தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முருகன் யார்?

Go down

முருகன் யார்?  Empty முருகன் யார்?

Post by அச்சலா Sat Sep 14, 2013 4:54 am

தமிழ்க் கந்த புராணத்தில் முருகன், சிவபெருமான் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு சுடர்களாகத் தோன்றுகிறான். அவை எந்தத் தாயின் கருப்பையிலும் கிடந்து வளர்ந்து பிறந்ததாகக் கூறப்படவில்லை. ‘பெம்மான் முருகன் பிறவான் இறவான்’ என்ற ஆன்றோர் வாக்கிற்கு இணங்க தாய் வயிற்றில் தங்கிப் பிறவாமல் சுடராய்த் தோன்றி (விந்து நீரில் அல்ல) குழந்தையாய் உருவம் காட்டினான்.

முருகனின் தோற்றத்தை (அவதாரமல்ல) கடவுள் நிலைக்குச் சற்றும் இழுக்கு வராமல் காட்டிகிறது தமிழ்க் கந்த புராணம். பாடல் வருமாறு:
அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி ஆகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன்வந் தாங்கு உதித்தனன் உலகம் உய்ய.

பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு ஓர் மேனியாக உருவம் கொண்டது – கருணையால் என்று தமிழ்க் கந்த புராணம் கூறுவதைக் காண்க. இந்தக் கந்த புராணத்தைக் காஞ்சி குமரகோட்டக் கந்தனே மெய்ப்பு (PROOF) திருத்தினான் என்று ஒரு வரலாறு கூறுவர். எனவே இது கந்தனே ஏற்ற நூல் என்று அறிகிறோம்.

சிவபெருமானின் மகன் என்பதால் சேயோன் என்று முருகனுக்குப் பெயர். சேய் என்றால் மகவு என்று பொருள்.
சிவபெருமானே முருகன். தனக்குத்தானே சேய் போல வந்தான். இது ஒரு விளையாடல்.
ஈசனே அவன் ஆடலால் மதலை ஆயினன் காண்!
“ஆதலின் நமது சத்தி அறுமுகன் அவனும் யாமும் பேதகம் அன்றால் (சிவபெருமான் கூறுவது)
என்பன போன்ற கச்சியப்பரின் கந்தபுராண வாக்குகள் இதனை தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. மேலும் பரம்பொருளான பிரமமே நமக்கெல்லாம் கருணை செய்ய சோதிப் பிழம்பு என்ற நிலையில் இருந்து முருகன் என்ற உருவம் எடுத்தது என்று கூறும் மேற்காட்டில் ‘அருவமும்’ எனத் தொடங்கும் கந்த புராணப் பாட்டும் இதற்கு சான்று பகரும்.

சேயோன் என்ற தமிழ்ச் சொல்லும் முருகனுக்கும் சிவபெருமானுக்கும் பொதுவாகச் சென்று சேரும். சே என்ற ஓரெழுத்தொரு மொழிக்கு சிவப்பு, சிவந்த ஒளி என்று பொருள் என நிகண்டுகள் கூறுகின்றன. சிவபெருமான் பவளம் போல் மேனியை உடையனாக மணிவாசகர் கூறுகிறார்!. ‘பவளம் போல் மேனியில் பால் வெண்ணீரும்’ என்பது அவர் வாக்கு. எனவே சேயோன் என்பது செம்மைப் பண்பைக் குறித்து சிவனையும், சிவனது மகன் அதாவது சேய் என்ற பொருளில் முருகனையும் குறிக்கும். இதனால் சிவனே முருகன் என்ற தமிழ்க் கந்தபுராணம் காட்டும் கருத்திற்கு ஏற்ப சேயோன் என்ற சொல் துணை நிற்கிறது என்று கூறலாம்.

சேயோன் என்ற இந்தச் சொல்லையே தமிழ் இலக்கணமான தொல்காப்பியமும் எடுத்துக் கொள்கிறது.
‘சேயோன் மேய மைவரை உலகமும்’ என்பது தொல்காப்பிய நூற்பா வரியாகும். அதாவது உலகத்தை நான்கு வகை நிலங்களாக வகுத்து அந்தந்த நிலத்திற்குரிய முதல், கரு, உரிப்பொருள்களைத் தமிழ் சான்றோர்கள் எனக்கு முன்னம் இப்படிக் கூறிவைத்தனர் என்று சொல்ல வந்த தொல்காப்பியர் குறிஞ்சி என்பது மலையும் மலையைச் சார்ந்த நிலத்தினைக் குறிக்கும் என்றும் அதற்குத் தலைவன் சேயோன் என்றும் கூறுகிறார்.

மலைக்குத் தலைவன் முருகன் என்று கூறாமல் சேயோன் என்ற சொல்லைத் தொல்காப்பியர் கொண்டதனால் சிவபெருமானையும் அந்தச் சொல்லில் அடக்கிக் காட்டினார் என்று கொள்க.

‘மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்’
என்று நிலங்களின் தெய்வங்களைக் கூறியவர் வருணன், இந்திரன் என்கிற சிறு தெய்வங்களையும், மால், முருகன் என்கிற பெருந்தெய்வங்களையும் கூறியவர் தமிழர்களால் பரம்பொருளாக வணங்கப்பட்டவரும், தமிழ்ச்சங்கத்தை நிறுவியவரும் ஆகிய சிவபெருமானைச் சொல்லாமல் விட்டால் அது குன்றக்கூறிய குறைக்கு ஏதுவாகும். எனவே சிவபெருமானையும், முருகனையும் ஒரு சேரக்குறிக்கும் சேயோன் என்ற சொல்லால் சிவபெருமானையும் அங்கே உள்ளடக்கினார் என்பதே கூர்ந்த உணர்வினரால் உணரக் கிடக்கிறது.

சிவபெருமான் இருப்பிடமும் மலை என்றே புராணங்களும் கூறுகின்றன. அவன் இருப்பது வெள்ளிமலை எனப்படும் இமயமலை. அவன் அயனுக்கும், அரிக்கும் காட்சி கொடுத்தது அண்ணாமலை. இன்னும் திரு ஈங்கோய் மலை, காளத்தி மலை, திருக்கழுக்குன்றம் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அவன் மலையையே வில்லாகக் கொண்டவன். இப்படி சிவபெருமானுக்கும் மலைக்கும் உள்ள தொடர்பு நன்றாகத் தெரிந்த ஒன்று.

மலையோடு தொடர்புள்ள சிவபெருமானது மகன் எனக் கூறப்படுகிற முருகனுக்கும் மலையோடு நெருங்கிய தொடர்பு உண்டு. குன்று தோறாடும் குமரன் என்று முருகனுக்குப் பெயர் உண்டு.

எனவே முருகனையும் சிவபெருமானையும் ஒரு சேரக்குறிக்கும் சொல்லான சேயோன் என்கிற சொல்லைத் தொல்காப்பியர் தேர்ந்தெடுத்தார். இதனால் சிவனே முருகன் என்ற தமிழ்க் கந்த புராணக்கருத்து கச்சியப்பர் கற்பித்ததல்ல என்றும், தொல்காப்பியர்க்கு பலகாலம் முன்னதாகவே தமிழ்ச் சான்றோர் கருத்து அது என்றும், அதைத் தொல்காப்பியரும் தழுவினார்; கச்சியப்பரும் பொன்னே போல் போற்றி வழி மொழிந்தார் என்று உணர்தல் வேண்டும்.

எனவே, இது காறும் கூறியவற்றால் முருகன் யார் என்ற கேள்விக்கு விடை: சோதிப்பரம்பொருளான சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள் புரியும் பொருட்டு கருணை கொண்டு தனக்குத்தானே மகனாக அருவ நிலையில் இருந்து உருவ நிலைக்கு வர அந்த சோதிப்பிழம்பாகிய பரம்பொருளே முருகன்.
(மு.பெ.ச அவர்கள் எழுதிய திருமுருகாற்றுப்படை புத்தகத்தில் இருந்து)
அச்சலா
அச்சலா
மல்லிகை
மல்லிகை

Posts : 119
Points : 165
Join date : 30/11/2012
Age : 41
Location : சென்னை

Back to top Go down

Back to top

- Similar topics
» பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள
» நித்யானந்தாவோடு தொடர்பு வைத்திருந்த பெண்கள் யார் யார்?: உண்மை அம்பலம்!
» பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள
» சின்ன ஒரு சந்திப்பு (யார் யார் என்று சொல்ல முடியுமா?)
» நம்ம தமிழ்த்தோட்ட உறவுகளின் சந்திப்பின் போது எடுத்த புகைப்படம் அடையாளம் காட்டுங்களேன் யார் யார் என்று

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum