தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
களிற்றின் நாணம்
Page 1 of 1
களிற்றின் நாணம்
களிற்றின் நாணம்
பாவலர் கருமலைத்தமிழாழன்
சங்ககாலத்தில் தமிழர்களிடம் மட்டுமன்றி அவர்கள் வளர்த்த விலங்குகளிடமும் மறமாண்பும், மான உணர்வும், நாணமும் இருந்தன என்பதற்கு முத்தொள்ளாயிரப் பாடல் சான்றாக விளங்குகிறது.
சோழ மன்னன் பகை நாட்டின் மீது படையெடுத்து வாகை சூடினான். வீரத்திலகமிட்டு வெற்றி முத்தம் பதித்து சென்றுவா வென்றுவா என மறத்தமிழச்சிக்கேயுரிய அந்தத் தன்மான உணர்ச்சியிலே, வாழ்த்து கூறி விடை கொடுத்த மனைவிமார்கள் பகை வென்று திரும்பும் தம் கணவர்மார்களை வரவேற்க வீட்டு வாயிற்படியிலேயே ஆவலும், ஆசையும் ததும்பக் காத்திருக்கின்றனர்.
அன்றிரவு, பிரிந்த இடை நாள்களுக்கும் சேர்த்து இன்பப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. மார்பிலே பட்ட அம்பு முனைகளின் வேதனையை மனைவிமார்கள் தங்கள் கொங்கை முனைகளிலே வேது செய்து ஆற்றுகின்றனர். போர்க்களப் புழுதிபட்டும், வியர்வையிலே உப்பாகக் காய்ந்திருக்கும் உதடுகளில் தங்கள் கொவ்வை இதழ்களைப் பதித்துத் தேன் சுவையை ஊட்டுகின்றனர். குதிரைகளின் கடிவாளத்தையும், வாட்களின் பிடிகளையும் பிடித்து உரமேறிய கைகளுக்கு மலரினும் மென்மையுடைய தம் மேனியைத் தருகின்றனர். போர்க்களத்திலே மனத்தில் கொடுமையையும், விழிகளில் கனலையும் கக்கிய தம் கணவன்மார்களை இன்ப குளம் நோக்கி அழைத்துச் செல்கின்றனர்.
ஆம்! வெற்றிக் கூத்திலே இவர்களெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் தம்மையே மறந்து விளையாடிக் கொண்டிருக்கும் அந்த வேளையில், வெற்றிக்குத் துணைநின்ற ஓர் உள்ளம் தன் அன்பு காதலியைக் காணமுடியாமல் ஓரத்தில் ஒதுங்கி நிற்கிறது. போருக்குச் சென்ற மறவர்களில் காலிழந்தும், கையிழந்தும் திரும்பிய வீரர்களும் தம் மனைவிமார்களுடன் கூடிக் குலாவுகையில்1 வெற்றிக்கே மூலமாய் நின்று, வீர விழுப்புண்கள் பல ஏற்றுத்தம் மன்னனையே காத்த அந்த ஐந்தறிவு உள்ளம் மட்டும் ஏனோ தனித்து நிற்கிறது.
ஆம்! அந்தக் களிறு போர்க்களத்தில் மறவர்களாலும் இடிக்க முடியாத மதில்களை தம் கிம்புரிக் கொம்புகளால் இடித்துத் தள்ளியது. அவ்வாறு இடிக்குங்கால் கிம்புரியொடு கொம்பும் ஒடிந்தது. அத்துடன் விட்டதா? இல்லை! இல்லை! மதிலை அழித்து உள்ளே சென்று பகைமன்னரைப் பாய்ந்து தள்ளிக் காலால் இடறிக்கொண்டே போகிறது. அப்படி போனதால் கால்நகமும் தேய்ந்து போயின. கால்நகமும், கொம்பும் சென்றபுன்பும் தம் மன்னரைத் தாங்கி எதிர்வந்த பகையினைத் தங்கையால் தடுத்து வெற்றியைத் தந்தது.
போர்முடிந்து அனைவரும் வீடு திரும்பினர். ஆனால் இந்தக் களிறோ! கொம்பும், நகமும் இழந்த கோலத்தில் பிடி முன்பு செல்ல நாணியது. தம்பிடி முன்பு சென்றால் கொம்பும், நகமும் இழந்த இக்கோலத்தைக் கண்டு எள்ளி நகையாடுமே! மதிலை விடத் தம்கொம்புகள் உரமற்றவை எனக் கேலிபேசுமே என்ற வெட்கத்தால் தன்பிடியினைக் காணாமல் மூலையிலே ஒதுங்கி நிற்கிறது.
ஆம்! அக்காலத்தில் தமிழர்களுக்கு மட்டுமன்றி அவர்களால் வளர்க்கப்பட்ட விலங்குகளுக்கும் தனமான உணர்ச்சி இருந்ததைத்தான் இக்களிறு நமக்குக் காட்டுகிறது.
இத்தகு இன்பமிகு காட்சியைக் காட்டும் பாடல்.
கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர்
முடியிடறித் தேய்ந்த நகமும் - பிடிமுன்பு
பொல்லாமை நாணி புறங்கடை நின்றதே
கல்லார்தோட் கிள்ளி களிறு ! ( முத்தொள்ளாயிரம் 72)
karumalaithamizhazhan- ரோஜா
- Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 73
Location : Hosur. Tamil nadu, India
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum