தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உழைப்பில் உள்ளது உயர்வு ! நூல் ஆசிரியர் : கவிஞர் டி.வி.எஸ். மணியன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

2 posters

Go down

உழைப்பில் உள்ளது உயர்வு ! நூல் ஆசிரியர் : கவிஞர் டி.வி.எஸ். மணியன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty உழைப்பில் உள்ளது உயர்வு ! நூல் ஆசிரியர் : கவிஞர் டி.வி.எஸ். மணியன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Sat Oct 25, 2014 9:48 am

உழைப்பில் உள்ளது உயர்வு !
நூல் ஆசிரியர் : கவிஞர் டி.வி.எஸ். மணியன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர்,
சென்னை – 600 017.  விலை : ரூ. 50.  பேச : 044 24342926  
manimekalai1@dataone.in
*****
      நூலாசிரியர் கவிஞர் டி.வி.எஸ். மணியன் அவர்கள், மின்னியலில் பொறியாளர் பட்டப்படிப்பு முடித்து, மேலாண்மையில் முதுநிலைப் பட்டயப் படிப்பும் முடித்து, மின்சார வாரியத்தில் கூடுதல் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற  பின்  .ஒய்வுக்கு  ஓய்வு தந்துவிட்டு தொடர்ந்து படைத்து வரும் படைப்பாளி.  ‘நேரத்தைப் போற்றிடுவோம்’ என்ற முதல் நூலின் வெற்றியைத் தொடர்ந்து, இரணடாவது நூலான ‘உழைப்பில் உள்ளது உயர்வு’ வந்துள்ளது.  முதல் நூலை வெளியிட்ட புகழ்பெற்ற மணிமேகலை பிரசுரமே இரண்டாவது நூலையும் வெளியிட்டு உள்ளனர்.  தரமான அச்சுவடிவமைப்பு.  பாராட்டுக்கள்.

 தொய்வின்றி உழைப்பு!   

 நண்பனே 
 உனது திறமைகளை புரிந்து கொள் 
 புதுப்பித்துக் கொள் 
 பெரிதாக்கிக் கொள் 
 நேரான வழியில் 

 சீராகச் செல்  
 உண்மை, நேர்மை 

 கொள்வது நம் கடமை  
 நண்பனே இது போதும்  

 எப்போதும்!
      உழைப்பை வலியுறுத்துவதோடு நிற்காமல், உண்மை,  நேர்மை என்ற அறநெறியும் வலியுறுத்துவது சிறப்பு.  நல்ல சிந்தனைகளை விதைக்கும் தன்னம்பிக்கை கவிதைகளின் தொகுப்பு.
      குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் மிக எளிமையாக குழந்தைப்பாடல் வடிவிலும் கவிதைகள் உள்ளன.
      உறக்கத்தில் வருவது கனவு 
 நேரினில் நடப்பது னவு  
      அடக்கமாக இருப்பது பணிவு 
 தைரியமாக வாழ்வது துணிவு 
      அனைத்துச் செல்வது அன்பு 

 அன்புடன் வாழ்வது பண்பு
      கடல் நீர் தருவது உப்பு 

 கடலில் கிடைப்பது முத்து


      யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். அதனை நினைவூட்டும் வண்ணம், உதிர்ந்தாலும் இறகு அழகு என்கிறார்.

 இருந்தாலும் உதிர்ந்தாலும் !

 சிறகிலிருந்து பிரிந்து விட்டால்  
 மவுசு உண்டோ 

 இறகுக்கு ?...  
 சிறகில் இருந்தாலும் 

 உதிர்ந்து விழுந்தாலும்
 அழகோ அழகு 

 மயில் இறகு ...


      விளைநிலங்கள் எல்லாம் வீடுகளாகி வருகின்றன. இந்நிலை இப்படியே தொடர்ந்தால் ஒரு காலத்தில் உண்பதற்கு அரிசி இல்லாத நிலை வந்து விடும்.

      தூறலைக் கொள்ள வயல் இல்லை. !


            வானம் பொழிந்தால் 
 வயல்கள் செழிக்கும்
            மக்கள் சிரிப்பர் 

 தூறல்களையும் எதிர்கொள்ள
            வயல்களே இல்லை இப்போது.



      இன்றைய இளையதலைமுறையினர், பெற்றோர்கள் செய்த தியாகம் பற்றியோ, உழைப்பு பற்றியோ சிந்திப்பது இல்லை,  உணர்வதும் இல்லை.  தன்னலமாகவே தன்னை மறந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அறிவுரை கூறும் வண்ணம் கவிதைகள் உள்ளன.

      பெற்றவர்கள் செய்த தியாகத்தில் 
 வாழும் பிள்ளைகளே
      யோசியுங்கள் ஒரு நிமிடம்
 படிப்பென்ன பதவியென்ன 

      பணமென்ன – வாழ்வில்
 பெற்றவர்கள் மீது பாசம் இல்லாமல் ...?



      சித்தர்கள் போல வாழ்வியல் கருத்துக்கள் கூறும் விதமாக சில கவிதைகள் உள்ளன.  பதச்சோறாக ஒன்று.

      ஒரு தரம் வந்த மேகம்!

            காற்று 
டிக்கும் பக்கம் 
 காற்றாடி பறக்கும்
            காசு இருக்கும் பக்கம் 

 கால்கள் நடக்கும்
            மற்றவர் இன்பம் அடைதலில் 

 மகிழ்தல் வேண்டும்
            மற்றவர் துன்பப் படுகையில் 

 உதவுதல் வேண்டும் !


      மனிதநேயம் கற்பிக்கும் விதமாகவும், ஊக்கம். ஆக்கம் தரும் விதமாகவும் நேர்மறை சிந்தனைகளை விதைக்கும் விதமாகவும் கவிதைகள் உள்ளன.  5 பகுதிகளாகப் பிரித்து 58 கவிதைகள் உள்ளன.

      இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகம் தரும் விதமாக நல்லபல அறிவுரைகள் சொல்லும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார்.

      செயலைச் சாதனையாக்கு!

            தோல்வியை மறந்திடு 
 விவேகத்தைக் கைக்கொண்டு 
            வேகமாகச் செயலாற்று 

 வேதனைகளைச் சமாளித்திடு
            போதனைகளைப் பின்பற்றி 

 சோதனைகளை வென்றிடு
            சவால்களைச் சாத்தியமாக்கு 

 சாத்தியங்களைச் செயலாக்கு
            செயல்களைச் சாதனையாக்கு!



      ஹைக்கூ வடிவிலும் கவிதைகள் உள்ளன.  சிந்திக்க வைக்கின்றன.  விடுகதை போன்ற வடிவிலும் உள்ளன.

      கால் ஒன்று
      சுற்றுவது வேகமாக
      பம்பரம்.!



            மனிதன் ஒருவன்
            பறப்பது அதிவேகமாக
            மனம் !



      விதை ஒன்று
      வளர்வது பெரிதாக
      மரம் !



      வெப்பமயமாகி வருகின்றது. ஓசோனில் விழுந்த ஓட்டை பெரிதாகி வருவதனால், சூரியன் பூமிக்கு நேரடியாக வருவதனால், வெப்பம் கூடி, தட்பவெப்பம் மாறி பனிப்பாறைகள் வேகமாக உருகி, பெருகி, வெள்ளம் ஒருபக்கம், வறட்சி மறுபக்கம், தோல் நோய்கள், புதிய நோய்கள் வந்தவண்ணம் உள்ளன.  எபோலா என்ற நோய் புதிதாக வந்துள்ளது.  மனிதன், சுற்றுச்சூழல் மாசு குறைத்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஓசோன் பற்றி வடித்த கவிதை நன்று.

      ஓசோனில் ஓட்டை!
            அக்கினிச் சூரியன் 
 வக்கிரம் ஆனதோ
            அக்கிரமமான வெப்பம் 

 உதயத்திலே ஆரம்பம்
            கத்திரி அத்திரி பத்திரியோ 

 இனிமேலும் தாக்கும்
            இன்னும் அதிகம் கூடும்.
            பூமிக்கு மேலே 
 ஓசோன் அடுக்கில் 
            ஓட்டை போட்டு 
 வளி மண்டலத்தில் 

          வழி செய்து விட்டோம் !


      பல்வேறு கவிதைகள் நூலில் உள்ளன. கதம்ப மாலை போல கவிதை மாலை பல்சுவை விருந்தாக வடித்துள்ளார்.
      தமிழ் படிக்காதவன், தமிழுக்குச் செய்யும் அணிகலன் இது.  பாராட்டுக்கள்.  கேள்வி கேட்டு சிந்திக்க வைக்கும் விதமாகவும் கவிதைகள் உள்ளன.

      பாறையை உழுதால் !

            பாறையை உழுதால் 
 பயிரா வளரும்
            மரத்தை அறுத்தால் 

 பழமா கிடைக்கும்
            வேலியை உடைத்தால் 

 பாதுகாப்பா கிடைக்கும்.


      நூலாசிரியர் கவிஞர் டி.வி.எஸ். மணியன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.  தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.  முதல் நூல் விமர்சனத்தில் வைத்த வேண்டுகோளையே திரும்பவும் வைக்கிறேன். பெயரின்முன் எழுத்துக்களைத் தமிழ் எழுத்தாக்குங்கள்.
.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

உழைப்பில் உள்ளது உயர்வு ! நூல் ஆசிரியர் : கவிஞர் டி.வி.எஸ். மணியன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty Re: உழைப்பில் உள்ளது உயர்வு ! நூல் ஆசிரியர் : கவிஞர் டி.வி.எஸ். மணியன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 28, 2014 9:42 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» நேரத்தைப் போற்றிடுவோம் ! காலத்தை வென்றிடுவோம் ! நூல் ஆசிரியர் கவிஞர் டி .வி .எஸ் .மணியன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» " நச் "வரி கவிதைகள் ! நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum