தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கதவு இல்லாத கருவூலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
3 posters
Page 1 of 1
கதவு இல்லாத கருவூலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
கதவு இல்லாத கருவூலம் !
நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
மணிவாசகர் பதிப்பகம் ,31. சிங்கர் தெரு ,பாரிமுனை ,சென்னை 600108.தொலைபேசி 044.25361039.விலை ரூபாய் 60
திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்களை மலிவு விலையில் பதிப்பித்து முத்திரைப் பதித்த பதிப்புச் செம்மல் ச .மெய்யப்பன் வழியில் 'புலிக்குப் பிறந்தது பூனையாகாது ' என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் அவரது புதல்வர் திரு ச. மெ.மீனாட்சி சோமசுந்தரம் அவர்களும் பதிப்புலகில் தனி முத்திரைப் பதித்து வருகிறார்கள். பாராட்டுக்கள் .இன்றைய இலக்கியமான புதுக் கவிதைக்கும் உரம் சேர்க்கும் விதமாக இலண்டன் மாநகரில் கல்லூரியில் உதவி முதல்வராகப் பணி புரிந்துகொண்டே கவிதைப்பணி, இலக்கிப்பணி செய்து வரும் கவிஞர் புதுயுகன் அவர்களின் கதவு இல்லாத கருவூலம் என்ற இந்த நூலை பொருத்தமான ஓவியங்களுடன் மிக நேர்த்தியாக அச்சிட்டு உள்ளனர் .பாராட்டுக்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் அவர்களைப் பற்றி கவிதை உறவு இதழில் தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் எழுதிய மிகச் சிறப்பான அறிமுகக் கட்டுரை படித்தபோதே இவரது கவிதைகள் கண்டு வியந்தேன்.இவரைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது .தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் இருவரும் இணைந்து எழுதியுள்ள சிற்பியின் படைப்புலகம் நூலிற்கு எழுத்து இணையத்தில் நான் எழுதிய விமர்சனம் படித்து விட்டு என்னைத் தொடர்புகொண்டு பாராட்டி விட்டு மதுரையில் உள்ள அவரது நண்பர் முருகன் மூலம் அவரது நூல்களை அனுப்பி வைத்தார் .படித்து விட்டு விமர்சனம் எழுதி உள்ளேன் .இலண்டன் உள்ள அவரை மதுரையில் உள்ள என்னோடு இணைத்த எழுத்து இணையத்திற்கும் .தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்களுக்கும் , கவிதை உறவு இதழ் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியாருக்கும், நன்றி .
"பெயர் சொன்னாலே போதும் தரம் எளிதில் விளங்கும்". என்று விளம்பர வாசகம் ஒன்று உண்டு .இந்த நூலில் அணிந்துரை வழங்கி உள்ளவர்களின் பெயர் சொன்னாலே போதும் கவிதையின் தரம் நன்கு வழங்கும் .இந்த நூலில் அணிந்துரை வழங்கி உள்ளவர்கள் கவிஞர் வைர முத்து , கவிஞர் சிற்பி ,கலைமாமணி சாரதா நம்பி ஆரூரன் மூவரின் முதாய்ப்பான அணிந்துரை .நூல் என்னும் மகுடத்தில் பதித்த வைரக்கற்களாக மிளிர்கின்றன .
கவிதை எழுதுவது என்பது சிற்பம் வடிப்பது போன்றது .தேர்ந்தெடுத்த சொற்கள் எனும் கல் கொண்டு மிக நுட்பமாக சிற்பி சிலை வடிக்கும் கவனத்துடன் தேவையற்ற பகுதிகள் நீக்கிட கிடைக்கும் அழகிய சிலை போன்ற நல்ல கவிதை . நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் பேராசிரியர் என்பதால் சிற்பியின் கவனத்துடன் கவிதை வடித்துள்ளார். அதனால்தான் கவிஞர் சிற்பி அணிந்துரை தந்துள்ளார். கவிஞர் சிற்பி அவர்களைப் பற்றி அறிவேன் .எளிதில் யாரையும் பாராட்ட மாட்டார்கள் . கவிஞர் புதுயுகன் கவிதைகள் நன்றாக இருப்பதால் பாராட்டி உள்ளார்கள் .
தமிழ் செம்மொழி என்று பாவாணர் வழியில் குரல் தந்த பரிதிமாற் கலைஞர் அவர்களுக்கு நூலை காணிக்கை ஆக்கி இருப்பது நூல் ஆசிரியரின் தமிழ்ப் பற்றை பறை சாற்றுகின்றது . 36 தலைப்புகளில் கவிதைகள் உள்ளன .புதுக் கவிதையின் தாத்தா மேத்தா அவர்களின் கண்ணீர் பூக்கள் விறபனையில் சாதனை படைத்தது .அவரை நினைவூட்டும் விதமாக புதுக்கவிதைகள் படைத்துள்ளார். பாராட்டுக்கள் .மிக வித்தியாசமாக தனி நடையில் கவிதை வடித்துள்ளார் .படித்தவுடன் மறப்பதல்ல கவிதை .படித்தவுடன் மனதில் பதிவதே கவிதை .இந்த இலக்கணத்தில் நூல் முழுவதும் கவிதைகள் உள்ளன .கவிதைகள் யாவும் சிறப்பாக இருந்தாலும்
பதச்சோறாக சில மட்டும் உன்கள் பார்வைக்கு .
முதல் கவிதையிலேயே முத்திரைப் பதித்து உள்ளார் .
சூரிய புத்திரன் !
அலையாய் ஆர்ப்பரிததவன்
ஆழ்கடலாய் அடங்கி விட்டேன் !
மலையோடு மல்யுத்தம் செய்தவன்
மழைத் துளிகளை எண்ணுகிறேன் !
புயலையும் தென்றலாக்கும் ஆற்றல் காதலிக்கு உண்டு என்பதை உணர்த்தும் கவிதை நன்று .
மனிதாபிமானமுள்ள எந்த ஒரு படைப்பாளியும் ஈழக்கொடுமை கண்டு கொதித்து கவிதை எழுதாமல் இருக்க முடியாது .அப்படி எதுவும் எழுத வில்லை என்றால் மனிதாபிமானம் இல்லாதவர்கள் என்றே அர்த்தம் கொள்ளலாம் .கவிஞர் புதுயுகன் ஈழக்கொடுமை குறித்து கவிதை வடித்துள்ளார் .
உலகின் ஊனம் !
இலங்கையில்
போர்க் கொலைகள் இனக் கொலைகள்
எங்கள் கண்களைக் கிழித்தன
பின்னர் கண்கள் ஊனமடைந்தன !
உலகின் மௌனத்தைத் தட்டிக்கேட்கும் கவிதை நன்று .
ஒரு குடிசையின் தாலாட்டு கவிதையை கிராமிய மொழயில் பண்பாடு எழுதி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் இலண்டனில் வசித்தபோதும் தமிழக மண் மணம் மாறாமல் இருக்கிறார் என்பதை பறை சாற்றும் கவிதை நன்று .
ஒரு குடிசையின் தாலாட்டு !
ஒத்தப்புள்ள செல்லமினு
ஓடிச்சேர்க்கும் ஒலகில
சொத்துபத்து அத்தனையும்
சேர்த்துத் தந்தேன் பாலுல
என்ன செய்ய கை நீட்டி
எங்கும் கேட்க மனசில்ல
தன்மானம்தான் உனக்கு
அலங்காரம் என் மகளே !
தமிழ்க் காற்றின் கதை கவிதையில் தமிழ்ச் சாதனையாளர்களின் பெயரைப் பட்டியலிட்டு நன்கு எழுதி உள்ளார் . 'தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ' என்று பாடிய நாமக்கல் கவிஞரின் வைர வரிகளை நினைவூட்டி வெற்றி பெறும் கவிதை நன்று
கவிஞனுக்கு தன்னம்பிக்கை இருக்கலாம் ஆனால் கர்வம் இருக்கக் கூடாது .என் கவிதையே சிறந்த கவிதை என்று கர்வும் கொள்ளும் கவிஞன் தலையில் கொட்டும் வண்ணம் ஒரு கவிதை இதோ .
உலகின் சிறந்த கவிதைகள் !
பூமி நாயகனின் சிகையாய்
புள் படர்ந்த பிரதேசம்
இளங்காலைப் பொழுது
இலவம் பஞ்சுத் தடவலாய்
மழலைத் தென்றல்
மஞ்சள் வெப்பமாய்
சூரியச் சால்வை !
இயற்கை எனும் இனிய கவிதைகளை ரசிக்கக் கற்றுத் தரும் கவிதை நன்று .
பார்த்தாலே பிரமிப்பை வழங்கும் நயாகரா பற்றிய கவிதை மிக நன்று நயாகரா !
இமயம் நீரிலும் அமையும்
அது நயாகரா !
இது கண்டம் விட்டு கண்டம் தாண்டி
மூச்சிரைக்கும் நைல் !
இது தேன்நிலவுகளின் தலை நகரம்
யெவனப் பழமை !
மண்ணில் வழிந்த வானம்
யார் இந்தப் பேரழகி ?
இப்படி வித்தியாசமான கவிதைகள் எழுதி நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் அவர்கள்வெற்றி பெற்றுள்ளார் .பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்
.

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கதவு இல்லாத கருவூலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: கதவு இல்லாத கருவூலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
"இமயம் நீரிலும் அமையும்
அது நயாகரா !" - உயர்ந்து நிற்கும் உவமை வரிகள் ..!

Ponmudi Manohar- ரோஜா
- Posts : 178
Points : 226
Join date : 30/03/2013
Age : 67
Location : NAGERCOIL
Re: கதவு இல்லாத கருவூலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் ! கவிஞர் புதுயுகன் ! லண்டன் !
» மடித்து வைத்த வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் புதுயுகன் லண்டன்
» மழையின் மனதிலே ! நூல் ஆசிரியர் : கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum