என்பதன் மூலம், குளம் முன்பு அமைதியாக இருந்திருக்க வேண்டும்.

அமைதியான ஒரு வாழ்வில் திடீரென்று ஒரு பெரும் துயரோ, சோதனையோ, மகிழ்ச்சியோ உண்டாகும் போது வாழ்வும் இந்த குளம் மாதிரித்தான் அமைதி இழக்கிறது, ஆர்ப்பறிக்கிறது..

பிறகு அந்த குளம் அமைதியாகி இருக்க வேண்டும்..

குளத்தோடு தவளையும் ஒன்றாகி இருக்க வேண்டும்.. அப்புறம் தவளை குளத்துக்குண்டானதாய் மாறிவிடுகிறது..

நம் வாழ்வில் நிகழும் நேர்ச்சிகளும் அப்படித்தான் நம்முடையதாய் ஆகிவிடுகிறது, அந்த நேர்ச்சியை, அந்த நிகழ்வை நாம் விரும்புகிறோமோ இல்லையோ, அது நமக்குண்டானது, நம்முடையது என்றாகிவிடுகிறது.. மீண்டும் அந்த தவளை குளத்தில் இருந்து வெளியேறவும் செய்யலாம், அப்போதும் அந்த குளம் கொஞ்சம் அமைதி இழக்கலாம், மீண்டும் தவளை குதிக்கலாம், குளம் சபத்திக்கலாம்.. குளத்திலும், வாழ்விலும் இது தொடரும் நிகழ்வுதான்..


விழிப்புணர்வு இன்னும் வரும்...
avatar
இந்திரஜித்தன்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 10
Points : 14
Join date : 11/12/2010

Back to top Go down

ஹைக்கூ என்றால் என்ன...? Empty Re: ஹைக்கூ என்றால் என்ன...?

Post by கலைநிலா Sun Dec 12, 2010 10:37 pm

அருமையான விழிப்புணர்வு கட்டுரை .நன்றி தோழரே .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

ஹைக்கூ என்றால் என்ன...? Empty Re: ஹைக்கூ என்றால் என்ன...?

Post by கலைநிலா Sun Dec 12, 2010 10:44 pm

உங்களுடைய வழிக்காட்டல் தேவை தோழரே.

நிறை,குறைகளை, சொல்லுங்கள் .திருத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

ஹைக்கூ என்றால் என்ன...? Empty Re: ஹைக்கூ என்றால் என்ன...?

Post by கலைவேந்தன் Sat Jan 07, 2012 12:36 pm

அருமையான தொடக்கம் இந்திரஜித்தன்... ஏன் தொடரவில்லை..??

ஹிஷாலிக்காக தேடியதில் கிடைத்தது... ஹிஷாலி இதை வாசித்துப் பயன் பெறுவாராக...
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

ஹைக்கூ என்றால் என்ன...? Empty Re: ஹைக்கூ என்றால் என்ன...?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 07, 2012 2:36 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஹைக்கூ என்றால் என்ன...? Empty Re: ஹைக்கூ என்றால் என்ன...?

Post by pakee Sat Jan 07, 2012 4:07 pm

மிக்க மகிழ்ச்சி சியர்ஸ்
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

ஹைக்கூ என்றால் என்ன...? Empty Re: ஹைக்கூ என்றால் என்ன...?

Post by ஹிஷாலீ Sat Jan 07, 2012 4:41 pm

கலைவேந்தன் wrote:அருமையான தொடக்கம் இந்திரஜித்தன்... ஏன் தொடரவில்லை..??

ஹிஷாலிக்காக தேடியதில் கிடைத்தது... ஹிஷாலி இதை வாசித்துப் பயன் பெறுவாராக...

முதலில் இப்பதிவை பார்த்ததும் என்னை தான் அவர் கேலி செய்தாரோ என்று பயந்து விட்டேன். பின் படித்து பார்த்த பின்பு தான் புரிந்தது
மிக்க நன்றி கலை அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹைக்கூ என்றால் என்ன...? Empty Re: ஹைக்கூ என்றால் என்ன...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum