தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குறவஞ்சி இலக்கியம் ! நூல் ஆசிரியர் : தமிழச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

குறவஞ்சி இலக்கியம் !  நூல் ஆசிரியர் : தமிழச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty குறவஞ்சி இலக்கியம் ! நூல் ஆசிரியர் : தமிழச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Mon Nov 17, 2014 10:45 pm

குறவஞ்சி இலக்கியம் !

நூல் ஆசிரியர் : தமிழச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத் தெரு, சிதம்பரம்–608 001. பக்கம் 384, விலை: ரூ.200

*****
      இலக்கிய இணையர் என்றால் இலக்கிய உலகம் நன்கு அறியும். தமிழ்த்தேனீ இரா. மோகன், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் இவர்கள் இருவரும் போட்டி போட்டு நூல் எழுதி வருகிறார்கள்.  தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள் குறவஞ்சி இலக்கியத்தை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்று, மதுரைத் தமிழ்ச்சங்கக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று இலக்கியத்தில் ஓய்வின்றி உழைத்து வருபவர். தமிழ்த் தேனீ  ஐயா அவர்களுடன் பட்டிமன்றத்திலும் முழங்கி வருகிறார்கள் .ஐயாவிற்கு வாழ்க்கைத் துணையாக மட்டுமன்றி இலக்கியத் துணையாகவும் இருந்து வருபவர் . 

முனைவர் பட்ட ஆய்வை செதுக்கியும், பதுக்கியும் நூலாக்கி உள்ளார்கள்.  குறவஞ்சி இலக்கியத்தை விரிவாக ஆய்வு செய்து சிற்றிலக்கிய விருந்து வைத்துள்ளார்கள்.  பாராட்டுகள்.  பதிப்பித்த மெய்யப்பன் பதிப்பகத்திற்கு பாராட்டுகள்.

      ஒன்பது தலைப்புகளில் விரிவாக கட்டுரைகளும் பின்னிணைப்புகள் என்று பகுதி துணைநூற்பட்டியல் விபரம் ஒரு பகுதி மொத்தம் 11 பகுதிகள் நூலில் உள்ளன.  பதிப்புச் செம்மல் பேராசிரியர் ச. மெய்யப்பன் அவர்களின் பதிப்புரையும் , தமிழறிஞர் முனைவர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் அணிந்துரையும் நூல் என்ற மகுடத்தில் பதித்த வைரகற்களாக ஒளிர்கின்றன. அணிந்துரையிலிருந்து பதச்சோறாக ஒன்று.

      “திருமதி டாக்டர் நிர்மலா மோகன் அவர்கள் நல்ல நுணுக்கிப் பார்க்கின்ற ஆற்றலும், மிகுந்த உழைப்பும் உடைய சிறந்த ஆய்வாளர்.  குறம், குறவஞ்சி, குருவ நாடகம் என்ற மூன்றையும் இணைத்து சிறந்த முறையில் ஆய்வேட்டினைக் கொடுத்து எல்லா தேர்வாளர்களும் சிறந்த ஆய்வேடு எனப் பாராட்டிப் பட்டம் பெற்றவர்” .

நூலாசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களின் கடின உழைப்பை உணர்த்தும் விதமாக நூல் உள்ளது.  மேம்போக்கான ஆய்வு இல்லை இது.  தமிழ் ஆர்வமும், தமிழ் அறிவும், பொறுமையும் இருந்ததால் மட்டுமே ஆய்வை சிறப்பாக முடிக்க முடிந்தது.  

நூலில் இருந்து சில துளிகள்.  உங்கள் பார்வைக்கு :

      “குறம், குறவஞ்சி, குளுவ நாடகம் ஆகிய மூன்று இலக்கியங்களும் பல  நாட்டுப்புறக் கூறுகளைக் கொண்டு விளங்குகின்றன.  திரும்பத் திரும்ப வர்ல், இசைபாங்கு, சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப்பெறாமரபு, புராண மரபுச் செய்தி, பழமொழியாட்சி, விடுகதை பாங்கு, பேச்சுவழக்கும் சொற்கள், யாப்பு வடிவ ஒற்றுமை, நம்பிக்கைகளும் சடங்குகளும் ஆகிய நாட்டுப்புறக் கூறுகள்” .

இப்படி இலக்கியத்தில் உள்ள மேன்மைகள் பற்றி ஆய்ந்து ஆராய்ந்து மிக நுட்பமாக எழுதியுள்ள நூல்.

      குறம் என்பது 18 வகைகள் உள்ளன.  அவை யாவை என்பது நூலில் உள்ளன.  இவற்றில் 14 குறங்களே ஆய்வாளருக்குக் கிடைத்துள்ளன என்ற செய்தியும் நூலில் உள்ளது.  குளுவ நாடகங்கள் 5, அவை எவை? என்ற விபரம் உள்ளது.  பல்வேறு நூல்கள் படித்து முனைவர் பட்ட ஆய்வினை முழு ஈடுபாட்டுடன் செய்து உள்ளது புலனாகின்றது.  தேடல் இருந்தால் தான் ஆய்வு சிறக்கும்.  அ.கி. பரந்தாமனார், இரா. இளங்குமரனார், உ.வே. சாமிநாதையார், இளம்பூரணர் உள்ளிட்ட பல்வேறு தமிழறிஞர்களின் நூல்கள் படித்து வடித்த நூல் இது.

      ஒப்பிலக்கிய நோக்கில் ஒப்பீடு செய்தும் ஆய்வு செய்துள்ளார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பகுதி ஒன்று நூலில் உள்ளதை பதச்சோறாக காண்க.

      குறவனின் கையாள்
      குறவஞ்சியில் சிங்கனுக்குத் துணையாக குளுவன்,
      நூவன் போன்றோர் வருவது போல, குளுவ நாடகத்தில்
      தலைமை இடம்பெறும் குளுவனுக்கும் பறவை வேட்டை
      யாடுவதற்குத் துணையாகக கையாள் ஒருவன் வருகிறான்.
      அன்ன சின்னமகிபன் குளுவ நாடகத்திலும் (பா. 13)

      கறுப்பர் குளுவை நாடகத்திலும் சிங்கன் என்றும், அருணாசலம் செட்டியார் குளுவ நாடகத்தில் பாங்கன் (ப. 24) என்றும் கோட்டூர் நயினார் குளுவ நாடகத்தில் நரசிங்கன் (ப. 15) என்றும் அழைக்கப்படுகிறான்.

      தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களைப் போலவே மிக நுட்பமாக பாடல் எண் வரை குறிப்பிட்டு எழுதி இருப்பது நூல் படிக்கும் வாசகர்கள் விரும்பினால், அந்தப் பாடலையும் எடுத்து படித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

      இந்த நூல் படிக்கும் போது தமிழின் பெருமையும், தமிழரின் பெருமையும் நன்கு அறிய முடிகின்றது.  அன்று இருந்த மலைவளம் இயற்கை வளங்கள் வாழ்வியல் முறைகள், குலப்பெருமை என யாவும் விரிவாக எழுதி உள்ளார்கள்.  பாடல்களை எழுதி, அதற்கான விளக்கம் எழுதி, முடிவுரையும் எழுதி உள்ளார்கள்.

      இயந்திரமயமான உலகில் சிற்றிலக்கியங்கள் அனைத்தும் படிப்பதற்கு பலருக்கு நேரம் வாய்ப்பதில்லை.  அப்படியே நேரம் வாய்த்து படித்தாலும் பாடலின் பொருள் புரிவதில்லை.  இந்த நூல் படித்தால் போதும் சிற்றிலக்கியங்கள் பல படித்த மனநிறைவு வந்து விடுகின்றது.  பழச்சாறு போல பிழிந்து இலக்கியச் சாறு வழங்கி உள்ளார்கள்.  தமிழின் சொல்வளம், கருத்து வளம், நில வளம், நீர் வளம், பண்பாட்டு வளம் அனைத்தும் உணர்த்திடும் நூல்.

      நாடகத்திறனில் அன்று தமிழர்கள் கொடிகட்டி பறந்தார்கள் என்பதை அறிய முடிகின்றது. திரைப்படத்தின் வருகையின் காரணமாக இன்று நாடகம் என்பது நலிந்து விட்டது.  இந்த நூலில் நாடகத்திறன் பற்றி படித்த போது நம் நாட்டில் மீண்டும் நாடகங்கள் உயிர்பிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.

      “குறவர்கள் ஓரிடத்தில் தங்கி வாழாது, அடிக்கடி தம் இருப்பிடத்தை மாற்றித் திரியும் நாடோடி இயல்பினர் ஆவர். வனங்கடந்து, வயல்கடந்து, கரைகடந்து திரிவோம் (ப.45) என்று இவ்வியல்பினை உணர்த்துகின்ற ஸ்ரீ கிருஷ்ணமாரி குறவஞ்சியில் வரும் குறத்தி”.

      சிற்றிலக்கியங்களில் இனம் பற்றி, பண்பாடு பற்றி, உணவு பற்றி, வாழ்க்கை பற்றி போகிற போக்கில் பாடலாக வடித்து வைத்து இன்றும் கணினியுகத்திலும் பழைய பண்பாட்டை, கலையை, திறமையை உணர முடிகின்றது.

      ‘இவ் ஆய்வு’ முன்னையவற்றின் பரிணாமமாக மலருகின்ற ஓர் இலக்கிய வகை, பின்னர் வருவனவற்றிற்கு அடித்தளமாய் அமையும் என்னும் கூர்தலறக் கோட்பாட்டினைக் குறவஞ்சி இலக்கியம் விளக்குவதாய் அமைகிறது எனலாம்”.

      தமிழில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்க விரும்பும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல். கடினமான இலக்கியத்தையும் மிக எளிதாக, எளிமையாக விளக்கி உள்ளார்கள்.  இந்த நூல் வைத்துக் கொண்டு இதன் தொடர்ச்சியாக தனித்தனியாக ஆய்வு தொடங்குவதற்கும் மிக உதவியாக இருக்கும் நூல்.

      தமிழ்த்தேனீ என்று முனைவர் இரா. மோகன் அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களுக்கும் பொருந்தும் என்ற முடிவுக்கு வர நூல் உதவியது.                                                            


.



.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» தமிழ் இலக்கியத்தில் உடன்பாட்டுச் சிந்தனை! நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» சிற்பியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி
» முனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்! பதிப்பாசிரியர் : பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum