தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மே... மே... ஆட்டுக்குட்டி !
சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன்
சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன்
நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர தெரு, பாரிமுனை, சென்னை – 600 108.
விலை : ரூ. 60
*****
மின்மினி இதழின் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா பல்வேறு இதழ்களில் எழுதிய சிறுவர்களுக்கான பாடல்களை தொகுத்து மே... மே... ஆட்டுக்குட்டி என்று தலைப்பிட்டு மணிவாசகர் பதிப்பகத்தின் சார்பில் வெளியிட்டுள்ளார்கள். நூலின் அட்டைப்படம் வடிவமைப்பு, உள் அச்சு யாவும் நேர்த்தியாக உள்ளது. நூலாசிரியரே வடிவமைப்பாளர் என்பதால் பொருத்தமான ஓவியங்களும் இருப்பதால் படிக்க ஆர்வமாக உள்ளன. குழந்தைகள் விரும்பிடும் நூலாக வந்துள்ளது.
“அறிவுக் கோவிலாம் மகாத்மாகாந்தி நூலகத்தின் வாயிலாக பல்லாயிரக்கணக்கானோர் படிக்க உறுதுணை புரியும் படிக்காத மேதை திரு. கு. மகாலிங்கம் அவர்களுக்கு”
இந்த நூலை காணிக்கை ஆக்கி உள்ளது சிறப்பு. குழந்தைக் கவிஞர் பணிச்செல்வர் பா. வெங்கட்ராமன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு வரவேற்பு தோரணமாக உள்ளது. குழந்தைக் கவிஞர் வள்ளிப்பா அவர்களின் புகழ் பரப்பும் பணியினை செவ்வன செய்து வருபவர். மதுரை மேலூர் அருகே நடந்த குழந்தைகள் திருவிழாவிற்கு சென்னையில் இருந்து வந்து சிறப்பித்தார்கள். சந்தித்து உரையாடி மகிழ்ந்தேன். நூலாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் தான் அவரை அறிமுகம் செய்து வைத்தார்.
குறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா. கோதண்டம் அவர்களின் அணிந்துரையும் மிக நன்று. திரு. ச. மெ. மீனாட்சி சோமசுந்தரம் அவர்களின் பதிப்புரையும் நய உரையாக உள்ளது. ஹைக்கூ உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து மின்மினி இதழ் நடத்தி வரும் நூலாசிரியர் கன்னிக்கோவில் இராஜா குழந்தை இலக்கியத்திலும் கவனம் செலுத்தி குழந்தைப்பாடல்கள், சிறுகதைகள் எழுதி வருகிறார். பாராட்டுக்கள். குழந்தை இலக்கியத்தில் வெகுசிலரே ஈடுபட்டு வருகின்றனர். இந்த எண்ணிக்கை பெருகிட இந்த நூல் உதவும். இந்த நூல் படித்தவுடன் குழந்தைப் பாடல்கள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் எனக்குப் பிறந்தது.
இந்த நூலில் 47 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களை குழந்தைகள் அவசியம் படிக்க வேண்டும். படித்தால் தமிழ்மொழி அறிவும், பொது அறிவும் வளர்ந்திட உதவும். பதச்சோறாக பாடல்களிலிருந்து சில வரிகள் மட்டும்!
நூலகம் அமைக்கலாம் வாங்க!
நமக்குக் கிடைக்கும் பணத்திலே
நிறைய நூல்கள் வாங்கலாம்!
நமது வீட்டின் அறையிலே
சிறந்த நூலகம் அமைக்கலாம்!
இந்த நூலை வாங்கி பள்ளிகளில் குழந்தைகளுக்கு பரிசளிக்கலாம்!
பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளத்தில் நன்கு பதியும் வண்ணம் வாசித்தலின் நேசிப்பை உணர்த்தும் விதமாக பாடல்கள் எழுதி உள்ள நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.
குழந்தைகளை முதுகில் ஏற்றி யானை விளையாட்டு விளையாண்ட மலரும் நினைவுகளை மலர்விக்கும் விதமாக பாடல் உள்ளது.
யானை வருது! யானை வருது!தந்தை முதுகில் குழந்தைச் செல்லும்
காட்சி தானுங்க!
விந்தை இல்லை இதுவும் கூட
மாட்சி தானுங்க!
தமிழின் சிறப்பை குழந்தைகளுக்கு உணர்த்தும் விதமாக வடித்த பாடல் நன்று.
தமிழின் சிறப்பு.
ல, ள, ழ உச்சரிக்கும் போதினிலே
வேறுபாடறிந்து ஒலித்திடலாம்.
ழ’கரமே தமிழின் சிகரமென்ற
சிறப்பை நாமும் அறிந்திடலாம்!
மரம் நடுவது மழைக்கான வரவேற்பு. மரமே மரமே மழையின் வருகையை முடிவு செய்கின்றது. மரத்தின் பயனை விளக்கும் பாடல்.
மரம் நடு! மாசு தடு!
தூசி நிறைந்த நகர்ப்புறத்தில்
மரத்தை நட்டு வளர்ப்பதே
மாசு அற்ற நகரத்தை
மகிழ்வாக்க காணும் வழிகளாம்!
இன்றைக்கு மாணவர்கள் வகுப்பறையிலேயே ஆசிரியரைத் தாக்குவதும் சக மாணவனை அடிப்பது, கொலை செய்வது என்று இதுவரை கேள்விப்பட்டிராத அளவிற்கு அவலங்கள் நடைபெற்று வருகின்றது. இவற்றிறுகு மூல காரணம் குழந்தைகளுக்கு நன்நெறி போதிக்காததே! உடனடியாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளிலும் நன்நெறி வகுப்பை தொடங்கிட வேண்டும். நன்னெறி போதிக்கும் பாடல் நன்று.
உதவும் குணம்! உயர்ந்த குணம்!
உதவி நாமும் செய்யும் போது
உள்ளம் மகிழ்வு கொள்ளுது
உதவி பெற்ற நண்பர் மனதில்
கல்வெ ட்டாய்ப் பதியுது!
இன்று குழந்தைகள் பெற்றோர்களுடன் சேர்த்து தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்து இரவு, நெடுநேரம் கழித்தே உறங்குகின்றனர். இதனால் அதிகாலை எழுவதற்கு வாய்ப்புஇன்றி தாமதமாக எழுகின்றனர். பள்ளி செல்வதில் அதிக பரபரப்பு நிகழ்கின்றது நாள்தோறும் அதிக எழுந்திட அறிவுறுத்தும் பாடல் நன்று.
கதிர் முன் எழு!
அதிகாலை எழுந்தால் அனைத்தும் இங்கேஅழகாய் தானே ஆகுது
கதிரவனைப் போல நாளும் நாமும்
கடமை செய்து வாழ்வோமே!
நூல் முழுவதும் ஒவ்வொரு கவிதைகளும் நெடிய பாடல்களாக இருந்த போதும் பதச்சோறாக நான்கு வரிகள் மட்டும் எழுதி உள்ளேன். மற்றவை வெள்ளித்திரையில் காண்க என்பதைப் போல, மற்றவை நூல் வாங்கி படித்து அறிக!
இந்த உலகில் மிகவும் மதிப்பு மிக்கது அன்பு ஒன்றே. அன்பால் எதையும் சாதிக்கலாம். அதிகாரத்தால் சாதிக்க முடியாததையும் அன்பால் சாதிக்கலாம் அன்பை கற்பிக்கும் பாடல் நன்று.
அன்பை விதை!
வனத்தில் தானே இந்த எழிலும்
வாடிக்கை யாய் நடக்குதாம்
மனத்தில் அன்பை விதைத்துத் தான்
விலங்குக் கூட்டம் மகிழுதாம்.
இந்த நூலின் தலைப்பில் உள்ள பாடல் மிக நன்று. குழந்தைகள் ஆட்டுக்குட்டி என்றால் மிகவும் விரும்புவார்கள். அதனோடு விளையாடுவார்கள். ஆட்டுக்குட்டி பற்றிய பாடல் நன்று.
மே. மே. மே. மே. ஆட்டுக்குட்டி
அம்மா அப்பா என் மீதுஅன்பு செலுத்தப்படும்
இனிய நண்பன் ஆட்டுக்குட்டி!
இந்த நூலை குழந்தைகளுக்கான பாட நூலில் இடம்பெறச் செய்யலாம். குழந்தைக் கவிஞர் வள்ளியப்பாவின் வரிசையில் இனிய நண்பர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜாவும் இடம் பிடித்து விட்டார். பாராட்டுக்கள்.
-- .
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» ஒரு ஊர்ல ... ஒரு ராஜா! ராணி! சிறுவர் கதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா minminihaiku@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள் ! ( மழலைச் சுவடுகள் தொகுதி -5 ) தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம் ! இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வனதேவதை நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» அடைமழையில் நனைந்த ஆட்டுக்குட்டி ! நூல் ஆசிரியர் : நெய்தல் நாடன் ! --94420 31129 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» தேர்ந்தெடுத்த சங்க இலக்கியப் பாடல்கள் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள் ! ( மழலைச் சுவடுகள் தொகுதி -5 ) தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம் ! இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வனதேவதை நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» அடைமழையில் நனைந்த ஆட்டுக்குட்டி ! நூல் ஆசிரியர் : நெய்தல் நாடன் ! --94420 31129 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» தேர்ந்தெடுத்த சங்க இலக்கியப் பாடல்கள் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum