தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஓஷோவின் கதைகள்

Go down

ஓஷோவின் கதைகள்  Empty ஓஷோவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 1:15 pm

அடையாளம்
************************

ஒருவன் கலை அழகுடன் அரண்மனையைவிடச் சிறப்பாக மாளிகை ஒன்றைக் கட்டியிருந்தான்.அதை அந்த நாட்டு மன்னர் விலைக்குக் கேட்டும் அவன் கொடுக்கவில்லை.ஒருநாள் அவன் வெளிய போய்விட்டுத் திரும்பும்போது வீடு பற்றி எரிந்து கொண்டிருந்தது.மன்னன் செய்த சதியோ என நினைத்து அவன் அழுது புலம்பினான்.அப்போது அவன் மகன் அங்கே ஓடி வந்தான்.

அவன் சொன்னான்,''அப்பா,கவலைப் படாதீர்கள்.இந்த வீட்டை நான் நேற்று மன்னருக்கு மூன்று பங்கு விலைக்கு விற்றுவிட்டேன்.வரும் பணத்தைக் கொண்டு இதை விட அழகான வீடு ஒன்று கட்டிக்கொள்ளலாம்.''தந்தையின் கண்ணீர் சட்டெனக் காணாமல் போயிற்று.அவன் சிரிக்கத் தொடங்கினான்.

அவன் எதிரே வீடு எரிந்து கொண்டிருந்தது.அவன் கண்களிலோ எதிர் காலக் கனவு!அப்போது அவன் இளைய மகன் ஓடி வந்தான்.அவன் சொன்னான்,''அப்பா,அண்ணன் சொன்னது உண்மைதான்.ஆனால் விற்றது பேச்சளவில்தான்.

பத்திரம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.பணமும் வாங்கவில்லை.''தந்தை மறுபடியும் அழ ஆரம்பித்து விட்டான்.
இதுதான் பற்று...அடையாளம்.ஒருவன் உயிருடன் இருக்கும்போது எல்லாவற்றையும் தன்னுடன் அடையாள படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

எல்லாவற்றையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.ஆனால் பற்றில் விழுந்து விடக் கூடாது.உடைமை கொள்ள முயலக்கூடாது.
விலகி இருங்கள்!விழித்திருங்கள்!மௌனமாய்ப் பார்த்திருங்கள்!

நன்றி ;இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஓஷோவின் கதைகள்  Empty Re: ஓஷோவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 1:18 pm

உதாசீனம்
*****************
ஒரு அரசியல்வாதி மக்களால் போற்றப்பட்டான்.பின் அவனுக்கு அதிகாரம் கிடைத்த் உடன் எல்லோரும் அவனுக்கு எதிராகி விட்டார்கள்.அவன் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டான்.அவன் அந்த ஊரை விட்டே வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.அவன் ஊர் ஊராய் தன மனைவியுடன் சென்று வீடு தேட ஆரம்பித்தான்.யாரும் அவனைக் கண்டு கொள்ளவில்லை.ஒரு ஊருக்குள் சென்றபோது அந்த ஊர் மக்கள் அவன் மீது கல்லெறிய ஆரம்பித்தார்கள்.அவன் மனைவியிடம் சொன்னான்,''இந்த ஊர்தான் நம் வாழ்வைத் தொடங்கசரியானஇடம்,''என்றான்.


மனைவியோ,''உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?''என்று கேட்டாள்.அவன் சொன்னான்,''மற்ற ஊர்க்காரர்களைப் போல இந்த ஊர் மக்கள் நம்மை உதாசீனப் படுத்த வில்லையே?அவர்கள் நம்மை கவனிப்பதால் தான் கல்லை விட்டெறிகிறார்கள்.''உதாசீனத்தை விட எதிர்ப்பு மேலானது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஓஷோவின் கதைகள்  Empty Re: ஓஷோவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 27, 2013 1:34 pm

கையாலாகாதவன்
*******************************
கலிலியோ பூமி சூரியனை சுற்றுகிறது என்று கண்டு பிடித்து சொன்னதற்கு கிறிஸ்துவ மதத்திலிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது.ஏனெனில் பைபிளில் சொல்லப்பட்டிருந்ததற்கு அது எதிராக இருந்தது.கடைசியில் எழுபது வயதுக் கிழவராயிருந்த அவரை போப்புக்கு முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கக் கட்டாயப் படுத்தினார்கள்.

அவரும் தள்ளாடியபடி நடந்துபோய் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டு,சூரியன் தான் உலகை சுற்றுகிறது என்று ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.அனைவருக்கும் மகிழ்ச்சி.பிறகு கலிலியோ வாய் விட்டு சிரித்தார்.

'நான் சொல்வதனால் ஏதாவது மாறி விடப் போகிறதா என்ன?என் வார்த்தைகள் எதை சாதித்துவிட முடியும்?நான் சொல்வதனால் பூமியும் சூரியனும் தம் போக்கை மாற்றிக் கொள்ளப் போகின்றனவா?ஆனாலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.நான் சொன்னது தவறு.

ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.பூமிதான் சூரியனை சுற்றுகிறது.என் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் பூமிக்குக் கிடையாது.நான் பைபிள் சொல்கிறபடி நடந்து கொள்கிறேன்.நான் கையாலாகாதவன்.''

நன்றி ;ஓசோவின் கதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஓஷோவின் கதைகள்  Empty Re: ஓஷோவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 27, 2013 1:37 pm

இசை எனும் தவம்
*****************************
ஒரு நவாபின் அரண்மனையில் பல இளம் பாடகர்கள் இருந்தனர்.அரசவைக்கு  வந்த சிறந்த பாடகன் ஒருவன் தான் பட சில விதிகளைச் சொன்னான்.அவை கடுமையாயிருந்தன.

அதாவது அவன் பாடும்போது யாரும் தலையை அசைக்கக் கூடாது.அசைந்தால் அவர்களின் தலைதுண்டிக்கப் பட வேண்டும்.நவாபும் விதிமுறைகளுக்கு ஒத்துக் கொண்டு,இசையைக் கேட்க விரும்புபவர்கள் இந்தக் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டால் வரலாம் என அறிவித்தான்.

பல ஆயிரம் பேர் அந்த பாடகனின் இசையைக் கேட்கக் கூடினர்.விதிகளை நிறைவேற்றும் பொருட்டு நவாப் உருவிய வாளுடன் வீரர்களை ஆங்காங்கு நிறுத்தினார்.ஆனால் தலையை அசைப்பவர்களை நிகழ்ச்சியின் இடையில் வெட்டிக்கொண்டு இருந்தால் ,பாடகனுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதால்,தலை அசைப்பவர்களை  அடையாளம் காணச் சொன்னான்.

இவ்வளவு கடுமையான ஏற்பாடுகளுக்குப் பின்னும் பத்து பேர் தலை அசைத்துவிட்டனர்.நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் தலையை வெட்ட அரசன் ஏற்பாடு செய்தான்.அப்போது அந்த பாடகன் சொன்னான்,''இந்த பத்து பேர் மட்டுமே என் பாடலைக் கேட்கத் தகுதி உள்ளவர்கள்.மற்றவர்கள் மரணத்திற்குப் பயந்து என் பாடலைக் கவனிக்கவில்லை.அவர்கள் கவனம் அவர்களின் உயிர் மீதுதான்.

அவர்களுக்கு இசை தேவையில்லை.நான் பாடிய பாடல் இந்த பத்து பேருக்கு மட்டும் தான்.அவர்கள் என் பாடலின் இனிமையில் தம்மை மறந்து விட்டார்கள்.எல்லாக் கட்டுப்பாடுகளையும் மீறி பாடலின் இனிமை அவர்களது இதயங்களைத் தொட்டிருக்கிறது..மீதி இரவும் நான் அவர்களுக்காக பாடுவேன்.எனக்குப் பரிசு எதுவும்  தேவையில்லை.இசையைக் கேட்கும் உண்மையான மனிதர்களைக் கண்டுபிடித்ததே சரியான பரிசு.

இவர்களுக்கு பரிசு கொடுக்கும்படி நான் உங்களை வேண்டுகிறேன்.ஏனெனில் இசை என்பது ஒரு தவம் என உணர்ந்தவர்கள் இவர்கள்''அந்த பத்துப் பேரைப் பொருத்தமட்டில் இசையைக் கேட்கும்போது அவர்களே  மறைந்து  போய்விட்டார்கள்..இசைமட்டுமே  அங்கு  இருந்தது .


நன்றி ஓசோனின் கதைகள் 
இருவர் உள்ளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஓஷோவின் கதைகள்  Empty Re: ஓஷோவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 27, 2013 1:40 pm

அசரீரி
**************
ஒரு படகில் பல போணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அதில் ஒரு ஞானியும் இருந்தார்.அவரைப் பார்த்து மற்ற பயணிகள் கேலியும்,கிண்டலும் செய்து வந்தனர்.அவர் தியானத்தில் அமர்ந்தார்.

இந்நேரம் அவர் எதுவும் செய்ய மாட்டார் என்பதைத் தெரிந்துகொண்ட மற்றவர்கள்,அவரை இஷ்டம் போல அடித்தனர்.அப்போதும் அவர் தியானத்தில் இருந்தார்.அவர் கண்களிலிருந்து அன்பு, கண்ணீராய் வந்து கொண்டிருந்தது.அப்போது ஆகாயத்தில் ஒரு அசரீரி ஒலித்தது.

''அன்புக்குரியவனே,நீ விரும்பினால் இந்தப் படகை நான் கவிழ்த்து விடுகிறேன்!''அப்போதும் சாதுவின் தியானம் கலையவில்லை.அடித்தவர்கள் இப்போது என்ன நடக்குமோ என்று பயந்தார்கள்.விளையாட்டு வினையாயிற்றே என்று நினைத்து அவர்கள்ஞானியின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர்.

சாதுவின் தியானம் முடிந்தது.சுற்றிலும் அச்ச உணர்வுடன் மற்றவர்கள் நிற்பதைப் பார்த்தார்.''கவலைப்படாதீர்கள்,''என்று அவர்களிடம் கூறிவிட்டு ஆகாயத்தை நோக்கி வணங்கி,''என் அன்பான கடவுளே,நீ ஏன் சாத்தானின் மொழியில் பேசுகிறாய்?நீ விளையாட வேண்டும் என்று விரும்பினால் இந்த மக்களின் புத்தியை மாற்று.

அதை விட்டுவிட்டு படகைக் கவிழச்செய்வதால்
என்ன பயன்?''என்று கேட்டார்.ஆகாயத்திலிருந்து பதில் வந்தது,''நான் மகிழ்ச்சி அடைந்தேன்.நீ சரியான உண்மையை அறிந்து கொண்டாய்.முன்னால் ஒலித்தது என் குரல் அல்ல.எவன் ஒருவன் சாத்தானின் குரலை அறிந்து கொள்ள முடியுமோ.அவனால்தான் என் குரலையும் உணர முடியும்.''

நன்றி ;நன்றி ஓசோனின் கதைகள் 
இருவர் உள்ளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஓஷோவின் கதைகள்  Empty Re: ஓஷோவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 27, 2013 1:43 pm

சொர்க்கம்
*****************
ஒரு அரசியல்வாதி சாகும் தருவாயில் நினைத்தார்,''நான் செய்த பாவங்களுக்குநரகத்திற்குத்தான் செல்ல வேண்டியிருக்கும்.''ஆனால் அவர் இறந்தவுடன் சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டார்.

அவருக்கு ஒரே வியப்பு.ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும் என்று நினைத்தார்.அங்கிருந்தவர்களிடம் கேட்டார்,''வாழ்நாள் முழுவதும் நான் நல்லசெயல்கள் எதுவும் செய்ததில்லை.எனக்கு எப்படி சொர்க்கம்...?''அவர்கள் சொன்னார்கள்,''வாழ்நாள் முழுவதும் நீ நரகத்தில் இருந்துவிட்டாய்.

அதனால் உனக்கு சொர்க்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.மேலும் நீ இருந்தது ஒரு நவீன நரகம்.இங்கு எங்கள் நரகம் எல்லாம் பழமையாகவே இருக்கிறது.இன்னும் இங்கே பழைய தண்டனைகளையே அளித்துக் கொண்டு இருக்கிறோம்.பூமியில் நீங்கள் அதையெல்லாம் நவீனமாக மாற்றிவிட்டீர்கள்.

உன்னை நரகத்தில் போட்டால் இது தான் நரகமா என்று எங்களைப் பார்த்து சிரிப்பாய்.அதனால் கடவுளுக்கே என்ன செய்வது என்று தெரியாமல் உன்னை சொர்க்கத்திற்கு அனுப்பச் சொல்லிவிட்டார்.''

மக்கள் இன்னும் நரகம் எங்கோ இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.நாம் வாழ்வதே நரக வாழ்க்கைதான்.இதை விடக் கொடிய நரகம் இன்னொன்று இருக்க முடியாது.ஆனால் நாம் வாழும் இடத்தை சொர்க்கமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது.

நன்றி ஓசோனின் கதைகள் 
இருவர் உள்ளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஓஷோவின் கதைகள்  Empty Re: ஓஷோவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 27, 2013 1:45 pm

நம்பிக்கை
*******************
சூபி ஞானியான ஜுன்னேய்த்தின்மீது நம்பிக்கை வைத்திருந்த ஒரு சீடர்,ஒரு நாள் காட்டில் வேட்டை ஆடச் சென்றபோது,தூரத்தில்,ஜுன்னேய்த்தின் அருகில் முகத்திரை அணிந்த ஒரு  இஸ்லாமியப்பெண் அமர்ந்து,

மதுவை ஒரு கோப்பையில் அவருக்காக ஊற்றிக்கொண்டிருப்பதைக் கண்டு ஜுன்னேய்த் ஒருஏமாற்றுக்காரர் என்ற முடிவுக்கு வந்தான்.அவனைக் கவனித்த ஜுன்னேய்த் அவனை அருகே  அழைத்தார்.அவன் முகக்குறிப்பை அறிந்த ஜுன்னேய்த் அப்பெண்ணின் முகத்திரையை விலக்கினார்.

அப்பெண் அவரதுதாயார்.ஜுன்னேய்த் கூறினார்,''நீ கற்பனை செய்த அழகான பெண் எங்கே?உன்னால் ஒரு மூதாட்டியைக் கற்பனை செய்ய முடியுமா?இங்கே வந்து இந்தப் புட்டியை எடுத்து ருசித்துப்பார்.சுத்தமான தண்ணீர்.

மது அல்ல.புட்டி மட்டும் மது இருந்த புட்டி.''சீடன் மன்னிக்கும்படி அவர்காலில் விழுந்தான்.ஜுன்னேய்த்  கூறினார்,''இது மன்னிப்புக்குரிய விஷயம் அல்ல,இது புரிந்து கொள்ளுதளுக்கான விஷயம்.உன்னிடம் உள்ள நம்பிக்கை வற்புறுத்தி   ஏற்படுத்தப்பட்டது.நீ பிற சீடர்களைப்போல  நடக்க 

முயற்சிக்கிறாய்.கட்டாயத்தின் பேரில் உள்ள நம்பிக்கை இப்பொழுதோ,எப்பொழுதோ நிச்சயம் உடைந்து போகும்.உனது அன்பு ஒரு முயற்சி.உண்மையான அன்பு ஒரு முயற்சியாக இருக்க முடியாது.  நம்பிக்கை வலுக்கட்டாயமாக இருக்கக் கூடாது.இயற்கையாக வரும்போது அது அழகாக இருக்கும்.அப்போது அதை எதாலும் அழிக்க முடியாது.''

நன்றி ஓசோனின் கதைகள் 
இருவர் உள்ளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஓஷோவின் கதைகள்  Empty Re: ஓஷோவின் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 27, 2013 1:48 pm

வாதத் திறமை
***********************
ஒரு பிரபலமான வக்கீல்,வாதத் திறமை மிக்கவர்.அவர் ஒரு பெரும் பணக்காரருக்காக  ஒரு கேசில் ஆஜரானார்.இந்த வக்கீல் பெரும் குடிகாரர்.பணக்காரரின் கேஸ் கோர்ட்டில் இறுதிக் கட்டத்துக்கு வந்தது.அன்று வக்கீல் தன் வாதத் திறமையைக் காட்ட வேண்டிய நாள்.

ஆனால் முந்திய இரவு மிக அதிகமாகக் குடித்திருந்ததால் கோர்ட்டிற்கு தள்ளாடிக் கொண்டே வந்தார்.குடி வெறியில் என்ன செய்கிறோம் என்று அறியாமல்,வாதத்தின்போது அவர் பணக்காரருக்கு எதிரான வலுவான வாதங்களை முன் வைக்க ஆரம்பித்து விட்டார்.

பணக்காரர் அழ ஆரம்பித்துவிட்டார்.வக்கீலின் உதவியாளர்கள் சைகைகள் மூலம் எவ்வளவோ சொல்லியும் வக்கீல் கண்டுகொள்ளவில்லை.மதிய உணவு இடைவேளை வந்தது.பணக்காரரும் வக்கீலின் உதவியாளர்களும் அவரை சூழ்ந்து கொண்டனர்.

அவருக்கு அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவுவந்தது.நடந்த தவறைப் புரிந்து கொண்ட அவர்,பணக்காரரிடம் ஒன்றும் பயப்பட வேண்டாம் எனக் கூறினார்.கோர்ட் மீண்டும் கூடியது.வக்கீல்வாதாட ஆரம்பித்தார்,''கணம் கோர்ட்டார் அவர்களே,காலையில் நான் உங்கள் முன் வைத்த விவாதங்கள் எல்லாம் மதிப்பிற்குரிய எதிர்த்தரப்பு வக்கீல் உங்கள் முன் வைக்கக்கூடிய வாதங்களாகும்.

இப்போது நான் அவற்றிற்குப் பதில் சொல்ல வேண்டியது என் கடமையாகும்.''என்றுகூறிவிட்டு ஆனித்தரமாக பணக்காரருக்கு சாதகமாக, காலையில் சொன்ன ஒவ்வொரு கருத்துக்கும் மாற்றுக் கருத்தை முன் வைத்தார்.அவர் வாதம் முடிந்தவுடன் நீதிபதி,எதிர்த்தரப்பு  வக்கீலை  அழைத்தார்.

அவரோ,'நான் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் அவரே சொல்லி பதிலும் சொல்லிவிட்டார்.இதில் நான் பேசே என்ன இருக்கிறது?'என்று கூறி அமர்ந்துவிட்டார்.கேஸ் பணக்காரருக்கு சாதகமாக முடிந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

நன்றி ஓசோனின் கதைகள் 
இருவர் உள்ளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஓஷோவின் கதைகள்  Empty Re: ஓஷோவின் கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum