தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மழைச்சுவடு ! நூல் ஆசிரியர் : கவிஞர் ஹாரிங்டன் ஹரிஹரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
மழைச்சுவடு ! நூல் ஆசிரியர் : கவிஞர் ஹாரிங்டன் ஹரிஹரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மழைச்சுவடு !
நூல் ஆசிரியர் : கவிஞர் ஹாரிங்டன் ஹரிஹரன் !
நூல் ஆசிரியர் : கவிஞர் ஹாரிங்டன் ஹரிஹரன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
யாழினி வெளியீடு, 30/8, கன்னிக்கோவில் முதல் தெரு, அபிராமபுரம், சென்னை-18. பேச : 98412 36965, விலை : ரூ. 60
*****
நூல் ஆசிரியர் கவிஞர் ஹாரிங்டன் ஹரிஹரன் இந்நூலை அவரது பெற்றோர்களான திரு. சுப்பிரமணியன், திருமதி புனிதா சுப்பிரமணியன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளது சிறப்பு. மறக்காமல் நண்பர்கள் பெயரை பட்டியலிட்டு நன்றியையும் பதிவு செய்துள்ளார். ஹைக்கூ இலக்கியத்தை முன் எடுத்து செல்லும் புதுவை முன்னவர் புதுவைத் தமிழ்நெஞ்சன் மற்றும் சிற்றிதழ்களில் பரிசுத்தொகையை வாரி வழங்கி வரும் வள்ளல் கார்முகிலோன், கவிஞர் திருவை பாபு ஆகியோரின் அணிந்துரையும் மிக நன்று. இனிய நண்பர் கன்னிக்கோவில் இராஜாவின் பதிப்புரையும் நன்று.
பல்வேறு சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி நூலாசிரியர் கவிஞர் ஹாரிங்டன் ஹரிஹரன். இயற்கை பற்றி பாடுவதில் தமிழகக் கவிஞர்கள் ஜப்பானியக் கவிஞர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை பறைசாற்றும் விதமாக உள்ளது நூலின் முதல் ஹைக்கூ.
செடிகள் தோறும்முத்தங்கள்
மழைச்சுவடு!
மழையை நூலாசிரியர் பார்த்த பார்வை மிகவும் வித்தியாசமானது. விசித்திரமானது.
நம் நாட்டில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகி வருகின்றனர். ஏழைகள் மேலும் ஏழைகளாகி வருகின்றனர். பணக்காரர்களிடம் உள்ள பணமும் யாருக்கும் பயன்படாமல் இருந்து வருகின்றது. ஏழைகளோ அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் வறுமையில் வாடி வருகின்றனர். இதனை உணர்த்துவதாகவே என் பார்வைக்குப் பட்ட ஹைக்கூ.
மூடிய தொட்டிக்குள்தண்ணீர்
தாகத்துடன் காகங்கள்!
ஒரு ஹைக்கூ எழுதும் போது படைப்பாளி பார்த்த பார்வையிலிருந்து வேறுபட்டு வாசகர் வேறு பார்வையும் பார்க்கலாம் என்பதற்கு சான்று.
தாய் தகப்பன் இழந்து அல்லது புறக்கணிக்கப்பட்டு ஆதரவற்ற குழந்தைகள் உருவாகின்றனர். தவறு எதுவும் செய்யாமலே வாழ்நாள் தண்டனை அடைகின்றனர்.
சோகம் மறந்துசிரிக்கும் பூக்கள்
அனாதை இல்லம்!
விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கின்றது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்று ஊதியம் உயர்ந்து விடுகின்றது. ஆனால் பொதுமக்களுக்கு விலைவாசி உயர்வு வேதனையைத் தருகின்றது. அதனை உணர்த்திடும் ஹைக்கூ.
ஏறும் விலைவாசிநாடும் நடுத்தர மக்கள்
அடகு கடை.
தினந்தோறும் தனியார் நிதி நிறுவனங்களின் மோசடிச் செய்தி வந்து கொண்டே இருக்கின்றன ஆனால் மக்கள் ஏமாறுவது தொடர்கதையாகின்றது. மக்களிடையே தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்வதில்லை என்ற விழிப்புணர்வு வர வேண்டும்.
கவர்ச்சித் திட்டங்கள்ஏமாற்றம்
நிதி நிறுவனம்
ஒரு வாகனத்திற்கும், பின்னே வரும் வாகனத்திற்கு இடைவெளி தேவை. இடைவெளி விட்டு வந்தால் விபத்து தவிர்க்கலாம். ஆனால் சில ஓட்டுனர்கள் இடைவெளி விடாமல் பின்னே சென்று விபத்தில் சிக்குகின்றனர். அதனை உணர்த்தும் ஹைக்கூ.
இடைவெளி தேவைபின்புற வாசகம்
எல்லை மீறும் ஓட்டுனர்!
அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் சிலர் நிறுத்தங்களில் நிறுத்தாமல் தள்ளி வந்து நிறுத்தி பயணிகளை ஓட விடும் நிகழ்வை எள்ளல் சுவையுடன் உணர்த்திடும் ஹைக்கூ.
நாள்தோறும்மாரத்தான் ஓட்டம்
தள்ளி நிற்கும் பேருந்து!
எந்த ஒரு படைப்பாளியாலும் ஈழக்கொடுமைகள் பற்றி படைக்காமல் இருக்க முடியாது மனசாட்சி படைக்கச் சொல்லும் இவரும் படைத்துள்ளார் பாருங்கள்.
கேட்பாரற்றுஅழுகிறது குழந்தை
பதுங்குகுழி!
நூலின் தலைப்பை நினைவூட்டும் இரண்டாவது ஹைக்கூ ஒன்று மிக நன்று.
முத்துக்களைதூவிச் செல்கின்றன
மழைச்சுவடு!
நம் நாட்டில் ஒரு காலத்தில் கூட்டுக்குடும்பங்கள் பெருமையாக இருந்தது. இன்று தனிக்குடித்தனம் பல்கி பெருகி விட்டதை உணர்த்தும் ஹைக்கூ.
உறவுகள்சுருங்கின
தனிக்குடித்தனம்!
மரங்களை வெட்டாமல் இருந்தால் மழை பொய்க்காமல் இருக்கும். ஒரு பக்கம் மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டே மறுபக்கம் மழைக்காக யாகம் பூசை நடத்தும் முரண்பாட்டை உணர்த்தும் ஹைக்கூ.
மழை வேண்டிபூசை
அழியும் காடுகள்.
ஹைக்கூவிற்கு பொருத்தமான புகைப்படங்கள் தேர்ந்தெடுத்து வடிவமைத்து அச்சிட்ட பதிப்பாளர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜாவிற்கு பாராட்டுக்கள். மிக நுட்பமான ஹைக்கூ கவிதைகள் வடித்த கவிஞர் ஹாரிங்டன் ஹரிஹரனுக்கும் பாராட்டுக்கள்.
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» குழந்தை வரைந்த காகிதம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இளவல் ஹரிஹரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்! நூல் ஆசிரியர் : கவிஞர் ஏகாதேசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்! நூல் ஆசிரியர் : கவிஞர் ஏகாதேசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum