தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Tue Oct 07, 2014 11:34 am

சுதந்திர தாகம்!

அந்த ஆங்கிலேய ஆசிரியருக்கு வகுப்பறை சுத்தமாக இருக்க வேண்டும். அன்று வகுப்புக்குள் நுழைந்ததும், உள்ளே சுற்றும் முற்றும் பார்த்தார். 
-
அங்கே சிதறிக் கிடந்த வேர்க்கடலைத் தோல்களைக் கண்டதும் அவரது முகம் சிவந்தது.
 ''யார் இதைப் போட்டது?'' என்று உறுமினார். ஒருவரும் பதில் சொல்லவில்லை.

-
  அனைவரையும் அவற்றையெல்லாம் பொறுக்கிக் கொண்டுபோய் வெளியில் போடச் சொன்னார்.
 ஒரு மாணவன் மட்டும், குப்பையைப் பொறுக்க மறுத்து, ""நான் போடவில்லை. நான் ஏன் பொறுக்க வேண்டும்? முடியாது...'' என்று கூறிவிட்டு, தனது இருக்கையில் அமர்ந்து புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தான்.

-
இதைக் கண்ட ஆசிரியருக்குக் கோபம் தலைக்கேறியது.
 ""உனக்கு என்ன திமிர்'' என்று கேட்க, அந்த மாணவன் ""சுதந்திரம் எனது பிறப்புரிமை...'' என்று கோஷமிட்டான். 

-
  அந்த மாணவன்தான் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான லோகமான்ய பாலகங்காதர திலகர்.

-பி.ஜி.குருசாமிப்பாண்டியன், சத்திரப்பட்டி.
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Tue Oct 07, 2014 11:36 am

தர்மம்!




லால் பகதூர் சாஸ்திரி அலகாபாத் நகரமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தபோது, நகராட்சி சார்பில் ஏழை மக்கள் குடியிருக்க குறைந்தவிலையில் மனைகள் விற்கப்பட்டன.

சாஸ்திரி அப்போது ஊரில் இல்லை. அவரது நண்பர் ஒருவர், சாஸ்திரியும் சொந்த வீடு கட்டிக்கொள்ளட்டுமே என்ற எண்ணத்தில் அவருக்காக ஒரு மனையை வாங்கினார்.

ஊரிலிருந்து திரும்பிய சாஸ்திரி நடந்ததைக் கேள்விப்பட்டு வருந்தினார்.

""ஏழைகளுக்கு மனை என்று அறிவித்துவிட்டு, அதை நாம் வாங்குவது நியாயமில்லை'' என்று நண்பரிடம் கூறினார்.

""உண்மைதான், ஆனால் நீங்கள் பணக்காரர் இல்லையே?'' என்று கேட்டார் நண்பர்.

""இருக்கலாம், ஆனால் எனக்குச் சொந்தமாக எந்த சொத்தையும் வாங்க மாட்டேன் என்று காந்திஜியிடம் ஒருமுறை வாக்கு கொடுத்துள்ளேன். அதை மீறுவது தர்மம் அல்லை. அரசியல்வாதிகள் சொத்து வாங்கத் துவங்கினால், அது லஞ்சத்தில் போய்தான் முடியும். எனவே அந்த மனையைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்'' என்று நண்பரை வற்புறுத்தித் திரும்பிக் கொடுத்துவிட்டார்.




-என்.ராஜப்பா, மன்னார்குடி.

dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Tue Oct 07, 2014 11:37 am

பொதுநலமும் சுயநலமும்..
 
பெரியார் ஈ.வெ.ரா., ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு ரயிலில் பயணம் செய்வதற்காக அவசர அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.
 அந்தக் கூட்டம் முடியும்வரை இருந்து பெரியாரின் பேச்சைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு மனிதருக்குப் பெரியாரிடம் ஒரு விளக்கம் கேட்பதற்கு ஆசை ஏற்பட்டது.
 அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்த பெரியாரைப் பார்த்து முதலில் தயக்கம் ஏற்பட்டாலும், பின்னர் சுதாரித்துக் கொண்டு பெரியார் முன்னால் போய் நின்றார்.
 அவரைப் பார்த்து, ""பொதுநலம் என்றால் என்ன? சுயநலம் என்றால் என்ன?'' என்று கேட்டார்.
 உடனே பெரியார் சட்டென்று, ""மழை பெய்வது பொதுநலம்! குடை பிடிப்பது சுயநலம்!'' என்று பளிச்சென்று பதிலளித்தார்.


-தங்க.சங்கரபாண்டியன், சென்னை.
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Tue Oct 07, 2014 11:38 am

நகைச்சுவை இளவரசர்...
 
சார்லி சாப்ளினுக்கு அப்போது ஐந்து வயதிருக்கும். லண்டன் நகரத் தியேட்டர் ஒன்றில் நடந்த இசைநிகழ்ச்சிக்கு உறவினருடன் சென்றிருந்தார்.
-
இசைநிகழ்ச்சியில் இனிமையாகப் பாடிக்கொண்டிருந்த பாடகருக்குத் திடீரென்று தொண்டையில் எரிச்சல் எற்பட்டுப் பாடமுடியாமல் போய்விட்டது.
-
  ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட கூச்சல்கள்... குழப்பங்கள்...
 நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு ஒரு யோசனை தோன்றியது. உறவினரின் அனுமதி பெற்று சிறுவன் சார்லியை மேடையேற்றி, அவனுக்குத் தெரிந்த ஒரு பிரபலமான பாட்டைப் பாடச் சொன்னார். சாப்ளினும் தயக்கமின்றி உற்சாகத்துடன் பாட ஆரம்பித்தார். ரசிகர்களின் கூச்சல் அடங்கி, அரங்கு அமைதியானது.

-
ரசிகர்களிடமிருந்து ரூபாய் நோட்டுகள் பறந்து வந்தன. சார்லியைச் சுற்றி ரூபாய் நோட்டுக்கள்.
 சார்லி பாடலை நிறுத்தினார். ""முதலில் நோட்டுக்களை எடுத்துக்கொள்கிறேன். பின்பு பாடுகிறேன்'' என்றவாறே ரூபாய் நோட்டுக்களைப் பொறுக்கிப் பையில் போட்டுக்கொண்டு, பின்பு பாட்டைத் தொடர்ந்தார்.

-
ரசிகர்கள், சார்லியின் செய்கையை நகைச்சுவையாக ரசித்து, சிரித்து மகிழ்ந்தனர். மேலும் ரூபாய் நோட்டுகள் மேடையை நோக்கிப் பறக்க ஆரம்பித்தன.
-
==========================
-க.பரமசிவன், மதுரை.
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Tue Oct 07, 2014 11:39 am

சிந்தனை!
 
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு ஆரம்பப் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார்.
-
மாணவர்களுக்கு ஒரு கதையின் மூலம் தனது பேச்சைத் தொடங்கலாம் என்று நினைத்து, ""நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன்.... ஒரு நாள் ஒரு முயலும் ஆமையும்...'' என்று ஆரம்பித்தார்.
-
உடனே அங்கிருந்த சிறுவர்களெல்லாம், ""எங்களுக்கு ஏற்கெனவே இந்தக் கதை தெரியும். இரண்டுக்கும் ஓட்டப்பந்தயம் நடந்துச்சு. அதிலே ஆமை ஜெயிச்சுது. முயல் தோற்றுப் போச்சு...'' என்று ஒரே குரலாகக் கத்தினார்கள்.
-
அதற்குக் கலைவாணர், ""அந்தக் கதையை அப்படிச் சொல்லக்கூடாது. முயலாமையால் தோற்றது என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் தெரியுமா? முயல் + ஆமை = முயலாமை. முயலாமை என்றால் முயற்சி செய்யாமல் இருப்பது. முயற்சி இல்லாதவர்கள் வலிமையுடைவர்களாக இருந்தாலும் தோல்வி அடைவர்'' என்று கூறி சிறுவர்களைச் சிந்திக்க வைத்தார்.

-கா.இரவிச்சந்திரன், பேட்டை.
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Tue Oct 07, 2014 11:40 am

வேறு வழி!
 
மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு "வெள்ளையனே வெளியேறு' என முழக்கமிட்ட வேளையில் நடைபெற்ற நிகழ்ச்சி இது.
 இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இச்சம்பவம் தொடர்பாக பேச்சு வந்தது.போராட்டத்தை எந்த முறையில் அடக்குவது என கருத்து கேட்கப்பட்டது. அப்போது, எதற்கும், யாருக்கும் பயப்படாதவர் என்று கூறப்பட்ட சர்ச்சில் எழுந்து இப்படிக் கூறினார்:
 ""காந்தி துப்பாக்கி ஏந்திப் போரிட்டால் நான் பீரங்கியால் நசுக்கி இருப்பேன். பீரங்கி கொண்டு போராடினால் நான் விமானம் கொண்டு அழித்திருப்பேன்.
 ஆனால் அவரோ, ஆயுதங்களைக் கையில் எடுக்காமல் அகிம்சை, உண்மை எனப் போராடுகிறார். இவற்றை மழுங்க வைக்கும் ஆயுதங்கள் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் அவரிடம் பணிந்துதான் போக வேண்டியுள்ளது!''


-ஆ.பிரியதர்ஷினி, திருநெல்வேலி.
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Tue Oct 07, 2014 11:40 am

நல்ல பாடம்!

விஞ்ஞான மேதை தாமஸ் ஆல்வா எடிசன் விஞ்ஞான ஆராய்ச்சியில் வெற்றி பெறுவது ஒன்றே தம் வாழ்வின் லட்சியம் என்று கருதிக் கடுமையாக உழைத்து மிகப் பெரிய வெற்றி கண்டவர்.
 அவர் எப்போதும் எளிமையான உடைகளையே அணிவார். அழகான, ஆடம்பரமான உடைகளை அணிந்து தன் தோற்றப் பொலிவை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லாதிருந்த அவருக்கு, ஒருநாள், அழகான விலையுயர்ந்த ஆடைகளை வாங்கி அணிந்துதான் பார்ப்போமே என்ற ஆசை தோன்றியதாம்.
 நிறையப் பணம் கொடுத்து ஆடம்பரமான உடைகளை வாங்கி அணிந்து
 கொண்டார். பார்க்க நன்றாக இருக்கவே, இனி எப்போதும் இப்படி நாகரிக உடைகளுடனே விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபடலாமே என்று எண்ணினார்.
 ஒருநாள், அவர் ஆராய்ச்சிசாலையில் அந்தப் புதிய உடைகளுடன் ரசாயன ஆராய்ச்சி ஒன்றைச் செய்து பார்த்துக் கொண்டிருந்தார்.
 அப்போது திராவகம் இருந்த புட்டி ஒன்று எதிர்பாராமல் உடைந்து சிதறி, அவருடைய உடைகள் உருக்குலைந்து சேதமாகிவிட்டன.
 எடிசன் அமைதியாக தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்: ""நான் அநாவசியமாக அவ்வளவு பணத்தை ஆடம்பர உடைகளுக்காக செலவு செய்தேனே! நான் செய்த அந்தத் தவறுக்கு இப்போது ஒரு நல்ல பாடம் கற்றுக் கொண்டேன்.''
 அன்றுமுதல் மீண்டும் பழையபடி எளிமையான ஆடைகளை அணிய ஆரம்பித்தார்.


-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Tue Oct 07, 2014 11:41 am

உதவி!

இங்கிலாந்தில் பிளெமிங் என்ற விவசாயி ஒருநாள் காட்டு வழியே நடந்து போய்க்கொண்டிருந்தார். வழியில் ஒரு பணக்காரச் சிறுவன் புதைகுழியில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான். உடனே பிளெமிங் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மிகவும் சிரமப்பட்டு அந்தச் சிறுவனைக் காப்பாற்றினார்.
 இதனை அறிந்த சிறுவனின் தந்தை பிளெமிங்கிடம், "எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்' என்று கூறினார். பணத்தை வாங்க மறுத்த அந்த விவசாயி, தனது மகனைப் படிக்கவைக்க உதவி செய்யுமாறு வேண்டினார்.
 அந்தப் பணக்காரரின் உதவியால் படித்துப் பின்னாளில் பெனிசிலின் என்ற அரிய மருந்தைக் கண்டுபிடித்தார் அந்த விவசாயியின் மகன் அலெக்ஸôண்டர் பிளெமிங்.
 சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது தந்தையால் காப்பாற்றப்பட்ட அந்தச் சிறுவன் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டார். அப்போது பெனிசிலின் மருந்துதான் அவரது உயிரைக் காப்பாற்றியது. பிளெமிங் குடும்பத்தால் இரண்டு முறை காப்பாற்றப்பட்ட அந்தச் சிறுவன்தான் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில்.


-செ.தீபிகா, 10-ஆம் வகுப்பு, திருவையாறு.
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Tue Oct 07, 2014 11:41 am

உழைப்பு!

 சிறுநீரகம் செயல்படாமல் போனதால், ஒவ்வொரு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும் ஏழு மணி நேர டயாலிஸிஸ் சிகிச்சை அவரை அவதிக்குள்ளாக்கியது.
 சிகிச்சை இல்லாத நாட்களில் விமானத்தில் பறந்துசென்று பொதுக்கூட்டங்களில் பேசிவிட்டு, சிகிச்சை நாளன்று மருத்துவமனைக்கு வந்து படுத்துக் கொள்வார் அவர்.
 இளமையில் மட்டுமல்ல, தனது 75-வது வயதிலும் இப்படி உடல் நோயைத் தாங்கிக் கொண்டு தேசத்துக்காக உழைத்த அந்த மாமனிதர் ஜெயப்பிரகாஷ் நாராயண்.


-கே.எஸ்.நாகராஜன், கிருஷ்ணகிரி.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Tue Oct 07, 2014 11:46 am

ஏழு பாவங்கள்!

ஒருமுறை காந்தியடிகளைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அப்போது அவர் காந்தியடிகளைப் பார்த்து, ""ஐயா, இந்த உலகத்தில் மன்னிக்க முடியாத பாவங்கள் என்று நீங்கள் எவற்றைக் கூறுவீர்கள்?'' என்று கேட்டார்.
 காந்தியடிகள் புன்முறுவலோடு, ""மொத்தம் ஏழு பாவங்கள் உள்ளன. அவை - கொள்கைப் பிடிப்பு இல்லாத அரசியல், நேர்மை இல்லாத வியாபாரம், ஒழுக்கம் இல்லாத கல்வி, குருவை மதிக்காமலிருப்பது, மனச்சாட்சி இல்லாத இன்பம், மனிதாபிமானம் இல்லாத அறிவியல், தியாகம் இல்லாத இறைவழிபாடு'' என்று பட்டென்று பதில் கூறினார்.


-தங்க.சங்கரபாண்டியன், சென்னை.
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Tue Oct 07, 2014 11:47 am

பழக்கம்..!

அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த உட்ரோ வில்சன் தமது காலணிகளுக்குத் தாமே பாலிஷ் போட்டுக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். ஜனாதிபதியான பிறகும் அந்தப் பழக்கம் அவரிடம் தொடர்ந்தது.
ஒருசமயம், அவரைப் பேட்டி காண்பதற்காக அயல்நாட்டுப் பத்திரிகை நிருபர் ஒருவர் வெள்ளை மாளிகைக்கு வந்தார். அவர் வந்த சமயத்தில், ஜனாதிபதி தமது காலணிகளுக்குப் பாலிஷ் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் நிருபருக்கு வியப்பு.
சிறிது நேரம் பாலிஷ் போடுவதைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, ""என்ன உங்கள் காலணிகளுக்கு நீங்களே பாலிஷ் போட்டுக் கொள்வதா?'' என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
""ஆமாம், நீங்கள் யார் காலணிகளுக்கு பாலிஷ் போடுவது வழக்கம்?'' என்று கேட்டார் வில்சன் சட்டென்று!
நிருபர் அதற்குப் பிறகு வாயைத் திறக்கவே இல்லை!

dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Tue Oct 07, 2014 11:47 am

பரிவு!
 
நோபல் பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல் தம் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்களுள் ஒருவர் மீது மட்டும் மிகவும் அன்பு செலுத்தி வந்தார். தனது மகளைப் போலவே அவளை நடத்தி வந்தார்.
 அவள் ஒருநாள் நோபலிடம் தனக்குத் திருமணம் நடக்க இருப்பதாகத் தெரிவித்தாள்.
 ""மிகவும் மகிழ்ச்சி, உனக்குத் திருமணப் பரிசாக என்ன வேண்டும், கேள்...'' "என்றார் நோபல் அவளைப் பார்த்து.
 பணிப்பெண் பதிலேதும் கூறாமல் மெüனமாக நின்று கொண்டிருந்தாள்.அவள் எதையோ கூற விரும்புகிறாள் } ஆனால் சொல்லத் தயங்குகிறாள் என்பது நோபலுக்குப் புரிந்தது.
 ""எதுவானாலும் தயங்காமல் கேள், நான் தருகிறேன்...'' என்றார் நோபல்.
 அதற்கு அந்தப் பெண், ""உங்களுடைய ஒருநாள் வருமானம் எனக்குப் பரிசாக வேண்டும்'' என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள்.
 அவள் விருப்பப்படியே தனது ஒருநாள் வருமானமான ஏழாயிரம் டாலரை உள்ளன்போடு, அந்தப் பெண்னுக்குப் பரிசாகக் கொடுத்தார் ஆல்பிரட் நோபல்.


-கலவை வரதன்
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Tue Oct 07, 2014 11:49 am

வறுமை!

ரயில் என்ஜினைக் கண்டுபிடித்தவர் ஜார்ஜ் ஸ்டீவன்ஸன். இவர் ரயில் என்ஜினைக் கண்டுபிடிக்கக் காரணமாக அமைந்தது அவருடைய வறுமைதான்.
 அவருடைய தந்தையைப் போலவே, அவரும் இரவு நேரங்களில் நிலக்கரிச் சுரங்கங்களில் மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தில் கூலிவேலை பார்த்து வந்தார். கூலிகள் நிலக்கரியைக் கொண்டுவரும் டிரக்குகளை சிரமப்பட்டு இழுத்துச் செல்வார்கள். இந்த சிரமத்தைக் குறைப்பதற்கு ஏதாவது வழிகாண வேண்டும் என்ற எண்ணம் ஸ்டீவன்ஸன் மனதில் தோன்றியது.
 அதற்காக அவர் பல நாட்கள் முயற்சி செய்து ஒரு என்ஜினைக் கண்டு பிடித்தார். கூலிகளின் சிரமம் குறைந்தது. இவர் என்ஜினைக் கண்டுபிடித்ததோடு நின்றுவிடாமல், 11 ஆண்டுகள் கழித்து உலகின் முதல் பயணிகள் ரயிலைத் தயாரித்து ஓட்டிக் காட்டினார். 33 பெட்டிகளில் 600 பயணிகள் அமர்ந்திருக்க மணிக்கு 25 கி.மீட்டர் வேகத்தில் இந்த முதல் ரயில் ஓடியது.


-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Tue Oct 07, 2014 11:50 am

தாயாருடன்...

 இலங்கையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்துக்குத் தனது மனைவி கஸ்தூரிபாவுடன் சென்றிருந்தார் காந்திஜி.
 அப்போது பேச்சாளர் ஒருவர், ""மகாத்மா இந்தக் கூட்டத்துக்குத் தன்னுடைய தாயாரையும் அழைத்து வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது'' என்றார்.
 இதற்குப் பிறகு பேசிய காந்திஜி, ""எனக்கு முன் பேசிய நண்பர், நான் தாயாருடன் வந்திருப்பதாகக் கூறினார். ஆனால் இவர் என்னுடைய மனைவி. உருவத்தைக் கண்டு தாயார் என நினைத்துச் சொல்லியிருக்கலாம். ஆனாலும் இது ஒரு வகையில் உண்மைதான். ஏனெனில், பல ஆண்டுகளாகவே என் மனைவி கஸ்தூரிபாவை, என் தாயாருக்கு இணையாக மதித்து வருகிறேன். தென்னாப்பிரிக்காவில் பிரம்மச்சரிய விரதம் ஏற்ற நாள்முதல், என் அன்னை புட்லிபாய்க்குச் சமமாக மனைவியைப் பாவித்து வருகிறேன்'' என்றார் மகாத்மா.

-என்.ராஜப்பா, மன்னார்குடி.
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Tue Oct 07, 2014 11:50 am

சாமர்த்தியம்!
 
பெர்னார்ட்ஷா ஓர் ஓவியரிடம் தனது படத்தை வரைந்து தந்தால் 100 பவுண்ட் தருவதாகச் சொன்னார்.
 ஓவியர் தத்ரூபமாக வரைந்து கொடுத்தார். ஷா மகிழ்ச்சியுடன் 100 பவுண்ட்களையும் 20 பவுண்ட் வீதம் பிரித்து 5 காசோலைகளாக எழுதி, அத்துடன் ஒரு பாராட்டுக் கடிதத்தையும் இணைத்து ஓவியரிடம் கொடுத்தார்.
 ""ஐயா, 5 காசோலைகளாக ஏன் தருகிறீர்கள்? ஒரே காசோலையாகத் தரக்கூடாதா?'' என்று கேட்டார் ஓவியர்.
 ""இந்தக் காசோலைகளை மாற்ற வேண்டாம். இப்போது என் கையெழுத்துக்காக நானே 30 பவுண்ட்கள் வாங்குகிறேன். என் கையெழுத்துள்ள இந்த 5 காசோலைகளையும் தனித்தனியே விற்றால் உனக்கு 150 பவுண்ட்கள் கிடைக்கும். 50 பவுண்ட் உனக்கு லாபம். எனக்கும் லாபம்...'' என்றார் ஷா.
 ""உங்களுக்கு எப்படி லாபம்?'' என்று கேட்டார் ஓவியர்.
 ""என் கையெழுத்துள்ள காசோலையை யாரும் மாற்றப் போவதில்லை. பொக்கிஷமாகப் பாதுகாப்பார்கள். அதனால் வங்கியில் என் பணம் அப்படியே இருக்கும்...'' என்றார் ஷா.


-மல்லிகா அன்பழகன், சென்னை.
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Tue Oct 07, 2014 11:56 am

வைரம்!

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமனிடம், மாணவன் ஒருவன், ""ஐயா, வைரத்தின் தன்மை பற்றித் தெளிவாகக் கூறினீர்கள். ஆனால் வைரம் செய்வது எப்படி என்று தாங்கள் சொல்லவில்லையே?'' என்று கேட்டான்.
 உடனே ராமன், ""அது மிகச் சுலபம். ஒரு கரித்துண்டை எடுத்துக் கொள். பூமியில் ஆயிரம் அடி ஆழத்தில் புதைத்து வைத்துவிட்டு, ஆயிரம் ஆண்டுகள் காத்திரு...'' என்றார்.
 கரவொலியால் அரங்கமே அதிர்ந்தது.

-நெ.இராமன், சென்னை.
dinamani
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Thu Oct 09, 2014 12:45 pm

________________________________________

Title: Re: வரலாற்று தகவல்கள்

Post by: தணுஜா on November 21, 2013, 10:25:52 PM

________________________________________

வலைக்கு வழி!

 

சர்தார் வல்லபாய் படேல் ஆங்கிலேயர் ஆட்சியில்

சிறைச்சாலையில் இருந்தபோது நடந்த நிகழ்ச்சி இது.

 சிறையில் கொசுக்களின் தொல்லை அதிகமாக

இருந்ததால், அரசியல் கைதியாக இருந்த படேலுக்குக்

கொசு வலை கொடுத்திருந்தார்கள்.

 

அந்தக் கொசு வலை கிழிந்து, நைந்து போய்விட்டதால்,

வேறு கொசு வலை உடனே கிடைக்க வழி இல்லை

என்று சிறை அதிகாரி தெரிவித்தார்.

 

"வேறு புதிய கொசு வலை தருவதில் உங்களுக்கு

என்ன சிரமம்? கடைவீதிக்குச் சென்றால் புதிதாக

ஒன்று வாங்கி வரலாமே?'' என்று படேல் கேட்டார்.

-

 அதற்கு சிறை அதிகாரி, ""ஆர்டர் கொடுத்துள்ளோம்.

இன்னும் கொசு வலை வந்தபாடில்லை..!'' என்றார்.

-

 படேல் மிகவும் துணிவுடன், ""சிறைக்கு நானாக

வரவில்லை என்று உனது மேலதிகாரியிடம் கூறு.

சிறைக்கதவை திறந்து விடுங்கள். வலை வந்ததும்

தகவல் தரவும். மீண்டும் சிறைக்கு வந்துவிடுகிறேன்...''

என்றார்.

-

 சில மணி நேரங்களில் சிறைக்கு புதிய கொசு

வலை வந்து சேர்ந்தது.

-

--------------------------------

-கலவை பா.வரதன்.

 

உழைப்பு... உழைப்பு...

 

ஒரு சமயம் வானொலி நிலையப் பேட்டியில்

பெரியாரிடம், ""ஐயா, நீங்கள் அந்தக் காலத்திலேயே

பெரிய தியாகம் செய்திருக்கிறீர்களே?'' என்று

பேட்டியாளர் கேட்டார்.

-

 ""நான் பெரிசா ஒண்ணும் செய்யலீங்க...'' என்று

அடக்கத்துடன் பதில் கூறினார் பெரியார்.

-

 அடுத்ததாக, ""இந்தத் தள்ளாத வயதிலும்கூட நீங்கள்

 ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறீர்களே?'' என்று

அந்தப் பேட்டியாளர் கேட்டார்.

-

 அதற்கு பெரியார், ""மூன்று வேளை சாப்பிடுகிறேன்.

என்னுடைய துணிமணிகளுக்கு நான் செலவு செய்ய

வேண்டியிருக்கிறது. இதற்கு எல்லாம் நான் ஏதாவது

செய்ய வேண்டாமா? அதற்குப் பயன்பட வேண்டாமா?

தொண்டு ஆற்ற வேண்டாமா? சும்மா சாப்பிட்டுக்

கொண்டிருந்தேனேயானால் மனித குலத்துக்குத்

தண்டமாக அல்லவா இருப்பேன்?

சமுதாயத்துக்கு இதைவிட வேறு தண்டனை

வேண்டுமா?'' என்று கேட்டார்.

-

----------------------------------------

-கோட்டாறு ஆ.கோலப்பன், நாகர்கோவில்.

 

பொன்னான காலம்!

 

தனது மோட்டார் தொழிற்சாலையில் ஒருநாள்,

ஃபோர்ட், தொழிலாளிகளின் வேலையைப் பார்வை

இட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு தொழிலாளி

செய்து கொண்டிருந்த வேலை அவரது கவனத்தை ஈர்த்தது.

-

 கார் என்ஜினின் இடப்பக்கம் பொருத்த வேண்டிய

பொருளை எடுக்க பொருள் இருக்குமிடத்திலுள்ள

வலப் பக்க அலமாரிக்கும், என்ஜினின் வலப்புறம்

பொருத்த வேண்டியிருந்த பொருளை எடுக்க அந்த

அறையின் இடது கோடியிலிருந்த ஒரு அலமாரிக்கும்

சென்று அந்தத் தொழிலாளி எடுத்து வந்து பொருத்திக்

கொண்டிருந்தார்.

-

 இப்படி அந்த மனிதர் ஒவ்வொரு முறை சென்று

வருவதற்கும் இரண்டு நிமிடங்கள் ஆவதைக்

கணக்கிட்டார் ஃபோர்ட். இப்படி ஒரு மணி நேரத்துக்கு

ஐந்து நிமிடங்கள் வீணானால் எட்டு மணி நேரத்தில்

நாற்பது நிமிடங்கள் வீணாகப் போவதையும்

கணக்கிட்டார்.

-

 இதன் மூலம் மனித உழைப்பு வீணாவதுடன் நேரமும்

வீணாகப் போகிறதே என்று வருந்தினார்.

-

 உடனே, தொழிலாளிக்கு வேண்டிய உபகரணங்களையும்

பொருட்களையும் அவர் வேலை செய்யும் இடத்திலேயே

வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்.

-

 இதனால் உழைப்பும் நேரமும் வீணாகப் போவது

தடுக்கப்பட்டது.

-

---------------------------------------

 

-மல்லிகா அன்பழகன், சென்னை.

 

கட்டளை!

 

காந்தியடிகள் நடத்தி வந்த வார்தா ஆசிரமத்தில்

எவரும் உழைக்காமல் ஒரு பருக்கைச் சோறுகூட

உண்ண முடியாது. அந்த உழைப்புக்குச் 'சிரமதானம்'

என்று பெயர்.

 காந்தியடிகளைக் காண பெரிய பெரிய தலைவர்கள்

எல்லாம் ஆசிரமத்துக்கு வந்தபடியே இருப்பார்கள்.

எவ்வளவு பெரிய தலைவர்களாயினும் உழைக்காமல்

உணவு உண்ணக் கூடாதென்பது விதி.

-

 ஒருமுறை ஜவாஹர்லால் நேரு, உழைப்புக் கொடை

வழங்காமல், நேரே உணவருந்தும் பகுதிக்குப் போய்

விட்டார்.

-

 உடனே அங்கிருந்த தொண்டர் ஒருவர் நேருவுக்கு

அதை நினைவூட்டினார்.

-

 அவசரத்தில் மறந்து போய் அங்கே வந்துவிட்டாலும்,

நேரு உடனே எழுந்து சென்று, ஆசிரமத்துக்குப் பின்

புறம் குவித்து வைத்திருந்த தட்டுகளைக் கழுவிச்

சுத்தம் செய்யும் பணியைச் சிறிது நேரம் செய்து

விட்டு வந்தார்.

-

 அதன்பிறகுதான் நேருவுக்கு உணவு உண்ண

அங்கே அனுமதி கிடைத்தது.

-

------------------------------------------

 

-சு.இலக்குமணசுவாமி, மதுரை.

dinamani

 

___________________

மன உறுதி!

 

மாவீரன் நெப்போலியன், ஒருமுறை தனது

தளபதியிடம், ""நம்மிடம் லட்சம் வீரர்கள் இருக்கிறார்கள்

அல்லவா?'' என்று கேட்டார்.

-

 அதற்கு, அந்தத் தளபதி, ""அறுபதாயிரம் பேர்தான்

உள்ளனர்'' என்றார்.

-

 உடனே நெப்போலியன், ""அவர்களோடு என்னையும்

சேர்த்துக் கொள். ஒரு லட்சமாகி விடும்...'' என்றார்.

-

 தனது வீரத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்

 நெப்போலியன்.

-

-------------------------------------

 

-நெ.இராமன், சென்னை.

-

பண்பு!

 

விவேகானந்தர் இந்து மதம் பற்றி மேலை நாடுகளில்

சொற்பொழிவாற்றியபின், தாயகம் திரும்புகையில்

 இலங்கை வழியாக இராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.

-

 மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தரை

வரவேற்கச் சென்றிருந்தார்.

-

 சுவாமிஜியிடம் மன்னர், ""படகிலிருந்து என் தலை

மீது கால் வைத்து, அதன்பிறகுதான் தாங்கள் மண்ணில்

கால் வைக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.

-

 ஆனால் சுவாமிஜி, அதனை ஏற்க மறுத்து விட்டார்.

-

 உடனே மன்னர், ""துறவிக்கு முன் வேந்தன் தூசு'' என்றார்.

-

 இதைக் கேட்டு சற்றுத் தயங்கிய சுவாமிஜி, ""சரி,

தாங்கள் தலைப்பாகை கட்டிக் கொள்ளுங்கள், அதன்

மீது கால் வைத்து நான் இறங்குகிறேன்'' என்றார்.

-

 மன்னர் தலைப்பாகை கட்டிக் கொண்டிருக்கும்

போது திடீரென்று விவேகானந்தர் தரையில் குதித்து

மண்ணில் தனது காலை வைத்து இறங்கிவிட்டார்.

-

 என்னே விவேகானந்தரின் அடக்கம்!

-

----------------------------------------

 

-மறை.மு.தருமையன், முத்துப்பேட்டை.

dinamani

பற்று!

 

அயல் நாட்டிலிருந்து தமிழகம் வந்த

ஜோசப் பெஸ்கி அடிகளார், தமிழின்பால் ஏற்பட்ட

ஈர்ப்பு காரணமாகத் தமிழைக் கற்றுத் தனது

பெயரையும் "வீரமாமுனிவர்' என்று மாற்றிக்

கொண்டதாகத்தான் நாம் அறிந்துள்ளோம்.

 

ஆனால், வீரமாமுனிவர் என்ற பெயர் மாற்றத்துக்கு

முன்பு அவர் தனது பெயரை "தைரியநாதன்' என்று

தான் வைத்திருந்தாராம்.

-

 சிறிது காலத்துக்குப் பிறகு, தனித்தமிழ்பால்

கொண்ட பற்று காரணமாகவே அப்பெயரை தூய

தமிழில் வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டாராம்.

அதன் பின்னர்தான் பலரும் தங்கள் பெயர்களைத்

தூய தமிழில் மாற்றிக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டதாம்.

-

 -மறைமலையடிகளின் பேரர் மறை.திரு.தாயுமானவன்

சொல்லக் கேட்டவர்

மு.தனகோபாலன், திருவாரூர்.

-

------------------------------------------------

 

dinamani

 

________________________________________
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum