தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm

» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm

» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm

» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm

» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm

» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) -    கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm

» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி  ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm

» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm

» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm

» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm

» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm

» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm

» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm

» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm

» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm

» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm

» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm

» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm

» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm

» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm

» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm

» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am

» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am

» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am

» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am

» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm

» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm

» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm

» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm

» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm

» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm

» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm

» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

4 posters

Go down

 தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 9:14 pm

தமிழனின் தற்பெருமைக்கான தகவல்கள் அல்ல இவை. தன் இனத்தை பற்றிய தகவல்களை சிறிதேனும் அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே.. இங்கு சில தகவல்கள்.

தமிழ் பேசும் மக்கள் உலகில் சுமார் 100 மில்லியன்.

சுமேரியன், அராபிக், மாயன், மீசோ, பெர்சியன், துருக்கி இம்மொழிகள் உருவாக்கத்தில் தமிழும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.

சுமேரியன் மொழி குறியீடுகள் (Script) தமிழ் சுமேரியன் இரண்டிற்குமுள்ள உறவை வெளிப்படுத்துகிறது.

தமிழ் உலகின் 7 புராண மொழிகளுள் ஒன்று (செம்மொழி).

தமிழ் திராவிட மொழிகளுக்கெல்லாம் மூலம்.

வெளிநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட திராவிட மொழி தமிழ் (இலங்கை, சிங்கப்பூர் )

பண்டைய தமிழ் இனத்தில் சாதிகள் இல்லை.

தொல்காப்பியம் 3000 வருட பழமையான நூல்.

உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டது திருக்குறள்.

நன்றி http://eniyavaikooral.blogspot.com/2
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 9:16 pm

ஜென், புத்த மதங்களை பல்லவ பேரரசு உருவாக்கியது.

ஆசிய சண்டை கலையின் தந்தை எனப்படுவது "கலரி"

தமிழ் - பிராமி எழுத்து வரிவடிவங்கள் எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளன.

வேட்டி, சேலை பாரம்பரிய உடைபற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது.

தமிழரின் பழமையான நாட்டியகலை பரத நாட்டியம்.

இன்றும் நல்ல நிலையில் இயங்கி வரும் கரிகாற்சோழன் கட்டிய கல்லணை தமிழனின் தொழிற்நுட்பத்திற்கு சான்று.

ஜல்லிக்கட்டு 2000 வருடத்திற்கு முன்பு இருந்து வரும் தமிழரின் வீர விளையாட்டு.

தமிழ் அளவைகளுள் ஒன்றுமையான கணக்கீடு உண்டு.
தஞ்சாவூர் கோயில் துல்லியமான அளவீடுகளுக்கு கட்டடக்கலைக்கும் ஒரு சான்று.
சித்த மருத்துவம் தமிழரின் பழமையான மருத்துவம்.

நான்றி ;இனியவை கூறல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 9:17 pm

நியூசிலாந்தில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மணி உள்ளது. (1200AD)

பண்டைய தமிழரிடம் வலிமையான கடற்படை இருந்திருக்கிறது,

நீண்ட கடற்பயணமும், வெளிநாட்டு வாணிபமும் பழந்தமிழர் மேற்கொண்டிருந்தனர்.


நன்றி இனியவை கூறல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 9:24 pm

ஆய கலைகள் அறுபத்துநான்கும் ஏய உணர்விக்கும் என்றெல்லாம் சொல்லப்படுகிறதே.. அந்த 64 கலைகளும் எவை என உங்களுக்குத்தெரியுமா? இதோ உங்களுக்காக : 
1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்); 
2. எழுத்தாற்றல் (லிபிதம்); 
3. கணிதம்; 
4. மறைநூல் (வேதம்); 
5. தொன்மம் (புராணம்); 
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)
✍ ✍ ✍ ✍ ✍ ✍ ✍ ✍
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 9:32 pm

 தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! 1234222_620243718006281_892465117_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by Muthumohamed Wed Sep 04, 2013 1:35 am

தமிழைபற்றிய தொகுப்பு அருமை அண்ணா
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 34
Location : Palakkad

Back to top Go down

 தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Sep 04, 2013 10:58 am

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 5:11 pm

நன்றி கருத்துக்கு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 9:41 pm

நற்பண்புகள்


  1. கண்ணுக்கு கருணை  வேண்டும்         
  2. காதுக்கு கேள்வி வேண்டும்              
  3. நாவுக்கு அடக்கம் வேண்டும்            
  4. வாக்குக்கு உறுதி வேண்டும்             
  5. கிரீடத்துக்கு பணிவு வேண்டும்           
  6. கரத்துக்கு ஈகை வேண்டும்              
  7. இரைப்பைக்கு திருப்தி வேண்டும்     .
  8. இடைக்கு கற்பு வேண்டும்                
  9. சொல்லுக்கு இனிமை வேண்டும்         
  10. காலுக்கு கட்டுப்பாடு வேண்டும்        
  11. நடையிலே தெளிவு வேண்டும்         
  12. உடையிலே தூய்மை வேண்டும்         
  13. கழுத்துக்கு மாலை வேண்டும்           
  14. எண்ணத்தில் வாய்மை வேண்டும்       
  15. மனதுக்கு மாண்பு வேண்டும் 
  16. நெஞ்சுக்கு நேர்மை வேண்டும்                 
  17. விரலுக்கு லயம் வேண்டும்              
  18. முகத்துக்கு புன்னகை வேண்டும்        
  19. முத்தத்துக்கு அழுத்தம் வேண்டும்       
  20. கதைக்கு கால் வேண்டும்        
  21. காதலுக்கு உண்மை வேண்டும்      
  22. கவிதைக்கு கருத்து வேண்டும்         .
  23. ஆண்மைக்கு உழைப்பு வேண்டும்
  24. பெண்மைக்கு பொறுமை வேண்டும்
  25. இளமைக்கு துடிப்பு வேண்டும்
  26. முதுமைக்கு அமைதி வேண்டும்
  27. ஆசிரியனுக்கு அன்பு வேண்டும்
  28. மாணவனுக்கு ஆர்வம் வேண்டும்
  29. வீரனுக்கு விவேகம் வேண்டும்
  30. தலைவனுக்கு நிதானம் வேண்டும்
  31. அறிஞனுக்கு செயல் வேண்டும்
  32. காமத்துக்கு கதவு வேண்டும்           
  33. கணவனுக்கு வருமானம் வேண்டும்    
  34. மனைவிக்கு சிக்கனம் வேண்டும்    
  35. இதயத்துக்கு ஈரம் வேண்டும்           
  36. அன்னைக்கு எல்லாம் வேண்டும்    
  37. தம்பிக்கு ஒற்றுமை வேண்டும் 
  38. அண்ணனுக்கு அரவணைப்பு வேண்டும்     
  39. தந்தைக்கு கன்டிப்பு வேண்டும்    
  40. மகனுக்கு கீழ்படிதல் வேண்டும்  
  41. மகளுக்கு பொருமை வேண்டும் 
  42. மாமியாருக்கு அன்பு வேண்டும்  
  43. மாமனாருக்கு ஆளுமை வேண்டும்    
  44. குழந்தைக்கு குதூகலம் வேண்டும்    
  45. எழுத்துக்கு உணர்வு வேண்டும்          
  46. உழைப்பவனுக்கு முணைப்பு வேண்டும்    
  47. மக்களுக்கு உணர்வு  வேண்டும்    
  48. காவலருக்கு கண்ணியம் வேண்டும்    
  49. மருத்துவருக்கு இரக்கம் வேண்டும்    
  50. நீதிபதிக்கு தர்மம் வேண்டும்     


Posted by DrBALA SUBRA MANIAN 



Last edited by கே இனியவன் on Thu Sep 05, 2013 6:14 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Sep 05, 2013 11:18 am

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 5:59 pm

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by அ.இராமநாதன் Thu Sep 05, 2013 6:09 pm

மணைவிக்கு சிக்கனம் வேண்டும்    ...மனைவி என
இருக்க வேண்டும்
-
கிரிடத்துக்கு பணிவு வேண்டும்      ..கிரீடம் என இருக்க
வேண்டும்     
-
மிக்க மகிழ்ச்சி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78

Back to top Go down

 தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 6:14 pm

திருத்தி விட்டேன் ஐயா நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 7:38 pm

தமிழர்களால் கைவிடப்பட்டவை.



அம்மி (எங்கள் வீட்டில் உள்ளது  ):
குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல்.

அண்டா (எங்கள் வீட்டில் உள்ளது  ):
அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.

அடுக்குப்பானை:
ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர்.

ஆட்டுக்கல் (எங்கள் வீட்டில் உள்ளது  ):
வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும், குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம்.

அங்குஸ்தான்:
தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை.

ஒட்டியாணம்:
பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளிப் பட்டையால் செய்யப்பட்ட ஒருவகை ஆபரணம்.

எந்திரம் (எங்கள் வீட்டில் உள்ளது  ):
(அரிசி, உளுந்து முதலிய தானியங்களை அரைக்கவோ உடைக்கவோ பயன்படுத்தப்படும்) கீழ்க்கல்லில் நடுவில் உள்ள முளையில் சுற்றும்படியாக மேல்கல் பொருத்தப்பட்ட வட்டவடிவச் சாதனம். இதைத் திரிகல், திரிகை, இயந்திரம் என்றும் கூறுவர்.

உரல் (எங்கள் வீட்டில் உள்ளது  ):
வட்ட வடிவ மேற்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப் பகுதியை உடையதும் தானியங்களைக் குத்த அல்லது இடிக்கப் பயன்படுத்துவதுமான கல்லால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட சாதனம்.

உறி:
(வீடுகளில் பால், தயிர், வெண்ணெய் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும்) உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்புவடிவ அமைப்பு.

குஞ்சம் - குஞ்சலம்:
(பெரும்பாலும் பெண்களின் சடையில் இணைத்துத் தொங்கவிடப்படும்) கயிற்றில் இணைக்கப்பட்ட நூல் கொத்து அல்லது துணிப்பந்து போன்ற அலங்காரப் பொருள்.

கோகர்ணம்:
(ரசம், மோர் முதலியவற்றை ஊற்றப் பயன்படும் விதத்தில்) ஒரு பக்கத்தில் மூக்கு போன்ற திறப்பை உடைய ஒருவகைப் பாத்திரம்.

கொடியடுப்பு:
ஒரு பெரிய அடுப்பும் அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட சிறிய அடுப்பும் கொண்ட அமைப்பு.

சுளகு (எங்கள் வீட்டில் உள்ளது  ):
வாய்ப்பகுதி குறுகளாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும், முறத்தைவிடச் சற்று நீளமான) ஒரு சாதனம்.

தாவணி:
(இளம் பெண்கள் அணியும்) ஒரு சுற்றே வரக்கூடிய அளவுக்கு இருக்கும் சேலையின் பாதி நீளத்திற்கும் குறைவான ஆடை.

தொடி:
பெண்கள் தோளை அடுத்த கைப் பகுதியில் அணிந்து கொள்ளும் பிடித்தாற்போல் (அழுத்தம்) இருக்கும் அணி வகை.

நடைவண்டி:
(குழந்தை நடைபழகுவதற்காக) நின்று நடப்பதற்கு ஏற்றவகையில் மரச் சட்டத்தை உடைய மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட விளையாட்டுச் சாதனம்.

பஞ்சமுக வாத்தியம்:
கோயில்களில் பூஜையின் போது வாசிக்கப்படுவதும் ஐந்து தட்டும் பரப்புகளைத் தனித்தனியாகக் கொண்டிருப்பதுமான, பெரிய குடம் போன்ற ஒரு தாள வாத்தியக் கருவி.

பாக்குவெட்டி:
பாக்கு வெட்டுவதற்குப் பயன்படும்) சற்றுத் தட்டையான அடிப்பகுதியையும் வெட்டுவதற்கு ஏற்ற கூர்மை உடைய மேற்பகுதியையும் கொண்ட சாதனம்.

பிரிமணை (எங்கள் வீட்டில் உள்ளது  ):
(பானை போன்றவை உருண்டுவிடாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் அடியில் வைக்கும்) பிரிகளைக் (வைக்கோல்) கொண்டு வளையம் போல பின்னப்பட்ட சாதனம்.

புல்லாக்கு:
மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்கவிடப்படும் பெண்களின் அணி வகைகளுள் ஒன்று.

முறம்:
(தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) நுனிப்பகுதி சற்று அகலமாக இருக்கும்படி மெல்லிய மூங்கில் பிளாச்சு முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம்.

மரப்பாச்சி:
பெண் குழந்தைகளுக்கான, மனித உருவம் செதுக்கப்பட்ட மரப் பொம்மை.

லோட்டா (எங்கள் வீட்டில் உள்ளது  ):
நீர் குடிப்பதற்கான நீள் உருண்டை வடிவக் குவளை.

அரிக்கன் விளக்கு (எங்கள் வீட்டில் உள்ளது  ):
காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு.

அடிகுழாய்:
கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய்.

கூஜா (எங்கள் வீட்டில் உள்ளது  ):
(குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும்) புடைத்த நடுப்பகுதியும் சிறிய வாய்ப் பகுதியும் அதற்கேற்ற மூடியும் கொண்ட கலன்.

மின் சாதனங்கள் வந்துவிட்ட பிறகு இத்தகைய நம் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் எல்லாம் இப்பொழுது அழிந்துகொண்டே வருகின்றன. முக்கால்வாசி புழக்கத்தில் இல்லை என்றே கூறலாம். அவற்றையெல்லாம் சேமித்து, பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்பதை நினைவில் நிறுத்துவோம்.



Enlarge this image
 தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! 1185963_457233257724243_583727033_n




அதிசயம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! Empty Re: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum