தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காட்டுமன்னார்கோயில் அருகே சோழர்கால சிற்பங்கள் கண்டெடுப்பு
2 posters
Page 1 of 1
காட்டுமன்னார்கோயில் அருகே சோழர்கால சிற்பங்கள் கண்டெடுப்பு
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே சோழர் கால பழமை வாய்ந்த சிற்பங்கள் அண்ணாமலைப் பல்கலை. வரலாற்றுத் துறை ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
காட்டுமன்னார்கோவில் அருகே கீழக்கடம்பூர் கிராமத்தில் அமுக்கிராங்குட்டை குளம் உள்ளது. இதனருகே உள்ள மரத்தை வேருடன் எடுக்கத் தோண்டிய போது சப்தமாதர் சிற்பங்கள் மற்றும் கிபி 9-10 ஆம் நூற்றாண்டு கால மூத்ததேவி சிற்பம் மண்ணில் புதையுண்டு கிடப்பதை அக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் அண்ணாமலைப் பல்கலை.க்கு தகவல் தெரிவித்துள்ளார்.
-
இதன் பேரில் பல்கலை. வரலாற்றுத் துறை துணைப் பேராசிரியர்கள் திராவிட வரலாற்று ஆய்வுக் கழக இயக்குநர் இல.கணபதிமுருகன், தலைவர் ஆ.முத்துக்குட்டி மற்றும் சி.பாஸ்கரன் ஆகியோர் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
-
ஆய்வு குறித்து, ஆய்வாளர் இல.கணபதி முருகன் தெரிவித்ததாவது: சோழர்களின் வரலாற்றில் மேலக் கடம்பூர், கீழக் கடம்பூர் பகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
-
இங்கிருந்த சோழ அரண்மனையில்தான் ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்பட்டான். அந்நிகழ்வுதான் அப்போதைய தமிழக வரலாற்றை மாற்றியது. ராஜராஜன் என்ற மாமன்னன் சோழ சாம்ராஜ்ஜியத்துக்கு மகுடம் சூட கிடைத்த வாய்ப்பாகவும் இந்நிகழ்வுதான் காரணமானது. மேலகடம்பூரில் அமைந்துள்ள ருத்ரபதீஸ்வரர் கோயில் மிகவும் பழமையானது. வரலாற்றுச் சிறப்புமிக்கது.
-
சப்தமாதர் சிற்பங்கள்: பிரம்மாவின் மனைவியான பிராமி நான்கு கரங்களுடன் குண்டம், அட்சய பாத்திரம், ஜெப மாலை, அகப்பையை ஏற்றி அபய, வரத முத்திரையில் உள்ள சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவனின் சேவகனான யமனுக்கு சக்தியை வழங்கக் கூடிய தேவியான சாமுண்டி, விரிசடை அலங்காரத்தில் அபய முத்திரையில் காட்சி தருகிறார். சிவனுக்கு சக்தி மூல ஆதாரமாக விளங்கும் மகேஸ்வரி நான்கு கரங்களுடன் உடுக்கை ஏந்திய நிலையில் முக்கண்ணை உடையவளாக அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். முருகனின் சக்தி மூல ஆதாரமாக விளங்கும் கௌமாரி சிற்பமானது, நான்கு கரங்களுடன் அபய, வரத முத்திரையில் பொலிவுற வடிக்கப்பட்டுள்ளது.
-
விஷ்ணுவின் சக்தியாக போற்றப்படும் வைஷ்ணவி சிற்பமும் நான்கு கரங்களுடன் அபய, வரத முத்திரையில் சங்கு, சக்கரம் ஏந்திய பத்மபீடத்தில் வடிக்கப்பட்டுள்ளது. வராக மூர்த்திக்கு மூல ஆதாரமாக விளங்கக் கூடிய வராகி காதில் மகர குண்டலங்கள் பூட்டி சங்கு, சக்கரம் ஏந்தி அபய முத்திரையில் அருள்பாலிக்கும் தோற்றத்தில் விளங்குகிறார்.
-
இத் தெய்வ உருவங்கள் அனைத்துமே எளிய வேலைப்பாடுடன் வடிக்கப்பட்டுள்ளது. இச்சிலைகள் மேலகடம்பூர் ருத்ரபதீஸ்வரர் கோயிலில் தேவகோஷ்டச் சுவரில் தான் இடம் பெற்றிருக்க வேண்டும்.
-
தற்போது இடம் பெயர்ந்து புதைந்துள்ளது என்பதை கோயில் அமைப்பு மூலம் அறியலாம். இச்சிலைகள் பிற்காலச் சோழர்களின் இறுதி காலக் கட்டத்தைச் சேர்ந்தது.
-
மூத்த தேவியின் சிற்பம்: சப்தமாதர் சிற்பத்தில் அருகாமையிலேயே மூத்த தேவியின் 3.5 அடி நீளம், 2 அடி அகலத்திலான கற்பலகையில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
-
காக்கை கொடி ஏந்திய மூத்த தேவியின் கழுதை வாகனம் மற்றும் தேவியின் மைந்தர்களான மாந்தன், மாந்தி உருவங்கள் நன்றாகவே தெரிகிறது. கண்களை முடியவாறு செதுக்கப்பட்டுள்ள இச்சிற்பம் நீண்ட நாள்களாக மண்ணில் புதைந்திருந்த காரணத்தால் மணலால் அரிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
-
பாண்டியர் படையெடுப்புகள்: மூன்றாம் ராஜராஜன் (கிபி 1216-1256) சோழ மண்டலத்தை ஆண்டு கொண்டிருக்கும் போது நிகழ்ந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் நிகழ்த்திய படையெடுப்புகளில் இங்கு பேரழிவு உண்டானதாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. அவ்வாறெனில் மேலக்கடம்பூர் கோயில் புனரமைப்பு பாதியில் கைவிடப்பட இப்படையெடுப்பு காரணமாக இருந்திருக்க வேண்டும். மூன்றாம் ராஜராஜனுக்கு முந்தைய காலக் கட்டத்திலேயே இங்கு பழமையான கோயில் இருந்துள்ளது.
-
புனரமைப்பு பணிகளை 3ஆம் குலோத்துங்கனும், 3ஆம் ராஜராஜனும் மேற்கொண்டுள்ளது ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. ஆகவே, இச்சிற்பங்கள் காலமும் கிபி 12-13ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
-
–தினமணி

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கருவேலம் அகற்றும்போது நடுகல் கண்டெடுப்பு
» 42,000 ஆண்டுகள் பழமையான யானைக்குட்டியின் உடல் கண்டெடுப்பு
» மரக்கறி சிற்பங்கள்
» மணல் சிற்பங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum