தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன்
2 posters
Page 1 of 1

‘புத்தகம் போற்றுதும்’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன்
*****
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017.
தொலைபேசி 044-24342810. 044-24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
பக்கம் 224 விலை ரூபாய் 150
அருமை நண்பர் இரா. இரவியின் ‘புத்தகம் போற்றுதும்’ நூல், வாசிப்பவர்க்கு ஒரு இனிய அனுபவமாகும்.
‘புத்தகம் போற்றுதும்’ என்பதும், ‘கடவுளை வணங்குங்கள்’ என்று சொல்வதும் என்வரையில் ஒன்றுக்கொன்று இணையானதாகும்.
கடவுளுக்கு நிகரான புத்தகங்களைப் போற்றுவதன் மூலம், நாத்திகர்கள் கூட மறைமுகமாக ஆத்திகர்களாகி விடுகிறார்கள் என்பதே என் அழுத்தமான கருத்து.
நண்பர் ரவி, இந்த நூலில் ஐம்பது நூல்களுக்கான ஒரு முன்னோட்டத்தை அளித்திருக்கிறார். இந்த ஒரு நூலை வாசிப்பதன் மூலம் அந்த ஐம்பது நூல்களையும் ருசி பார்த்த ஒரு திருப்தி ஏற்படுகிறது. கூடுதலாக, ருசித்த உணவை மிகவே விரும்பி உண்பது போல, அந்த நூல்களை எல்லாம் தேடிப் பிடித்து வாசிக்க வேண்டும் என்றும் வேட்கை உருவாகிறது.
இதற்காகவே ரவியை பாராட்ட வேண்டும்.
இலக்கிய உலகில் எவ்வளவோ நூல்கள், நாவல், கவிதை, சிறுகதை, திறனாய்வு, கட்டுரை என்று சுவைகளில் பல பிரிவுகள்.
இந்த ‘புத்தகம் போற்றுதும்’ நூல் இதில் எந்த பிரிவிலும் சேராமல் ஒரு தனிப்பிரிவாய் நிற்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
ஒரு நூலுக்குள் ஐம்பது நூலின் சாரம் அடங்கியிருப்பதை எப்படிச் சொல்வது? மலர்களில் பல மலர்களைத் தொகுத்தால் கதம்பம். அது போல் இதையும் கதம்ப நூல் எனலாமா?
இக்கேள்விக்கான விடையை சான்றோர்களே கூறட்டும்.
நண்பர் இரவி அடிப்படையில் ஒரு கவிஞர். அதிலும் ஹைக்கூ கவிஞர். இதனால் சுருங்கச் சொல்லி விளங்க மற்றும் வியக்க வைப்பதில் பேர் எடுத்தவர். இந்த நூலைத் தந்ததன் மூலம் பெரிய நூல்களையும் ஹைக்கூ போல சிறு கட்டுரை வடிவில் புரிய வைத்து விட முடியும் என்று முனைந்திருக்கிறாரோ என்று எனக்குத் தோன்றுகிறது.
ஹைக்கூ கவிதைகள் எப்படி மின்னல்வெட்டாய் தாக்குமோ அதே தாக்கம் இந்நூலில் எனக்கு ஏற்பட்டது.
இந்த 50 நூல்களும் இவர் வியந்த நூல்கள். இதன் சிறப்பை மிக எளிய மொழி கொண்டு இவர் கூறியிருப்பதும், மயிற்பீலியால் வருடித்தருவது போல பாராட்டியிருப்பதும் ஒரு தனிச் சுகமாகத் தெரிகிறது. சில நூல் ஆசிரியர்கள் எதிலும் தங்களை முன்நிறுத்திக்கொள்வார்கள். தங்களுக்கு தெரிந்ததை எல்லாம் சொல்லி அதோடு வாசித்ததை ஒப்பிட்டு, அதோடு தங்களின் கருத்தைச் சேர்த்துக் கட்டி வாசிக்கையில் ஆயாசப்பட வைப்பார்கள். இரவி, முகத்துக்கு நேராக நின்று ஒரு சாமான்ய மனிதர் போன்ற பாவனையில் ஜிகினாக்கள் துளியும் இன்றி, ஆனால் தான் உணர்ந்ததை அப்படியே பேசுகிறார்.
இந்த எளிமை ஓர் அரிய விஷயமாக எனக்குப்படுகிறது. இந்நூலில் கவிஞர் புதுயுகனின் மதிப்புரையும், திரு. இரா. மோகன் அவர்களின் மதிப்புரையும் இடம் பெற்றுள்ளது. இரண்டுமே மதிப்புரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பாடம் எழுதுவது போல் உள்ளன.
புதுயுகன் உணர்வுக்கு முக்கியத்துவம் தந்தால் திரு. மோகன் உணர்வோடு வடிவத்துக்கும் முக்கியத்துவம் தருகிறார். திரு. மோகன் இலக்கிய மரபு வழி செல்பவர். தமிழ்க் கொண்டல் திரு. மு. வரதராசனாரின் அருமை மாணவர்களில் ஒருவர். பணி ஓய்வுக்குப் பின்பும் எழுத்துக்கு ஓய்வே கிடையாது என்று இயங்கி வருபவர். தான் வளர்வதோடு தன்னைச் சார்ந்தவர்கள் வளர பெரிதும் துணை நிற்பவர்.
திரு. இரவியும், திரு. மோகனின் இதமான அரவணைப்பில் வளர்பவர். அதே போல் பன்முகத்திறமைகள் கொண்ட முனைவர் இறையன்பு அவர்களின் நெறிகாட்டுதலும் உடையவர். மறந்தும் பிறரிடம் உள்ள பலவீனங்களைப் பாராதவர். உண்மையாக இருக்க வேண்டும் என்கிற நோக்கம் கொண்டவர். இப்படிப்பட்டவரின் இந்த நூலைப் போற்றுவதா, இல்லை இவரைப் போற்றுவதா என்கிற ஒரு சிறுதவிப்பு எனக்கு நேரிட்டது. இருவித போற்றுதலையும் கொள்வதே சிறப்பு எனப்படுகிறது. அவ்வகையில் இந்நூலையும் சரி, திரு. இரவியையும் சரி மனதார போற்றுகின்றேன்.
இந்நூல் வெளியீட்டின் போதே இதன் தொடர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால் அடுத்த நூலை விரைவாக எதிர்பார்த்து அதற்கும் இப்போதே என் வாழ்த்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். வாழ்க! வாழ்க!
--
.

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: ‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன்
-
[img][/img]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன்
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதிப்புரை : எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன்,
» ‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன்
» ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் !
» ‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப.
» ‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum