தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பறத்தலுக்கான பாடல்! நூல் ஆசிரியர் : கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
2 posters
Page 1 of 1
பறத்தலுக்கான பாடல்! நூல் ஆசிரியர் : கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
பறத்தலுக்கான பாடல்!
நூல் ஆசிரியர் : கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி !
நூல் ஆசிரியர் : கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி !
நூல் விமர்சனம்[size=13] : கவிஞர் இரா. இரவி !
கந்தகப்பூக்கள் பதிப்பகம், 120, குட்டியணைஞ்சான் தெரு, சிவகாசி-626 . விலை : ரூ. 80. sivakasi@gmail.com[/size]
கந்தகப்பூக்கள் பதிப்பகம், 120, குட்டியணைஞ்சான் தெரு, சிவகாசி-626 . விலை : ரூ. 80. sivakasi@gmail.com[/size]
*****
நூலாசிரியர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி ஓய்வின்றி எழுதி வரும் படைப்பாளி.
10 நூல்களின் ஆசிரியர். குட்டி சப்பான் என்று சொல்லும் சிவகாசி என்ற கந்தக பூமியின் கந்தகக் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி. மனதில் பட்டதை பட்டென கவிதையாக வடிக்கும் ஆற்றல் மிக்கவர். மதுரை, சென்னை எங்கெல்லாம் இலக்கிய விழாக்கள் நடந்தாலும் தேடிச்சென்று ரசித்து மகிழும் தேனீ. இலக்கிய விழாக்களில் சந்தித்தும் மகிழும் நண்பர்.
10 நூல்களின் ஆசிரியர். குட்டி சப்பான் என்று சொல்லும் சிவகாசி என்ற கந்தக பூமியின் கந்தகக் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி. மனதில் பட்டதை பட்டென கவிதையாக வடிக்கும் ஆற்றல் மிக்கவர். மதுரை, சென்னை எங்கெல்லாம் இலக்கிய விழாக்கள் நடந்தாலும் தேடிச்சென்று ரசித்து மகிழும் தேனீ. இலக்கிய விழாக்களில் சந்தித்தும் மகிழும் நண்பர்.
மகாபாரத்தை நன்கு படித்து உள்வாங்கி எள்ளல் சுவையுடன் மாற்றி யோசித்து வடித்த கவிதை மிக நன்று. இன்றைய புதுமைப்பெண்ணாக பாஞ்சாலியை சித்தரித்தது சிறப்பு.
கிருஷ்ணன் காத்திருக்கிறான் !
கரங்களை விரித்து அபயம் அபயம் என
அலற வேண்டியளோ
நிமிர்ந்த நன்னடை போட்டு
நேர் கொண்ட பார்வையோடு
பீமனின் கதையைப் பிடுங்கி
துச்சாதனன் தலையை ...
அர்ச்சுனன் காண்டீபம் எடுத்து
துரியோதனன் நெஞ்சை
ஒளிய ஒடிய சகுனிக்கு
ஏதுமறியாது கிடந்த பகடைகளை
துணிவற்ற சபையோருக்கு
காரி உமிழ்ந்த எச்சிலை
பரிசாக்கிச் சிரித்தாள்
அச்சிரிப்பு எத்திசையும் விரிந்து
பாண்டவர் சங்கை நெரிக்க
அபயம் அபயம் என்ற
அவர்களின் அலறல் ...
இப்படி வித்தியாசமாக சிந்தித்து புதிய மகாபாரதத்தை கவிதையில் வடித்த நூலாசிரியர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்களுக்கு பாராட்டுக்கள். மாற்றி யோசித்தன் விளைவே இக்கவிதை.
சமூகத்தில் நடக்கும் சீர்கேட்டை சுட்டிக்காட்டி கவிஞர்கள் கவிதைகள் வடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் சீர்கேடுகள் சீராகவில்லை என்ற வருத்தத்தை மூன்றே வரிகளில் முத்தாய்ப்பாக வடித்தது சிறப்பு.
தொடர்களுக்குள் அவள்களும்
பார்களுக்குள் அவன்களும்
கவிதைகளுக்குள் நாங்களும்!
சதுரங்கம் என்ற விளையாட்டை கவிதையால் வடித்து நம் கண் முன்னே சதுரங்க விளையாட்டை விளையாடி காட்டியது சிறப்பு.
சதுரங்க விளையாட்டில் சாதித்தவர்களும் உண்டு. சரிந்தவர்களும் உண்டு. சரித்திரம் உண்டு.
[size=13] சதுரங்கம் !
[/size]
கருப்பு வெள்ளை கட்டம்! – இதில்[/size]
ஏகப்பட்ட சட்டம் – இது
ராசா காலத்து ஆட்டம் – இதில்
ராசாவை காக்குறதே ஆட்டம்!
முன்னால் போகும் காலாட்படை!
நேரப் போகும் யானைப்படை!
குறுக்கப் பாயும் மந்திரிப்படை!
எதையும் தாவும் குதிரைப்படை!
கட்டுப்பாடு எதுவும் இல்லாம
எட்டுதிக்கும் பறந்தடிக்கும் ராணி – இது
அறிவு வளர்க்கும் ஏணி! – இதில்
மூளைக்குத்தான் வேலை!
இக்கவிதையைப் படித்தால் போதும் சதுரங்க விளையாட்டு பற்றி அறியாதவர்களும் அறிந்து கொள்வார்கள். வித்தியாசமான கவிதை வடித்து வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி. சமூகத்தின் மீது பற்றுக் கொண்ட காரணத்தால் உரக்க சிந்தித்து சீரான கவிதைகளை வடித்துள்ளார், பாராட்டுக்கள்.
மகாகவி பாரதியோடு உரையாடுவது போல வடித்த கவிதை நன்று.தமிங்கிலம் பேசி தமிழ்மொழியைச் சிதைத்து வருபவர்களுக்குப் புத்தி புகட்டும் கவிதை.
மொழி அழிந்தால் அடையாளம் அழியும்
அடையாளம் அழிந்தால் கலாச்சாரம் அழியும்
கலாச்சாரம் அழிந்தால் இனம் அழியும்
ஓர் இனத்தை அழிக்க
அணுகுண்டுகள் தேவையில்லை...
அதன் மொழியை அழித்தாலே போதுமெனும்
அடிப்படை கூடவா தெரியவில்லை?
இப்படி பல கேள்விகள் பாரதி கேட்பது போலவே கேட்டு சிந்திக்க வைத்து தாய்மொழிப்பற்றை, தமிழ்மொழிப்பற்றை விதைத்து உள்ளார். பாராட்டுக்கள். தமிழின் பெருமை தமிழன் உணர்வில்லை என்பது தான் வேதனை.
பஞ்சபூதக் கவியரங்கில் பாடிய கவிதையை பஞ்சபூதங்கள் பற்றி கவிதையில் வடித்தது சிறப்பு. வித்தியாசமான நடை, பதச்சோறாக ஒன்று மட்டும்.
நெருப்பே – நீ
என் அடிவயிற்றில்
அடங்கிக் கிடக்கிறாய்
எரிமலையாய்
வெடித்துச் சிதறினாலும்
என்னுள்ளேயே
உன் நெருப்பாறு.
தமிழகத்தில் திரைப்பட மோகம் ஒழியவில்லை. கட் அவுட்டிற்கு மாலை இடுவது, அபிசேகம் செய்வது தோரணம் கட்டுவது, நடிகைக்கு கோயில் கட்டுவது என்று கோமாளித்தனம் குறைந்தபாடில்லை. தமிழகத்தின் நிலையை படம்பிடித்துக் காட்டும் விதமாக வடித்த கவிதை நன்று. பகுத்தறிவை உணர்த்திடும் கவிதை இது.
சக்கரம் !
வாழ்க்கை ஒரு வட்டம் கீழ இருக்கிறவன் மேல வருவான்
மேல இருக்கிறவன் கீழ வருவான்
சினிமா தத்துவங்கள்
தரும் நம்பிக்கைகள்
கதாநாயகனுக்கு அல்ல
எங்களுக்கு என்றே ... எண்ணி
அவர்களிடமே
அரியணைகள் வழங்குகிறோம்!
அரியணைகள்
அவர்களை வில்லன்களாக மாற்றி விடுகிறது
பாவம்
அவர்கள் என்ன செய்வார்கள்!
எங்கள் இரவுகளையும் கனவுகளையும்
அவர்கள் காலடியில் வைத்துவிட்டு
எப்போதும் போல் சுழல்கிறது
வாழ்க்கைச் சக்கரம்.
நாட்டில் அமைதி நிலவவில்லை. எங்கும் எதிலும் வன்முறை. தினசரி செய்தித்தாளில் குண்டுவெடிப்புகள் வராத நாளே இல்லை. உலக அமைதி கேள்விக்குறியானது. சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் வன்முறை தலைவிரித்து ஆடுகின்றது. அவற்றை உணர்த்திடும் கவிதை நன்று, மிக நன்று.
ஆயுதங்கள்
விற்பனையாகிக் கொண்டே இருக்கின்றன!பயன்பட்டுக் கொண்டே இருக்கின்றன!
அதற்கான தேவைகளும்
அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன!
ஆயுதங்கள் தேவைப்படாத உலகமாக மாற வேண்டும்.
இப்படி சமூக அவலங்கள் நாட்டில் அதிகரிக்க அதிகரிக்க படைப்பாளிகளின் நுட்பமான நெறிப்படுத்தக் கூடிய கவிதைகளுக்கான தேவைகளும் இருக்கின்றன. நூலாசிரியர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்.வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் .
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பறத்தலுக்கான பாடல்! நூல் ஆசிரியர் : கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது ! நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது ! நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum