தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழும் மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
தமிழும் மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
தமிழும் மலரும் !
நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
தென்றல் புத்தக நிலையம், 923, கீழ வெளிச் சாலை, முறையூர்.
பேச : 04577 248136 மின்னஞ்சல் : csv.tamil@gmail.com
விலை : ரூ. 50.
*****
நூலாசிரியர் தேசிய நல்லாசிரியர் பேராசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் அவர்கள் 10 நூல்களின் ஆசிரியர். இந்த நூல் 11-வது நூல். மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் தலைமையில் பாடிய கவியரங்கக் கவிதைகளையும், மற்ற கவிதைகளையும் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள். தமிழும் மலரும் ! என்ற தலைப்பில் மரபும், புதிதும் கலந்த பூ மணக்கும் தமிழ் விருந்து வைத்துள்ளார்கள்.
நூலாசிரியர், “நிறைகுடம் தளும்பாது” என்பதற்கு இலக்கணமாக மிகவும் அமைதியாகவும், மென்மையாகவும் பேசிடும் நல்லவர். கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் அணிந்துரையுடன் முத்தாய்ப்பாக வந்துள்ளது. 07-12-2014 அன்று நடைபெற்ற மகாகவி பாரதி விழாவில் கவிதை பாடிய 200 கவிஞர்களுக்கும் இந்த நூலை நன்கொடையாக வழங்கினார்கள். கவிதை ஆர்வலர்களுக்கு இந்த நூல் பெரிய கொடை தான்.
தொடக்கத்தில் கடவுள் வாழ்த்து மரபுப் பாடல்கள் உள்ளன. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால் அப்பாடல்கள் பற்றி கருத்து எதுவும் சொல்வதற்கில்லை. மற்ற பாடல்களை மிகவும் விரும்பி ரசித்துப் படித்தேன், மிக நன்று. பாராட்டுக்கள்.
பேராசிரியர், நூலாசிரியர், தேசிய நல்லாசிரியர் என்பதால் ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக வடித்த கவிதை நன்று. எல்லா ஆசிரியர்களும் இவர் கவிதை போல மாறினால் நாடு நலம் பெறும். மாணவ சமுதாயம் ஏற்றம் பெறும்.
அறிவுலகின் வீதியிலே!
அன்னை போல அன்பு காட்டி அரவணைக்கணும்
அவனி காக்க ஆசிரியர்
அறிவு ஊட்டணும்
சொல்லும் போது கருத்திலெல்லாம்
தெளிவு காட்டணும்
சொன்னபடி வாழ்க்கையிலே
நடந்து காட்டணும் !
பெரிய பாடல் இது. பதச்சோறாக சில வரிகள் மட்டும் எழுதி உள்ளேன்.
உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவரை வாழ்த்தி எழுதிய கவிதை நன்று. திருக்குறள் படிப்பதோடு நின்று விடாமல் அதன் வழி வாழ வேண்டும் என்று வலியுறுத்தி வடித்த கவிதை நன்று.
வள்ளுவரை வாழ்த்தவோ?
வள்ளுவர் தம்மை வாழ்த்துவ தென்றால்
நல்லொளியை நாம் பெற வேண்டும் – தினம்
தெள்ளிய தமிழில் புகழ்தல் ஒழித்து
சொல்லிய வகையே ஒழுகிடலாம்!
மகாகவி பாரதியார் எழுதியபடி வாழ்ந்தவர். வாழ்ந்தபடி எழுதியவர். அதனால் தான் இன்றும் மக்கள் மனதில் நிலைத்து உள்ளார். பாரதி பற்றிய கவிதை ஒன்று.
இவனைப் போல் இனி ஒருவன்!
வறுமையில் உழன்ற கவி
வரலாற்றில் வாழுங் கவி
சீர்திருத்தம் செய்த கவி
செயலாலே உயர்ந்த கவி
எங்கள் கவி தமிழ்க்கவி
பாரதியொரு மகாகவி
இன்றைக்கு உள்ள மருத்துவ முன்னேற்றம் அன்றைக்கு இல்லை. இருந்திருந்தால் பாரதியை யானை மிதித்த காயத்தை ஆற்றி பிழைக்க வைத்து இருக்கலாம். 39 வயதிலேயே இறந்த கொடுமை நேர்ந்து இருக்காது. இப்படி பல நினைவுகளை மலர்வித்தது கவிதை.
காதலிக்காத கவிஞர்கள் உண்டு. ஆனால் நிலவை நேசிக்காத கவிஞர்கள் இல்லை. அனைத்துக் கவிஞர்களின் பாடுபொருள் அழகு நிலா. இவரும் நிலா பற்றி கவிதை வடித்துள்ளார்.
நிலா!
வானம் என்னும் கடலிலே
வண்ண நிலா மிதக்குது
விண்ணில் மின்னும் விளக்கது
கண்ணைப் பறிக்கும் நிறமிது
தாவிக் குதித்து ஆடுமே
தங்க நிலா வீதியில்
நாளைப் போகப் போகிறேன்
நானும் அந்த நிலவுக்கு !
குழந்தைப் பாடல் போலவும் பாடல் உள்ளது.
கேள்விப்பட்ட பாட்டி வடை சுட்ட கதையை மாற்றி யோசித்து வடித்த கவிதை நன்று.
நரியும் காகமும்!
கவ்வி இருந்த வடைதனை
காலடியில் வைத்ததாம்
காகா என்று கரைந்ததுமே
கடிதில் பாட்டை முடித்ததாம்
வடையை நம்பி நரியுமே
வாயைப் பிளந்து நின்றிட
வடைவிழாது போகவே
வாட்டமுற்றுச் சென்றது.
தான் படிக்காத போதும் தமிழகத்தையே படிக்க வைத்தவர் கல்வி வள்ளல் காமராசர். படிக்காத மேதையின் பெயரில் மதுரையில் பல்கலைக்கழகமே உள்ளது. அவர் இல்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியும் இல்லை. பதவியும் இல்லை, வாழ்க்கையும் இல்லை. அவர் பற்றிய கவிதை நன்று.
அறிவுக்கதவைச் சரியாய்த் திறந்த அருந்தமிழன் காமராசர்!
ஆடுமாடு மேய்க்கச்சென்று காடுகரை அலைந்து வந்த
பாடுபடும் குழந்தைகளை இழுத்து வந்தார் – பள்ளி
நாடிவர நண்பகலில் இலவசமாய் உணவளித்து
கோடிபெறும் பொன்னின்மிகு கல்வி தந்தார்!
இக்கவிதைக்கான தலைப்பினைத் தந்தவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன். நானும் இந்தத் தலைப்பில் கவிதை எழுதி கவியரங்கில் கவிதை பாடினேன். என் நூலிலும் சேர்த்துள்ளேன்.
உலகில் உறவுகள் ஆயிரம் இருந்தாலும் அன்னைக்கு இணையான உறவு எதுவுமில்லை. குற்றவாளி என்றாலும் அன்னை தன் மகனை வெறுக்காமல் அன்பு செலுத்துவாள். தன்னை உருக்கு மகனின் வாழ்க்கைக்கு ஒளி தரும் ஒப்பற்ற உயர்ந்த அன்னை பற்றிய கவிதை நன்று.
அன்னை!
பசி போக்க உணவுண்டு நோய் போக்க மருந்தருந்தி
பத்தியங்கள் காத்திருந்தாள் அன்னை! – நான்
உறங்காமல் பலபொழுதும் கரைகின்ற வேளையிலும்
ஊஞ்சலிட்டு உவந்தவரும் அன்னை!
இன்றைய தமிழர்களின் நிலையை, தமிங்கிலம் பேசிடும் அவல நிலையை படம் பிடித்துக் காட்டும் கவிதை நன்று.
எனவே இனிமேல் பொறுப்பதில்லை !
எனக்குத் தெரியும் இந்தத் தமிழன்
சடுதியில் தமிழை மறப்பான் என்பது!
தானும் பேசான் ; தமிழையும் படியான் ;
தாய்மொழிக்கும் உதவான் ; குழந்தைக்கும் உதவான் ;
தமிழோடு ஆங்கிலம் கலந்து பேசுவான்!
ஆசிரியர் மாணவனுக்கு அறிவுரை கூறும் விதமாக வடித்த குழந்தைப்பாடல் நன்று.
பாரினிலே சிறக்க வேண்டும்!
உயிர்களுக்கு அன்பு காட்டு
உண்மை மறவாதே – தம்பி
உயர்ந்தநெறி ஊக்கத்தோடு
உழைக்கத் தவறாதே
படிப்பதைக் கடைபிடிக்க வேண்டும்
பண்பு கெடாதே ! – தம்பி
பாரினிலே சிறக்க வேண்டும்
எண்ணம் விடாதே!
தமிழும் மலரும் ! நூல் படித்தால் தமிழ் உள்ளமும் மலரும். தமிழுணர்வும் பிறக்கும்.
நூலாசிரியர் தேசிய நல்லாசிரியர் பேராசிரியர் கவிஞர் சி. சக்திவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். கவியரங்கங்களிலும் முழங்குங்கள். வாழ்த்துக்கள்.
.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» தமிழர் முழக்கம்! நூல் ஆசிரியர் : ‘தேசிய நல்லாசிரியர்’ கவிஞர் சி. சக்திவேல் ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி மேலூர்
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிபாரதி மு .வாசுகி ,மேலூர் .
» வள்ளுவர் வழியில் வாழ்வு ! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிதை அல்ல விதை நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர்
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி மேலூர்
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிபாரதி மு .வாசுகி ,மேலூர் .
» வள்ளுவர் வழியில் வாழ்வு ! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிதை அல்ல விதை நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum