தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கதிரைப்போல் என்றென்றும் ஒளிர்வாய்

2 posters

Go down

கதிரைப்போல் என்றென்றும்  ஒளிர்வாய் Empty கதிரைப்போல் என்றென்றும் ஒளிர்வாய்

Post by karumalaithamizhazhan Fri Oct 03, 2014 12:46 pm

கதிரைப்போல்  என்றென்றும்  ஒளிர்வாய்
பாவலர் கருமலைத்தமிழாழன்
 
                        கோடியிலே   ஒருவரெனும்   கொடையின்   செல்வர்
                                    கொள்கையிலே   பிறழாத   கொங்கு   தங்கம்
                        நாடியவர்க்   கில்லையெனும்   சொல்லே   யின்றி
                                    நாளும்நற்   செயல்களுக்கே   ஈயும்   வள்ளல்
                        வாடிநின்ற   பயிர்க்குள்ளம்   வருந்தி   நின்ற
                                    வள்ளலாரைப்   போல்கருணை   வாய்க்கப்   பெற்ற
                        ஈடில்லா   அருட்செல்வா   மகாலிங்கமே
                                    இறவாத   புகழ்பெற்றாய்   வாழ்க   வாழ்க !
 
                        தன்மார்க்கம்   சமரசசன்   மார்க்கம்   என்றே
                                    தகுமார்க்கம்   வாழ்க்கையிலே   கடைபி   டித்து
                        நன்மார்க்கம்   கோயில்கள்   திருப்ப   ணிக்கே
                                    நடமாடும்   வாரியாராய்ப்   பொருள்கொ   டுத்தே
                        பன்மார்க்கம்   இருந்தபோதும்    காந்தி   யம்தாம்
                                    பக்கவத்தைத்   தரும்மார்க்கம்   என்று   ணர்ந்து
                        மென்மார்க்கம்   தனில்நடந்த   மகாலிங்கமே
                                    மேதினியில்   நிலைத்துநின்றாய்   வாழ்க   வாழ்க !
 
                        பொருளிருந்தால்   அறிவில்லை   அறிவி   ருந்தால்
                                    பொருளில்லை   எனும்மொழியின்    கருத்தை   மாற்றிப்
                        பெரும்பொருளும்    தெளிந்தறிவும்   ஒருங்கே    பெற்ற
                                    பெருந்தகையாய்   சிறுமையெனும்   சிந்தை   யில்லா
                        அருட்செல்வ   மாமணியாய்   அகந்தை    யின்றி
                                    அனைவரையும்   அணைக்கின்ற   எளிமைப்   பண்பின்
                        தருவாக   வாழ்ந்திருந்த   மகாலிங்கமே
                                    தரணியிலே    புகழில்நின்றாய்    வாழ்க   வாழ்க !
 
                        எதுவாழ்வு    என்பதற்கே   எடுத்துக்   காட்டாய்
                                    எள்ளளவும்   கறையின்றிக்   களங்க   மின்றிப்
                        பொதுவாழ்வில்   தம்வாழ்வை   அர்ப்ப   ணித்துப்
                                    பொள்ளாச்சி   உறுப்பினராய்ச்   சட்ட   மன்றில்
                        புதுநெறியை    அரசியலில்     வகுத்துத்    தந்து
                                    பூரிக்கும்    தூய்மையிலே    செயல்கள்    செய்த
                        பொதுத்தொண்டன்    அருட்செல்வா   மகாலிங்கமே
                                    பொலிந்திங்கே    நிலைத்துநின்றாய்   வாழ்க   வாழ்க !
தமிழறிஞர்   தமைப்பேணும்   தமிழை   ஆய்ந்த
                                    தமிழறிஞர்! ஞாலமெல்லாம்    போற்று    மாறு
                        தமிழிசையைப்   பண்பாட்டை   இலக்கி   யத்தை
                                    தமிழ்கலையை   வரலாற்றை   அறியச்   செய்யும்
                        தமிழ்ப்பணியை   விளம்பரமே    சிறிது   மின்றித்
                                    தம்கடமை   எனநாளும்    ஆற்றி    நின்ற
                        தமிழ்த்தொண்டன்   அருட்செல்வா    மகாலிங்கமே
                                    தமிழ்ப்புகழாய்    நிலைத்துநின்றாய்    வாழ்க   வாழ்க !
 
                        ஆயிரமாய்த்   திருக்குறளின்    இந்தி   நூலை
                                    அறியாத   வடநாட்டார்    அறிந்து    கொள்ளப்
                        பாயிரமாய்ப்   பள்ளிகட்குப்   பரிச    ளித்தும்
                                    பயன்நல்கும்   பெரியபுராண   திருமந்   திரத்தை
                        ஓவியமாய்   இந்திமொழி     ஆங்கி   லத்தில்
                                    உலகறிய   மொழிபெயர்த்துப்   பரவச்   செய்த
                        காவியனே    அருட்செல்வா    மகாலிங்கமே
                                    காலத்தை   வென்றுநின்றாய்   வாழ்க   வாழ்க !
 
                        எண்ணற்றத    தொழிற்கூடம்    கல்விச்    சாலை
                                    எல்லாமும்    நாட்டுவளம்    பெருக்கும்   சோலை
                        எண்ணற்ற   தொழிலாளர்   வாழ்வை    இன்பில்
                                    ஏற்றுகின்ற    சக்திகுழும   நிறுவ   னங்கள்
                        மண்வளத்தில்   பாசனத்தில்   விவசா   யத்தில்
                                    மகத்தான   புதியமாற்றம்   வியையச்   செய்த
                        பண்பாளர்   அருட்செல்வா   மகாலிங்கமே
                                    பார்தன்னில்   நிலைத்துநின்றாய்   வாழ்க   வாழ்க !
 
                        நற்பாரதி   அண்ணாவின்   பட்டம்   பெற்ற
                                    நாச்சிமுத்து   ருக்மணியின்   அரும்பு   தல்வா
                        பொற்புடைய    ஓம்சக்தி    தலையங்   கத்தில்
                                    பொலிநாடாய்   உயரவழி    சொன்ன    செல்வா
                        வெற்றிக்குச்    சாட்சியாகத்    தளர்ச்சி   யின்றி
                                    வெற்பாக   உயர்ந்துநின்ற    உழைப்பின்    தோளா
                        கற்பகமே    அருட்செல்வா    மகாலிங்கமே
                                    கதிரைப்போல்   என்றென்றும்   ஒளிர்வாய்   வாழ்க !
 
                                                            -----   2     -----
karumalaithamizhazhan
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 73
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

கதிரைப்போல் என்றென்றும்  ஒளிர்வாய் Empty Re: கதிரைப்போல் என்றென்றும் ஒளிர்வாய்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Oct 05, 2014 6:15 pm

அருமை பாராட்டுக்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum