தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மதமெனும் பேய்

Go down

மதமெனும் பேய் Empty மதமெனும் பேய்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 12:57 pm

”பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான
பேய் பிடியாதிருக்க வேண்டும்
என்கிறார் வள்ளலார். ஏகாதிபத்திய,அதிகார சக்திகள் உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்க உருவாக்கியிருக்கும் ஒரு விஷயமே மதம். பொதுவுடைமை சித்தாந்தத்தின் தந்தை கார்ல் மார்க்ஸ் அவர்கள் மதம் பொதுஜனங்களுக்கு போதையேற்றும் ஒரு அபினி என்று சொன்னார். ஆனால் நம் வள்ளலாரோ ஒரு படி மேலே சென்று மதம் ஒரு பேய் என்றே எடுத்துரைத்திருக்கிறார். என்னே வள்ளலாரின் பகுத்தறிவுப் பாங்கு!..”
என்று பேசிக் கொண்டே போனார் நண்பர் ஒருவர். அவர் சொல்வது முற்றிலும் தவறு, அது உச்சரிப்புப் பிழையால் வந்த குழப்பம் என்று நான் கூறினேன். ஆன்மிக அருட்செல்வராகிய வள்ளலார் எப்படி மதத்தைப் பேய் என்று சொல்வார்? அதுவும் அந்தக் குறிப்பிட்ட வரி தெய்வமணிமாலை என்னும் பிரபலமான துதிப் பாடலில் உள்ளது. கந்தகோட்டத்தில் உறையும் முருகப் பெருமானைப் போற்றி வரம் கேட்கும் பாடல். அதிலே போய் மதம் பேய் என்று ஒரு வரி வருமானால் அது முற்றிலுமே முரணாக இல்லையா? என்று கேட்டேன். ஆமாம், நீங்கள் சொல்வது தர்க்கபூர்வமாக இருக்கிறது. அதன் சரியான பொருளை நீங்களே சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார். பிறகு விஷயத்தை அவருக்கு விளக்கினேன்.
இங்கே வள்ளலார் எடுத்தாளும் சொல் madham (मदஅடிதான் விழும் ஓ. இதன் பொருள் ஆணவம், செருக்கு, கொழுப்பு என்பதாகும். மதத்தல் என்று வினைச்சொல்லாகவும் வரும். யானைக்கு மதம் பிடித்தலைக் குறிக்கும் “மதம்” என்ற சொல்லும் இதே உச்சரிப்பு கொண்டது தான். களிப்பு,வேட்கை மிகுதியால் மதநீர் ஒழுகி ஒழுகி யானையின் முகத்தில் தடமாகவே பதிந்து விடும். அதற்கு மதச்சுவடு என்று பெயர். பெருங்களிப்பு, பித்து, மயக்கம், காமவேட்கை இவற்றை யானையின் மதத்தோடு ஒன்றுபடுத்திப் பாடும் பல பாடல்கள் பழந்தமிழ் இலக்கியத்தில் உண்டு.
வாய்க் கொழுப்பு என்பதைக் குறிக்க ”வாய்மதமோ வித்தைமதமோ” என்று குற்றாலக் குறவஞ்சியில் (பாடல் 76) வருகிறது. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற ஆறு குணங்களையும் ஆன்ம வளர்ச்சிக்கு இடையூறான ’அறுபகை’ என்னும் ஆறு பகைவர்களாக உருவகிப்பார்கள். பரிமேலழகர் உரையில் ”காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் என ஆன்மாவின் உட்பகைகளா யுள்ள ஆறு குற்றங்கள்” என்று குறிப்பிடுவார் (குறள், அதி. 44, அவதாரிகை). வள்ளலார் பாடலின் மற்ற வரிகளையும் இணைத்துப் பார்த்தால் காமம், குரோதம், மதம், லோபம் ஆகிய பகைகளிடத்திலிருந்து தம்மைக் காக்க அவர் வேண்டுவது தான் இந்தப் பாடல் என்பது தெளிவாக விளங்கும்.
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும் (சத்சங்கம்)
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும் (தீநட்பு விலக்கல்)
பெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும் (நல்லொழுக்கம்)
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும் (மதம் அறுதல்)
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும் (காமம் அறுதல்)
மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழவேண்டும் (லோபம் அறுதல்)
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே. (தெய்வ வணக்கம்)
சமயம் என்ற பொருள் கொண்ட மதம் என்ற சொல்லே வேறு. அது matham (मतஅடிதான் விழும் ஓ. அந்தச் சொல்லுக்கு ’ஏற்றுக் கொண்ட கருத்து’ என்பது பொருள். அதனால் தான் தேர்தலில் போடும் வாக்குகளுக்கு ஹிந்தியில்matha-daan (मतदान) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். சம்மதம் என்றால் ஒன்றுபட்டு ஏற்றுக்கொண்ட கருத்து. மதித்தல், மதிப்பு ஆகிய சொற்களும் இதிலிருந்தே வருகின்றன. இச்சொல் மதிஅதாவது அறிவு என்ற வேர்ச்சொல்லுடன் தொடர்புடையது. எனவே மதம் என்பதற்கு அறிவுபூர்வமாக (கண்மூடித்தனமாக அல்ல) ஏற்றுக் கொண்ட கருத்து என்பது உள்ளுறை பொருளாக நிற்கிறது. கீதையில் ‘இதி மே மதம்’ (இது என் கருத்து) என்று பல இடங்களில் கண்ணன் கூறுவதாக வரும்.
இதற்கு இணையாக நாம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொல் religion. அந்தச் சொல்லின் மூலத்தைப் பார்ப்போம்.
Middle English religioun, from Anglo-French religiun, Latin religion-, religio supernatural constraint, sanction, religious practice, perhaps from religare to restrain, tie back.
First Known Use: 13th century
இந்தச் சொல் கட்டுப்படுத்துவது, அனுமதிப்பது, ஆணையிடுவது, சார்ந்திருப்பது ஆகியவற்றைக் குறிக்கும் வேர்ச்சொல்லில் இருந்தே உருவாகியிருக்கிறது. rely, reliable ஆகிய சொற்களும் வேர்ச்சொல் அளவில் religion என்ற சொல்லுடன் தொடர்புடையவை.
மதத்தைக் குறிக்க இருமொழிகளிலும் பயன்படும் சொற்களே அவை பிரதிநிதித்துவப் படுத்தும் மதங்களின் இயல்பைத் தெளிவாக எடுத்துக் காட்டுவதாக உள்ளன.
மதமெனும் பேய் Buddhism_and_christianity_book_coverகாலனிய காலகட்டத்தில் மேற்கத்தியர்கள் தங்கள் மதமான கிறிஸ்தவம் இயற்கையிலேயே புனிதமானது, தெய்வீக ஆணையுடையது என்றும், மற்ற மதங்கள் வெறும் கருத்துக் குவியல்கள் என்றும் கருதினார்கள். அதனால் தான் கிறிஸ்தவத்தைக் குறிக்க christianity என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். ஆங்கில மொழியில் ஒரு பொருளின் இயல்பான தன்மையைக் குறிக்க ityஎன்ற பதம் வழங்கும் – originality, chastity, liberty என்பது போல. கிறிஸ்தவத்தைக் குறிக்கும் சொல் இந்தச் சொற்களுடன் ஒத்திசைவு கொண்டுள்ளது.
Hinduism, Buddhism, Jainism, Mohammedanism என்று மற்ற மதங்களைக் குறிக்க ism என்ற வார்த்தையை உபயோகித்தார்கள். 18-19ம் நூற்றாண்டுகளில் ism என்ற இந்தச் சொல் ஒரு வினோதமான, தனிப்பட்ட சிந்தனையையோ அல்லது கண்மூடித்தனமாக ஒரு விஷயத்தைப் பின்பற்றுவதையோ குறித்தது. பெரும்பாலும் எதிர்மறை நோக்கிலேயே பயன்படுத்தப் பட்டது. racism, fascism, nazism ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம். இதே ரீதியில் கிறிஸ்தவத்தையும் Christism என்றே அழைக்கவேண்டும் என்று ஒரு சாரார், குறிப்பாக மேற்கத்திய நாத்திகவாதிகள் அப்போது சொன்னார்கள். இன்றும் சிலர் அப்படிக் கூறி வருகிறார்கள்.
20ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் சுதந்திரமான, புரட்சிகரமான, கலகத் தன்மையுடைய சிந்தனைகளைக் குறிக்க ism என்ற சொல்லை நவீன கலை, இலக்கிய, தத்துவ கோட்பாட்டாளர்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் – cubism, communism, impressionism, transcendentalism, existentialism, structuralism, feminism. காலனியத்திற்குப் பின் வந்த காலகட்டங்களில் ism என்ற சொல் ஒருமித்த சிந்தனைப் போக்கு என்ற பொருளிலேயே வலுவாக நிலைபெற்று விட்டது – அந்த சிந்தனைப் போக்கு நேர்மறையானதவோ அல்லது எதிர்மறையானதாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஒரு பீடத்தின் மீதமர்ந்து மற்ற மதங்களை ‘இசங்களாக’ முத்திரை குத்தியது கிறிஸ்தவம். தான் இதற்கெல்லாம் மேற்பட்டது என்று சொல்லிக் கொண்டதன் மூலமாக கருத்து ரீதியான சித்தாந்தம் என்பதாக இல்லாமல், ந்ம்பிக்கை, விசுவாசம், கீழ்ப்படிதல் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே அமைந்த ஒரு குழு நடவ்டிக்கை (faith based cult/creed) என்று தன்னைத் தானே கிறிஸ்தவம் அடையாளப் படுத்திக் கொண்டுவிட்டது! கிறிஸ்தவத்தில் இறையியல் மட்டுமே உள்ளது; தத்துவம் இல்லை. மேற்கத்திய தத்துவ சிந்தனை முழுவதும் பெரும்பாலும் கிறிஸ்தவத்தை நிராகரித்தே வளர்ந்துள்ளது என்று அதன் வரலாற்றைப் படிக்கும் எவரும் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் இந்திய மரபில் மதம் வெறும் நம்பிக்கையை அல்ல, அறிவுபூர்வமாக விவாதித்து பின் உட்கிரகிக்கப் பட்ட கொள்கை என்பதையே குறித்தது என்று அந்தச் சொல்லின் உருவாக்கம் மூலமே புரிந்து கொள்ள முடியும். இந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வழிபாட்டு முறைகளும், சமய ஆசாரங்களும் உருவாகி அவை பொதுமக்களிடையே பரவின. இவற்றின் சாரத்தை விடுத்து வெளித் தோற்றங்களிலேயே மக்கள் ஆழ்ந்துவிட்டபோது ஞானியர் சமயத்தின் தத்துவ சாரத்தை மீண்டும் மீண்டும் நினைவூட்டினர். அவர்கள் மதத்தை நிராகரிக்கவில்லை; உண்மையான ஆன்மிக அனுபவம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்றே கூற விழைந்தார்கள்.
பொங்குபல சமயமெனும் நதிகள் எல்லாம்
புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே
என்றார் வள்ளலார். இங்கு சமயங்களை இறைவன் என்ற பெருங்கடலில் சென்று சேரும் நதிகளாகவே காண்கிறார்.
நதி உண்ட கடலெனச் சமயத்தை உண்டபர
ஞான ஆனந்த ஒளியே
என்றும்
மைவிடாது எழு நீலகண்ட குருவே – விஷ்ணு
வடிவான ஞானகுருவே
மலர்மேவி மறை ஓதும் நான்முகக் குருவே
மதங்கள் தொறும் நின்ற குருவே
என்றும் பாடுகிறார் வள்ளலாருக்கும் முன்பு தோன்றிய தாயுமானவர்.
இது இந்து மரபில் நீண்ட நெடுங்காலம் பயின்று வந்த சமய சமரச தரிசனமேயாகும். சுவாமி விவேகானந்தர் தனது சிகாகோ பேருரையில் இதனைத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். தான் சிறுவயதில் கற்ற ஒரு துதிப் பாடலில் இருந்தே தனக்கு சமயங்களின் சமரசம் என்ற தரிசனம் கிடைத்ததாக அதில் அவர் கூறுகிறார் -
நால்வேதங்கள், சாங்கியம், யோகம், சைவம், வைஷ்ணவம் போன்று பற்பல வழிகளை தங்கள் விருப்பத்தின் காரணமாகவும், இயல்புகளின் காரணமாகவும் மனிதர் கொள்கின்றனர். இறைவா, எல்லா நீர்ப்பெருக்குகளும் சென்று சேரும் பெருங்கடல் போல, நேராகவும், வளைந்து நெளிந்தும் செல்லும் இந்த எல்லாப் பாதைகளின் முடிவாகவும் நீயே இருக்கிறாய்!
- சிவ மஹிம்ன ஸ்தோத்திரம், 7.
மத வழிபாட்டின் ஒரு அங்கமாக உள்ள துதிப்பாடலே மதங்களை ஒன்றிணைக்கும் உன்னதமான மனித நேயப் பார்வையையும், மதங்களைக் கடந்து செல்லும் ஞானப் பார்வையையும் அளிப்பதாக உள்ளது. இந்து மதத்தின் பேரியல்பு அல்லவா இது!
இந்தத் தாய் மதத்தைப் பேய் என்று வள்ளலார் கண்டிப்பாக சொல்லவில்லை. 

 ஜடாயு http://www.tamilhindu.com/
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum