தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அர்த்தமே வேறுதான்...
2 posters
Page 1 of 1
அர்த்தமே வேறுதான்...
வாழை மரம் வடக்குப் பக்கமா தார் போடணும். வேற திசையில தார் போட்டுச்சுனா, அந்த வீடு அவ்வளவுதான்; வெளங்காதுன்னு சொல்றது சம்பிரதாயம். இது உண்மையா? வாழை மரத்துக்கும், வீடு வெளங்கறதுக்கும் என்ன சம்பந்தம்? விளக்கமா தெரிஞ்சுக்கலாமா...
உண்மை என்னன்னா... இது விவசாயத்தோடு சம்பந்தப்பட்டது. வாழை பயிரிடுவதற்கு தகுந்த காலமா, ஆடி மாசத்தைச் சொல்வோம். ஆடிப் பட்டம் தேடி விதைனு சொல்வாங்களே! அப்ப அடிக்கற காத்தை ஆடிக் காத்துன்னு சொல்வாங்க. அதையே இன்னொரு விதமா& தென்மேற்குப் பருவக் காத்துனும் சொல்வோம்.
இந்தக் காத்து ஒழுங்கா வீசினால், நாடு வளமா இருக்கும். இது முறையா வீசுதா இல்லையானு நமக்கு எப்படித் தெரியும்? ஆடிக் காத்து ஒழுங்கா வீசுனா, வாழை மரம் வடக்குப் பார்த்துத் தார் போடும். அதை வெச்சு ஆடிக் காத்து நல்லா வீசுது; பயிர் பச்சையெல்லாம் நல்லா விளையும்னு தெரிஞ்சுக்கலாம். அப்படி இல்லாம வாழை மரம் வேற திசையில் தார் போட்டுச்சுனா, ஆடிக் காத்து சரியா அடிக்கலை; பயிர் பச்சைங்க ஒழுங்கா விளையாது, உணவுப் பண்டங்களுக்குத் திண்டாட்டம்னு தெரிஞ்சுக்கலாம்.
ஆக, வாழைத் தார் விஷயம்& விவசாயத்துக்காகச் சொல்லப்பட்டது.
இதைச் சொல்லி வெச்ச பாட்டன், பூட்டனை எல்லாம் நிக்க வெச்சு, சுத்தி வந்து தரையில விழுந்து நாம நமஸ்காரம் செய்யணும். ஆனால், நாம உண்மை தெரியாம இந்த விஷயத்தை வீட்டோட தொடர்புபடுத்தி, நாமும் குழம்பி அடுத்தவங்களையும் குழப்பறோம்.

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அர்த்தமே வேறுதான்...
இதே மாதிரி வீட்டுத் தோட்டத்துல ஆமணக்கு வளர்க்கக் கூடாதுனும் சொல்வாங்க. வளர்த்தால், அதன் காய் வெடிச்சுச் சிதறுவதைப் போல, அந்தக் குடும்பமும் வெடிச்சுச் சிதறிடும்பாங்க. இதுல என்ன இருக்குனு பாக்கலாமா?
-
பொதுவா, வெடிச்சுப் பரவும் விதைகள் கடினமா இருக்கும். ஆனால், ஆமணக்கு விதைகள் இளகின தன்மை கொண்டதா இருக்கும். வெயில் ஏற ஏற, முற்றிய ஆமணக்குக் காய்கள்லாம் வெடிச்சு, விதைகள் இறைஞ்சு கெடக்கும்.
-
விஷத் தன்மையோட பளபளப்பா இருக்கற அந்த விதைகளை, குழந்தைகள் எடுத்து வாயில போட்டா, என்னாகும்? விபரீதம்தான்! அதனால இதை வீட்டுத் தோட்டத்துல வளர்க்கக் கூடாதுனு சொன்னாங்க..
-
பொதுவா, வெடிச்சுப் பரவும் விதைகள் கடினமா இருக்கும். ஆனால், ஆமணக்கு விதைகள் இளகின தன்மை கொண்டதா இருக்கும். வெயில் ஏற ஏற, முற்றிய ஆமணக்குக் காய்கள்லாம் வெடிச்சு, விதைகள் இறைஞ்சு கெடக்கும்.
-
விஷத் தன்மையோட பளபளப்பா இருக்கற அந்த விதைகளை, குழந்தைகள் எடுத்து வாயில போட்டா, என்னாகும்? விபரீதம்தான்! அதனால இதை வீட்டுத் தோட்டத்துல வளர்க்கக் கூடாதுனு சொன்னாங்க..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அர்த்தமே வேறுதான்...
வீட்டுல புறா வளர்க்கக் கூடாது; வளர்த்தால், புறாக்கள் எழுப்புற ‘கும்கும்’ சத்தத்தால, குடும்பம் வளராது; நசிஞ்சுடும்கறது உண்மையா?’னு கேட்டிருக்காங்க.
-
புறாவை வீட்டில் வளர்க்கக் கூடாதுங்கறது சரிதான். ஆனா, புறாக்களோட சத்தத்துக்கும், நம்ம குடும்பத்துக்கும் எந்த விதமான சம்பந்தமும் கெடையாது. புறாக்களோட கழிவு வாடை, பாம்புங்களைக் கவர்ந்து இழுக்கும்.
-
அதனால புறாக் கூண்டுக்கு வரும் பாம்புகள், அங்க இருக்கற புறா முட்டைகளை உடைச்சுக் குடிச்சுட்டு, கூண்டுக்குள்ளேயே மயங்கிச் சுருண்டு படுத்துக்கும். வெவரம் தெரியாம நாம புறாக் கூண்டு கிட்டப் போனால், ‘இவன் தன்னைத்தான் அடிக்க வர்றான்’னு நெனச்சு, பாம்பு நம்மளப் போட்டுத் தள்ளிடும். அப்புறம் கதை கந்தல்தான்!
-
இப்படி பாம்பு கீம்புனு சொல்லி, நம்மள பயப்படுத்தக் கூடாதுங்கறதால, புறாக்களோட சத்தம் குடும்பத்துக்கு ஆகாதுனு டெக்னிக்கலா சொல்லி வெச்சாங்க!’’
-
புறாவை வீட்டில் வளர்க்கக் கூடாதுங்கறது சரிதான். ஆனா, புறாக்களோட சத்தத்துக்கும், நம்ம குடும்பத்துக்கும் எந்த விதமான சம்பந்தமும் கெடையாது. புறாக்களோட கழிவு வாடை, பாம்புங்களைக் கவர்ந்து இழுக்கும்.
-
அதனால புறாக் கூண்டுக்கு வரும் பாம்புகள், அங்க இருக்கற புறா முட்டைகளை உடைச்சுக் குடிச்சுட்டு, கூண்டுக்குள்ளேயே மயங்கிச் சுருண்டு படுத்துக்கும். வெவரம் தெரியாம நாம புறாக் கூண்டு கிட்டப் போனால், ‘இவன் தன்னைத்தான் அடிக்க வர்றான்’னு நெனச்சு, பாம்பு நம்மளப் போட்டுத் தள்ளிடும். அப்புறம் கதை கந்தல்தான்!
-
இப்படி பாம்பு கீம்புனு சொல்லி, நம்மள பயப்படுத்தக் கூடாதுங்கறதால, புறாக்களோட சத்தம் குடும்பத்துக்கு ஆகாதுனு டெக்னிக்கலா சொல்லி வெச்சாங்க!’’
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அர்த்தமே வேறுதான்...
‘உச்சி வேளையில கிணத்துக்குள்ள எட்டிப் பார்க்கக் கூடாது. பார்த்தால், பேய் அடிச்சு கிணத்துக்குள்ள தள்ளிடும்னு, ஊர்ப் பக்கம் சொல்றாங்களே... அது உண்மையா?’ங்கிறது கேள்வி. \
-
மொதல்ல பேய்& பிசாசைத் தூக்கி ஓரமா போடுங்க. இல்லாட்டி, அந்தக் கெணத்துக்குள்ளேயே தூக்கிப் போட்ருங்க! பேய் பயத்தை விட்டுட்டு, கேள்விக்கான பதிலை நம்ம வழிப்படி பார்க்கலாம்!
-
கெணறுகள்ல அதுவும் நாம உபயோகப்படுத்தாத கெணறுகள்ள விஷ வாயுங்கற நச்சுக்காத்து உருவாகும் வாய்ப்பு உண்டு. உச்சி வெயில் நேரத்துல, சூரியக் கதிர்கள் நேரா கெணத்துல பாயும். சூடுபட்ட பால் பொங்கற மாதிரி, சூரியச் சூட்டுல, கெணத்துல இருக்கற விஷ வாயு பொங்கி மேலே வரும். அப்ப நாம கெணத்துக்குள்ளே எட்டிப் பார்த்தோம்னா விஷ வாயு தாக்கி, நாம அப்படியே அந்தக் கெணத்துக்குள்ள விழ வேண்டியதுதான்! இந்த மாதிரி விஷ வாயு தாக்கி இப்படி நடந்துச்சுனு அடிக்கடி செய்தித் தாள்கள்ல படிச்சிருப்பீங்களே...
-
இந்த விபரீதம்லாம் வேண்டாம்னுதான் நம்ம முன்னோர் விஞ்ஞானபூர்வமான தகவலை, இப்படி ஒரு நம்பிக்கையா சொல்லி வெச்சாங்க’’
-
மொதல்ல பேய்& பிசாசைத் தூக்கி ஓரமா போடுங்க. இல்லாட்டி, அந்தக் கெணத்துக்குள்ளேயே தூக்கிப் போட்ருங்க! பேய் பயத்தை விட்டுட்டு, கேள்விக்கான பதிலை நம்ம வழிப்படி பார்க்கலாம்!
-
கெணறுகள்ல அதுவும் நாம உபயோகப்படுத்தாத கெணறுகள்ள விஷ வாயுங்கற நச்சுக்காத்து உருவாகும் வாய்ப்பு உண்டு. உச்சி வெயில் நேரத்துல, சூரியக் கதிர்கள் நேரா கெணத்துல பாயும். சூடுபட்ட பால் பொங்கற மாதிரி, சூரியச் சூட்டுல, கெணத்துல இருக்கற விஷ வாயு பொங்கி மேலே வரும். அப்ப நாம கெணத்துக்குள்ளே எட்டிப் பார்த்தோம்னா விஷ வாயு தாக்கி, நாம அப்படியே அந்தக் கெணத்துக்குள்ள விழ வேண்டியதுதான்! இந்த மாதிரி விஷ வாயு தாக்கி இப்படி நடந்துச்சுனு அடிக்கடி செய்தித் தாள்கள்ல படிச்சிருப்பீங்களே...
-
இந்த விபரீதம்லாம் வேண்டாம்னுதான் நம்ம முன்னோர் விஞ்ஞானபூர்வமான தகவலை, இப்படி ஒரு நம்பிக்கையா சொல்லி வெச்சாங்க’’
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அர்த்தமே வேறுதான்...
-
----
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க....
விளக்கம் சொன்ன தாத்தாவுக்கு ..
-
நன்றி:
ஆனந்த விகடன்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அர்த்தமே வேறுதான்...
ரொம்ப நல்ல பயனுள்ள தகவல்கள் ஐயா இப்போ தான் இந்த விடயங்கள் எனக்கு தெரியும்... தொடரட்டும் உங்களின் பகிர்வுகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum