தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
விறகு அடுப்பும் மண்பாண்டச் சமையலும்!
Page 1 of 1
விறகு அடுப்பும் மண்பாண்டச் சமையலும்!
"செல்லம்மாள் சமையல்' என்கிற உணவகம்,
திருச்சியில் மிகப் பிரபலம், புத்தூர் அரசு
மருத்துவமனை சாலையில், அமைந்துள்ளது
இந்த உணவகம். விறகு அடுப்பும் மண்பாண்டச்
சமையலுமே தன்னை ஒரு பிசினஸ் உமனாக
மாற்றியிருப்பதாகக் கூறுகிறார் உரிமையாளர்
எம். செல்வி.
வெண்டை சாம்பாள் மணமும், வெந்தயக்கீரை
கூட்டு வாசமும், மண்பானைக்குள் கொதித்துப்
பொங்கியெழும் புழுங்கல் அரிசி சாத வாசமும்
நம்மைக் கமகமவென வரவேற்கின்றன.
வரிசையாக ஏழெட்டு மண் அடுப்புகள். புளிய
விறகு உட்பட பல விறகுகள். அடுப்புப் புகை
போக்கிகள் ஒவ்வொன்றும் பதினைந்தடி
உயரத்துக்கும் மேலாக கட்டமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அடுப்பிலும் மண் சட்டிகள், மண்
பானைகள், வெந்து பொங்குவதை கிண்டி
விடுவதற்கென மர அகப்பைகள். காய்கறிகள்,
கீரைகள் என முழுமையான சைவ உணவுக்கு,
"செல்லம்மாள் சமையல்' முழு கியாரண்டி.
என் கணவர் மோகன், கனிம வளத் தொழில்
துறையில் பல ஆண்டுகளாக இயங்கியவர்.
பல மாநிலங்களில் தங்கியிருந்தவர்.
அப்போதெல்லாம் அந்தக் கிராமத்து மக்களின்
மண்பாண்டச் சமையல் வாசமும், அதன் ருசியும்
அவரைப் பெரிதும் ஈர்த்துள்ளன.
அடிப்படையில் நானும் ஒரு கிராமத்துப் பெண்
என்பதால், இருவரது விருப்பமும் ஒத்துப் போகவே,
இந்த செல்லம்மாள் சமையல் உருவானது
என்கிறார் செல்லா என்கிற செல்வி.
"இன்றைய உபசரிப்பு' என்று பெரிய தகவல்
பலகை. தினசரி முப்பது வகையான உணவுப்
பொருட்கள் அந்தப் பலகையில் இடம் பெறுகின்றன.
தினசரி நான்கு வகையான கீரைகள். அடுத்த நாள்
வேறு நான்கு வகை கீரைகள். புழுங்கல் அரிசி
சாதம் தினசரி பொதுவானது. மாப்பிள்ளை சம்பா
அரிசி சாதம், வரகு அரிசி சாதம், வெள்ளைக்
குதிரை வாலி அரிசி சாதம், திணை அரிசி சாதம்
என ஒவவொர நாளும் மாறி மாறி ஒவ்வொரு
வகையான சிறப்பு அரிசி சாதம். வெண்டை சாம்பார்,
தக்காளி ரசம், பூண்டு வெங்காயம் புளிக் குழம்பு,
மண் சட்டித் தயிர் புளிச்சக்கீரை, நல்லெண்ணெய்,
வெந்தயக் கீரை கூட்டு, வாழைப்பூ பொரியல்,
வாழைத்தண்டு தயிர்ப் பச்சடி, சுட்ட மிளகு
அப்பளம் என மெனு பட்டியல் நீள்கிறது.
-
இவற்றைப் பரிமாறுவதும் மண் குடுவைகளில்
தான். மண் குவளைகளில் தண்ணீர். அதுவும்
ஓமமும் சீரகமும் போட்டுக் காய்ச்சி ஆற வைத்தக்
குடிநீர். இவர்கள் இதற்காக ரொம்பவே மெனக்
கெடுவது தனி வரலாறு.
-
"நாங்கள் உபயோகிக்கும் நல்லெண்ணெய் மரச்
செக்கினால் ஆட்டப்பட்டு தயாரிக்கப்பட்டதாகும்.
உடன்குடி (தூத்துக்குடி) சென்று ஒரிஜினல் பனை
வெல்லம் வாங்கி வந்து மரச் செக்கு ஆட்டுவரிடம்
தந்து விடுவோம். மரச் செக்கில் எள்ளுடன் சேர்த்து
அதைப் பனை வெல்லத்தையும் போட்டு அரைத்து
ஆட்டி தயாரிப்பதே எங்கள் "நல்ல' நல்லெண்ணெய்
ஆகும்.
பெரும்பாலும் பனை வெல்லம் சேர்த்து அரைத்து
இப்போது எங்குமே நல்லெண்ணெய் தயாரிப்பது
இல்லை. எங்கள் விறகு அடுப்பும், மண்பாண்டச்
சமையலும், செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயும்
இணைந்த எங்க சமையல் ருசியே தனி!' என்கிறார்
செல்வி.
-
------------------------------------------
- ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
நன்றி: மங்கையர் மலர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum