தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கலாமின் கனவுத் தோட்டம் ! நூல்ஆசிரியர் : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
கலாமின் கனவுத் தோட்டம் ! நூல்ஆசிரியர் : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
கலாமின் கனவுத் தோட்டம் !
நூல்ஆசிரியர் : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நூல்ஆசிரியர் : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
*****
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி ) லிட்
41-b,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் ,
அம்பத்தூர் ,சென்னை .600 098 .
பேச 26241288.
பக்கம் 77 விலை 70 ரூபாய்
41-b,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் ,
அம்பத்தூர் ,சென்னை .600 098 .
பேச 26241288.
பக்கம் 77 விலை 70 ரூபாய்
நூலாசிரியர் கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் அவர்கள் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் முதுநிலைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்து கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருபவர். முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள், பாக்யா வார இதழில் பயணச்சுவடுகள் தொடரில் குறிப்பிட்ட வைர வரிகள் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
“சந்திரன் போல மாணவர்களை வழிநடத்தும் மேன்மையான தமிழாசிரியர்களைச் சந்திக்கும் போதெல்லாம் தமிழின் எதிர்காலம் குறித்து நாம் பயப்படத் தேவையில்லை என்றே தோன்றுகிறது”
ஆம், உண்மை. இனிய நண்பர் கவிஞர் ஞா. சந்திரன் சராசரி தமிழாசிரியர் அல்ல, சாதனை தமிழாசிரியர். கலாமின் கனவுத் தோட்டம், கலாம் பற்றிய சுருக்க வரலாறு, வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் என அனைத்தும் ஆவணப்படுத்தி உள்ளார். இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
புகழ்பெற்ற நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் பெருமைமிகு வெளியீடாக வந்துள்ளது. நூலின் வடிவமைப்பு அச்சு, தரமான தாள்கள் என சிறப்பாக வந்துள்ளது, பாராட்டுக்கள்.
மாமனிதர் கலாம் பற்றிய நூலை அவருக்கே காணிக்கை ஆக்கி இருப்பது நல்ல பொருத்தம். இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா. விஜய அவர்களின் அணிந்துரை நூலிற்கு வரவேற்பு தோரண்மாக அமைந்து உள்ளது. கலாம் பற்றிய கவிதை மிக நன்று.
பெயர் அவுல் பக்கீர் ஜைனுல்லாபுதீன் அப்துல் கலாம் என்பதன் சுருக்கமே ஏ.பி.ஜெ. அப்துல் கலாம். பிறப்பு 15-10-1931 என்று தொடங்கி அவர் பெற்ற விருதுகள், எழுதிய நூல்கள், வாழ்வின் முக்கிய நிகழ்வுகள்.
பணத்தேவைக்காக, தான் ஆர்வத்தோடு படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை விற்க முனைந்தார். ஆனால், பழைய புத்தகக்கடைக்காரரோ, புத்தகத்தை அடகாக வைத்துக் கொள்கிறேன். பணம் வந்ததும் தந்து மீட்டுக் கொள்ளச் சொல்லி உதவியதை நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள், அக்கினிச் சிறகுகள் நூலில் குறிப்பிட்ட தகவல்களில் முக்கியமான தகவல்களை சுருக்கமாக வழங்கி உள்ளார்.
விமானத்தில் பயணிக்கும் போது சாதாரண வகுப்பே போதும், உயர்வகுப்பு வேண்டாம், அது கட்டணம் கூடுதல் என்பதற்காக மறுத்தவர் கலாம் என்ற தகவலும் நூலில் உள்ளது.
மதுரையில் நடந்த ஒரு நிகழ்வில் சொகுசு நாற்காலி வேண்டாம், சாதாரண நாற்காலி போதும் என்று சொல்லி அமர்ந்த நிகழ்வும் உள்ளது. குழந்தைகளை நேசித்த விதம், மனதில் தன்னம்பிக்கையோடு செயல்பட்ட குணம், ஊழல் இல்லாத இந்தியா வேண்டும் என்று விரும்பிய எண்ணம், பாதுகாப்பு வீரரின் மீது காட்டிய மனிதநேயம், மாமனிதர் கலாம் அவர்களின் கல்விக்காக சகோதரி, தன் நகை கொடுத்து உதவினார், பின்னர் அடகிலிருந்த நகையை மீட்டுத் தந்த நிகழ்வு அக்கினிச் சிறகுகளில் நூலில் உள்ள பல தகவல்களும் அவரது மறைவிற்கு பின் செய்தித்தாளில் வந்த செய்திகளையும் தொகுத்து நூலாக வழங்கி உள்ளார்.
மாமனிதர் அப்துல் கலாம் பற்றி மேடையில் பேச விரும்புபவர்களுக்கும், தன்னம்பிக்கை பெற விரும்பும் மாணவர்களுக்கும் பயன் தரும் நூல்.
கலாமின் அம்மா, கலாம் கேட்க, கேட்க சப்பாத்தி தந்து விட்டு, அவர் பசியோடு உறங்கியதை அண்ணன் எடுத்து இயம்ப, பின்னர் அறிந்து, தாயின் பாசம் கண்டு கலாம் கண்கலங்கி நெகிழ்ந்த நிகழ்வு நூலில் உள்ளது.
அக்னிச் சிறகுகள் நூலில் உள்ள பல செய்திகள் இந்த நூலில் உள்ளது. அக்னிச் சிறகுகள் படிக்காதவர்களுக்கு புதிய தகவலாக அமையும், படித்தவர்களுக்கு திரும்ப அசை போட உதவும்.
அவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை சிறுசிறு துணுக்குகளாக வழங்கி உள்ளார். படித்ததும் மனதில் அப்படியே பதிந்து விடுகின்றது.
மனிதர்களில் மாணிக்கமாக விளங்கிய மாமனிதர். குழந்தை உள்ளம் படைத்த பெரிய மனிதர். வள்ளுவரின் வாக்குப் போல வாழ்வாங்கு வாழ்ந்த மனிதர். “தோன்றின் புகழோடு தோன்றுக...” குறளுக்கு இலக்கணமானவர். எளிமை, இனிமை, நேர்மை என்பதை வாழ்வின் தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்து வரலாறு படைத்துள்ள கலாம் அவர்களீன் பிம்பத்தை மேலும் உயர்த்தும் விதமாக அவரின் புகழ் பரப்பும் விதமாக படித்ததை, கேட்டதை, அறிந்ததை, பார்த்ததை, நூலாகத் தொகுத்து வழங்கி உள்ளார்.
பறவையைக் கண்டான், விமானம் படைத்தான் என்ற கவியரசு கண்ணதாசன் வைர வரிகளுக்கு ஏற்ப பறவை பறப்பதை கண்ணுற்ற கலாம் அவர்கள் விஞ்ஞானியாக உருவெடுத்த விதம் நூலில் உள்ளது.
எடை குறைவான செயற்கைக் கால்கள் வடிவமைத்து அதனை அணிந்து போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் எளிதாக நடந்து வருவதைக் கண்டு மகிழ்ந்தவர் கலாம் என்ற தகவலும் நூலில் உள்ளது.
பதவி ஏற்பு விழா காண வந்த உறவினர்களின் செலவை அரசு ஏற்க முன்வந்த போதும் தன் சொந்த பணத்தை செலவழித்த நிகழ்வு நூலில் உள்ளது.
கலாம் வியந்த கதை, திருப்பதியில் விதிகளை மதித்து பதிவேடு கொண்டு வரச்சொல்லி கையொப்பம் இட்டது. இப்படி பல நிகழ்வுகள் உள்ளன.
அவருடைய சிந்தனை, பொன்மொழி நூலின் இறுதியில் உள்ளது. இனிய நண்பர் கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் அவர்களும் நானும் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களும் மாமனிதர் கலாம் அவர்கள், மதுரைக்கு வந்திருந்த போது, அரவிந்த் கண் மருத்துவமனை இல்லத்தில் தங்கி இருந்த போது நேரடியாக சந்தித்து பேசி மகிழ்ந்தோம். அவர் மீதான அன்பின் காரணமாக அவர் பற்றிய செய்திகளை உற்று நோக்கி தொகுத்து நூலாக்கி உள்ளார்.
இந்த நூல் அடுத்தடுத்த பதிப்புகள் வரும் என உறுதி கூறலாம். அடுத்த பதிப்பில் அட்டைப்படத்தை மாற்றுங்கள். மாமனிதர் கலாம் படங்கள் இணையத்தில் நிறைய உள்ளன. கன்னத்தில் கை வைத்து சோகமாக இருப்பது போல உள்ளது. உற்சாகமான படமாக மாற்றி விடுங்கள்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
» குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஏவுகணை மனிதன் ! அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
» மு.வ. வாசகம் ! நூல்ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஏவுகணை மனிதன் ! அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
» மு.வ. வாசகம் ! நூல்ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum