தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்

2 posters

Go down

நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள் Empty நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 8:13 pm

திடீரென்று உன் நினைப்பு[You must be registered and logged in to see this link.]
பற்றிக் கொண்ட நெருப்பாய்
ஈரமாய்
உலர்வாய்
இன்னும்
என்னென்னவெல்லாமோ
இறுதியில் வந்தாய்
நீ அணைத்துக் கொண்டது
கசகசப்பாய் இருந்தது
தீர்ந்து போயிருந்தது காதல்


 லீனா மணிமேகலை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள் Empty Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 8:15 pm

வேதனை எதுவுமில்லை.
உன்னை எந்த அறைக்குள்
பூட்டுவதெனத் தெரியாமல்
ஒவ்வொரு அறையாய்
மாற்றிக் கொண்டே
இறுதியில்
ஒரு அகதியைப் போல்
வெளியேற்றுகிறேன்.


கவிஞர் ரத்திகா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள் Empty Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 8:17 pm

ஒரு குறைமாதச் சிசுவின்
அசைவென அவன் நினைவு
அன்பே
நாம் இணைதல் அசாத்தியம்
மணலில் பதிந்த சுவடுகளனைத்தையும்
காற்று கௌவித் தின்னட்டும்
எஞ்சியவை-
ஒரு சொல்
ஒரு முத்தம்
-மைதிலி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள் Empty Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 8:18 pm

விஷப் பாம்பொன்று
என் மீதேறி
நிதானமாக
கடந்து போகிறது
புரிதலற்ற – உன்
பார்வைகளைச்
சந்திக்கும் பொழுதெல்லாம்


அ.வெண்ணிலா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள் Empty Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 8:19 pm

வேதனையுடன் மறைந்து சென்றும்
பார்த்துவிட்டாய் நீ!
யாரோ போல் முகம் திருப்பியபோது
ஞாபகம் வந்தது . . .
உன்னோடு மணிக்கணக்கில்
பேசிய நாட்களும்
வெயில்படாமல் நீ என்னை
மறைத்து நின்றதுவும்

- மு.சத்யா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள் Empty Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 8:20 pm

சோரம் மிகப் புனிதமானது
ஏனெனில் பணம் பத்திரங்கள் துச்சம் அதில்
பிறிதும் கண்மூடிக் காதல்
அதில்தான்
திறந்த முழு சரணடைவு
அதில்தான்,
அன்புடை நீ! மாசுபடுத்தாதே இதை.
இன்னொரு திருமணமாக்கி இதையும்.

- மாலதி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள் Empty Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 8:22 pm

எனது பெண்ணைக்
கண்டுபிடிக்க முடிவதில்லை
அவள் எல்லா பேருந்து நிலையங்களிலும்
என் கண்களில் படாமல் ஒளிந்து கொள்கிறாள்
அவளைத் தேடிச் சலித்த கண்களில்
முலைகளும், பிருஷ்டங்களுமே
படுகின்றன.

லட்சுமி மணிவண்ணன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள் Empty Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 8:23 pm

இன்று நான்
முழுக்க முழுக்க
காமத்தால் நிரம்பியிருக்கிறேன்
அவ்வளவு
இணக்கமாக இருக்கிறேன்
இந்த உலகத்தோடு

-மனுஷ்ய புத்திரன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள் Empty Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 8:24 pm

நீ பிராயத்தைக் கரையவிட்ட
அதே நதியின் கரையில்தான்
உன் மகளும் அமர்ந்திருக்கிறாள்
அமைதியாக

 -சங்கர் ராமசுப்ரமணியன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள் Empty Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 8:25 pm

கண்ணன் தன் தோழர்களுக்குச் சொல்கிறான்
ராதா இப்பொழுது வந்து விடுவாள்
கண்ணன் ஒன்றும் அவ்வளவு சுயநலக்காரனல்ல
தனது தோழர்களில் சிலரும்
ராதாவுக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதை
அறியாதவனும் அல்ல
வீட்டு முற்றங்களில் சாலையோரங்களில் தியேட்டர் இருளில்,
போக்குவரத்து சிக்னல் விளக்குகளின் கீழ்
இன்னும் பலரும் ஆங்காங்கே பதுங்கியிருக்கிறார்கள்.
ஒரே நேரத்தில் உங்களுக்காகவும் எல்லோருக்காகவும்
தனித்தனியே தோன்றி
காதலை வழங்குபவள்தான் ராதா
பார்வையாளராகிய நீங்களும் அறிந்தேயிருக்கிறீர்கள்.
-செல்மா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள் Empty Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 8:26 pm

தலைவாரி பூச்சூடி மையிட்டு
நீ
காத்திருப்பது உன்
கணவனுக்குத்தான் என்றாலும்
மெல்ல மெல்லப் படியேறி வரும்
என்னைக் கண்டும் சிலிர்க்கிறாய்.
 -மகாதேவன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள் Empty Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 8:28 pm

உள்ளாடைக்குள் பணத்தை வைத்துக்கொண்டு
மேலாடையைச் சரி செய்தபடி
கதவு திறந்து புறப்பட்ட நீ
திரும்பி வந்து தந்த முத்தத்தை
நான் மறக்க மாட்டேன்.

-மகாதேவன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள் Empty Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 8:29 pm

எறும்புத்திண்ணிகள் மிகவும் சாதுவானவை ரொம்ப நல்லவை
எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது என்றவளே!
என்னைப் போலவே ஒரு எறும்புத்திண்ணியைப்
பரிசாகத் தருகிறேன் படுக்கைக்கருகில் வைத்துக்கொள்.
 
-ஸ்ரீபதி பத்மநாபன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள் Empty Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 8:30 pm

ஒரு பெண்ணைச் சேர்த்துக்கொண்டு
திரிகிற துக்கம் தாளவில்லை எனக்கு
என் விதைப்பையைச் சிதைப்பதற்கு
அல்லது உறங்கும்போது தலையில்
கல்லை வீசிவிட்டுப் போக
அவளுக்கு முகாந்திரங்களுண்டு


-யவனிகா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள் Empty Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 8:32 pm

உன் முகம் தீய்ந்த தீயில்
அமிலங்கள்
நெஞ்சில் சுரக்கின்றன

வாழ்நாளின் பக்கங்கள்
கண்ணீரில் கடக்கின்றன;
சமூகத்தின் குற்றத்தில்
காதலும் கைதானதே
தான் தைத்த நாகரிகச் சட்டையை
தன் கையால்
கிழித்துப் போட்டதே;
கண்ணில் தூசெனில்
துடிக்கும் கரங்களிரண்டில்
கசங்கிப் போய் வீழ்ந்தவளே
இன்று காணாமல் போனதேன்…?
காலத்தின் தீர்ப்பில்
கலையும் மை வாங்கி
வாழ்க்கையைத் திருத்த எண்ணி
உன் குரலைச் சாட்சி வைத்தவள்
உயிரையா விட்டுப் போவாய்..?
வினோதினி என்றும்
வித்யா என்றும்
உயிர்கள்
சொட்டு சொட்டாய். . .
சொட்டு சொட்டாய். . .
கொப்பளித்துக் கொப்பளித்து
வடிந்த ரத்தத்தில்
காதல்’ அமிலத்தினும் காரமானதே,
வாழ்க்கை. . .
பெண்ணைப் பெற்றவர்க்குச் சாபமானதே;
ஒரு சமூகத்தையே துடிக்கவைத்த ரணத்தை
உடம்பெல்லாம் தாங்கி
உயிர்வலிக்க. . . வலிக்க. . .
நீ முனங்கிய முனகல்களில்
எரித்தவனின் கையை விட
அவனை அப்படி வளர்த்த
இச்சமுகத்தின் கைகளுக்கே
அதிகம் வலித்திருக்கக் கூடும்..
இனி யாருக்கு வலித்து
யாருக்கென்ன லாபம்
நீ போனவள் போனவளில்லையா?
எரிந்தவள்
சாம்பல் தானில்லையா.. ?
ஆனால்
பெண்ணைப் பெற்றவளுக்கு
அடி வயிற்றில் எரியும்
நெருப்பொன்று உண்டு
தோள்மீது தாங்கியவனுக்கு
மார்மீது சுடும் தீயொன்று உண்டு
அது இனி எல்லோருள்ளும்
சுடர்விட்டு எரியும்
காட்டுத் தீயேனப் பரவி
அவனைப் போன்றோரை தேடித் தேடிக் கொல்லும்
அவர்களின் மரணத்தில்
இனி உனைப்போன்ற
வினோதினிகளும். . . . . .
வித்யாக்களும் . . . . . . .
காப்பாற்றப் படலாம்..
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள் Empty Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்

Post by அ.இராமநாதன் Fri Sep 13, 2013 2:08 pm

அனைத்துக் கவிதையும் பாராட்டுக்குரியதே...
-
நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள் Naveena-kaathal-kavithai1
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள் Empty Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்

Post by அ.இராமநாதன் Fri Sep 13, 2013 2:14 pm

காதல் என்றாலே கிளுகிளுப்பு, மகிழ்ச்சி என்று சராசரி இளைஞனும் இளைஞியும் நினைக்கும் வேளையில் தொண்ணூறுகளுக்குப் பிந்திய தமிழ்க் கவிஞர்களின் நவீனக் காதல் கவிதைகள் வேறுபட்டனவாக உள்ளன.
-
மாறிவரும் ஆண்&-பெண் உறவின் புதிய போக்குகளையும், காதலின் பன்முகத்தன்மைகளையும் எவ்விதமான மனத்தடைகளற்று விவரிக்கும் காதல் கவிதைகள், இளைய தலைமுறையினரின் மனப்பதிவுகளையும் விளக்குகின்றன. அவை காதல் பற்றிய மரபு வழிப்பட்ட பார்வையைச் சிதைத்துப் புதிய போக்குகளை முன்னிறுத்துகின்றன.
---
>ந.முருகேசபாண்டியன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள் Empty Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Sep 13, 2013 11:29 pm

கருத்துரையின் எடுத்துக்காட்டுக்கு மகிழ்ச்சி ஐயா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள் Empty Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum