தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்னை தனி மாநிலமாகிறதா?

3 posters

Go down

சென்னை தனி மாநிலமாகிறதா? Empty சென்னை தனி மாநிலமாகிறதா?

Post by உதுமான் மைதீன் Thu Dec 16, 2010 9:17 pm

சென்னை தமிழ்நாட்டின் இதயம் என்று சொல்லும் அளவிற்க்கு தமிழ்நாட்டின் அத்தனை பகுதியிலிருந்தும் பெரும்பாலும் வீட்டிற்க்கு ஒருவராவது சென்னையில் வசிக்கும் வரம் பெற்றிருக்கின்றனர் .இந்த நகரில் விளையும் நல்லது கெட்டதுகளின் பிரதிபலிப்பை தமிழ்நாட்டின் அத்தனை ஊர்களிலும் காணலாம், சட்டமன்றம், சினிமாத்துறை,தொழில்துறை,மென்பொருள் துறை என அத்தனை விஷயங்களின் தலைமையிடமாக விளங்குகிறது.இதன் விளைவு இடப்பற்றாக்குறை, நில மற்றும் வீடு ஆகியவற்றின் விலை உயர்வு,வீட்டு வாடகை உயர்வு தண்ணீர் பற்றாக்குறை இன்னும் இன்னும் நிறைய நிறைய பிரச்சினைகள் இருந்தாலும் இவற்றையும் மீறி தினந்தோறும் சென்னை வந்து வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் செல்கிறது குறைந்த பாடில்லை...

ஏன் இந்த சென்னை மோகம் ? விமான போக்குவரத்து,கப்பல் போக்குவரத்து இந்த இரண்டு விஷயங்களினால்தான் இந்த இரண்டு விஷயங்களினாலும் தற்போது வந்திருக்கும் மென்பொருள் துறையினால் மட்டுமே சென்னையின் அத்தனை அசுர வளர்ச்சிக்கும் காரணம் என்று கூறலாம் இது இன்னும் எங்க போய் முடிய போகின்றதோ அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்


பொதுவாக ஒரு பள்ளியின் ஒரு வகுப்பில் படிக்கிற 40 மாணவர்களில் ஒருத்தன் நல்லா படிக்கின்றான் அவனுக்கு அதுக்கு தகுந்த வசதிகளும் வாய்ப்பும் இருக்கென்று வைத்து கொள்வோம் ஆசிரியரும் அந்த மாணவனை மட்டும் நீ நல்லா படிக்கிறன்னு தட்டி கொடுத்து, மற்ற பசங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாறென்றால் அந்த வசதியான பையன் மட்டும்தான் நல்ல மதிப்பெண் எடுப்பான் மற்றவங்க எல்லாம் ஏதோ பேருக்கு படித்தோம் என்று போய்டுவாங்க. அதுமட்டுமில்லாமல் அந்த ஒரு மாணவரின் மீது மற்ற மாணவர்களுக்கு காழ்ப்புணர்ச்சியும் வரும் அப்பொழுது அந்த ஆசிரியர் என்ன பண்ண வேண்டும் மீதியிருக்கும் மாணவர்களுக்கும் அவர்கள் படிப்பதற்க்கு தகுந்த வசதியும் ஊக்கமும் கொடுக்கும்பொழுது மற்ற மாணவர்களுக்கும் இன்னும் நல்லா படிக்கணும் என்ற ஆர்வம் வரும் அனைத்து மாணவர்களும் நல்ல முறையில் தேர்ச்சி பெற்று அந்த பள்ளிக்கே பெருமை சேர்ப்பார்கள் ஒரே ஒரு மாணவன் மட்டுமே அந்த பள்ளிக்கு பெயர் வாங்கித்தருவது எப்படியிருக்கும் அனைத்து மாணவர்களும் சேர்ந்து அந்த பள்ளிக்கு பெயர் வாங்கித்தருவது எப்படியிருக்கும்?

இதே போல்தான் தமிழ் நாட்டின் அனைத்து நகரங்களில் வசிக்கும் மக்களின் சென்னை வாழ்க்கை ஆசையானது சென்னை மீது ஒரு வித காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும். இல்லையென்று சும்மா வார்த்தைக்கு வேண்டுமானால் சொல்லலாம் ஆனால் நிஜத்தில் நம்மால் சென்னையில் வாழ முடியவில்லை என்ற ஒரு ஏக்கம் இருக்கும் .இந்த அரசும் அரசாங்கமும் அரசியல் வாதிகளுமே சென்னையையே விரும்புகின்றனர் ஆதலால் அவர்களும் இந்த விஷயத்தை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாமல் பத்தோடு பதினொன்றாக ஆட்சி செய்துவிட்டு போய்விடுகின்றனர்..

சென்னை தவிர மற்ற நகரங்களில் வாழும் எங்களுக்கு இப்போ என்ன தேவையென்று நினைத்து பார்க்க அரசாங்கத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும் நேரமில்லை ஏன் தமிழ் நாட்டில் இருக்கும் மதுரை திருச்சி கோவை போன்ற நகரங்கள் இன்னும் வளரும் நகரங்களாகவே இருக்கின்றன? இந்நகரங்களிலும் சென்னையில் இருக்கும் பாதி அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களை பகிர்ந்து அந்நகர வளர்ச்சிகளுக்கும் அரசு உதவலாமே ஆனால் முயற்சி செய்ய மாட்டார்கள் அத்தனைக்கும் லஞ்சம் என்ற விஷயத்தையும் தாண்டி சுயநலம் என்ற ஒன்றும் இருக்கின்றது , முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரின் வீடு நிலம் அனைத்தும் சென்னையில்தானே இருக்கின்றது இன்னும் நிறைய அரசியல் தலைவர்களின் பங்குகளும் சென்னையில் இருக்கும் தனியார் தொழில் நிறுவனங்களின் மூதலீடாய் இருக்கின்ற பொழுது அவர்கள் எப்படி சென்னையை விட்டு மற்ற நகரங்களின் வளர்ச்சியில் அக்கறை கொள்வார்கள்?

இப்படி கப்பல் துறைமுகம் இருக்கும் நகரம் மட்டும் தொழிற் புரிய வசதியென்று ஒரு நியாயம் இருக்கிறது . ஏனென்றால் உற்பத்தி செய்த பொருள்களின் ஏற்றுமதிகளுக்கும் உதிரி பாகங்களின் இறக்குமதிக்கும் சரியென்று வைத்துகொண்டாலும் மற்ற கணிணி மென்பொருள் துறையும் சென்னையிலேதான் வளர்ச்சி பெறவேண்டுமென்று விதியிருக்கிறதா என்ன? கேட்டால் கணிணி மென் பொருள் துறை வல்லுனர்கள் ஓய்வு நேரங்களை கழிக்க சிறந்த பொழுதுபோக்கு இடங்களும் இங்கே நிறைய இருப்பதால் பெரும்பாலானோர் சென்னையையே விரும்பவதாக கூறலாம் அந்த பொழுதுபோக்கு வசதிகளை தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் ஏற்படுத்தி அந்த நகரங்களிலும் மென் பொருள் துறை வளர்ச்சியை ஏற்படுத்தலாமே இப்பொழுதும் இநநகரங்களில் மென் பொருள் நிறுவனங்கள் இயங்கினாலும் சென்னை அளவிற்க்கு வளர்ச்சியடையவில்லையென்றே கூறலாம்...

ஏன் சினிமாத்துறை சென்னையில் மட்டும் இயங்குகிறது? சினிமா தயாரிப்பதற்க்கு தேவையான மூல சாதனங்கள், ஸ்டுடியோக்கள், ரெக்கார்டிங் ஸ்டுடியோக்கள் அத்தனையும் சென்னையில் மட்டுமே இருப்பதனால் சினிமா தயாரிப்பவர்களால் சென்னையை விட்டு வெளியே வர விருப்பமில்லை அத்தனை வசதிகளையும் தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும் ஏற்படுத்தி அங்கேயும் திரைப்படம் எடுக்க முயற்சிக்கலாமே செலவுகளும் குறையும்,ஆனால் இதையும் கண்டுகொள்வார்களா மாட்டார்கள் ஏனென்று அவர்களுக்கும் திரைப்படத்துறையினருக்கு மட்டுமே வெளிச்சம்...

இன்னும் கல்வி,மருத்துவம் அத்தனையிலும் பிரதான நிறுவனங்கள் அனைத்தும் சென்னையில் மட்டும் இயங்குகின்றன இப்படியே போனால் சென்னை தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து தனி மாநிலமாக உருவெடுக்கும் நிலை வரலாம் அப்படியான சூழ்நிலையில் வளர்ச்சியடையாத நகரங்களை மட்டுமே வைத்துகொண்டு மீதியிருக்கும் நாடு பொருளாதார நிலையில் கடும் வீழ்ச்சிகளை சந்திக்கும் நிலை ஏற்படும் என்பது நிச்சயம்..இவற்றை தவிர்க்க தமிழ்நாட்டின் மற்ற நகரங்களையும் கண்டுகொள்ளுமா அரசு?
உதுமான் மைதீன்
உதுமான் மைதீன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை

Back to top Go down

சென்னை தனி மாநிலமாகிறதா? Empty Re: சென்னை தனி மாநிலமாகிறதா?

Post by manjubashini Thu Dec 16, 2010 10:56 pm

அரிய தகவல்களை அறியத் தந்தமைக்கு அன்பு நன்றிகள் உதுமான்....
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்

Back to top Go down

சென்னை தனி மாநிலமாகிறதா? Empty Re: சென்னை தனி மாநிலமாகிறதா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 18, 2010 1:44 pm

manjubashini wrote:அரிய தகவல்களை அறியத் தந்தமைக்கு அன்பு நன்றிகள் உதுமான்....
சரிங்க பாஸ் :héhé: :héhé:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்னை தனி மாநிலமாகிறதா? Empty Re: சென்னை தனி மாநிலமாகிறதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum