தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மதமாற்றம் எனும் கானல் நீர்

Go down

மதமாற்றம் எனும் கானல் நீர் Empty மதமாற்றம் எனும் கானல் நீர்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 1:05 pm

நீர்வை. தி.மயூரகிரி சர்மா 
மதமாற்றம் என்பது தாழ்த்தப்பட்டவர்களைப் பொறுத்தவரையில் வெறும் கானல் நீரே என்கிறார் பிரபல ஈழ இலக்கிய நாவலாசிரியர் கே.டானியல்

மதமாற்றம் எனும் கானல் நீர் Wolfsheepபிரதாப முதலியார் சரித்திரத்தோடு (1879) தொடங்கிய தமிழ்நாவல்களின் வளர்ச்சி கடந்த ஒன்றே கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக சீரிய பல நாவல்களைத் தந்து வருகின்றது. அந்த வகையில், நாவல் இலக்கியங்களை அடுத்து அந்த நாவல்களை ஒட்டிய திறனாய்வு முயற்சிகளும், ஆங்காங்கு நடைபெற்றிருக்கின்றன.இந்நிலையில், ஒரு திறனாய்வு எண்ணப்பாங்குடனும், யாழ்ப்பாணத்துக் கிறிஸ்துவச்சூழல், சமூகவியல், ஜாதீயப்பிரச்சினைகளை ஒழிவு மறைவின்றி எடுத்துக் காட்டும் ஒரு நாவல் என்கிற வகையிலும் நோக்குவதே இக்கட்டுரையின்  நோக்கமாகும்.
பேராசிரியர் கலாநிதி.க. கைலாசபதி அவர்கள் (தமிழ் நாவல் இலக்கியம், 1984) தமிழ் நாவல் தொடங்கி முதல் எழுபத்தைந்து ஆண்டுகளாக அது சமூக மெய்மைக்குப் புறம்பான, சமூகப்பிரச்சினைகளுக்குப் பங்கெடுக்காத ஒரு கற்பனா உலகில் பெரும்பாலும் காணப்பட்டது என்று குறிப்பிடுவதோடு, அது 1953ல் வெளியான தொ.மு.சி.ரகுநாதனின் ‘பசியும் பஞ்சும்’ என்ற நாவலுடன் மாற்றம் பெறுவதாகவும் குறிப்பிடுகின்றார்.
ஆனால், இப்புலப்பாடு நாவலின் கருப்பொருளாக வரும் போது, சமுதாயத்தின் இயங்கு நிலையை மறுதலிக்கும், அல்லது, சமூகத்தின் நிலவுடமைச் சமூகமாக இயங்கிக் கொண்டிருக்கும் கூட்டத்தின் வெறுப்பையும், பகைமையையும் படைப்பாளி சம்பாதித்துக் கொள்ள வேண்டி ஏற்படும். இந்த நிலையில் தான் பேராசிரியர், கா.சிவத்தம்பி அவர்கள் “ஈழத்தின் தமிழ்ப்புனை கதை வரலாற்றில் சமூக மெய்மையை அதன் இரத்தமும் சதையும் புலப்படும் வண்ணம் வெளிப்படுத்திய படைப்பாளிகளுள் முதன்மைக் கணிப்பிற்குரியவர் தான் டானியல்”  என்று குறிப்பிடுவதிலிருந்து டானியலின் முதன்மை வெளிப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதியில் கிறிஸ்துவப்பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் தான் டானியல். அவர் 1940களின் பிற்கூற்றிலே படைப்பாளியாக உருவெடுத்தார். இந்தக்காலத்தில் தான் இலங்கையில், ‘முற்போக்கு இலக்கிய இயக்கம்’ ஆரம்பமாகத் தொடங்கியது எனலாம்.
மதமாற்றம் எனும் கானல் நீர் K_Daniyel_1
கே.டானியல்
[color][font]
இலக்கியம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்ற மரபை உடைத்தெறிந்து, இழிசனர் வழக்கு என்று ஒதுக்கப்பட்ட பேச்சு வழக்கை கதைகளில் கையாண்டு, டானியல் தமது எழுத்தை நடத்திச் சென்றிருக்கிறார். அவர் தமது அறிவறிந்த பருவம் முதலாக தாம் பஞ்சமர் (யாழ்ப்பாணத்தின் தாழ்த்தப்பட்ட பள்ளர், நளவர், முடி திருத்துனர், பறையர், வண்ணார் என்ற ஐந்து சாதிகளைச் சேர்ந்தவர்கள்) பக்கமே நின்றதாகச் சொல்கிறார். இவ்வகையில், யாழ்ப்பாணத்தையே கதைக்களனாகக் கொண்டு, நாவல் படைக்க டானியல் புறப்பட்டார். இதற்கு முன்னரே இலங்கையில் நலிந்தவர்கள் மீதான கொடுமைகளைச் சுட்டும் குறிப்பிடத்தக்க சில நாவல்கள் வெளிவந்தன  எனினும், அவற்றில் கற்பனை வளமே மிகுந்திருந்தது. அதனால்,  நலிந்தவர்களின் பிரச்சினை பற்றி நலிந்தவர்களே எழுத வேண்டிய நிலை உண்டானதாக கருதலாம்.
இது பற்றி தனது இன்னொரு நாவலான ‘பஞ்சமர்’ நாவலின் முன்னுரையில்,. ‘இதில் நடமாடும் பாத்திரங்களும் நான் கற்பனையில் சிருஷ்டித்தவையல்ல.. வாழ்வின் கடைசிப்படியிலிருந்து முன்னே செல்ல மக்கள் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளே கருவாகவும், நான் உட்பட நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களே  பாத்திரங்களாகவும் நிற்கின்றன…’  என்று எழுதிச் செல்வது டானியலினைப் பிற எழுத்தாளர்களினின்று முன்னுரிமைப் படுத்துவதற்குச் சாட்சியமாகின்றது. ஒதுக்கப்பட்டோர் குறித்த தமிழ் இலக்கியப்பதிவுகளைப் பிள்வருமாறு வகைப்படுத்தலாம் எனப் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் (பூரணச்சந்திரன், 2004) குறிப்பிடுகின்றார்.
1. ஒதுக்கப்பட்டோர் குறித்து எதுவும் கூறாமல் அவர்களைப் புறக்கணித்தல்
2. இரக்கத்திற்குரியோராயும், மேட்டிமையோரின் கருணையால் முன்னேற வேண்டியவர்களாயும் சித்திரித்தல்
3. அவர்களது இயல்பான வாழ்வியலையும், வாழ்வியற் சிக்கல்களையும் வெறும் விவரணமாகப் பதிவு செய்தல்
4. தங்களை ஒடுக்குபவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடுதல், எதிர்ப்பண்பாட்டை உருவாக்குதல், பண்பாட்டு வேர்களைத் தேடுதல் என விழிப்புணர்வைப் பதிவு செய்தல்
இந்த வகையில், கிளர்ந்தெழும் நான்காம் வகையினராகவே டானியலைக் கருதலாம். அவரது ‘கானல்’ நாவலையும் இந்த வகையிலேயே நோக்க வேண்டியுள்ளது.
1940களின் பிற்பகுதியிலிருந்து பல சிறுகதைகளையும் எழுதி வந்த டானியல் ‘பஞ்சமர்’ என்ற நாவலை எழுதியதிலிருந்து, நாவல் உலகில் பிரவேசித்தார். ‘பஞ்சமர்’ நாவலில் உயர்சாதிக்காரர்களான வேளாளர்களின் சாதிததிமிரும் அட்டூழியங்களும், ‘கோவிந்தன்’, ‘அடிமைகள்’ நாவல்களில் வேளாளக் குடும்பங்களின் அழிவையும் சிதைவையும், காட்டிய டானியல் அவற்றினின்று மாறு பட்டு, ஒரு சீரான நடையில், அழகான வடிவமைப்பில் ‘கானல்’ நாவலைப்படைத்துள்ளார் என்பது விமர்சகர்களின் பொதுவான கருத்து.
கானல் நாவலின் கதைப்புனைவு மிகவும் நேர்த்தியானது. தாழ்த்தப்பட்ட குடிமகனான நன்னியனின் மகன் இளையவனை மையமாகக் கொண்டு, புனையப்பட்டுள்ள இக்கதையின் சுருக்கம் வருமாறு -
நன்னியன், மனைவி செல்லி, பிள்ளைகளான மூத்தவன், இளையவன், சின்னி (மகள்) போன்றோர் தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதிகள். கொடுமைக்கார உயர்சாதியரின் பிரதிநிதி தம்பாப்பிள்ளை என்பவர். வயதுக்கு வந்த சின்னியை போகப்பொருளாக முற்படும் தம்பாப்பிள்ளையின் மருமகனின் கொடுமைக்கு எதிராக நன்னியன் குடும்பம் கிளர்ந்தெழுகின்றது. இதனால், தம்பாப்பிள்ளை நன்னியன் குடும்பத்தில் கோபங்கொண்டு விதானையாரிடம் முறையிடுகிறார். (விதானையார் என்பவர் அக்காலத்திலிருந்த கிராமத்தலைவர், அனேகமாக அவரும் உயர்சாதிக்காரராகவே இருப்பார்)
மதமாற்றம் எனும் கானல் நீர் Images12விதானையார் நன்னியனைச் சித்திரவதை செய்கிறார். இதனைத் தாங்க முடியாத இளையவனும் மூத்தவனும் விதானையாரைக் கொலை செய்கின்றனர். இதனால், தாழ்த்தப்பட்டவர்களாக அந்த ஊரில் இருந்த பதினைந்து குடும்பங்களின்  குடிசைகள் உயர்சாதிக் காரர்களால் கொளுத்தப் படுகின்றன. சாதி ஒடுக்குமுறையினின்று விடுபட மதமாற்றமே நல்ல வழி என்று தீர்மானிக்கப் படுகின்றது. ஞானமுத்துக் குருவானவரின் (இவர் ஞானபிரகாசர் என்ற அக்கால பிரபல மதமாற்றியாக விளங்கிய கத்தோலிக்க குருவானவரையே கருதும் என்று முன்னுரையில் டானியல் குறிப்பிட்டிருக்கிறார்) கருணை பெற்று ஞானஸ்நானம் பெற்று, கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாறுகின்றனர்.
ஞானமுத்துக் குருவானவர், பொலிஸாருடன் தக்க வகையில் தொடர்பு கொண்டு,  தாழ்த்தப் பட்டவர்களுடனும் அனுசரணையாகப் பேசி, குற்றவாளிகளான மூத்தவனையும், இளையவனையும் பொலிஸில் ஒப்படைக்கிறார். உயர் சாதி வேளாளராக இருந்த போதிலும், பூக்கண்டர் என்பவர் பஞ்சமர்களின் தோழர். அவர் தமது நிலத்தில் குடிசை போட அனுமதித்து, வேண்டிய போதெல்லாம் உதவி செய்கிறார்.
இப்பூக்கண்டரும் கடைசியில் ஞானமுத்தரின் ஒரு வகைத்தூண்டுதலால் கிறிஸ்தவர் ஆகிறார். அங்கே புதிதாக கத்தோலிக்க தேவாலயம் ஒன்று உருவாக்கப்படுகிறது. அதன் உருவாக்கத்திற்குப் புதிதாக மதம் மாறிய தாழ்த்தப் பட்டவர்களும் மிகவும் உற்சாகமாக பொருள், பண, சரீர உதவிகள் செய்கிறார்கள். ஆனால், அந்த சர்ச் கட்டப் பெற்று நடக்கிற உற்சவத்தின் போது, அந்த சர்ச்சிலேயே உயர்சாதியாருக்கு ஓரிடம், தாழ்த்தப் பட்டவருக்கு தனிப்பட்ட ஓரிடம் என்று இட ஒதுக்கீடு ஞானமுத்தரின் நல்லாசியுடன் நடக்கிறது. இப்படி பாரபட்சங்கள் அங்கு கூடத் தொடர்கிறது. இதே வேளை, தாழ்த்தப்பட்ட சாதியினர், தங்கள் வீட்டுப்பெண்களை இனி வேளாள வீடுகளுக்கு குடிமை வேலைக்காரிகளாக அனுப்புவதில்லை என்று முடிவெடுக்கின்றனர். இதனை அடுத்து, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உயர் சாதி வேளாளர்களின் நிலத்தில் வேலை தரப்படாது மறுக்கப் படுகின்றது.
மதமாற்றம் எனும் கானல் நீர் Christian_service1பட்டினியால் வாடும் தாழ்த்தப்பட்ட புதிய கிறிஸ்தவர்கள் உயர் சாதிக் கிறிஸ்தவர்களால் துன்புறுத்தப்படுகின்றனர். மத மாற்றத்தின் ஊடாக அவர்கள் எதிர்பார்த்த உயரிய, உன்னத வாழ்வு வெறும் கானல் நீராக மாறிப்போகிறது. கானல் நாவலை வெளியிட்டு வைத்த ‘தோழமை’ வெளியீட்டகத்தைச் சேர்ந்த வே.மு.பொதிய வெற்பன் தனது பதிப்புரையில் இவ்வாறு கூறுகிறார் (டானியல்.கே.,1986, கானல், கும்பகோணம், தோழமை)
“ஞான ஸ்நானங்களுக்குப் பின்னாலும் மார்க்கக் கல்யாணங்களுக்குப் பின்னாலும் தீட்சை நாமங்களுக்குப் பின்னாலும் எம்மவர்களின் நாமாவளிகள் மாறியதல்லாமல் நடைமுறையில் இன இழிவுப்பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை. சமய மாற்றங்களுக்குப் பின்னாலும் சாதி வாலாடுகின்ற சங்கடங்கள் தொடர்கதை தான் இன்றளவும் யதார்த்தத்தில்…”.
டானியல் ஒரு கத்தோலிக்கராக இருந்ததால்,  அவரால் தாம் சார்ந்து கொண்டுள்ள சமயத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டுவது மிகவும் கடினமாகவே இருந்திருக்கும். அதுவும், குறித்த 1960களின் காலத்தில், அவ்வாறு செய்வது திருச்சபை விரோதமாகவும் கருதப்படலாம். என்றாலும், இயன்றளவு துணிவுடன் கானலை டானியல்  படைத்திருப்பதாகக் கருதலாம். 

நீர்வை. தி.மயூரகிரி சர்மா [/font][/color]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum