தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வரலாற்றுத் துணுக்குகள்

2 posters

Go down

வரலாற்றுத் துணுக்குகள் Empty வரலாற்றுத் துணுக்குகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 31, 2013 12:34 pm

பண்டைய காலத்தில் நாணயங்களை 'காசுகள்' என்றும் 'பணம்', 'வராகன்' என்றும் அழைத்திருக்கிறார்கள். 1640 ல் 'ஹேல்' என்னும் அதிகாரி காலத்தில், நாணயச் சாலை ஒன்று ஏற்படுத்தப்பட்டு, முகமதியர் (இஸ்லாமியர்) முத்திரையோடு வெள்ளி நாணயங்களை அச்சடித்து வெளியிட, சென்னை தங்க சாலைக்கு (நாணயச்சாலை) மாற்றியிருக்கிறார்கள்.     

                சிந்தாதிரிப்பேட்டையிலும் நாணயச்சாலை ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதனை லிங்கசெட்டி என்பவர் கவனித்து வந்திருக்கிறார். வங்காளத்திற்கு ஆற்காட்டு நாணயங்கள் இங்கிருந்துதான் அனுப்பபட்டன. ஆரம்பத்தில் இது கோட்டையிலும் அமைக்கப்பட்டு, குத்தகை மூலம் நாணயம் அச்சடிக்கப்பட்டு வந்திருக்கிறது. தங்கசாலை குத்தகைக்காரரான லிங்கசெட்டியின் பரம்பரையினர் 'காசுக்கார செட்டிமார்' என்று இன்னும் அழைக்கப்பட்டு வருகிறார்கள்.         

                1814 ல் சர்.தாமஸ்மன்றோ காலத்தில் நடைமுறை வழக்கத்திலிருந்த நட்சத்திர வராகனுக்குப் பதிலாக ரூபாய் நாணயங்கள், சென்னை மாகாண‌த்தின் நிரந்தர செலவாணியாக்கப்பட்டிருக்கிறது. ஒரு வராகனுக்கு 3.5(மூன்றரை) ரூபாய்கள் என்று கூறப்பட்டு புதிய நாணயங்கள், கால் ரூபாய்கள், இரண்டணா‌க்கள், அணாக்கள் என்று அழைக்கப்பட்டிருக்கின்றன. இவையெல்லாமே வெள்ளியினாலேயே செய்யப்பட்டிருக்கின்றன. இதைத் தவிர அணாவுக்கு 6 பைசாக்கள் என்கிற வீதத்தில், சிறு செப்புக் காசுகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

                காலப்போக்கில் நாணயசாலை திருத்தியமைக்கப்பட்டு தங்கசாலையின் வடக்கு முனையில் உள்ள நாணய மாளிகை இடத்திற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

                இந்த மாளிகை உள்ள இடத்திற்கு அருகில் இருந்த வெடிமருந்து சாலையில் பல தடவை விபத்து ஏற்பட்டதால், அதனை கறுப்பர் பட்டினத்து சுவருக்கு சற்று அப்பால் மாற்றிவிட்டு, அந்த இடத்தில் 1807ல் புதிய நாணயச்சாலை கட்டிடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. 1833ல் சென்னையில் இருந்த தங்க சாலையை மூடிவிட்டு, கல்கத்தாவில் இருந்த நாணயச்சாலையில் நாணயங்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன. 

- நன்றி ; வைகை அனிஷ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வரலாற்றுத் துணுக்குகள் Empty Re: வரலாற்றுத் துணுக்குகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 31, 2013 12:38 pm

பூமியை உருண்டையாகப் பார்த்த முதல் மனிதன்
******************************************
 பூமி உருண்டை என்பதை முதன்முதலாகப் பார்த்த மனிதன் ரஷ்யாவின் யூரிகாகரின்தான். இவர்தான் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர். விண்வெளியில் இருந்து பூமியையும் அதன் உருண்டை வடிவத்தையும் முதன்முதலாகப் பார்த்த பெருமை இவரையே சாரும்.

20 நிமிடத்தில் நான்கு செய்தித்தாள்

 அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜான் எப்.கென்னடி தினமும் 20 நிமிடங்கள் மட்டுமே செய்தித்தாள்கள் படிக்க ஒதுக்கி வந்தார். இந்த குறுகிய நேரத்திற்குள் அவர் நான்கு செய்தித்தாள்களை படித்துவிடுவார் என்பது ஆச்சரியமான செய்தி.

தோல் தொழிற்சாலை தலைமை செயலகமாக மாறிய விந்தை

 விஜயநகர நாயக்க மன்னர்களின் கடைசி மன்னரான சந்திரகிரி மன்னரிடம், ஆங்கிலேயர் ஆட்டுத்தோலை பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு இடம் கேட்டு வாங்கினார். அந்த இடத்தில் பின்னாளில் புனித ஜார்ஜ்கோட்டையான தற்போதைய தலைமைச் செயலகம் அமைந்துள்ளது.

மன்னர்களின் அடையாளப்பூ

 பண்டைய தமிழ் மன்ன‌ர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு அடையாளமாக சின்னங்களும், பூக்களும் வைத்திருந்தனர். சேர மன்னன் வில் அம்பு சின்னத்தையும், பனம் பூவையும், சோழ மன்னன் புலிச் சின்னத்தையும், அத்திப்பூவையும், பாண்டி மன்னன் மீன் சின்னத்தையும், வேப்பம்பூவையும் அடையாளமாக வைத்திருந்தனர்.

- வைகை அனிஷ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வரலாற்றுத் துணுக்குகள் Empty Re: வரலாற்றுத் துணுக்குகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 31, 2013 12:40 pm

அரசியின் கோடை கால அரண்மனை
இந்தியாவிலேயே முதன்முதலாக 1950 ஏப்ரல் 15 இல் மதுரையில் ஜவஹர்லால் நேருவால் திறந்துவைக்கப்பட்டது மதுரை காந்தி மியூசியம். மியூசியம் அமைந்த பிரமாண்ட கட்டிடம் மதுரை அரசி ராணி மங்கம்மாள் கோடை கால அரண்மனை. 
காந்தி சர்வ சமயப்பிரார்த்தனை செய்யச் சொல்லுவார். வழிபாட்டிற்காக கோயிலுக்குள் செல்லமாட்டார். ஆனால் மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் வந்திருக்கிறார். மதுரையில்தான் அவர் அரை ஆடை உடுத்தும் தீர்மானத்தைக் கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப்பிரவேசம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தான் நடந்தது. காந்தி மியூசியத்தில் மகாத்மா பயன்படுத்திய உண்மையான 14 பொருட்கள் மற்றும் அவர் குண்டடிபட்டு விழுந்தபோது அணிந்திருந்த இரத்தக்கறை படிந்த மேலங்கியும் இன்னும் பல பொருட்களும் உள்ளன. விடுதலைப் போராட்ட சித்திரங்கள், புகைப்படங்கள், ஆஸ்ரமம் மற்றும் அஸ்தியைக் கொண்ட மாதிரி நினைவிடங்கள் உள்ளன. 24 ஆயிரம் கடிதப் பிரதிகளைக் கொண்ட நூலகமும் காந்தி மியூசியத்தில் உள்ளன.
இந்தியாவின் நீண்ட வாக்குப்பதிவு
 அருணாசலப் பிரதேசத்தில் உள்ள சுபான்சிரி மாவட்டத்தில் உள்ள சைரோ தொகுதியில் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் 31 மணிநேர வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது. 2003 ஏப்ரல் 2ம்நாள் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மறுநாள் மதியம் 2 மணிக்குத்தான் முடிவடைந்தது. இந்தியாவின் நீண்ட வாக்குப்பதிவு இதுதான்.
- வைகை அனிஷ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வரலாற்றுத் துணுக்குகள் Empty Re: வரலாற்றுத் துணுக்குகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 31, 2013 12:43 pm

அருமை தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வரலாற்றுத் துணுக்குகள் Empty Re: வரலாற்றுத் துணுக்குகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 31, 2013 8:21 pm

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வரலாற்றுத் துணுக்குகள் Empty Re: வரலாற்றுத் துணுக்குகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 31, 2013 8:27 pm

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உள்ளது சமணர் மலை. இப்பகுதிமக்கள் மொட்டை மலை அல்லது சமணர் மலை என அழைக்கிறார்கள். சமணர்கள் பற்றிய பல வரலாற்றுக் குறிப்புகளும், சமணர்கள் சிலைகளும் பல இங்கு உள்ளன. உத்தமபாளையம் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவில் என்றால் தான் இப்பகுதி மக்களே அடையாளம் காட்டுகின்றனர். இப்பகுதி தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டாலும் தொல்லியல்துறை கோமாநிலையில் உள்ளது போல இங்கும் அப்படித்தான் உள்ளது. மதுபான பாட்டில்கள், ஆணுறைகள், காதல் பற்றிய கிறுக்கல்கள், பாலித்தீன் பைகள், நாசியைத் துளைக்கும் மதுபான வாடைகள் எல்லாம் வரலாற்று சிறப்பிடத்தின் அவலம்.
வரலாற்றுத் துணுக்குகள் Uthamapalaiyam_601
சமணமும்-இஸ்லாமும்
  கி.பி.8 ஆம் நூற்றாண்டில் சமணர்கள் அதிக அளவில் ;இங்கு இருந்துள்ளனர். மேலூர், யானைமலை ஒத்தக்கடை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே ஏராளமான சமண படுகைகள் உள்ளன. உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரிக்கு மேற்கே சாயபுமலை எனப்படும் சமணமலை இன்றும் உள்ளது. சமணர்களின் கற்படுகைகள், நீர்நிலைகள், குகைள், மருந்துகள் தயாரித்த கற்கள் என பல உள்ளன. கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டில் சமண-சைவ மதப்போரில் சமணர்கள் 8000 பேர்கள் கழுமரத்தில் ஏற்றிக் கொல்லப்பட்டனர். அவ்வாறு கழுமரத்தில் சாவதை விரும்பாத பல சமணர்கள் முஸ்லீம்களாக மாறிவிட்டனர்.
  சமணர்கள் மொட்டை அடித்து இருப்பார்கள். முஸ்லிம்களாகி மாறியபின் மொட்டைத் தலை அடையாள மாற்றத்திற்கு உதவியது. ரா.பி.சேதுபிள்ளை, எ.கே.ரிபாயி போன்றவர்கள் இஸ்லாமியர்களுக்கிடைய சமண சொற்கள் பல இருப்பதை இதற்கு ஆதாரமாக காட்டுகின்றனர்.
 கூன்பாண்டிய மன்னரின் அதிதீவிர சைவமத ஈடுபாட்டிற்கு பயந்து பல சமணர்கள் முஸ்லிம்களாக மாறிவிட்டதால்தான் உத்தமபாளையம், கம்பம், கோம்பை பகுதிகளில் அதிக அளவில் முஸ்லீம்கள் இருக்க காரணம் என வரலாறுகள் கூறுகிறது.
தமிழகத்தில் இதுவரை 50 இடங்களுக்குமேல் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சென்னை பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினரின் முயற்சியால் மல்லப்பாடி என்ற இடத்தில்தான் தமிழகத்தின் முதல் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் முத்துப்பட்டி என்ற இடத்தில் சிறிய மலையில் சில குகைகள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்று சமணக்குகையாகும். சமணர்களின் படுக்கைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இக்குகையில் பல வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
 தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள ஊர் அணைப்பட்டியாகும். இவ்வூரின் அருகே அமைந்த மலை சித்தர் மலை ஆகும். இங்கு சமணக் குகை ஒன்று உள்ளது. இக்குகையின் கிழக்குப் பக்கத்தில் ஒரு ஓவியம் செந்நிறத்தில் வரையப்பட்டுள்ளது. குதிரைமீது ஒரு மனிதன் அமர்ந்திருக்க குதிரையானது செல்வது போன்று காணப்படுகிறது. (தமிழகப் பாறை ஓவியங்கள்-பக்கம் 72-டாக்டர் ராவு பவுன்துரை)
 பல குகை ஓவியங்களில் படகு வடிவம் இடம் பெறுகின்றது. இது கட்டுமரம் போன்ற வடிவமைப்பைக் கொண்டு திகழ்கின்றது. அவற்றுள் துடுப்புடன் பயணம் செய்யும் காட்சி சிறப்புடைய ஒன்று. காமயகவுண்டன்பட்டியில் படகின் வடிவங்கள் இடம் பெற்றுள்ளன.(தமிழகப் பாறை ஓவியங்கள்-பக்கம் 234-டாக்டர் ராவு பவுன்துரை).
 பாறை ஓவியங்கள், சமணக்குகைளில் படகு, குதிரையின் மீது தொப்பி அணிந்துள்ள மனிதன் போன்றவற்றைப் பார்க்கும்போதும் தேனி மாவட்டத்தில் கம்பம் பகுதியில் சமணர்கள் இஸ்லாத்தை தழுவியிருக்கலாம் என அறியப்படுகிறது.
ஆதார நூல்கள்:
1.தமிழகப்பாறை ஓவியங்கள்-பக்கம் 72-டாக்டர் ராவ பவுன்துறை
2.தமிழகத்தில் இஸ்லாமியர்கள், ஏ.கே.ரிபாயி
3.மறைக்கப்பட்ட வரலாறும், மறுக்கப்படும் உண்மைகளும், அனிஸ்தீன்,அகமது நிஸ்மா பதிப்பகம், தேவதானப்பட்டி.
- வைகை அனிஷ் மற்றும் பூஞ்சாரல் கி.சாந்தகுமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வரலாற்றுத் துணுக்குகள் Empty Re: வரலாற்றுத் துணுக்குகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 31, 2013 8:30 pm

பின்னலாடை வரலாறு
*******************
16 வது நூற்றாண்டு வரை பின்னல் கையினாலே தான் நடைபெற்றது. 1589 ம் ஆண்டிற்குப் பிறகு தான் பின்னல் வகைகளைத் தயாரிக்கும் முதல் இயந்திரம் உருவானது.

 வில்லியம் லீ என்ற ஆங்கியேலர்தான் இதன் முன்னோடி. முதல் பின்னல் இயந்திரத்தைக் கண்டுபிடித்து பெருமை இவரையே சாரும். இந்தப் பின்னல் இயந்திரத்தை ஆரம்பம் முதலே எதிர்த்த கைப் பின்னல்காரர்களால், இந்த இயந்திரம் புழக்கத்தில் வருவதற்கும், பிரபலமடைவதற்கும் தாமதம் ஏற்பட்டது. மற்ற கண்டுபிடிப்பாளர்களைப் போலவே, இந்த பின்னல் இயந்திரத்தைக் கண்டுபிடித்து வில்லியம் லீ-க்கும் எந்த வித அனுகூலமும் கிடைக்கவில்லை. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜவுளித்தொழிலுக்கு அடுத்தபடியாக பின்னல் தொழில் தான் முக்கியத்துவம் பெறத் துவங்கியது. இதன் விளைவாக ஆடைகள், அங்கிகள், விளையாட்டு ஆடைகள் என பரிணாம வளர்ச்சி பெறத் தொடங்கியது. இது நவீன நாகரிகத்திற்காக மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. அதற்கும் மேலாக பின்னல் நுட்பம் நீளும் தன்மை, காற்று புகும் தன்மை. பின்னல் இயந்திரத்தின் வளர்ச்சி ஆகியவைகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.

 1853-ஆம்  ஆண்டு ஆங்கிலேய கண்டுபிடிப்பாளராக மாத்யூ டவுன்சென்ட் என்பவர். வாட்ச் ஊசியை கண்டுபிடித்ததன் பயனாக இயந்திரத் தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்தது. இதையொட்டி முன்பிருந்த இயந்திரங்களை விட மிக எளிமையாக தொழில் நுட்பம் மிக்க இயந்திரங்கள் அனைவருக்கும் கிடைத்தன.

 மாத்யூ டவுன்சென்ட் டின் கண்டுபிடிப்பை பக்ஸ்டார்ப் என்ற பிரஞ்சுக்காரரும் லாம்ப் என்ற அமெரிக்கரும் பேடண்ட் செய்து வெளியிட்டு வியாபாரமாக்கினார்கள். 1867 ம் ஆண்டு பாரீஸ் நகரில் நடந்த அனைத்துலக கண்காட்சியில் பக்ஸ் டார்ப், லாம்ப் ஆகிய இருவரும் வெளியிட்ட இயந்திரங்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதன் பிறகு ஹென்றி எட்வர்டு டிபைட் அண்டு சீ என்ற கம்பெனியின் நிறுவனர் பின்னல்  இயந்திரங்களின் பேடண்ட் உரிமம் பெற்று முதன்முறையாக ஐரோப்பாவில் பிளாட் பின்னலாடை இயந்திரங்களை தயாரிக்க ஆரம்பித்தார்.

 அதே நூற்றாண்டின் பிற்பகுதியில் வில்லியம் காட்டன் என்பவர் பல்முறை என்ற மல்டி ஹெட் நவீன இயந்திரம் மூலம் செங்குத்தான ஊசியும், மற்றும் ஊசி பிணைப்பு தகடும் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தினார். இதே நூற்றாண்டில் பீட்டர் ஸ்காட் தொழிற்சாலையில் முதன் முதலாக பெண்களுக்கான பின்னலாடைகள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

 ஆரம்பத்தில் இந்த பின்னலாடைத்தொழில் அயல்நாட்டிலிருந்து இந்தியாவில் அறிமுகமாகி முதன் முதலில் கொல்கத்தாவில் 1893 ஆம் ஆண்டு கிட்டர்பூர் என்ற இடத்தில் சிறிய அளவில் பின்னலாடை உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் இது விரிவடைந்து திருப்பூர், சென்னை, கான்பூர் போன்ற நகரங்களுக்கு பரவியது.

பனியன் தொழிலின் முதல்பெண்மணி

 திருப்பூரில் பனியன் தொழிலின் முன்னோடி செல்லம்மா என்பவர் தான். இன்று பெத்தசெட்டிபுரம் என்று அழைக்கப்படும் பெத்த செட்டியாரின் மருமகள் செல்லம்மா அவர்கள் பனியன் தொழிலில் ஆர்வம் கொண்டு பனியன் கம்பெனி துவங்க முன்வந்தார். பல தொழில் நுட்பங்களை ஆராய்ந்து செல்லம்மா நிட்டிங் என்ற பெயரில் கம்பெனியை நிறுவினார். அவ்வகையில் பனியன் தொழிலின் முன்னோடி செல்லம்மா  என்பவர்தான் திருப்பூரில் பனியன் தொழிலுக்கு பிள்ளையார் சுழி இட்ட பெண்மணி ஆவார்.

உதவிய நூல்கள்

1.நிட்மா, திருப்பூர்
2.திருப்பூர் மாநகரின் வசந்த வரலாறு-மக்கள் ஜனநாயக கட்சி வெளியீடு
3.மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறும், மறுக்கப்படும் உண்மைகளும்-இரணியன், சென்னை

- வைகை அனிஷ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வரலாற்றுத் துணுக்குகள் Empty Re: வரலாற்றுத் துணுக்குகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 31, 2013 8:36 pm

முட்டாள்களின் கீழ் உலகம்
**********************

சிரிப்பூட்டுவதற்கென்று ஒரு வாயு இருக்கிறது; அது நைட்ரஸ் ஆக்ஸைடு. ஆனால் கோபமூட்டுவதற்கு ஒரு வாயு இல்லை. அதற்கு பதிலாகத்தான் நமக்கு வாய் இருக்கிறதே! வாய் உதிர்க்கும் சொற்களில் மிகவும் கோபமூட்டும் சொல் எதுவென்றால் “முட்டாள்” என்பதுதான்.

 “அடேய் முட்டாள் புருனோ! நீ சொல்வதைப்போல உலகம் உருண்டையானது என்றால்; சொர்க்கம் எங்கேயடா இருக்கும்?” இது மதக்குருமார்கள் முன்னிலையில் ஒரு நீதிபதி கேட்ட கேள்வி. அதற்கு புருனோ சொன்ன பதில் “அதைத்தான் நானும் கேட்கிறேன். சொர்க்கம் எங்கே இருக்கும்?”. நீதிபதி கேள்விக்கு புருனோவால் பதில் சொல்ல முடிந்தது. ஆனால் புருனோவின் கேள்விக்கு இதுநாள் வரைக்கும் யாராலும் பதில் சொல்ல முடியவில்லையே!. முட்டாள் யார், புத்திசாலி யார் ? என முடிவு செய்வது காலமே தவிர மதமோ, மனிதர்களோ அல்ல.

 பிரெஞ்ச் உளவியலறிஞர் ஆல்பர்ட் பினே மனிதனின் கால வயதை மன வயதால் வகுத்து சதவீதமாக மனிதனின் நுண்ணறிவை வகைப்படுத்தினார். இதன்படி முட்டாள், பின்னடைந்தோர், பின் தங்கியோர், திறனுடையோர், புத்திசாலிகள், மிக்க திறனுடையோர், மேதைகள் என அட்டவணைப்படுத்தினார். உலக மக்கட்தொகையில் ஒரு சதவீதம் மேதைகளாகவும், ஒரு சதவீதம் முட்டாள்கள் இருப்பதாகவும் அவரது கோட்பாடு கூறுகிறது. அவரது கோட்பாட்டின்படி 50 முதல் 69 வரை நுண்ணறிவு ஈவு பெற்றவர்கள் முட்டாள்கள் என்றும் 140 முதல் 169 வரை பெற்றவர்கள் மேதைகள் என்றும் கருதப்படுகிறார்கள்.

 பினே கோட்பாட்டை தழுவி ஆய்வு மேற்கொண்ட உளவியல் அறிஞர்கள் பார்வையில் கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் மேதைகளின் மேதையாக பார்க்கப்படுகிறார். சாக்ரடீஸ் வாழ்ந்த காலம், அவர் சந்தித்த நெருக்கடி, அந்த வேளையில் அவரது நுண்ணறிவு இவற்றை வைத்து பார்க்கையில் அவருடைய நுண்ணறிவு ஈவு நூற்று எழுபதற்கும், இருநூறுக்கும் இடைப்பட்டதாக இருந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. சாக்ரடீஸ் கருத்துகளை வழிமொழிந்த பிளேட்டோ, அரிஸ்டாடில், புருனோ போன்றவர்கள் இன்றைய சராசரி மேதையை விட மேலானவர்களே!. இது ஒரு புறம் இருக்க மற்றொரு உளவியலாளர் கில்கிறிஸ்ட் மேதைகள் வாழ்ந்து இறந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுநாள் வரைக்கும் ஒரு முட்டாள் பிறக்கவேயில்லை என்கிறார்.

 கடந்த நூற்றாண்டில் மூளையை அதிகமாக பயன்படுத்தியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தானாம். அவர் கண்டுப்பிடித்த சார்புநிலை தத்துவம் உலக தத்துவங்களில் தலை சிறந்தது. அத்தகைய விஞ்ஞானி ஐன்ஸ்டீனை முட்டாள் என பாவிப்பவர்களும் உண்டு. அவர் வீட்டில் வளர்த்த பூனை கூண்டுக்குள்ளேயிருந்து வெளியே வர பெரிய பாதையும், அதன் குட்டிகள் வெளியே வர சிறிய பாதையும் வைத்திருந்தார். தாயும், குட்டியும் வெளியே வர ஒரு பொது வழி போதும் என்கிற பொது அறிவு அவரிடம் இல்லையே! என அவரை கிண்டல் செய்யும் ஞானிகள் அவரது காலத்திலிருந்தே இன்று வரை இருந்து கொண்டிருக்கிறார்கள்.

முட்டாள் என சித்தரிக்கப்பட்டவர்களால்தான் உலகம் பல மாற்றங்களை கண்டிருக்கிறது. தாய், தன்னை முட்டாள் என சொன்னதற்காக துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள முயற்சித்தான் ஒரு சிறுவன். ஒரு முறையல்ல மூன்று முறை. என்ன அதிர்ஷ்டம் பாருங்கள்! மூன்று முறையும் அந்த துப்பாக்கி சரியாக வேலை செய்யவில்லை. முட்டாள் என அழைக்கப்பட்ட அந்த சிறுவன்தான், பிற்காலத்தில் நவாப்களை வென்று ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்ற காரணமாக இருந்தான். அவன்தான் ஆற்காட்டு வீரர் என அழைக்கப்படும் இராபர்ட் க்ளைவ்.

ஜெர்மினிய சர்வதிகாரி ஹிட்லரை இரண்டு நிகழ்வுகள் அதிகமாக கோபமூட்டின. ஒன்று சார்லி சாப்ளினின் திரைப்படங்கள். 1940 ஆண்டு சாப்ளின், த கிரேட் டிக்டேட்டர் எனும் திரைப்படத்தின் மூலம் ஹிட்லரின் ஆட்சியை நையாண்டி செய்தார். அதுமட்டுமல்ல அதனைத் தொடர்ந்து வெளிவந்த அனைத்துப் படங்களிலும் சாப்ளின் ஹிட்லரைப் போல மீசை வைத்து நடித்தார். இந்த நடவடிக்கை ஹிட்லரை அதிகம் கோபமூட்டினாலும் ஒரு கட்டத்தில் அதிலிருந்து மீண்டும் வந்துவிட்டான். ஆனால் ஹிட்லரின் ஆட்சி முட்டாள் ஆட்சி என்று சொன்ன யூதர்கள் மீதான கோபம்தான் கடைசி வரைக்கும் அவனை கோபமூட்டிக் கொண்டிருந்தது. அதற்காக யூதர்களை அவன் கொத்துக்கொத்தாக கொன்று குவித்தான். இன்று இந்திய நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஹிட்லர் பெயர் தடை செய்யப்பட்ட சொல்லாக இருப்பதைப்போல ஹிட்லர் அவையில் முட்டாள் என்கிற சொல் தடை செய்யப்பட்ட சொல்லாக இருந்தது.

 முட்டாள் என்கிற சொல் விளையாட்டு துறையிலும் அதிகம் விளையாடிருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டின் தாயகம் இங்கிலாந்து. ஒரு கட்டத்தில் அந்த நாடு கிரிக்கெட் விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது. அதை எழுத்துலக வேந்தன் பெர்னாட்ஷா இவ்வாறு விமர்சித்தார். “பதினொரு முட்டாள்கள் விளையாட, பதினோராயிரம் முட்டாள்கள் பார்ப்பது கிரிக்கெட்”. உலக கிரிக்கெட் ரசிகர்களையும், அதை நடத்தும் நாடுகளையும் ஆட்டம் காண வைத்த விமர்சனம் அது. அந்த விமர்சனம் இன்று வரை இரண்டு விதமான சந்தேகத்தை எழுப்பி நிற்கிறது. அவரால் விமர்சிக்கப்பட்டது கிரிக்கெட்டா? அதற்குள் இருக்கும் அரசியலா? இது ஒருபுறம் இருக்க, உலக அளவில் இரண்டாவது பெரிய விளையாட்டான இந்த கிரிக்கெட் இதுநாள் வரைக்கும் ஒலிம்பிக் போட்டிற்குள் நுழைய முடியவில்லை என்றால் அதற்கான காரணம் ஷாவின் விமர்சனம்தான்.

 முட்டாள் கதாப்பாத்திரங்கள் இலக்கியத் துறையில் முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றன. உலகில் அதிக மக்களால் விரும்பி வாசிக்கப்படுவது முட்டாள் அரசனை கதாப்பாத்திரமாகக் கொண்ட ஆயிரத்து ஓர் இரவுகள் அரேபிய புத்தகம்தான். உலகின் மிகச்சிறந்த நகைச்சுவை “முட்டாள் நண்பன்” என்கிற அமெரிக்க கதையே. தமிழில் தமிழ் மாணவர் என அழைக்கப்படும் வீரமாமுனிவர் எழுதிய முட்டாள் சீடர்களைக் கொண்ட பரமார்த்த குரு கதைக்கு இன்றளவும் வாசகர் வட்டம் உண்டு.

 உலக அளவிலான நாடாளுமன்ற விவாதத்தில் முட்டாள் சொல் பற்றிய விவாதமே மிகச்சிறந்த நகைச்சுவை விவாதமாக கருதப்பட்டு வருகிறது. ஜெர்மனி நாடாளுமன்றத்தில் ஒரு முறை பிஸ்மார்க் “இங்கே இருப்பவர்களில் பாதி பேர் முட்டாள்கள்” என்றார். அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. உடனே அவரது கருத்தை திரும்பப் பெற்றுக்கொண்டார் “இங்கே இருப்பவர்களில் பாதி பேர் முட்டாள்கள் அல்ல“.

முட்டாள் என்கிற சொல் இன்று மன்னர், அரசியல், குடியரசு என்கிற மூன்று சொல்லிற்கு அடுத்ததாக அதிகம் உச்சரிக்கப்படும் சொல்லாக இருந்து கொண்டிருக்கிறது. அதற்காக ஒரு தினம் கொண்டாடுமளவிற்கு அந்த சொல் பிரசித்திப் பெற்றதாக இருக்கிறது..           

 இந்தியர்களாகிய நாம் 1947 முதல் ஆகஸ்ட் 15 தினத்தை சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறோம். ஆனால் அதற்கு முன்பே சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. 1919 முதல் நம் முன்னோர்கள் ஜனவரி 26 தினத்தை சுதந்திர தினமாக கொண்டாடி வந்தார்கள். ஆனால் சுதந்திரம் ஆகஸ்ட் 15 அன்று கிடைத்தது. ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாட்டத்தை பாதியில் விட்டுவிடக்கூடாது அல்லவா! ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாட்டத்தை குடியரசு தினமாக மாற்றிக்கொண்டார்கள். மேதகு அம்பேட்கர் தலைமையில் சட்டம் இயற்றும் பணி 1949 நவம்பர் 26 அன்றே முடிவுக்கு வந்து விட்டபோதிலும் அதை நடைமுறைப்படுத்த அன்றைய ஆட்சியாளர்கள் ஜனவரி 26 வரைக்கும் காத்திருந்தார்கள் என்றால் மக்களின் கொண்டாட்டத்திற்கு அவர்கள் கொடுத்த மரியாதை அது. உண்மையில் அதிகம் கொண்டாடப்பட்டு வருவது ஜனவரி 26 தான். அதே போன்றுதான் ஜனவரி முதல் தேதி ஆங்கில புத்தாண்டாக உலகம் கொண்டாடி மகிழ்ந்தாலும் நீண்ட காலம் தொட்டு புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருவது ஏப்ரல் முதல் தேதிதான்.

 முதல் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதன் ஜீலியஸ் சீசர். இவர்தான் முதலில் காலண்டர் முறையை அறிமுகப்படுத்தினார். வருடதத்திற்கு 365¼ நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டதும் இவர் காலத்தில்தான். சீசருக்கு முந்தைய காலத்தில் காலண்டர் முறை இருந்தாலும் அது சந்திரனை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. சோஜிஜென் எனும் வானவியல் வல்லுனரின் ஆலோசனையினால், சீசர் சூரியனை அடிப்படையாகக் கொண்டு காலண்டர் முறையினை அறிமுகப்படுத்தினார். இந்த காலண்டரானது பத்து மாதங்களைக் கொண்டும் வருடத்தின் முதல் மாதமாக ஏப்ரலை கொண்டும் இருந்தது. ஏப்ரல் என்பதற்கு கிரேக்க மொழியில் தொடக்கத்திலிருந்து எனப் பொருள்படும். இந்த காலண்டர் 1581 வரை நடைமுறையில் இருந்தது. 1582 ஆம் ஆண்டு தொடக்கத்தில் போப் கிரிகோரி புதிய காலண்டர் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இந்த காலண்டர் 12 மாதங்களைக் கொண்டும் முதல் மாதமாக ஜனவரியைக் கொண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. அந்த காலண்டர்தான் இன்று நடைமுறையில் இருக்கிறது.

 உலகில் பல வகையான காலண்டர்கள் உண்டு. உதாரணமாக டிசம்பர் 21 உடன் முடிந்த மாயன் காலண்டர், இஸ்லாமிய நாடுகளில் அரபிக் காலண்டர், சீனக்காலண்டர், தமிழ் நாட்டில் திருவள்ளுவர் காலண்டர்....... என பலவகையான காலண்டர்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதேப்போன்று ஒவ்வொரு நாட்டிலும் வருடப்பிறப்பில் சர்ச்சைகள் இருந்துக் கொண்டிருக்கின்றன. தமிழ்மாதங்களில் வருடப்பிறப்பு சித்திரை என்கிறார்கள் ஒரு பிரிவினர். மற்றொரு பிரிவினர் தை என்கிறார்கள் அல்லவா!. இந்தியாவில் முகலாய மன்னன் ஔரங்கசிப் காலம் வரைக்கும் கனிஸ்கர் அறிமுகப்படுத்திய சக ஆண்டு காலண்டர்தான் நடைமுறையில் இருந்தது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி வருகைக்குப்பின் ஆங்கில காலண்டர் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும் நம் நாட்டின் தேசிய காலண்டரும் சக காலண்டர்தான்.

 ஐரோப்பிய நாடுகளில் இன்றும் இரண்டு விதமான காலண்டர்கள் பயன்பாட்டில் இருக்கிறது. ஒரு பிரிவினர் ஜனவரி முதல் தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடி மகிழ்கின்றனர். மற்றொரு பிரிவினர் ஏப்ரல் முதல் தேதியை புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஆங்கில மொழியை தாய் மொழியாக்கொண்ட நாடுகள் ஒன்று கூடி தீர்க்கமான ஒரு முடிவை எடுத்தன. ஜனவரி முதல் தேதியே புத்தாண்டு தினம். இதை ஏற்க மறுத்து ஏப்ரல் முதல் தேதியை கொண்டாடுபவர்கள் முட்டாள்கள் என சித்தரித்தார்கள். அது முதல் ஏப்ரல் முதல் தேதி முட்டாள் தினமாக கருதப்பட்டு வருகிறது.

 இந்திய பிரதமர்களில் முற்போக்குவாதியாக செயல்பட்டவர் ஜவஹர்லால் நேரு. அவர் ஏப்ரல் முதல் தேதி முட்டாள் தினம் என சித்தரிப்பதை ஏற்க மறுத்தார். அதன்படி ஏப்ரல் முதல் தேதியில் ஒரு புரட்சிகரமான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பினார். 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி அவர் மக்கள் முன் உரையாற்றுகையில் “ஏப்ரல் முதல் தேதியை உலகம் எப்படி பார்க்கிறதோ, நாம் இந்த நாளை மாற்றத்தின் தினமாக பார்ப்போம்”என்றவர் காலணா, அரையணா, நாணய முறையை ஒழித்து, தசம நாணய ( உரூபாய்) முறையை அறிமுகப்படுத்தினார்.

 இந்த உலகில் தன்னை முட்டாள் என அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் இரண்டு பேர்தான். ஒருத்தர் நடிகர் சந்திரபாபு.”நானொரு முட்டாளுங்க, நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க “என பாடினார். மற்றொருவர் பிரெஞ்ச் நாட்டு புரட்சியாளர் வால்டர். “உலகில் வாழும் மனிதர்கள் எல்லோரும் புத்திசாலிகள் என நினைத்துக்கொண்டு இருந்துவிட்டேன். நான் ஒரு முட்டாள்” என்றார்.

 உலகத் தலைவர்கள் முட்டாள் சொல்லை பலவிதமாக கையாண்டிருக்கிறார்கள். “நான் முட்டாள்களுக்கு தலைவனாக இருப்பதை விடவும், புத்திசாலிகளுக்கு வேலைக்காரனாக இருக்கவே விரும்புகிறேன்” என்றார் முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்.. ஆனால் தென்னாட்டின் சாக்ரடீஸ் என அழைக்கபட்ட ஈ.வெ.ரா பெரியார் திராவிட கழகத்திற்குத் தேவை முட்டாள்களே, தவிர புத்திசாலிகள் அல்ல என்றார்.

 உலகில் முதன்முதலாக முட்டாள் என குற்றம் சாட்டப்பட்டவர் சாக்ரடீஸ். அவர் நஞ்சு பருகி மரணத்தை தழுவும் முன் இவ்வாறு சொன்னார் “நான் ஒரு முட்டாள் என்கிறீர்கள். அப்படியானால் இனி இந்த உலகம் முட்டாள் கீழ்தான் இயங்கும்”. அவரது கருத்துபடி இன்றைய உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இன்று இந்த உலகத்தை இயக்கிக்கொண்டிருப்பது கணினி. கணினிக்கு நாம் சூட்டிருக்கும் பெயர் முட்டாள் இயந்திரம் அன்றோ!

 - அண்டனூர் சுரா

(கட்டுரையாளர் – பள்ளி ஆசிரியர் – கந்தர்வகோட்டை)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வரலாற்றுத் துணுக்குகள் Empty Re: வரலாற்றுத் துணுக்குகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 31, 2013 8:38 pm

மனித மூளையும் இரண்டு திருடர்களும் - ஓர் அசாத்திய தகவல்
*************************************************

மனித மூளை பற்றி நாம் அறிவதெல்லாம் உலகிலேயே மிகவும் சிக்கலான ஓர் அசாத்தியமான அமைப்பு. அது நமது நரம்பு மண்டலத்தின் தலைமை கட்டுப்பாட்டு அமைப்பு என்றும் அதுதான் நமது உடலை கட்டுப்படுத்துகிறது என்றும் அறிவோம். (இதனை ஆங்கிலத்தில் The brain is the part of the central nervous system located in the skull. It controls the mental processes and physical actions of a human being.) ஆனால் இன்னும் நமக்கு நமது மனித மூளை பற்றி தெரியாத தகவல்கள் என்பதைவிட, அறியாத தகவல்கள் நிறைய உண்டு என்றும் கூறலாம்.

கேட்டால் சிறு அதிர்ச்சி ஏற்படும் என நினைக்கிறேன்.

மனித மூளை பற்றி முதன் முதலில் ஆராய்ந்தவர் கி.மு ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த அரிஸ்டாட்டில். அவர் மூளை பற்றி கூறுகையில் 'இதயம் செலுத்தும் இரத்தத்தை குளிர்விக்கும் வேலையையே மூளை செய்கிறது' என்று நம்பினார்.

அடுத்து முதலாம் நூற்றாண்டில் மருத்துவர் அலெக்சான்றியன் என்பவர், மனித எண்ணமானது இதயத்தை விட மூளையாலேயே கட்டுபடுத்தப்படுகிறது என்று நம்பினார், மேலும் ரோமன் மருத்துவரான காலன் என்பவர் மிருகங்களின் ஆன்மாக்களின் அமைவிடம் தான் மூளை என்று வரையறுத்தார். அதாவது மனித மற்றும் விலங்குகளின் உயிர் மூளையில் தான் உள்ளது என்று கூறினார்.

மனித மூளை என்பதை ஆங்கிலத்தில் Brain என்றும் அழைக்கிறோமே? அது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? The Brain என்ற சொல் Braegen என்ற லத்தீன் சொல்லிலிருந்து தோன்றியது. Braegen என்றால் தேவையற்ற சதைப் பிண்டம் என்று பொருள். ஆம் ஆங்கில மருத்துவம் மேற்குலகில் வளர்ந்த ஆரம்ப காலகட்டத்தில் மூளை பற்றி இப்படித்தான் நினைத்தார்கள், இது நமது உடலில் தேவையில்லாத உறுப்பு என்று.

ஆனால் இதன் முக்கியத்துவம் இரண்டு திருடர்கள் மற்றும் லியானார்டோ டாவின்சியால் தான் உலகிற்குத் தெரிய வந்தது என்றால் நம்புவீர்களா? ஆம் அதுதான் உண்மை.

நண்பர்களை சுமார் ஆறு நூற்றாண்டுகள் பின்னோக்கிப் பயணிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சரியாக கி.பி. 1543ம் ஆண்டு. மேலை நாடுகள் முழுவதும் கிறித்துவம் ஆழமாக வேரூன்றி அரசு, அரசன் என அனைத்தும் கிறித்துவப் பாதிரியார்களான மதத்தலைவர்கள் கையில் தான் இருந்தது. அதனால் மத வழக்கப் படி இறந்த உடலைத் தோண்டுவதும், அதுபற்றி ஆராய்வதும் கொடூர குற்றம் ஆகும். அப்படி தடையை மீறி செய்தால் மரண தண்டனை தான். ஏனெனில் அவர்கள் தங்கள் மதக் கோட்பாடுகளையும், பைபிள் கட்டளைகளையும் மீறுவோரை, இவனுக்கு சாத்தான் பிடித்துள்ளது என்று கொடூரமான முறையில் கொன்றனர். இது கொலைக் குற்றமாக கருதப்பட‌வில்லை, பாவ மன்னிப்பு என்றே அனைவராலும் கருதப்பட்டது.

இந்த காலகட்டத்தில் ஒரு மருத்துவர் மனித உடல் பற்றி மிகவும் ரகசியமாக ஆராய்ந்து வந்தார், அவர்தான் பலதுறை வித்தகரான‌ லியானார்டோ டாவின்சி. இப்படிப்பட்ட மத நெருக்கடிகளால் அவரால் தனது ஆராய்ச்சியை தொடர்ந்து மேற்கொள்ள இயலவில்லை. இதே காலகட்டத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்ப‌ட்டதால் திருடர்களின் நிலையும் மிகவும் பரிதாபமாக ஆகிவிட்டது. அவர்களுக்கும் மரண தண்டனைதான் விதிக்கப்பட்டது.

இந்த நேரத்தில் தான் வேலை இழந்த அந்த இரு திருடர்களும், இந்த வித்தகரும் சந்தித்துக் கொண்டனர். இவர்களுக்குள் ஓர் ஒப்பந்தம், யாரையும் காட்டிக் கொடுக்கக் கூடாது. திருடர்களுக்கு அவர் தங்கம் போன்று பணம் கொடுக்க வேண்டும். இப்படிதான் இந்த கூட்டுக் களவாணிகளின் வேலை ஆரம்பமானது.

ஆரம்பத்தில் இந்த இரு திருடர்கள் டாவின்சிக்கு பணத்திற்காக‌‌ மட்டுமே வேலை செய்தனர். பின் அவ‌ரின் அர்ப்பணிப்பு உணர்வு கண்டு, இவர்களும் அவருக்கு உண்மையாக உதவினர். இவர்கள் ஒரு பிணத்தைத் திருடி வந்தால் அவர்களின் பெயர், முகவரி, அவர் எந்த வியாதிக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்பது போன்ற‌ பிணத்தின் அனைத்து தகவல்களும் இவர்கள் கொண்டுவந்து விடுவர்.

இந்த நிலையில் தான் ஒருவரது (பிணத்தின்) மண்டையோட்டின் உட்பகுதியை டாவின்சி பிளந்து பார்க்கும்போது அவரது இடப்புற மூளை அனைத்தும் சிதைந்து காணப்பட்டது. அவரது குறிப்பை பார்க்கும்போது அவருக்கு வலப்புறப் பக்கவாத நோய் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இது தான் மனித மூளையின் செயல்பாடு உலகில் வெளியான முதல் நிகழ்வு. இதன் பிறகுதான் உடலின் இயக்கத்திற்கும், மூளைக்கும் மாபெரும் தொடர்பு உள்ளது என்று அறிந்து இது பற்றிய முழு ஆராய்ச்சியில் மேலை நாட்டு மருத்துவர்கள் இறங்கினர்.

இதன் பிறகுதான் பல விசேஷங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தது நம்மை கட்டுப்படுத்தும் நம் மூளை பற்றி. அத்தனை கட்டுப்பாடுகளையும், தண்டனைகளையும் தாண்டி இப்படி உதவிய அந்த இரு திருடர்களுக்கும் லியானார்டோ டா வின்சிக்கும் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வோமாக!!!

வெற்றிவேல்

உசாத்துணை:
ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகம்.
அறிவியல் இதழ்: The secret life of the BRAIN
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வரலாற்றுத் துணுக்குகள் Empty Re: வரலாற்றுத் துணுக்குகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum