தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிதைச்சுடர் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

2 posters

Go down

கவிதைச்சுடர் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ  முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty கவிதைச்சுடர் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Thu Jan 09, 2014 8:38 pm

கவிதைச்சுடர் !
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ 
முனைவர் இரா .மோகன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு .தியாகராயர் நகர், சென்னை .600017.விலை ரூபாய் 90 .மின்னஞ்சல்vanathipathippagam@gmail.com

நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் அவர்களின் கை வண்ணத்தில் உருவான ஹைக்கூ ஒளி வீசும் நூல் .

பதிப்புலகில் தனி முத்திரை பதித்து தமிழன்னைக்கு அணி சேர்த்து வரும் பெருமை மிகு வானதி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. நூலின் அட்டைப்படங்கள் உள் அச்சு வடிவமைப்பு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன . 

கவிதைச்சுடர் என்ற இந்த நூல் ஹைக்கூ ஒளிப்பரவல் எனலாம்.சூரிய ஒளி போல  ஹைக்கூ ஒளி  எங்கும் பரவிட வழி வைக்கும் நூல் .ஹைக்கூ கவிதை பிடிக்காத மரபின் தீவிர ஆதரவாளர்களுக்கும் இந்த நூல் படித்தால் இனி ஹைக்கூ கவிதை பிடிக்கும் .ஹைக்கூ கவிதையின் சிறப்பைப் பறை சாற்றிடும் அற்புத நூல் .ஹைக்கூ கவிதைகளின் முன்னோடி ஈரோடு தமிழன்பன் தொடங்கி இளைய தலைமுறைப் பெண்ணான புதுவை கு .எ .தமிழ் மொழி வரை 23 ஹைக்கூ கவிஞர்களின் ஹைக்கூ நூல்களைத் திறனாய்வு செய்து வடித்த நூல் .

 நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் 
இரா .மோகன் அவர்கள் தந்த அணிந்துரைகளும் இடம் பெற்றுள்ளது. நூல் முழுவதும் ஹைக்கூ ! ஹைக்கூ ! ஹைக்கூ தவிர  வேறு கவிதைகள் இல்லை .ஹைக்கூ கவிதையின் நுட்பம்,ஆழம் ,படிமம் சுவை, தாக்கம் அனைத்தையும் எடுத்து இயம்பி உள்ளார் .

ஹைக்கூ கவிதை ரசிகர்களுக்கு ஹைக்கூ   விருந்து இந்த நூல். ஹைக்கூ ஆய்வாளர்களுக்கு ஆய்வு வேலையை எளிதாக்கும் நூல் இது .பல்கலைக் கழகங்களில் கல்லூரிகளில் பாடமாகவேண்டிய அற்புத நூல் .துணைவேந்தர்களும்,தமிழ்த் துறைத் தலைவர்களும் பாடநூல் தயாரிக்கும் போது  கவனத்தில் கொள்ள வேண்டிய நூல்.

கவிதை உறவு மாத இதழ் ஆசிரியர் இனியவர் கலைமாமணி   
ஏர்வாடியாரின்  அணிந்துரை நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கின்றது .அணிந்துரை முத்தாப்பாக முத்திரைப் பதிக்கும் விதமாக உள்ளது . 

படிக்கும் வாசகர்களை படைப்பாளியாக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைகளுக்கும் மட்டுமே உண்டு . இந்த நூல் படித்து முடித்தவுடன் படித்த வாசகரும் ஹைக்கூ எழுதத் தொடங்கி விடுவார் என்று உறுதி கூறலாம் .ஹைக்கூ பற்றிய புரிதலை , தெளிவை உண்டாக்கும் நூல். பெரிய கவிஞர் வளரும் கவிஞர் என்ற பாகுபாடு இன்றி எல்லோரையும் சமமாக பார்க்கும்  பார்வை நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் பார்வை .

23 கவிஞர்களின் நூல்களான மலர்களில் இருந்து தேன் எடுத்து தேன் விருந்து தந்துள்ளார்கள்  இந்த நூல் 15 வது கட்டுரையாக என்னுடைய "ஆயிரம் ஹைக்கூ " நூலிற்கு எழுதிய அணிந்துரையும் உள்ளது .அது மட்டுமல்ல நூலின் முகப்பு அட்டையில் ஈரோடு தமிழன்பன் ,பேராசிரியர் மித்ரா , கவிஞர் அறிவுமதி ஆகியோருடன் என் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது .நூல் ஆசிரியர் அய்யாவின் மனம் எனும் மந்திரி சபையில் எனக்கும் இடம் தந்து பெருமைப் படுத்தி  உள்ளார்கள் .மற்றவர்  நூலின்  அட்டையில்  எனது   புகைப்படமும்  இடம் பெற்ற முதல் நூல் இது . ஹைக்கூ கவிதைகளில் இருந்து தேர்ந்தெடுத்து முத்து மாலையாக்கி வழங்கி உள்ளார்கள் . 

படித்தால் மறக்க முடியாத நினைவலைகளை ஏற்படுத்தும் ஹைக்கூ கவிதைகளின் அணி வகுப்பு .மனதில் பதிப்பு .பிரமிப்பு .

ஒரு கவிஞருக்கு ஒரு ஹைக்கூ என்று பதச்சோறாகப் படைத்துள்ளேன்.

ஈரோடு .தமிழன்பன் !

ஓட்டுப் பெட்டியில்  
ஒரே துர்நாற்றம் 
வேட்பாளர் பிணமல்ல ..பின் !
------------------------------------
மித்ரா !

கல்மனசுக்காரகள் 
பாருங்கள் 
பாறைகளை உடைக்கிறார்கள் !
--------------------------------------
அறிவுமதி !

மரம் வெட்டிய  கோடரி 
பார்த்துக்கொள் 
கடைசி மழைத்துளி !
--------------------------------------
எஸ் .சங்கர நாராயணன் !

சவப்பெட்டி 
செய்கிறான் 
உயிர் வாழ !
--------------------------------
தங்கம் மூர்த்தி !

கலவரத்தில் 
வீடுகள் எரிந்தன 
பீனிக்சாய் சாதிகள் !
---------------------------------------
பொன் .குமார் !

தேர்தல் திருவிழா 
பலி ஆடுகள் 
அப்பாவி மக்கள் !
------------------------------------
தமிழ்மணி !

மூன்றுமுறை முகத்தில் குத்தினால் 
புத்தருக்கும் சினம் வரும் 
வரவில்லை தமிழனுக்கு !
-------------------------------------
செ. ஆடலரசன் !

கோவிலில் கூட்டம்  
தேவி தரிசனம் 
நடிகை !
----------------------------------
செந்தமிழினியன் !

விலை நிலங்கள் 
விளை நிலங்களாயின 
வீடுகள் !
-----------------------------------
வசீகரன் !

எந்தநாடு சென்றாலும் 
தாய் மொழிதான் பேசும் 
வலசைப்பறவை! 
-------------------------------------
நவதிலக் !

ஆடுவோமே பள்ளு பாடுவோமே 
ஆனந்த சுதந்திரம் 
அடைந்து  விற்றோமென்று  !
--------------------------------------------------
ந .முத்து !

பங்களா குழந்தைக்கு 
உயிருடன் பொம்மை 
வேலைக்கார சிறுமி !
-----------------------------------------------
பா .உதயகண்ணன் !

அவள் வரவில்லை 
கலங்கிக் கொண்டிருந்தது 
குளம் !
---------------------------------------------
க .இராமச்சந்திரன் !

தமிழர் திருநாள் 
வாழ்த்து வந்தது 
HAPPY PONGAL !
-----------------------------------
இரா .இரவி !

படித்தவன் பாட்டை 
எழுதியவன் ஏட்டை
அரசியல்வாதி நாட்டை !
------------------------------------
ஆர் .வி .பதி !

துச்சாதனனால் 
அவமானப்பட்டாள் பாஞ்சாலி 
தமிழனால் தமிழ் !
---------------------------------------
ரமா .ராமநாதன் !

சுற்றிலும் முட்கள் 
சிரிப்பதை நிறுத்தவேயில்லை 
 பூ !
-------------------------------------
இ .பரிமளா !

வாழ்நாளில் 
வாழ்ந்தனால் ?
விரல்களுக்குள் !
--------------------------------------------
இளவல் ஹரிஹரன் !

மிட்டாய் கொடுத்த 
இனிப்பைக் கூடத் 
தரவில்லை சுதந்திரம் !
-------------------------------------------
கம்பம் மாயவன் !

எம் .எல் .ஏ. மகன் 
அடிக்கடி வெளிநடப்பு செய்தான் 
கல்லூரி வகுப்பில் !
------------------------------------
கம்பம் எம் .பி .புதியவன் !

விவசாயத்தில் வரவேற்பு 
வீட்டில் எதிர்ப்பு 
கலப்புத் திருமணம் !
-----------------------------------------
கவிவாணன் !

கல் கல்லை உரச தீ 
மனிதன் மனிதனை உரச 
சாதீ !
-------------------------------------
கு .அ.தமிழ் மொழி !

கனவில் கூட 
வரவில்லை 
அரசியல்காரன் திருந்துவதாய் !
-----------------------------------------------------
23 ஹைக்கூ கவிஞர்கள் தம் ஹைக்கூ கவிதைகளால் சமுதாயத்தின் அவலத்தை தோலுரித்துக் காட்டும் நுட்பத்தை எடுத்து இயம்பி உள்ள நூல்.நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் 100 கவிஞர்களின் தலா பத்து கவிதை வீதம் 1000  ஹைக்கூ கவிதைகளை தொகுத்த ஹைக்கூ ஆயிரம் நூலை சாகித்ய அகாதெமி சார்பில் வெளியிட்டார்கள் ஹைக்கூ என்ற இலக்கிய வரலாற்றில் அளப்பரிய முத்திரை பதித்து வருகிறார்கள் பாராட்டுக்கள் .ஹைக்கூ கவிதையின் புகழை இன்னும் இன்னும் உச்சத்திற்கு கொண்டு சென்று உள்ளார்கள் . மிக நல்ல 
படிப்பால் வந்த படைப்பு .
  
ஹைக்கூ எழுதியபோது எழுதிய கவிஞருக்கு தோன்றாதவை எல்லாம் ஒப்பிலக்கியத் துறைத் தலைவராக  இருந்த நூல் ஆசிரியர் அவர்களுக்கு தோன்றி உள்ளது .மிகச் சிறப்பான ஹைக்கூ கவிதைகளை  மேற்கோள்கள் காட்டி வடித்த ஆய்வுக் கட்டுரைகள் மிகச் சிறப்பு .தமிழ் கூறும் நல் உலகம் வாழ்த்தி வரவேற்கும் .


அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

கவிதைச்சுடர் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ  முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty Re: கவிதைச்சுடர் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jan 10, 2014 11:47 am

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» கவிதைச்சுடர் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கவிதைச்சாரல் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» சங்க இலக்கிய மாண்பு ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» அயலகக் கவிதைக் குயில்கள் ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் பேராசிரியர் இரா. மோகன் ! விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum