தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மன்றல் கையூட்டை மாய்ப்போம்

2 posters

Go down

மன்றல்  கையூட்டை   மாய்ப்போம் Empty மன்றல் கையூட்டை மாய்ப்போம்

Post by karumalaithamizhazhan Mon Nov 17, 2014 8:39 pm

மன்றல்  கையூட்டை   மாய்ப்போம்
பாவலர்  கருமலைத்தமிழாழன்
 
முதுகலையில்   தமிழெடுத்துப்   பட்டம்   பெற்ற
          முதுகெலும்பு   உள்ளதமிழ்ப்   பெண்தான்   செல்வி
பதுமைபோல்   மேனிதனில்   எழிலைப்   பெற்ற
          பாவையாக   மட்டுமன்றி   அறிவு   தன்னில்
எதுகையொடு    மோனைசேர்ந்து   உவமை   கொஞ்சும்
          சுரதாவின்   பாட்டைப்போல்   இருப்பாள் !  பேசும்
பொதுக்கூட்ட   மேடைதனில்   கேட்போர்   நெஞ்சம்
          பொங்கியெழ   உணர்ச்சிதனைத்   தூண்டும்   நாவோள் !
 
திருக்குறளைப்   பற்றியொரு   கூட்டந்   தன்னில்
          திடமாகப்   புதுக்கருத்தை   ஆய்வு   நோக்கில்
தருகின்ற   தன்மையினைப்   பார்த்து !  கேட்க
          வந்திருந்த   இளங்கோவின்   நெஞ்சில்   செல்வி
பெருமிடத்தைப்   பிடித்துவிட்டாள் !  அவளின்   பின்னே
          பேசுகின்ற   இடமெங்கும்  நிழலைப்   போலே
பெருகிவரும்   ஆர்வத்தால்   சென்றே   கேட்டுப்
          பெருமையாகப்   பாராட்டும்    கூற  லானான் !
 
வணிகத்தில்   பெரும்புகழும்   பொருளும்   ஈட்டி
          வளமான   வாழ்வுதனில்   திளைத்தி   ருக்கும்
வணிகனவன்   இளங்கோவன் !   இலக்கி   யத்தில்
          வற்றாத   பற்றுகொண்ட   தன்மை   யாலே
இனிமையுடன்   கருத்தோட்டச்   சொற்போர்   ஆற்றும்
          செல்வியுடன்   வாதங்கள்   பலபு   ரிந்தே
தனிமையிலே   பேசுகின்ற   நெருக்கம்   கூடி
          தமிழாலே   இருமனங்கள்   சேர்ந்த   தொன்றாய் !
 
மனம்கலந்த    பின்னவளோ   மணக்கும்   காதல்
          மணவாளன்    தன்னிடத்து    இன்ப   வாழ்வைக்
கனவுகளாய்க்    காணும்முன்    எங்கள்   வீட்டுக்
          கணக்குதனைக்    கூறுகின்றேன் !   பசிவ    யிற்றைத்
தினம்பாதி    நிரப்புதற்கும்    வருவாய்    இல்லா
          தீக்கனலின்    வறுமையிலும்    என்னைப்   பெற்றோர்
எனக்களித்த     கல்வியினால்    பணியும்    பெற்று
          ஏழ்மையினைக்    குறைத்தற்குத்    துணையாய்    உள்ளேன் !
 
உடன்பிறந்த    தங்கையரும்    தம்பி   மாரும்
          உரிமையுடன்   என்கரத்தை   எதிர்பார்க்  கின்றார்
கடல்நடுவே   கிடைத்தமரக்   கட்டை   வைத்துக்
          காக்கவுயிர்   நீந்துதல்போல்   குடும்பந்   தன்னை
நடத்துதற்கே   என்னைத்தான்    நம்பி   யுள்ளார்
          நானுங்கள்   கைபிடிக்க   எங்கள்   வீட்டில்
தடையேதும்   சொல்லமாட்டார்    ஆனால்   கையில்
          தட்சணையாய்    எதனையுமே    கொடுக்க   மாட்டார் !
 
பொன்பூட்டி    பொருள்பூட்டி   திரும  ணத்தைப்
          பூப்பூட்டிச்   சீர்கூட்டி    நடத்த   மாட்டார்
என்கழுத்தில்   தாலிதனைக்    கட்டி   னாலும்
          என்பணியில்    நான்தொடர்ந்து    போக   வேண்டும்
தன்வாயால்    உணவூட்டும்   புறாவைப்    போலே
          நானெங்கள்   குடும்பத்தைக்   காப்ப   தற்கே
உன்வீட்டார்    தடைசொல்ல   மாட்டார்   என்ற
          உறுதியினை    எனக்கிங்கே   அளிக்க    வேண்டும் !
 
 
 
 
இதற்கெல்லாம்   இசைவென்றால்   இன்றே   எங்கள்
          இல்லத்தில்   இசைவுதனைப்    பெறுவேன்   என்றாள் !
இதமாக    உன்நிலையைச்    சுட்டிக்   காட்டி
          இயன்றிடுமோ   எனயென்னைத்    துணிவாய்க்   கேட்டாய்
இதயத்தில்   உனைநினைக்கும்   போதே  உன்றன்
          இல்லத்தின்   நிலைதன்னை    அறிந்து   கொண்டேன்
உதவுகின்ற   எண்ணத்தில்   மாற்ற   மில்லை
          உறுதியினை   நானுனக்குச்   சொல்லு  கின்றேன் !
 
பொருள்தருவார்   மேனிதனைப்   பொன்னால்   பூட்டிப்
          பொலிவுசெய்வார்    எனயெண்ணி   உன்றன்  மீது
மருள்கொள்ள   வில்லைநெஞ்சத்   தெழுந்த   தூய
          அன்பினாலே   உன்மீது   மையல்   கொண்டேன்
அருள்காட்டும்   தமிழுக்கு   உன்றன்  நாவால்
          அழகூட்டும்   அமுதச்சொல்   கேட்டுக்  கேட்டுப்
பருகுதற்கே    உன்மீது   காதல்   கொண்டேன்
          பருவத்தால்   வந்ததில்லை   இந்த   மோகம் !
 
பெண்ணிற்கு   விலைபேசும்   கீழ்மை   நெஞ்ச
          பேடியருள்   என்னையுமா    சேர்த்து  விட்டாய்
கன்னலினைச்   சுவைப்பதற்குக்   கூலி   கேட்கும்
          கரமில்லா   முடவனாநான் ?   மான  மின்றிப்
பெண்வீட்டார்   இவையெல்லாம்   செய்ய   வேண்டும்
          எனக்கேட்கும்   பெற்றோர்க்குப்   பின்னால்   நின்றே
சென்னிதனை   ஆட்டுகின்ற   கோழை   யாநான்
          செம்மாந்த   இலக்கியத்தின்   நெறியு   ணர்ந்தோன் !
 
 
 
 
நாய்கூட   ஒருவேளை   உணவு   உண்ட
          நன்றிதனைக்    காட்டுதற்கு   வாலை   ஆட்டும்
தூய்மையான   அன்புகாட்டி   உடலைக்   காட்டி
          துணையாக   வாழ்வெல்லாம்   இணைந்தி   ருக்கும்
தாய்மைக்கே   விலைகூறி   ஏலம்   போடும்
          தரங்கெட்ட    ஆண்வர்க்கக்    கூட்டத்    தாரால்
மாய்கின்ற    மங்கையரின்    அவலங்    கண்டு
          மனங்கொதிக்கும்   என்நிலையை   அறியாய்   நீயும் !
 
செங்கதிரின்    எழுச்சியைப்போல்   என்க   ரத்தில்
          செழிப்பாக்கும்   வலிமைதனைப்    பெற்ற   வன்நான்
பொங்குகின்ற   உழைப்பினாலே   பொலிவு   கூட்டிப்
          புதுவாழ்வை    அமைக்கின்ற   திறனைப்   பெற்றோன்
சங்கத்துப்   பாடலிலே   தலைவன்   வேற்று
          நாடேகிப்   பொருள்தேடி   வந்த   பின்பே
மங்கலநாண்   அணிவிக்கும்   பெருமை   பெற்ற
          மரபுதனில்    வந்தவன்நான்   வாங்க   மாட்டேன் !
 
ஆணிற்கே   ஒருநீதி    சொல்லு   கின்ற
          சமுதாயச்   சீர்கேட்டை   மாற்று   தற்கும்
ஆணிவேராய்ப்   படர்ந்திங்கு   பெண்மை   தன்னைத்
          தாழ்வுசெய்யும்   கீழ்மையெண்ணம்   போக்கு   தற்கும்
ஏணியேறித்    தட்டிசாய்க்கும்    ஆண்மை   வர்க்க
          ஏளனத்தின்    உச்சிதனைச்   சாய்ப்ப   தற்கும்
கூனிநிற்கும்    பெண்களெல்லாம்   நிமிர   வேண்டும்
          உன்னைப்போல்   எதிர்குரலை   முழக்க   வேண்டும் !
 
 
 
 
பழமையிலே   ஊறிநிதம்   பாழாய்ப்    போகும்
          பஞ்சாங்கக்   கிழவர்கள்   எதிர்ப்பை   யெல்லாம்
உழுகின்ற   கலப்பையடி   கிழிக்கும்   மண்ணாய்
          உடைத்தெறியும்   துணிவுதனைப்  பெறுதல்   வேண்டும்
பழக்கந்தான்   தொன்றுதொட்ட   வழக்கந்   தாமெனப்
          பகருகின்ற    பாட்டிமாரின்   சொல்லை   யெல்லாம்
வழவழத்தக்    கொள்கையென    இளைஞர்   நாம்தாம்
          வாய்திறந்து     சொல்லியதை   மாற்ற   வேண்டும் !
 
செல்வியுன்றன்   மனக்கருத்தை    ஏற்றுக்    கொண்டேன்
          செந்தமிழின்   மீதாணை   நன்றாய்   இங்கே
நல்வாழ்வை   நாமமைப்போம் !   நடுவில்   யாரும்
          நம்முடிவை    எதிர்த்துவந்தால்   எதிர்த்து   நிற்பேன்
நல்லுள்ளம்    கொண்டவர்தாம்   என்றன்   பெற்றோர்
          நாற்றமுடை    மூடத்தை    வெறுத்தொ    துக்கி
வெல்லுகின்ற   புதுக்கருத்தை   ஏற்றுக்   கொள்ளும்
          வேர்கொண்ட    பகுத்தறிவு     நெஞ்சச்    சான்றோர் !
 
ஒருமனமாய்   இணைந்திட்ட   நமையி   ணைக்க
          முன்நிற்பர்   எனைப்பெற்றோர்    தொகையைக்    கேளார்
உருவாகும்   புதுவாழ்வில்    விளக்கை    ஏற்ற
          உறுதுணையாய்    வந்திடுவார்    பொன்னைக்   கேளார்
மருமகளாய்    உனையேற்பர்     குணத்தைப்    பார்த்து
          மற்றெதையும்    பார்க்காத    அன்ப   கத்தார்
மருட்டுலகில்    இதுபோன்றே   இருந்து   விட்டால்
          மங்கையரின்    வாழ்வெல்லாம்    மகிழ்வே    பொங்கும் !
         
         
         
         
karumalaithamizhazhan
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 73
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

மன்றல்  கையூட்டை   மாய்ப்போம் Empty Re: மன்றல் கையூட்டை மாய்ப்போம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 10, 2015 4:23 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum