தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm

» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm

» சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 1:20 pm

» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:38 pm

» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:37 pm

» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:36 pm

» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:34 pm

» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:32 pm

» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:30 pm

» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:25 pm

» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 3:47 pm

» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm

» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm

» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm

» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm

» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm

» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm

» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm

» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm

» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm

» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm

» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm

» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm

» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm

» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm

» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm

» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm

» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm

» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm

» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm

» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm

» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm

» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm

» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm

» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm

» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm

» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm

» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm

» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm

» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm

» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி !

3 posters

Go down

ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Empty ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Mon Oct 07, 2013 9:47 pm

ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி !

மற்ற ஊர்களில் இனிப்பு வாங்கினால் !
காரம் இலவசம் தரலாம் !
 
மதுரையில் மட்டும்தான் உங்களுக்கு  !
காரம் வாங்கினால் இனிப்பு இலவசம் !

இதயம் வரை இதம் தரும் ஜெகர்தண்டா !
இனிக்கும் சுவைமிகு பருத்திப்பால் !

ஊரே மணக்கும் குண்டு மல்லி !
மல்லிகைப்பூ இட்லி மணக்கும் சட்னி !

தனி நெய்யால் செய்திட்ட கோதுமை அல்வா !
தன்னிகரில்லா சுவை மிகுந்த இனிப்புகள் !

சைவ உணவிற்கான உணவகங்கள்  உண்டு !
அசைவ உணவிற்கான உணவகங்கள்  உண்டு !

விருதுநகர் புரோட்டா மதுரையில் உண்டு !
விதவிதமான உணவு வகைகள் உண்டு !

இட்லிக்கு மட்டும் தனிக்கடை உண்டு !
தோசைகளுக்கு மட்டுமே  தனிக்கடை உண்டு !  

நடுநிசியிலும் கிடைக்கும் தூங்கா  நகரம் !
நடுநாயகமாக என்றும் விளங்கும் நகரம் !

அன்று சிலப்பதிகாரம் கண்ணகி காலம் தொடங்கி  !
இன்று கணினி அலைபேசி காலம் வரை மதுரையில் !

அல்லங்காடி  இரவுக்கடைகள் உண்டு ! .
அள்ள  அள்ளக்  குறையாத வளங்களும் உண்டு !  

உணவுகளுக்கு மட்டுமல்ல எங்கள் மதுரை !
உணர்வுகளுக்கும் சிறந்த ஊர் எங்கள் மதுரை !

பாசக்கார மனிதர்கள் வாழும் மதுரை !
நேசத்திற்காக உயிரும் தரும் மதுரை ! 

வான் உயர்ந்த கோபுரங்கள் உள்ள மதுரை !
வான் புகழ் வள்ளுவம் தந்த மதுரை !

கடலில் கலக்காத வைகை ஓடும் மதுரை !
களங்கமற்ற மனிதர்கள் வாழும் மதுரை !

திருமலை மன்னர் அரண்மனை உள்ள மதுரை !
திரும்பிய பக்கமெல்லாம் கோயில் உள்ள மதுரை !

மாரியம்மன் தெப்பக்குளம்  உள்ள மதுரை !
மைய மண்டபங்கள் பல உள்ள மதுரை !
 
காந்தியடிகளை   அரையாடையாக்கிய மதுரை !
காந்தியடிகளின்  இறுதியாடை உள்ள மதுரை !

சதுரம் சதுரமாக வடிவமைத்த மதுரை !
சந்தோசத்திற்குப்  பஞ்சமில்லா  மதுரை !


கண்டவர்கள் யாவரும்  விரும்பிடும் மதுரை !  
கழுதையும் கூட மிகவும் விரும்பிடும் மதுரை !  

வந்தாரை வரவேற்று வாழ்விக்கும் மதுரை !  
வந்து சென்றோரை  நினைக்க வைக்கும் மதுரை !  

அரசியல் வாழ்வு பலருக்குத் தந்த மதுரை !  
ஆள்வோரை நிர்ணயம் செய்திடும் மதுரை !  

திரைப்படக்  கலைஞர்களைத் தந்த மதுரை !
திரைப்படத்தின் தீர்ப்பை எழுதிடும் மதுரை !  

பட்டிமன்ற நடுவர்களைத் தந்த மதுரை !
பண்பாட்டைப்  பறைசாற்றிடும் தங்க மதுரை ! 

பள்ளிகளும் கல்லூரிகளும் நிறைந்த மதுரை !
பள்ளிவாசல்களும் தேவாலயங்களும்  உள்ள மதுரை !

மண் மணக்கும் சிறந்த ஊர் மதுரை !
மறக்க முடியாத சிறந்த ஊர் மதுரை !

சித்திரைத் திருவிழா நிகழும் மதுரை !
முத்திரைப் பதிக்கும் முத்தமிழ்  மதுரை !

சங்கம் வைத்து தமிழ் வளர்க்கும் மதுரை !
சிங்கம் நிகர் மக்கள் வாழும் மதுரை !

ஈடு இணையற்ற எங்கள்  மதுரை ! 
நாடு போற்றும் நல்ல  மதுரை !


.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2590
Points : 6206
Join date : 18/06/2010

Back to top Go down

ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி !

Post by Muthumohamed Tue Oct 08, 2013 12:04 am

மதுரையின் சிறப்பு கவிதை மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 34
Location : Palakkad

Back to top Go down

ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி !

Post by Ponmudi Manohar Tue Oct 08, 2013 4:45 pm

ஹைக்கூ  கவிதைகள் தரும் துரை நீவீர் 
மதுரைக்கு நீர் மொழிந்த கவி உரைக்கு 
மறுப்பில்லை;மதுரமான கவிதை..!
Ponmudi Manohar
Ponmudi Manohar
ரோஜா
ரோஜா

Posts : 178
Points : 226
Join date : 30/03/2013
Age : 65
Location : NAGERCOIL

Back to top Go down

ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா ! கவிஞர் இரா .இரவி
»  காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை
» ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : “மதுரை முரளி” பொறியாளர் தொடர் வண்டித் துறை ,மதுரை
» எங்கள் கனவுகள்! கவிஞர் இரா. இரவி
» வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum