தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எழுச்சியை எழுத இடமில்லை! - மணி அமுதவன்
2 posters
Page 1 of 1
எழுச்சியை எழுத இடமில்லை! - மணி அமுதவன்
நடு சாலையில் என்னிடத்தில் ஒரு கவிஞன் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டார். நான் கொடுத்த மெட்டுக்கு ஆகச்சிறந்த வரிகளைக் கொண்டு பாடல் எழுதினார். அப்படிப்பட்ட திறமையாளனை அந்தச் சாலையில் தவறவிடாமல் இருந்ததே எனது இந்த ஆண்டின் மகிழ்ச்சி ஒரு நேர்காணலில் இசையமைப்பாளர் சத்யா இப்படிச் சொன்னார். அவர் குறிப்பிட்ட அந்தக் கவிஞனின் பெயர் மணி அமுதவன். "நெடுஞ்சாலை' படத்தில் "இஞ்சாதே இஞ்சாதே... காதல் இஞ்சாதே', "வைகை நதிக்காத்தே', மற்றும் "கோலி சோடா' படத்தில் "கோயம்பேடு மார்க்கெட்டுல வந்து பாரு நீ' என்று அனைத்துத் தரப்பையும் ரசிக்க வைக்கும் வார்த்தை நேர்த்திகளோடு தமது பாடல்களைக் கட்டமைப்பவர் மணி அமுதவன். 27 வயதே ஆன இளம் பாடலாசிரியர். அவரிடம் நமது நேர்காணல்...
பெரும்பான்மையோர் தேர்ந்தெடுக்காத பாடலாசிரியர் துறையை நீங்கள் எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?
-
பாட்டு என்பது வெறும் பாட்டு மட்டுமல்ல. அதற்குள் ஓராயிரம் உணர்வுகள் புதைந்துக் கிடக்கின்றன. திருச்சிதான் எனக்குச் சொந்த ஊர். சிறு வயதிலேயே அப்பா இறந்துவிட்டதால் அம்மாவின் அரவணைப்பில் தான் வளர்ந்தேன். அப்பா இல்லாத சோகம் எனக்குள் தனிமையை உணர்த்தியது. அந்தத் தனிமையைப் போக்க பாடல்களை எனக்காக துணையாக்கிக் கொண்டேன். பாடல்களைக் கேட்பதோடு மட்டுமின்றி நானே சொந்த வரி அமைத்துப் பாடி பள்ளி நாட்களில் கைத்தட்டுகளும் வாங்கியிருக்கிறேன். இப்படியாகப் பாடல் மீது எனக்கு ஏற்பட்ட ஈர்ப்புதான் பாடலாசிரியர் துறையைத் தேர்ந்தெடுக்க வைத்தது.
உங்களது பாடலுக்கான விதை எங்கிருந்து விழுகிறது?
-
ஆத்மார்த்தமாக எழுதப்படும் பாடல் வரிகள் தான் தீட்டப்பட்ட ஓவியங்களைப் போல் ரசிக்கத் தகுந்த விதத்தில் இருக்ம். எந்தப் பாடலை எழுதினாலும் அதற்குள் ஒரு இலக்கிய நயம், சமூகப் பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என்கிற எனது சிந்தனையே எனது பாடலுக்கான விதை.
தரமான திரைப்படங்களுக்குப் பாடல் தேவையற்றது என்கிறது சினிமா ஆர்வலர்களின் விமர்சனம் பற்றி...
-
பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்துக்கு முடிவு அமையப் பெறாமல் இருந்தது. அப்படிப் பட்ட இக்கட்டான சூழலில் "கேள்வியின் நாயகனே எந்தன் கேள்விக்கு பதில் ஏதய்யா?' என கண்ணதாசன் தம் பாடல் வரிகளின் கூர்மை மூலம் அப்படத்துக்கு ஒரு முடிவினை வகுத்தார். நமது தமிழ் பாரம்பர்யத்தின் அடிப்படையோடு ஒப்பிடுகையில் நமது திரைப்படங்களுக்குப் பாடல்கள் அவசியமே.
இன்னதை எழுதக்கூடாது என்கிற வரையறை ஏதேனும் வகுத்திருக்கிறீர்களா?
-
ஒரு படைப்பு சமூகத்துக்கான மாற்றத்தின் விதையை விதைக்காவிட்டாலும் சீர்கேட்டின் தொடக்கப் புள்ளியாய் இருந்து விடக்கூடாது என்பதில் நான் கவனமாய் இருக்கிறேன். முடிந்தவரை எனது எழுத்து என்பது ஒரு பார்வையாளனிடத்தில் சிறு சலனத்தையாவது ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு நேர்மாறான எண்ணத்தை வலியுறுத்தும் பாடல்களை என் வாழ்வில் எழுதக்கூடாது என்பதை என் கொள்கையாக வைத்திருக்கிறேன்.
எழுச்சிப் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை, தத்துவப் பாடலாசிரியர் கண்ணதாசன் ஆகியோர் விட்டுச் சென்ற இடம் இன்னும் வெற்றிடமாகவே உள்ளதே?
-
பட்டுக்கோட்டை பாடல்களில் தெரியும் முற்போக்கும், சமூக எழுச்சியும், கண்ணதாசன் பாடல்களில் காணப்படும் தத்துவ வரிகளும் எழுதுவதற்கு அன்றைய தமிழ் சினிமா சூழலில் களம் இருந்தது. இன்று பாடலாசிரியனுக்குத் தீனி போடும்படியான கதைக்களங்கள் எவையும் இல்லை என்பதே உண்மை. நகைச்சுவைப் படங்கள் மட்டுமே பெருமளவில் வந்து கொண்டிருக்கும் இச்சூழலில் அதில் எங்கு எழுச்சியை எழுத முடியும்.
பொருளாதார அடிப்படையில் பாடலாசிரியர்களின் நிலை எப்படி?
-
நிச்சயம் பின்தங்கிதான் உள்ளது. ஒரு பாடலைப் பாடும் பாடகருக்குப் பாடி முடித்த உடனே பணம் வழங்கப்படுகிறது. அந்தப் பாடலை அவர் வேறு பல இடங்களில் பாடியும் பணம் பெறுவார். ஆனால் அதை எழுதிய பாடலாசிரியருக்கு உடனே பணம் கிடைப்பதில்லை என்பதை என் ஆதங்கமாகப் பதிவு செய்கிறேன்.
-
-----------------------
- கி.ச. திலீபன்
நன்றி: கல்கி

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: எழுச்சியை எழுத இடமில்லை! - மணி அமுதவன்
பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» சகாராக்களுக்கு இடமில்லை!
» "கடவுளுக்கு இடமில்லை"
» "கடவுளுக்கு இடமில்லை"
» எழுத சொல்லுறாளே !
» நானும் எழுத விரும்புகிறேன்
» "கடவுளுக்கு இடமில்லை"
» "கடவுளுக்கு இடமில்லை"
» எழுத சொல்லுறாளே !
» நானும் எழுத விரும்புகிறேன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum