தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தொ(ல்)லைக்காட்சி
2 posters
Page 1 of 1
தொ(ல்)லைக்காட்சி
தொ(ல்)லைக்காட்சி
பாவலர் கருமலைத்தமிழாழன்
திரைமறைவுக் காட்சிகளைத் திரையில் ஓட்டி
திமிர்கின்ற இளமைக்குத் தீனி போடும்
நரைமுடியில் முதியவரோ காதல் பேசி
நங்கையரை மயக்குகின்ற பாடல் பாடும்
அரைகுறையாய் ஆடைகளில் அங்கம் காட்டி
அலங்கோல நடனத்தில் நெளியும் பெண்மை
முறையற்ற உறவுகளில் முடிச்சைப் போட்டு
முற்றாகப் பண்பாட்டை அழிக்கும் கோலம் !
கடல்மணலில் வண்டியோட்டும் ஆணின் பக்கம்
கால்பங்கு உடையினிலே ஒருபெண் நிற்பாள்
உடல்மூடும் சேலைக்காய் உடைய விழ்த்தே
உதடுகளைக் கடித்தபடி முறுவல் பூப்பாள்
திடமான தேநீரை அரைக்கால் சட்டை
திருக்கோலம் திறந்தபடி சிரித்தே ஈவாள்
முடமாக்கிச் சிந்தனையின் திறன ழித்து
முட்டாளாய் மாற்றுகின்ற விளப்ப ரங்கள் !
படுக்கையறைக் காட்சிகளில் பெண்ணைப் போகப்
பொருளாக்கிக் கற்பழித்தே தோலு ரிப்பர்
அடுப்படியில் விதவிதமாய் சமையல் செய்து
அறுசுவையில் மூழ்கடித்தே அடிமை செய்வர்
நடுப்பகலில் திரைப்படத்தைக் காட்டிக் காட்டி
நங்கையரின் மூளையினைச் சலவை செய்வர்
கடுகளவும் பெண்மைக்கே ஏற்றம் சேர்க்கும்
காட்சிகளைக் காட்டாமல் கீழ்மை செய்வர் !
அறிவியலில் எத்தனையோ புதுமை நாளும்
அகிலத்தில் நடக்கின்ற போதும் இங்கே
அறிஞரென நடிகையரை அழைத்து வந்தே
அற்புதமாய் நேர்காணல் நடத்து வார்கள்
அறிவுரைகள் சுதந்திரநாள் பொங்கல் நாளில்
அதிமேதை நடிகர்கள் வழங்கு வார்கள்
நெறிபிறழ்ந்த தலைவர்கள் நேர்மை பற்றி
நீண்டதொரு சொற்பொழிவை நிகழ்த்து வார்கள் !
அருந்தமிழின் நாடங்கள் எல்லாம் வேற்று
ஆங்கிலத்துத் தலைப்பிற்குள் ஒளிந்து நிற்கும்
மருந்தைப்பொல் தமிழ்ச்சொற்கள் ஆங்கி லத்து
மரபுதனில் இடையிடையே தலையைக் காட்டும்
விருந்தாக வந்தவரே வீட்டை ஆளும்
விந்தையாக மேலைநாட்டு மோகம் ஓங்கிப்
பருந்தின்கால் சிக்கிவிட்ட குஞ்சு போலப்
பசுந்தமிழும் பண்பாடும் நடுங்கு முள்ளே !
குழந்தைகளின் மதிமயக்கும் காட்சி யன்றிக்
கூர்த்தமதி வளர்க்கின்ற மாட்சி யில்லை
குழந்தையொடு பெரியவரும் ஒன்றாய்ச் சேர்ந்து
குடும்பமுடன் பார்ப்பதற்கு நெஞ்சோ கூசும்
பழத்திற்காய் வைத்தமரம் அடுப்பெ ரிக்கப்
பயன்படுத்தும் கயமையென விஞ்ஞா னத்தின்
பொழுதுபோக்கு பெருந்தொல்லைக் காட்சி யாகி
போதையேற்றி இளைஞரினைப் புதைத்த தின்று !
பாவலர் கருமலைத்தமிழாழன்
திரைமறைவுக் காட்சிகளைத் திரையில் ஓட்டி
திமிர்கின்ற இளமைக்குத் தீனி போடும்
நரைமுடியில் முதியவரோ காதல் பேசி
நங்கையரை மயக்குகின்ற பாடல் பாடும்
அரைகுறையாய் ஆடைகளில் அங்கம் காட்டி
அலங்கோல நடனத்தில் நெளியும் பெண்மை
முறையற்ற உறவுகளில் முடிச்சைப் போட்டு
முற்றாகப் பண்பாட்டை அழிக்கும் கோலம் !
கடல்மணலில் வண்டியோட்டும் ஆணின் பக்கம்
கால்பங்கு உடையினிலே ஒருபெண் நிற்பாள்
உடல்மூடும் சேலைக்காய் உடைய விழ்த்தே
உதடுகளைக் கடித்தபடி முறுவல் பூப்பாள்
திடமான தேநீரை அரைக்கால் சட்டை
திருக்கோலம் திறந்தபடி சிரித்தே ஈவாள்
முடமாக்கிச் சிந்தனையின் திறன ழித்து
முட்டாளாய் மாற்றுகின்ற விளப்ப ரங்கள் !
படுக்கையறைக் காட்சிகளில் பெண்ணைப் போகப்
பொருளாக்கிக் கற்பழித்தே தோலு ரிப்பர்
அடுப்படியில் விதவிதமாய் சமையல் செய்து
அறுசுவையில் மூழ்கடித்தே அடிமை செய்வர்
நடுப்பகலில் திரைப்படத்தைக் காட்டிக் காட்டி
நங்கையரின் மூளையினைச் சலவை செய்வர்
கடுகளவும் பெண்மைக்கே ஏற்றம் சேர்க்கும்
காட்சிகளைக் காட்டாமல் கீழ்மை செய்வர் !
அறிவியலில் எத்தனையோ புதுமை நாளும்
அகிலத்தில் நடக்கின்ற போதும் இங்கே
அறிஞரென நடிகையரை அழைத்து வந்தே
அற்புதமாய் நேர்காணல் நடத்து வார்கள்
அறிவுரைகள் சுதந்திரநாள் பொங்கல் நாளில்
அதிமேதை நடிகர்கள் வழங்கு வார்கள்
நெறிபிறழ்ந்த தலைவர்கள் நேர்மை பற்றி
நீண்டதொரு சொற்பொழிவை நிகழ்த்து வார்கள் !
அருந்தமிழின் நாடங்கள் எல்லாம் வேற்று
ஆங்கிலத்துத் தலைப்பிற்குள் ஒளிந்து நிற்கும்
மருந்தைப்பொல் தமிழ்ச்சொற்கள் ஆங்கி லத்து
மரபுதனில் இடையிடையே தலையைக் காட்டும்
விருந்தாக வந்தவரே வீட்டை ஆளும்
விந்தையாக மேலைநாட்டு மோகம் ஓங்கிப்
பருந்தின்கால் சிக்கிவிட்ட குஞ்சு போலப்
பசுந்தமிழும் பண்பாடும் நடுங்கு முள்ளே !
குழந்தைகளின் மதிமயக்கும் காட்சி யன்றிக்
கூர்த்தமதி வளர்க்கின்ற மாட்சி யில்லை
குழந்தையொடு பெரியவரும் ஒன்றாய்ச் சேர்ந்து
குடும்பமுடன் பார்ப்பதற்கு நெஞ்சோ கூசும்
பழத்திற்காய் வைத்தமரம் அடுப்பெ ரிக்கப்
பயன்படுத்தும் கயமையென விஞ்ஞா னத்தின்
பொழுதுபோக்கு பெருந்தொல்லைக் காட்சி யாகி
போதையேற்றி இளைஞரினைப் புதைத்த தின்று !
karumalaithamizhazhan- ரோஜா
- Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 73
Location : Hosur. Tamil nadu, India
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum