தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள்! நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 23, 2021 9:04 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Tue Feb 23, 2021 10:55 am

» வழியனுப்பு மகாராணி!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:42 pm

» பேர் சொல்லும் குக்கர்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:31 pm

» வாட்சப் நகைச்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:28 pm

» தலைவருக்கு தேர்தல் ஜூரம்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:25 pm

» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:20 pm

» உதிராப் பூக்கள் ! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
by eraeravi Fri Feb 19, 2021 9:35 pm

» யாருமற்ற என் கனவுலகு! (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 19, 2021 9:29 pm

» கங்கனா ரனாவத்துக்கு எல்லா நடிகர்களோடும் பிரச்சனை… ஆனால் மோடியைத் தவிர – செம்மையாக கலாய்த்த நடிகர்!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:27 pm

» தனியார் தொலைக்காட்சியில் பிப். 28ல் நேரடியாக வெளியாகும் ’ஏலே’ – அதிகாரபூர்வ அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:25 pm

» பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:24 pm

» காதலர் தின கொண்டாட்டமாக வருகிறது பழகிய நாட்கள்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:23 pm

» கனமான சொற்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:37 pm

» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! - -கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:36 pm

» – தென்றல் விடுதூது விட்டேன்…!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:36 pm

» காற்றில் அவள் வாசம்..! - கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:34 pm

» உழவே தலை- கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:33 pm

» மனோதிருப்தி (வெண்பா) -சிறுமணவூர் முனிசாமி முதலியார்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:31 pm

» வளையாமலிருக்கும் வறுமைக்கோடு – கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:31 pm

» வாழ்க்கையை வசந்தமாக்குவோம்!-இளசை சுந்தரம்,
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:30 pm

» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! – -கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:29 pm

» காருண்யன் கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:28 pm

» கவிஞனும் இயற்கையும்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:27 pm

» சலனப்பட்ட சின்னஞ்சிறு மனம்! – கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:26 pm

» தண்ணீரின் தாகம்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:25 pm

» மாமூல் தராம சிரிங்க!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 10:05 pm

» டாக்டர், ஆபரேசன் சம்பந்தமா ஒரு சந்தேகம்…!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 10:03 pm

» பக்கிரி போடறான் பிளேடு
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 9:57 pm

» சொல்லு கபாலி உனக்கு வாரிசா யாரைப் போடறது?!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 9:55 pm

» அந்த ஆளை எதுக்குய்யா சந்தேகக் கேஸ்ல புக் பண்ணே?
by அ.இராமநாதன் Wed Feb 10, 2021 12:37 pm

» வைரமுத்து பாடல்கள் : உங்களை ஆச்சர்யப்படுத்தும் 14 தகவல்கள்!
by அ.இராமநாதன் Sun Feb 07, 2021 7:58 pm

» 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருடன் இணையும் த்ரிஷா...
by அ.இராமநாதன் Sun Feb 07, 2021 7:57 pm

» ஓ அப்படியா, இது தெரியாமப் போச்சே!
by அ.இராமநாதன் Sat Feb 06, 2021 9:15 pm

» கொரோனா உலகம் ! நூல் ஆசிரியர் : திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Feb 06, 2021 1:53 pm

» விண்ணைத் தாண்டி வருவாயா எடுத்த இயக்குனரே சிறந்தவன் – கௌதம் மேனன் நெகிழ்ச்சி!
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:48 pm

» கேரள திரைப்பட விழாவிற்கு தேர்வான பா.ரஞ்சித் திரைப்படம்
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:46 pm

» ருத்ரன்’ படத்தில் இணைந்த ‘காஞ்சனா’ கூட்டணி
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:45 pm

» உதிராப் பூக்கள்! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி
by eraeravi Sun Jan 24, 2021 1:35 pm

» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் ! (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! முனைவர் செ.ரவிசங்கர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 15, 2021 3:49 pm

» மண்ணும் மக்களும்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 06, 2021 9:42 pm

» அகராதி நீ என் அகராதி
by கவிப்புயல் இனியவன் Wed Dec 30, 2020 10:14 am

» ரசித்தவை பகிர்வோம்
by அ.இராமநாதன் Sat Dec 26, 2020 9:50 pm

» நீரில் நிழலாய் மரம்! நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Dec 26, 2020 7:47 pm

» கண்காணிப்பு - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்

Go down

இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்  Empty இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 23, 2013 9:33 pm

காற்று
*************** 
தெற்கிலிருந்து வீசினால்    --தென்றல்
வடக்கிலிருந்து வீசினால்   --வாடை
கிழக்கிலிருந்து வீசினால்   ---கொண்டல்
மேற்கிலிருந்து வந்தால்     ---மேலை
*****************
பெண்கள்
**************
தமிழில் பெண்களுக்கு அவர்களின் ஒவ்வொரு பருவத்துக்கேற்ற பெயர்கள் உள்ளன.

நாற்பது வயதுக்கு உட்பட்ட பெண்களின் பருவங்களை ஏழாகப் பிரித்திருக்கிறார்கள்.

ஐந்து வயது முதல் ஏழு வயது முடிய 
பேதைப் பருவம்

எட்டு முதல் பதினொன்று முடிய 
பெதும்பைப்  பருவம்..

பன்னிரெண்டும்,பதிமூன்றும் 
மங்கைப் பருவம்.

பதினான்கு முதல் பத்தொன்பது முடிய 
மடந்தை.

இருபது முதல் இருபத்தைந்து முடிய 
அரிவை.

இருபத்தாறு முதல் முப்பத்தொன்பது 
முடிய தெரிவைப் பருவம்.

நாற்பது முதல் பேரிளம்பெண்.

நன்றி ;இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்  Empty Re: இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 23, 2013 9:35 pm

பூ 
மலர்வதால் --மலர்.
விரிவதால் ---வீ
பூப்பதால் --பூ
வாடுவதால் --அலர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்  Empty Re: இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 23, 2013 9:39 pm

இலைகள்
*******************
தமிழில் வெவ்வேறு தாவரங்களின் இலைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு.
வாழை மரம்,அரச மரம்,ஆல மரம்                   --இலை
பூமியில் வளரும் கொடிகளின் இலை           ---பூண்டு
கோரை,அறுகு இவற்றின் இலை                        ---புல்
நெல்,கேழ்வரகு இவற்றின் இலை                   --தாள்
மலையைச் சார்ந்த மரங்களின் இலைகள்  --தழை
சப்பாத்தி,தாழை இவற்றின் இலைகள்          --மடல்  
நாணல்,கரும்பு இவற்றின் இலைகள்            --தோகை
தென்னை,பனை இவற்றின் இலைகள்          --ஓலை
அகத்தி,பசலை இவற்றின் இலைகள்             --கீரை 

நன்றி ;இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்  Empty Re: இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 23, 2013 9:40 pm

பேசுதல்
தமிழில் பேசுதலைக் குறிக்க உள்ள வார்த்தைகள்;
பேசுதல் =பொருள் கெடாமல் பேசுதல்
கூறுதல் =கூறு படுத்திச் சொல்லுதல்
பகர்தல் =அழகாகப் பேசுதல்
சொல்லுதல்=தரக் குறைவாகப் பேசுதல்
பொழிதல் =இனிமையாகப் பேசுதல்
இயம்புதல் =அழுத்தமாகப் பேசுதல்
அருளுதல் =தவத்தில் சிறந்தோர் பேசுதல்
அறைதல் =தொடர்பில்லாமல் பேசுதல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்  Empty Re: இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 23, 2013 9:42 pm

சாப்பாடு
*************
சாப்பிடுவது குறித்து தமிழில் எத்தனை நுட்பமான வார்த்தைகள்?
அருந்துதல்   =மிகச்சிறிய அளவில் உட்கொள்ளுதல் (மருந்து)
உண்ணல      =பசி தீர உட் கொள்ளல்
உறிஞ்சல்     =வாயைக் குவித்து நீரியல் பண்டங்களை இழுத்தல்  
குடித்தல்       =சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்(கஞ்சி)
தின்னல்        =சுவைக்காக ஓரளவு தின்னுதல்(முறுக்கு)
துய்த்தல்       =சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளல்
பருகல்           =நீரியல் பண்டங்களை சிறிது சிறிதாகக் குடித்தல்
விழுங்கல்    =பல்லிற்கும் நாவிற்கும் வேலையின்றி தொண்டை வலி உட்கொள்ளல் (மாத்திரை)

நன்றி ;இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்  Empty Re: இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 23, 2013 9:44 pm

ஓரெழுத்து வார்த்தை
********************************
தமிழில் உள்ள ஓரெழுத்து வார்த்தைகளும் பொருளும்;

அ =எட்டு             ஆ =பசு            ஈ =ஒரு பூச்சி             உ =சிவன்         ஊ =தசை
ஐ =ஐந்து               ஓ=மதகு நீர் தாங்கும் பலகை       கா =சோலை    கு =பூமி
கூ =பூமி               கை =கரம்      கோ =அரசன்           சா =இறப்பு
சே =அழிஞ்சில் மரம்                சோ =மதில்              தா =கொடு        
து =பறவை இறகு               தே =நாயகன்                 தை =ஒரு மாதம் 
நா -நாக்கு           நௌ =மரக்கலம்              பா =பாட்டு               பூ =மலர்    
வை =வைக்கோல்         பே =மேகம்          பை =பாம்புப் படம்          மா =மாமரம்
மீ= ஆகாயம்       மூ =மூன்று            மை =அஞ்சனம்             யா =அகலம்  
வீ=பறவை           தீ =நெருப்பு            து= உணவு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்  Empty Re: இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 23, 2013 9:45 pm

ஆண்கள்

தமிழில் ஆண்களைக் குறிப்பிட, வெவ்வேறு வயதில் வெவ்வேறு பெயர்கள் உள்ளன.
7  வயதுக்குக் கீழ்    ---பாலன் 
7--10  வயது               ---மீளி 
10--14 வயது             ---மறவோன் 
14--16 வயது             ---திறலோன் 
16  வயது வரை      ---காளை
16--30  வயது            ---விடலை 
30 வயதுக்கு மேல் ---முதுமகன்                 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்  Empty Re: இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 23, 2013 9:50 pm

பூக்கள்
***************
நமது தமிழ் மொழி ஒரு இனிமையான மொழி.இதன் சொல் வழமை தான்  எவ்வளவு சிறப்பாக இருக்கிறது?
பூக்களின் ஒவ்வொரு பருவத்திற்கும் தமிழில் ஒரு பெயர் இருக்கிறது.

மொக்கு    ---முகப்பு காட்டும் நிலை 
மொட்டு   ----மூட்டும் இறுக்க நிலை 
அரும்பு    ----அரும்பும்  சூழ்நிலை
முகிழ்       ----முகிழ்த்து வரும் நிலை
மூகை      ----மணம் முகம் காட்டும் நிலை
மலர்         ----மலர்ந்து மணம் கமழும் நிலை
அலர்        ----மிக நன்கு மலர்ந்த நிலை.
வீ               ----வீழும்  நிலைப்பூ.
செம்மல் ----வாடி வதங்கிய நிலை.

நன்றி ;இருவர் உள்ளம் தளம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்  Empty Re: இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 12:38 pm

சிரிப்பவன்

தனக்குள் சிரிப்பவன் ஞானி .
தனக்குத்தானே  சிரிப்பவன்  பைத்தியம்.
தன்னை மறந்து சிரிப்பவன் ரசிகன்.
தன்னை நினைத்துச் சிரிப்பவன் காதலன்.
பிறரைப் பார்த்துச் சிரிப்பவன் கர்வி.
பிறருக்காகச் சிரிப்பவன் கயவன்.
பிறர் நோகச் சிரிப்பவன் கொடியவன்.
பிறர் காணச்சிரிப்பவன் கோமாளி.
சிரித்துக் கொண்டே வெற்றி பெறுபவன் மதியூகி.
வெற்றி பெற்றாலும் சிரிக்காதவன் கர்ம யோகி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்  Empty Re: இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 12:41 pm

பேசுதல்
************
தமிழில் பேசுதலைக் குறிக்க உள்ள வார்த்தைகள்;
பேசுதல்         =பொருள் கெடாமல் பேசுதல்
கூறுதல்        =கூறு படுத்திச் சொல்லுதல்
பகர்தல்         =அழகாகப் பேசுதல்
சொல்லுதல்=தரக் குறைவாகப் பேசுதல்
பொழிதல்     =இனிமையாகப் பேசுதல்
இயம்புதல்   =அழுத்தமாகப் பேசுதல்
அருளுதல்   =தவத்தில் சிறந்தோர் பேசுதல்
அறைதல்     =தொடர்பில்லாமல் பேசுதல்


நன்றி ;இருவர் உள்ளம் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்  Empty Re: இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 25, 2013 2:24 pm

சிறப்பான முயற்சி பாராட்டுக்கள் தொடருங்கள் ஐயா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்  Animated-Border-SingleRainbowBall
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 37
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்  Empty Re: இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 4:31 pm

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்  Empty Re: இனிய தமிழ் தெரிந்து கொள்ளவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum