தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பழம்பகையை முறியடிப்பேன்

2 posters

Go down

பழம்பகையை  முறியடிப்பேன் Empty பழம்பகையை முறியடிப்பேன்

Post by karumalaithamizhazhan Wed Nov 19, 2014 6:25 am

பழம்பகையை   முறியடிப்பேன்
   பாவலர்  கருமலைத்தமிழாழன்
 
மேல்சாதிப்    பெண்ணென்று    கூறு   கின்றீர்
          மேல்மாடி   தனில்குடியி    ருப்ப    தாலா
வேல்கொண்டு    புண்மீது    குத்து   கின்ற
          வேதனையைப்    பெற்றோரே   நீங்கள்    செய்து
பால்மனத்துக்    காதலினை    ஒன்றாய்ச்    சேர்க்க
          பாழான    சாதிசொல்லித்    தடைசெய்   கின்றீர்
கால்பதித்தே    எல்லோரும்    நடக்கும்    மண்ணில்
          கரங்களிலே    நடப்பதுதான்   இயல்பு   என்றீர் !
 
பேருந்தில்    பலரோடு    செல்லும்    போது
          பேணுகின்ற   சாதியங்கு   வருவ   தில்லை
யாருக்கும்    பொதுவென்னும்    திரைய   ரங்கில்
          யாருமங்கே   சாதிபார்த்து    அமர்வ   தில்லை
வேரூன்றி    வளர்கின்ற   மரத்தைப்   போல
          வேண்டாத    சாதியினை    வளர்த்து   விட்டு
நீரூற்றிக்    காப்பதெல்லாம்   இளைஞர்   எங்கள்
          நெஞ்சன்பை    அழித்தின்னல்    கொடுப்ப   தற்கா !
 
ஊர்தன்னில்    நாம்நடக்கும்   சாலை   யெல்லாம்
          உள்ளதுவோ    வேறுவேறாய் !   உயர்ந்த   சாதி
சேர்ந்தவர்கள்   எனச்சொல்லி    வேடம்   போடும்
          செயற்கைமனம்    பூண்டவரின்   உருவம்    எல்லாம்
பார்வாழும்    மாந்தயினம்    போல   வன்றோ
          பொதுவாக   உள்ளதிங்கே !    இயற்கை   அன்னை
யாருக்கும்    தனிநீதி    சொல்ல    வில்லை
          எல்லாமும்     நாம்வகுத்த    சட்டந்    தானே !
 
குரல்கொடுக்கும்    கோழியினால்   கங்குல்    மாய்ந்து
          புலர்கின்ற    தெனச்சொல்லும்   மூடர்   போலே
பிரமனவன்    தலையிருந்து   பிறந்த   நாங்கள்
          பூமியிலே    உயர்சாதி   எனச்சொல்   கின்றீர்
உரலுக்குள்    யார்தலையை   நீட்டி   னாலும்
          உலக்கைக்குக்    கவலையில்லை !   எழுந்து   விட்ட
புரட்சிக்கு    முன்னாலே   சாதி    யெல்லாம்
          பூண்டோடு    அழிவதிலே    ஐய   மில்லை !
 
கீழ்ச்சாதி    எனநீங்கள்    எதனை    வைத்துக்
          கீழ்த்தரமாய்ச்    சொல்லுகின்றீர் !   கீழ்த்த   ளத்தில்
வாழ்கின்ற   குடிசையினை    வைத்தா?   கையால்
          வாழ்வுயர    உழைக்கின்ற    உழைப்பை    வைத்தா?
தாழ்ந்துதினம்    பணிவாக   வியர்வை   நெற்றி
          தனில்நடக்கும்    பாட்டாளித்    தனத்தி   னாலா?
ஏழ்மையிலே    உழன்றாலும்    மெய்யை    நெஞ்சில்
          ஏற்றிவைத்த    ஏமாளித்    தனத்தி   னாலா?
 
 
செல்வத்தில்    கொழிக்கின்ற   போது   சாதி
          ஏற்றதாழ்வைச்    சிலரிங்கு   மறப்ப   துண்டு
பொல்லாத    உலகத்தில்    பொருளைக்    கொண்டே
          பெருமையினை    மனிதகூட்டிற்   குச்செய்   கின்றார்
வெல்லுகின்ற   தூயவழி   செல்லும்    அன்பு
          நெஞ்சத்தார்    மேல்சாதி   என்று   சொன்னால்
வெல்லமென   நான்ஏற்பேன் !  தொன்று   தொட்டு
          வந்ததென்றால்    தோலுரித்தே    பொதுமை   செய்வேன் !
 
 
 
பருவத்தில்    இயல்பாக   மலரு   கின்ற
          பாலுணர்ச்சி    இருவருக்கும்   ஒன்றே    யன்றோ
உருவான   அன்பினாலே   இரண்டு   நெஞ்சம்
          ஒன்றாகக்   கலந்தபின்னே    சேர்ப்ப   தன்றிப்
பொருந்தாதச்   சாதியினைப்   பேசிப்   பேசிப்
          பொலிவான    வாழ்வுதனைப்    பொசுக்கு   கின்ற
இருள்நெஞ்சப்    பெற்றோரே   இதனால்   உங்கள்
          நிலவாழ்வில்    கிடைக்கின்ற    புகழ்தான்   என்ன !
 
மணமகனைப்    பார்க்கின்ற   போது   சாதி
          மதந்தன்னைப்    பார்க்காமல்    குணத்தைப்   பார்க்கும்
மனந்தன்னைப்    பெற்றிடுவீர் !  பெண்ணை   வைத்துக்
          காப்பாற்றும்    ஆண்தானா   எனப்பா    ருங்கள்
பணங்கேட்டுப்     பொன்கேட்டுப்    பெண்ணைக்    கேட்கும்
          பண்பிலானைப்    பார்க்காமல்   கண்ணீர்    இல்லா
மணவாழ்வைத்    தன்னுழைப்பால்    தருவென்    என்னும்
          மனம்பெற்ற    ஆண்மகனைத்    தேர்ந்தெ    டுங்கள் !
 
பெண்தானே    நம்சொல்லை    மீறு    வாளா
          எனஎண்ணும்    பெற்றோரே    சாதி   வைத்து
பெண்மனத்தின்    ஆசைகளை    மாய்க்க   வந்தால்
          பெண்ணிங்கு    புலியாவாள் !  எந்த   சாதி
என்றாலும்    நெஞ்சமொன்றாய்    ஆன   பின்னே
          என்வாழ்வின்    துணையவர்தான் !   எதிர்த்தே   நீங்கள்
நின்றாலும்   அவரைத்தான்    மணமு   டிப்பேன்
          இவ்வுலகின்   பழம்பகையை    முறிய   டிப்பேன் !
 
         
karumalaithamizhazhan
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 73
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

பழம்பகையை  முறியடிப்பேன் Empty Re: பழம்பகையை முறியடிப்பேன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 10, 2015 4:21 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum