தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Yesterday at 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Yesterday at 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Yesterday at 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Yesterday at 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Yesterday at 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Yesterday at 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Yesterday at 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Yesterday at 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Yesterday at 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
கடிகாரங்கள் கற்பிக்கும் பாடம்
3 posters
Page 1 of 1
கடிகாரங்கள் கற்பிக்கும் பாடம்
Enlarge this image
நூறு வருடங்கள் பழமையானதொரு தேவாலயம் இருந்தது. அதன் பாதிரியாருக்கு உடல் நலம் குன்றியிருந்ததால் அந்த தேவாலயத்தின் நிர்வாகக் குழுவினர் புதியதொரு பாதிரியாரை நியமிக்க முடிவு செய்தனர். ஒரு இளமையான பாதிரியார் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் தேவாலயத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அதைக் கண்கவரும் வண்ணம் புதுப்பிக்க வேண்டும் என்று எண்ணினார். தேவாலய நிர்வாகக் குழுவினரின் உதவியோடு பலவகை மாற்றங்களைச் செய்தார். சுவர்களுக்கு வண்ணம் பூசி, புதிய தரை விரிப்புகளை விரித்து,பழுதுபட்ட பகுதிகளைப் புதுப்பித்து, கவர்ச்சிகரமாக மாற்றினார்.
புதுப்பித்தலின் ஒரு பகுதியாக சர்ச்சிலிருந்த பழைய கடிகாரத்துக்குப் பதிலாக புதியதொரு கடிகாரத்தைப் பொருத்த முடிவு செய்தார். பழைய கடிகாரத்தை அகற்றுவதை தேவாலயத்திற்கு வழிபட வருவோரில் பலரும் விரும்பாததால்,பழைய கடிகாரத்துக்குப் பின்னால் புதுக் கடிகாரத்தைப் பொருத்தினார்.
புதுக்கடிகாரம் மிகவும் மகிழ்வோடு, ஒவ்வொரு நொடியிலும் டிக், டிக் டிக் என்ற ஒலியோடு மிருதுவாகக் குதித்தோடியது. புதுக்கடிகாரத்தின் ஓட்டத்தில் அதிக சக்தியும் ஆர்வமும் நிறைந்திருந்தது. ஓட்டத்தில் அதிக சக்தியும் ஆர்வமும் நிறைந்திருந்தது. அதே சமயம், பழைய கடிகாரம் மிகுந்த சிரமத்தோடும் மிகுந்த சத்தத்தோடும் புதிய கடிகாரத்தோடு இணைந்து ஓட முயற்சித்தது.
ஆரம்பத்தில் புதிய கடிகாரம் மிகவும் கர்வத்தோடு பழைய கடிகாரத்துடன் பேசத் தயங்கியது. சிறிது காலம் சென்றதும் தனக்கு ஏற்பட்ட சலிப்பையும் சோர்வையும் விரட்டுவதற்காக பழைய கடிகாரத்தோடு பேசத் தீர்மானித்தது.
உரையாடலின்போது புதிய கடிகாரம், பழைய கடிகாரத்திடம் “இங்கே எவ்வளவு காலமாக இருக்கிறாய்?” என்றது. அதற்குப் பழைய கடிகாரம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக அங்கே இருப்பதாகக் கூறியது. அதைக் கேட்டதும் புதுக்கடிகாரம் யோசனையில் ஆழ்ந்தது. நூறாண்டு காலத்தில் எத்தனை முறை பழைய கடிகாரம் குதித்தோடியிருக்கும் என்று கணக்குப் போட முயன்றது. ஒரு நிமிடத்தில் 60 முறையும், ஒரு மணி நேரத்தில் 3600 முறையும், ஒரு நாளில் 86400 முறையும், 1மாத்தில் 2692000 முறையும், ஒரு வருடத்தில் 31104000முறையும், 100 வருடங்களில் 3110400000 முறையும்,குதித்து ஓடியிருக்கும் என்று கணக்குப் போட்ட புதுக்கடிகாரம் ஆச்சரியத்தில் அசந்து போய் தான் ஓடுவதை நிறுத்திக் கொண்டது. அதைக் கவனித்த பழைய கடிகாரம், “ஏன் அமைதியாகிவிட்டாய்?” என்று கேட்டது.
அதற்குப் புதுக்கடிகாரம், “நீ நூறாண்டு காலமாக எத்தனை முறை குதித்துக் குதித்து ஓடியிருப்பாய் என்று கணக்கிட்டேன். கோடிக்கணக்கான முறை குதித்தோடியிருக்கிறாய். ஆனால் என்னால் அந்த அளவுக்கு ஓட முடியுமா என்று நினைத்தப் பார்த்தபோது எனக்கு மாரடைப்பே வரும் போலிருந்தது" என்றது.
அதைக் கேட்ட பழைய கடிகாரம், “உன்னுடைய நிலை எனக்குப் புரிகிறது. ஆனால் உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன். நீ ஒரு நொடி குதிக்க முடியுமா?” என்றது.
அதற்குப் புதிய கடிகாரம், “அது மிகவும் சுலபம். மிகச் சுலபமாக ஒரு நொடி நான் குதிக்க முடியும்" என்றது. பழைய கடிகாரம் பதிலளித்தது, முதலில் அதைச் செய்.. ஒரு நேரத்தில் ஒரு நொடிக்கு ஒரு முறை மட்டும் குதித்து ஓடுவதைப் பற்றி உன் சிந்தனையைச் செலுத்து. நூறாண்டு காலம் ஓடுவதைப் பற்றி இப்போதே சிந்தித்துக் குழம்பிக் களைத்துப் போகாதே"என்றது. புதுக்கடிகாரம் தெளிவு பெற்று மகிழ்வுடன் அடுத்த நொடியைக் குதித்து கடந்தது.
இந்த கதையிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் நீதி:- நமது வாழ்நாள் முழுக்க நாம் செய்ய வேண்டியது அனைத்தையும் பற்றிச் சிந்திக்காதீர்கள். அடுத்த விநாடியில் நாம் செய்ய வேண்டியதைப் பற்றி மட்டுமே சிந்தியுங்கள். ஒரு நேரத்தில் ஒரு நாளைப் பற்றி மட்டுமே சிந்தியுங்கள். அது நமது பயணத்தை மகிழ்வோடு தொடர வழி வகுக்கும்.அளவுக்கதிகமாகச் சிந்தித்து தைரியத்தை இழந்து சோர்வடையாதீர்கள். ஊக்கத்தைக் கைவிடாதீர்கள். மலையளவு வேலையிருக்கிறது என்று மலைத்துப் போகாதீர்கள். சிறுகச் சிறுக உடைத்தால் பெருமலையும் சிறுமலையாகிவிடும் என்பதை மறவாதீர்கள் தோழர்களே, தோழியரே,
கடிகாரம் தந்த படிப்பினை உங்களை வாழ்வின் உச்சத்துக்குக் கொண்டு செல்லட்டும். வாழ்க வளமுடன்!!.
நன்றி: தமிழில், சி.சந்திரசேகரன், எம்.ஏ., பி.எட், தலைமையாசிரியர் (ஓய்வு), கேந்திரிய வித்யாலயா, திருச்சி உங்களுக்கு வழங்குபவர் திருச்சி பிரசன்னா, பி.ஏ., மற்றும் கிருஷ்ணா atchayakrishna.in
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கடிகாரங்கள் கற்பிக்கும் பாடம்
பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கடிகாரங்கள் கற்பிக்கும் பாடம்
நல்ல பதிவு நன்றி அண்ணா
Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 36
Location : Palakkad
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum