தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ரசித்த சில கவிதைகள்...

2 posters

Go down

ரசித்த சில கவிதைகள்...  Empty ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 8:38 pm

நல்லதோர் வீணை செய்தே - அதை 
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? 
சொல்லடி சிவசக்தி - எனைச் 
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், 
வல்லமை தாராயோ - இந்த 
மாநிலம் பயனுற வாழ்வதற்கே ! 
சொல்லடி சிவசக்தி - நிலச் 
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?  
                                  (பாரதியார் கவிதைகள்) 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்...  Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 8:38 pm

பாரதியார் கவிதைகளில் காணும் அறுசீர் விருத்தம் ஒன்று :

இதம்தரு மனையின் நீங்கி 
     இடர்மிகு சிறைப்பட் டாலும் 
பதம்திரு இரண்டும் மாறிப் 
     பழிமிகுத்து இழிவுற் றாலும் 
விதம்தரு கோடி இன்னல் 
     விளைந்தெனை அழித்திட் டாலும் 
சுதந்தர தேவி நின்னைத் 
     தொழுதிடல் மறக்கி லேனே
(இதம் = மகிழ்ச்சி; பதம் = பதவி; திரு = செல்வம்; விதம் = வகை)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்...  Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 8:39 pm

- மீரா

பாதை முள் 
படுக்கை முள் 
இருக்கை முள் 
வாழ்க்கை முள் 
ஆன மனிதர்களைப் பார்த்துச் 
சிலிர்த்துக் கொண்டது 
முள்ளம்பன்றி. . . 
ஓ இவர்களுக்குத் தெரியாதா 
முள்ளும் ஓர் 
ஆயுதம் என்று !
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்...  Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 8:40 pm

ஏழைப்பெண் - தலையில் 
எப்போதும் பூப்பாரம் 
இவளோ தகப்பனுக்கு 
எப்போதும் மனப்பாரம்



சிற்பி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்...  Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 8:41 pm

எழுத்துச் சுமைக்காரர் 
எங்க ஊரு தபால்காரர் 
எழுத்து மங்கும் சாயங்காலம் 
எமனோடு போனதென்ன?



-நா.காமராசன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்...  Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 8:42 pm

அன்று 
நஞ்சை உண்டு 
சாகுபடி ஆனது ! 
இன்று 
நஞ்சை உண்டு 
சாகும்படி ஆனது !                                               

-நெல்லை ஜெயந்தா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்...  Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 8:43 pm

தீப்பெட்டியைத் 
திறந்து பார்த்தால் 
பிஞ்சு விரல்கள்              -            (ஸ்ரீகுமாரன்)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்...  Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 8:43 pm

ஆராய்ச்சி மணி அடித்த மாடுகள் 
அரண்மனைத் தட்டில் 
பிரியாணி                            -       (லிங்கு)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்...  Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 8:44 pm

அணிலே ! நகங்களை வெட்டு 
பூவின் முகங்களில் 
காயங்கள் -                              -    (மித்ரா)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்...  Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 8:45 pm

வேலப்பனுக்குப் 
பெண் பிறந்ததாகத் 
தகவல் வந்தது 
ஊர்க்கவுண்டர் கேட்டார் 
இழவு இன்றைக்கா? 
நாளைக்கா?                                                             (கவிஞர் பால்ராஜ்)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்...  Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 8:46 pm

கல்வியில் விடி 
அரசியல் தெளி 
சட்டங்கள் செய் 
ஊர்வலம் போ 
முழக்கமிடு 
பெண்ணைப் பேசப் 
பெண்ணே எழு                   -       (அறிவுமதி)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்...  Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 8:47 pm

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய் 
     தேக்கிய கறியின் வகையும் 
தன்னிகர் தானியம் முதிரை - கட்டித் 
     தயிரொடு மிளகின் சாறும் 
நன்மது ரம்செய் கிழங்கு - காணில் 
     நாவில் இனித்திடும் அப்பம் 
உன்னை வளர்ப்பன தமிழா - உயிரை 
     உணர்வை வளர்ப்பது தமிழே ! 

- பாரதிதாசன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்...  Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 8:48 pm

மன்னும் இமயமலை எங்கள் மலையே ! 
     மாநிலம் மீதுஅது போற்பிறி திலையே ! 
இன்நறும் நீர்க்கங்கை யாறெங்கள் யாறே ! 
     இங்கிதன் மாண்பிற்கு எதிர்எது வேறே ! 
பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே ! 
     பார்மிசை ஏதொரு நூலிது போலே ! 
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே ! 
     போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே ! 

-பாரதியார்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்...  Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 8:50 pm

கஞ்சி குடிப்பதற்கு 
வசதியில்லை 
காரணங்கள் என்னவென்று 
தெரியவில்லை. . . 
உழைப்புதான் இவர்களின் 
உயிர்மூச்சு 
உற்பத்திப்பயன் முதலாளியின் 
உடைமை ஆச்சு . . . .                   



-          (கவிஞர் தமிழ்ப்பித்தன்)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்...  Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 8:51 pm

இறைவா ! 
நீ 
எங்கே இருக்கிறாய்? 
இந்துவின் கோயிலிலா? 
முஸ்லீமின் மசூதியிலா? 
என்றேன். 
இறைவன் சொன்னான் 
இந்த இருவரும் 
ஒருவரை ஒருவர் பார்த்துப் 
புன்னகைத்துக் கொள்ளும் 
புன்னகையில் நான் இருக்கிறேன் 
என்று !                                                                         

-         பா.விஜய்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்...  Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 8:52 pm

ஆயுதம் அழிந்து 
மானுடம் மிஞ்சுமா? 
இல்லை 
மானுடம் அழிந்து 
ஆயுதம் மிஞ்சுமா?                                

-வைரமுத்து
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்...  Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 8:53 pm

மழைக்கால நரகம் 
மாலைநேரச் சொர்க்கம் 
ஏழைகள் உறங்கிட இயற்கையால் 
ஏற்படுத்தப்பட்ட புழுதிக் கட்டில்



-காமராசன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்...  Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 8:54 pm

விதைக்குள் தவமிருக்கும் - உயிர் 
விளக்கே . . . தரையுள்ளே 
புதைத்துன்னை மூடிவிட்டார் - இனிப் 
புதுவாழ்வைச் சாதிப்பாய் !

- ஈரோடு தமிழன்பன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்...  Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 9:25 pm

தட்டுங்கள் திறக்கப்படும்
~~~~~~~~~~~~~~~

தட்டுங்கள் திறக்கப்படும்
என்றுதான் சொல்லப்பட்டது,
திறந்தேயாகும் என்றல்ல.

உன்செய்கை எனக்குச் 
சிரிப்பையே தந்தது. 

காதலென்று அதற்குப்
பெயர் சொன்னது
கவலையே தந்தது!

என்னுள்ளத்தை உணர்த்த 
உனக்கோ வலிவந்தது,
வார்த்தையில் 
வன்மம் வந்தது, 

இரக்கமற்றவள் 
இருமாப்பு, ஏமற்றுக்காரி
இப்படி ஏதேதோ.

எனினும்
இதயம் நுழைந்து 
என்னுள் வர
உனக்கனுமதி இல்லை 
என்பதே உண்மை.

தட்டுங்கள் திறக்கப்படும்
என்றது என்
இதயத்திற்கு மட்டுமல்ல!

~~~~~~~~~~~~~~~~- murugavelswaminathan
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்...  Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 9:26 pm

அவள் என்னை நேசித்திருக்கவில்லை
இன்னும் நிச்சயமாய் 
அவள் என்னை நேசித்திருக்கவில்லை
என்றாலும்
ஞாபகப்படுத்தக்கூடிய நினைவுகளை
கருக்கொள்ளச்செய்தவள் அவள்தானே

கருக்கொள்ளச்செய்ததன் பாவக்கறைகளை
களைந்திடும் முகமாக
தேர்ச்சிபெற்ற மருத்துவிச்சியாய்
கருக்கலைப்புச்செய்ய முயல்கிறாள்
அய்யோ பாவம்! 
அவள் முயற்சிகள் தோற்றுப்போய்
தினமும் திடகாத்திரமான
காதல் சிசுக்களை
பிரசவிக்கச்செய்கிறேன் நான்

பிரசவ வேளைகளில்
பெரும்பிரளயமான
என் காதல் சிசுக்களில் 
அழுகுரல்,
முறையற்ற விதத்தில்
கருவுற்ற எம்மை
காலம் ஏற்றிடுமா?
என்ற ஏக்கத்தின்
பீறிட்ட புலம்பல்
இவையாவற்றையும் இரும்புமனம் கொண்டு
ஏற்க மறுக்கும் இயல்பற்ற ஓர் பெண்யியம்
காரணம் கற்பிக்கின்றது
"அவள் என்னை நேசிக்கவில்லை" என்பதை


-மீராறதீப்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்...  Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 9:28 pm

தனது புதிய காதலனை
அறிமுகப்படுத்துகிறாள் 
என்காதலி

அவர்களது ஆரம்ப சம்பாசனையில்
அதிகமாக பேசப்பட்டது
என் பெயர்தானாம்
என்னாலான காயங்களுக்கு
மருத்துவக்குறிப்புத்தந்த
அவனது இனிமையான அரவணைப்பு
பிடித்துப்போக
என் இன்னாள் காதலியின்
முன்நாள் காதலன்
ஆகிவிட்டேன் நான்.

தோற்றத்தில் என்னை விட
அழகானவன்தான்
தொழிலிலும் சற்று உயர் பதவிதான்
ஆற்றமைகொண்டு நான் ஏங்கவில்லை
நான் ஆடிய களத்திற்கு அவனை
வரவேற்கிறேன்

ஏதே அரிய ஒன்றை இழந்திட்டதாக
என்னைப்பார்த்து
ஓர் ஏளனச்சிரிப்பு அவனிடமிருந்து
என் மேல் பிரியம் வைக்க
ஏராளம் பேர் என்று பெருமைகொண்ட
புருவ உயர்த்தல் அவளிடமிருந்து

நான் விட்டதை தொட்டவன் தான்
நீயென்றும்
நான் தொடாததால் விட்டவள் தான்
நீயென்றும்
மனதுக்குள் நினைத்துக் கொண்டு
அங்க அசைவின்றி
அங்கிருந்து நகர்ந்து சென்றேன்


-மீராறதீப்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்...  Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by அ.இராமநாதன் Sat Sep 14, 2013 11:19 pm

மிக்க மகிழ்ச்சி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்...  Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum