தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மொழிவளர்ந்தால் நாம் வளர்வோம்
2 posters
Page 1 of 1
மொழிவளர்ந்தால் நாம் வளர்வோம்
மொழிவளர்ந்தால் நாம் வளர்வோம்
பாவலர் கருமலைத்தமிழாழன்
மொழிகளிலே முதன்மைமொழி தமிழே என்று
மொழிவதிலே பெருமையுற்றுத் தாழ்ந்து விட்டோம்
மொழிகளுக்குள் இலக்கணத்தில் உயர்ந்த தென்று
மொழிந்துபுதுக் கூறிணைக்க மறந்து விட்டோம்
மொழிகளிலே முப்பிரிவைக் கொண்ட தென்று
மொழிந்தபடி அறிவியலை விட்டு விட்டோம்
மொழிகளுக்குள் அமுதென்றே மயங்கி மாற்றம்
மொழிக்குள்ளே செய்யாமல் வீழ்ந்து விட்டோம் !
தமிழ்பற்று எனவாயால் பேசிப் பேசித்
தமிழ்மொழியை வாய்மொழியாய் மாற்றி விட்டோம்
தமிழகத்து வீதியெல்லாம் ஆங்கி லத்தைத்
தாலாட்டும் தொட்டில்கள் தொங்க விட்டுத்
தமிழ்பயிற்றும் பள்ளிகளை மூடி விட்டுத்
தமிழ்வளர்ப்போம் எனமேடை முழங்கு கின்றோம்
தமிழினிலே பேசுதற்கும் நாணம் கொண்டு
தமிழரெல்லாம் தமிங்கிலராய் மாறிப் போனோம் !
அம்மாவே தன்குழந்தை மம்மி யென்று
அழைப்பதிலே சுகம்கண்டு பிணமா கின்றாள்
இம்மென்னும் மெய்யெழுத்தை முதலில் வைத்தே
இயல்பில்லா பெயர்களினைச் சூட்டு கின்றோம்
நம்பொருளை நாம்விற்கும் கடைக ளுக்கும்
நற்றமிழில் பெயர்வைக்கத் தயங்கு கின்றோம்
நம்மொழியால் எதுவொன்றும் ஆகா தென்றே
நம்பிக்கை கொள்ளாமல் தாழ்த்து கின்றோம் !
காலையிலே எழுந்தவுடன் பல்து லக்கக்
கனிவாகப் பிரஷ்பண்ணி ! தண்ணீ ராலே
கோலமுகம் கழுவுதற்கே பேஸ்வாஷ் பண்ணி
குடிப்பதற்குத் தேநீரை டீயாய்ப் பண்ணி
வேலைக்குச் செலும்முன்னே மகம்ம ழிக்க
ஷேவ்பண்ணி டிரஸ்பண்ணி டிபனைப் பண்ணி
மாலையிலும் காலையிலும் வாக்கைப் பண்ணி
மணித்தமிழைப் பண்ணிமொழி செய்தோம் பேச்சில் !
- 1 -
வானியலைக் கணித்தனால் கணியன் என்றோம்
வளியறிந்து கலம்செலுத்திக் கடல்க டந்தோம்
வானத்தில் பறக்கின்ற பொறிய மைத்து
வளர்ந்திருந்தோம் அறிவியலில் அன்றே யென்று
பேணியதை வளர்க்காமல் பேசு கின்றோம்
பெருமைகளைச் சான்றுகளாய் எடுத்துக் காட்டி
நானிலத்தில் நம்முன்னோர் பெற்றி ருந்த
நல்லறிவை எடுத்துரைக்க என்ன செய்தோம் !
அணுப்பிளந்தோம் எனஅவ்வை சொன்ன சொல்லை
அழகாகச் சொல்லுகின்றோம்1 கல்வி தன்னில்
அணுக்கருத்தைக் கற்பதற்குத் தமிழி லின்று
அருநூல்கள் இல்லையென்று தள்ளு கின்றோம்
முணுமுணுக்கும் சித்தர்தம் பாட லெல்லாம்
முறையான மருத்துவத்தை உரைத்த போதும்
மனுப்போட்டுத் தமிழினிலே முடியா தென்று
மண்டியிட்டுக் கோழையெனச் சூம்பு கின்றோம் !
கரிகாலன் கல்லணையும் தஞ்சை மண்ணில்
கட்டிவைத்த கோபுரமும் வல்ல வர்நாம்
பொறியியலில் எனக்காட்சி தந்த போதும்
பொறுப்பின்றிப் பிறமொழியே சிறப்பென் கின்றோம்
அறிவுதனை வளர்பதுவும் சுயமாய்ச் சிந்தை
அளிப்பதுவும் அன்னைமொழி கல்வி யென்றே
அறிந்திருந்தும் நம்காலை நாமே வெட்டி
அடுத்தவர்தோள் பற்றிநடை பயிலு கின்றோம் !
செந்தமிழே ஆட்சிமொழி ! கல்விக் கெல்லாம்
செழுந்தமிழே பயிற்றுமொழி ! வேலைக் வாய்ப்பு
செந்தமிழில் பயன்றோர்க்கே என்னும் ஆணை
செப்பமுடன் செயலினிலே செய்ய வேண்டும் !
செந்தமிழர் தமிழரென்னும் உணர்வு பெற்றுச்
செம்மொழியாய் உலகமெல்லாம் உயர்த்த வேண்டும் !
செந்தமிழை இல்லத்தில் தெருவில் பேச்சில்
செழுமையுற நாம்வளர்த்தால் வளர்வோம் நாமே !
- 2 -
பாவலர் கருமலைத்தமிழாழன்
மொழிகளிலே முதன்மைமொழி தமிழே என்று
மொழிவதிலே பெருமையுற்றுத் தாழ்ந்து விட்டோம்
மொழிகளுக்குள் இலக்கணத்தில் உயர்ந்த தென்று
மொழிந்துபுதுக் கூறிணைக்க மறந்து விட்டோம்
மொழிகளிலே முப்பிரிவைக் கொண்ட தென்று
மொழிந்தபடி அறிவியலை விட்டு விட்டோம்
மொழிகளுக்குள் அமுதென்றே மயங்கி மாற்றம்
மொழிக்குள்ளே செய்யாமல் வீழ்ந்து விட்டோம் !
தமிழ்பற்று எனவாயால் பேசிப் பேசித்
தமிழ்மொழியை வாய்மொழியாய் மாற்றி விட்டோம்
தமிழகத்து வீதியெல்லாம் ஆங்கி லத்தைத்
தாலாட்டும் தொட்டில்கள் தொங்க விட்டுத்
தமிழ்பயிற்றும் பள்ளிகளை மூடி விட்டுத்
தமிழ்வளர்ப்போம் எனமேடை முழங்கு கின்றோம்
தமிழினிலே பேசுதற்கும் நாணம் கொண்டு
தமிழரெல்லாம் தமிங்கிலராய் மாறிப் போனோம் !
அம்மாவே தன்குழந்தை மம்மி யென்று
அழைப்பதிலே சுகம்கண்டு பிணமா கின்றாள்
இம்மென்னும் மெய்யெழுத்தை முதலில் வைத்தே
இயல்பில்லா பெயர்களினைச் சூட்டு கின்றோம்
நம்பொருளை நாம்விற்கும் கடைக ளுக்கும்
நற்றமிழில் பெயர்வைக்கத் தயங்கு கின்றோம்
நம்மொழியால் எதுவொன்றும் ஆகா தென்றே
நம்பிக்கை கொள்ளாமல் தாழ்த்து கின்றோம் !
காலையிலே எழுந்தவுடன் பல்து லக்கக்
கனிவாகப் பிரஷ்பண்ணி ! தண்ணீ ராலே
கோலமுகம் கழுவுதற்கே பேஸ்வாஷ் பண்ணி
குடிப்பதற்குத் தேநீரை டீயாய்ப் பண்ணி
வேலைக்குச் செலும்முன்னே மகம்ம ழிக்க
ஷேவ்பண்ணி டிரஸ்பண்ணி டிபனைப் பண்ணி
மாலையிலும் காலையிலும் வாக்கைப் பண்ணி
மணித்தமிழைப் பண்ணிமொழி செய்தோம் பேச்சில் !
- 1 -
வானியலைக் கணித்தனால் கணியன் என்றோம்
வளியறிந்து கலம்செலுத்திக் கடல்க டந்தோம்
வானத்தில் பறக்கின்ற பொறிய மைத்து
வளர்ந்திருந்தோம் அறிவியலில் அன்றே யென்று
பேணியதை வளர்க்காமல் பேசு கின்றோம்
பெருமைகளைச் சான்றுகளாய் எடுத்துக் காட்டி
நானிலத்தில் நம்முன்னோர் பெற்றி ருந்த
நல்லறிவை எடுத்துரைக்க என்ன செய்தோம் !
அணுப்பிளந்தோம் எனஅவ்வை சொன்ன சொல்லை
அழகாகச் சொல்லுகின்றோம்1 கல்வி தன்னில்
அணுக்கருத்தைக் கற்பதற்குத் தமிழி லின்று
அருநூல்கள் இல்லையென்று தள்ளு கின்றோம்
முணுமுணுக்கும் சித்தர்தம் பாட லெல்லாம்
முறையான மருத்துவத்தை உரைத்த போதும்
மனுப்போட்டுத் தமிழினிலே முடியா தென்று
மண்டியிட்டுக் கோழையெனச் சூம்பு கின்றோம் !
கரிகாலன் கல்லணையும் தஞ்சை மண்ணில்
கட்டிவைத்த கோபுரமும் வல்ல வர்நாம்
பொறியியலில் எனக்காட்சி தந்த போதும்
பொறுப்பின்றிப் பிறமொழியே சிறப்பென் கின்றோம்
அறிவுதனை வளர்பதுவும் சுயமாய்ச் சிந்தை
அளிப்பதுவும் அன்னைமொழி கல்வி யென்றே
அறிந்திருந்தும் நம்காலை நாமே வெட்டி
அடுத்தவர்தோள் பற்றிநடை பயிலு கின்றோம் !
செந்தமிழே ஆட்சிமொழி ! கல்விக் கெல்லாம்
செழுந்தமிழே பயிற்றுமொழி ! வேலைக் வாய்ப்பு
செந்தமிழில் பயன்றோர்க்கே என்னும் ஆணை
செப்பமுடன் செயலினிலே செய்ய வேண்டும் !
செந்தமிழர் தமிழரென்னும் உணர்வு பெற்றுச்
செம்மொழியாய் உலகமெல்லாம் உயர்த்த வேண்டும் !
செந்தமிழை இல்லத்தில் தெருவில் பேச்சில்
செழுமையுற நாம்வளர்த்தால் வளர்வோம் நாமே !
- 2 -
karumalaithamizhazhan- ரோஜா
- Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 73
Location : Hosur. Tamil nadu, India
Re: மொழிவளர்ந்தால் நாம் வளர்வோம்
அருமை பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum